தாய்மை மலர்வதே சிறந்த பாதுகாப்பு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தாய்மை என்ற முழுநிலையை உணர்ந்தவர்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வதே இல்லை.
அன்புதான் ஒரு பெண்ணை பாதுகாப்பற்றத் தன்மையிலிருந்து காக்கும் மிகப்பெரிய சக்தி.
தனக்குள் தன்னை உணரும்பொழுது, தனக்குள் தன்னுடைய பெண்மையை உணரும் பொழுது, பெண் முழுமை அடைகிறாள். அதை உணராத பொழுது, ஒரு ஆழ்ந்த பாதுகாப்பற்றத் தன்மையை, (Insecurity-ஐ) பெண் தொடர்ந்து உணர்வாள்.
ஒரு முக்கியமான விஷயம் ...
நமக்கெல்லாம் இருக்கும் மரண பயம், மரணத்தைப் பற்றியது கூட இல்லை, ‘வாழ்ந்து முடிக்கவில்லையே’ என்ற ஆதங்கத்தினால் ஏற்படுவதுதான்.
உண்மையிலேயே, 'வாழ்ந்து முடித்து விட்டோம்’ என்ற திருப்தியுடைய எந்த ஒரு மனிதரும், மரணத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. மரணத்தைக் கண்டு அஞ்சுவதே இல்லை. மரணத்தை நோக்கிப் பயப்படுவதே இல்லை. மரணத்தை நோக்கி மிரள்வதே இல்லை.
மரணபயமே, வாழ்ந்து முடிக்கவில்லையே என்ற திருப்தியின்மையால்தான் ஏற்படுகிறது.
அதேபோல் பெண்களுக்குள் ஓர் ஆழ்ந்த பாதுகாப்பற்ற தன்மை இருப்பதற்கான காரணம், தனக்குள் அந்தத் தாய்மை என்ற முழு நிலையை உணராததுதான்.
தாய்மை என்ற முழுநிலையை உணர்ந்தவர்கள் பாதுகாப்பற்றத் தன்மையை உணர்வதே இல்லை. அன்புதான் ஒரு பெண்ணைப் பாதுகாப்பற்ற தன்மையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் மிகப் பெரிய சக்தி.
நான் எப்பொழுதும் சொல்வதுண்டு, "பாதுகாப்பற்ற தன்மை என்பது, நம் சுவாதிஷ்டான சக்கரத்திலிருந்து நாம் உணர்கின்ற ஓர் உணர்வு".
> தாய்மை என்ற
>
> முழுநிலையை
>
> உணர்ந்தவர்கள்
>
> பாதுகாப்பற்றத்
>
> தன்மையை
>
> உணர்வதே இல்லை.
நமக்குள் இருக்கும் இந்த ஏழு சக்கரங்களில் பாதுகாப்பற்ற தன்மை என்பது சுவாதிஷ்டான சக்கரத்தில் இருந்து நாம் உணர்கின்ற உணர்வு. பெரும்பாலும் பெரும்பான்மையான பெண்கள் அந்த சுவாதிஷ்டான சக்கரத்தில்தான் இருக்கிறார்கள். அதைத்தாண்டி வருவதே இல்லை.
ஆனால் அதைத்தாண்டி அனாஹதத்திலே அன்பு
என்ற நிலைக்கு வந்து விட்ட பெண்கள்,
சுவாதிஷ்டானத்தைத் தாண்டி, பாதுகாப்பற்ற
நிலையைத் தாண்டிய ஒரு இனிமையான
மனநிலையை அடைகிறார்கள். ஒரு சின்ன
உதாரணம்,
ஒரு இளம்பெண் தனியாக சாலையில் இரவிலே நடக்கும்பொழுது, ஒரு நாய் துரத்தினால் அவர் ஓடுகிற வேகம், தன்னைக் காத்துக் கொள்வதற்காக அவர் ஓடுகின்ற வேகம், ஓட்டப்பந்தய வீராங்கனையைக்கூட தாண்டி விடும்.
ஆனால் தன் கைக்குழந்தையோடு இருக்கின்ற ஒரு பெண், சிங்கம் வந்தால்கூட எதிர்கொள்ளும் மிகப் பெரிய பலத்தைக் கொண்டிருப்பார். குழந்தையைக் காப்பாற்றுவதற்காக, சிங்கத்தையும் எதிர்கொள்ளத் துணிவார்.
தனியாக இருக்கும்பொழுது, அதே பெண் நாயைக் கண்டு மிரண்டு ஓடுவார். ஒரு சாதாரண நாய் கூட அவரை ஓட வைக்க முடியும். ஆனால், கைக்குழந்தையோடு இருக்கும் பொழுது அதே பெண், சிங்கத்தைக் கூட எதிர்கொள்ளும் மிகப்பெரிய சக்தியைப் பெற்று விடுகின்றார். காரணம், அந்த அன்பு என்கின்ற தன்மை, பயத்தைத் தாண்டி உங்களைக் கொண்டு சென்றுவிடும். பாதுகாப்பற்றத் தன்மையைத் தாண்டி உங்களைக் கொண்டு சென்றுவிடும்.
அன்பு என்ற தன்மைக்கு, பாதுகாப்பற்றத் தன்மையைத் தாண்டிக் கொண்டு செல்லும் சக்தி உண்டு.