சமுதாயத்தின் பொறுப்பு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சமுதாயம் முழுவதற்குமே தனக்குள் இருக்கும் பெண்மையை மலரச் செய்யும் பொறுப்பு இருக்கின்றது.
தனக்குள் இருக்கும் பெண்மையை மலரச் செய்பவரே, வெளியிலிருக்கும் பெண்களை மதிப்பார்.
‘பெண்களின் பொறுப்பும், பொறுப்பின்மையும்’ என்று சொன்னோம். ஆனால் சமுதாயம் முழுவதற்குமே, தனக்குள் இருக்கும் பெண்மையை மலரச் செய்யும் பொறுப்பு இருக்கின்றது. தனக்குள் இருக்கும் பெண்மையை மலரச் செய்பவரே, வெளியிலிருக்கும் பெண்களை மதிப்பார்.
வெளியிலிருக்கும் பெண்ணை ஒரு போகப் பொருளாக மட்டும் பார்க்க மாட்டார். வெளியில் இருக்கும் பெண்ணை, வெறும் போகப்பொருளாகப் பார்க்கின்றார் என்றாலே, நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்! அவர் மனதோடு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார் என்று. அவருக்கு அவருடைய மனதை அடக்குவதே கஷ்டம். அந்த மனிதர் தனக்குள் இருக்கும் பெண்மையை மலர வைக்கவில்லை என்று அர்த்தம்.
தனக்குள் இருக்கும் பெண்மை மலர்ந்து விட்டால், வெளியில் இருக்கும் பெண்ணை போகப்பொருளாகப் பார்க்க மாட்டார்கள்.
தனக்குள்ளே அழுத்தி, அழுத்தி வைக்கப்பட்ட
கற்பனைகளும், கனவுகளும்தான் வெளியில்
இருக்கும் பெண்ணைப் போகப்பொருளாகப்
பார்க்கின்ற மனநிலையைத் தூண்டுகிறது.
இரண்டு விஷயம்; ஒன்று, வெளியிலிருக்கும்
பெண்ணைப் போகப்பொருளாகப் பார்த்தல்.
அப்படி இல்லையென்றால் பெண்களைக்
கண்டு பயந்து ஓடுதல். மனதை அடக்கும்
முயற்சியிலே ஈடுபட்டு, தன்னைத்தானே
வருத்திக் கொள்ளுதல். இந்த இரண்டுமே
துக்கத்தை அளிக்கக்கூடியவை.
உள்ளிருக்கும்
பெண்ணைத்
துறந்தவர்,
வெளியில்
இருக்கும்
பெண்ணால்
தொந்தரவு
செய்யப்
படுவதில்லை.
இன்னொருவருடைய வாழ்க்கை, உங்களுடைய வாழ்க்கையையோ, வளர்ச்சியையோ, ஆன்மீகத்தையோ தடைசெய்ய முடியாது. வெளியில் இருக்கும் பெண் உங்களைத் தொந்தரவு செய்யவில்லை. உங்களுக்குள் இருக்கும் கற்பனைதான் உங்களைத் தொந்தரவு செய்கின்றது.
உள்ளிருக்கும் பெண்ணைத் துறந்தவர், வெளியில் இருக்கும் பெண்ணால் தொந்தரவு செய்யப்படுவதில்லை. உள்ளிருக்கும் கற்பனைகளும், உள்ளிருக்கும் கனவுகளும்தான் தொந்தரவாக இருக்கின்றதே தவிர, வெளியில் இருக்கும் பெண் ஒருபோதும் தொந்தரவு செய்வதில்லை.
அது நடக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் பெண்மையை அவர் மலரச் செய்ய வேண்டும். தனக்குள் இருக்கும் பெண்மையை உணர்வது, சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் உரிய பொறுப்பு.
தனக்குள் இருக்கும் பெண்மையை உணரும் பொழுதுதான், நாம் வெளியிலிருக்கும் பெண்ணை வெறும் போகப்பொருளாகப் பார்க்காமல், ஆழ்ந்த மரியாதையுடன் நடத்தத் துவங்குவோம்.
அவர்களை ஒரு ஜீவனாக நடத்தத் துவங்குவோம். அவர்களை ஒரு உயிராக மதிக்கத் துவங்குவோம். ஒவ்வொரு மனிதருக்கும், தனக்குள் இருக்கும் பெண்மையை உணரும் கடமை உண்டு.
உணரும் பொறுப்பு உண்டு. பெண்களுக்கு அது இன்னும் அதிகமாக உண்டு. காரணம் என்னவென்றால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம்.