தாய்மை உணர்வு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நாம் எல்லோரும் ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இந்த பாதுகாப்பற்றத் தன்மை என்பதே குறைசக்திதான். குறைந்த சக்தி ஓட்டத்தினால் வருகின்ற ஒரு விஷயம்தான்.
நம்முடைய மனம், நம்முடைய உணர்வு எப்பொழுது தாழ்ந்த நிலைச் சக்திக்குள் நிலை பெறுகின்றதோ, அப்பொழுதுதான் பாதுகாப்பற்ற தன்மையை உணரத் துவங்குகின்றது. பாதுகாப்பற்றத் தன்மை என்பதும், பாதுகாப்பற்ற நிலை என்பதும் நம்முடைய மனதினுடைய ஒரு சுபாவம்.
நம்முடைய மனம்,
நம்முடைய உணர்வு
எப்பொழுது தாழ்ந்த
நிலைச் சக்திக்குள்
நிலை பெறுகின்றதோ,
அப்பொழுதுதான்
பாதுகாப்பற்ற
தன்மையை உணரத்
துவங்குகின்றது.
வாழ்க்கையில் பாதுகாப்பற்றத் தன்மையில் நிலைத்தவர்கள், பாதுகாப்பற்றத் தன்மையில் நிலை பெற்றவர்கள்தான் தனக்குள் இருக்கும் தாய்மை என்ற முழுமையையும் உணராமல், தனக்குள் இருக்கும் பெண்மை என்கின்ற முழுமையையும் உணராமல், வாழ்க்கையை வீணாகக் கழிக்கின்றார்கள். வாழ்க்கையை வெறுமனே செலவிடுகிறார்கள்.
நமக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத்தன்மை நீங்கினால் ஒழிய, தனக்குள் தாய்மை மலர முடியாது. நமக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையை எதிர்கொண்டு, நமக்குள் தாய்மையை மலரச் செய்வதுதான் இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பொறுப்பு.
விதையை விருட்சமாக்குபவர் சத்குருநாதர்!
விதை வெடித்தால்தான் விருட்சம் வளரும்.
விருட்சம் வளர்வதற்கு விதை வெடித்தாக வேண்டும்.
அந்த விதை வெடித்து விருட்சமாகும் பொழுது, அந்த விதைக்குள் ஒரு மிகப் பெரிய பாதுகாப்பற்றத் தன்மை நிகழும். விதை நினைக்கும், "ஐயோ! நான் வெடித்த பிறகு மரமாக முளைக்கவில்லை என்றால் செத்துப் போவேனே?" என்று பயந்து நடுங்கும்.
ஆனால் மரம் என்ன சொல்லும் "நீ வெடிக்கவில்லையென்றால், நான் வெளியில் வரமுடியாது. தயவு செய்து நீ வெடித்துவிடு. அப்போதுதான் நான் வெளியில் வரமுடியும்".
விதை என்ன சொல்லும், "யாருக்குத்
தெரியும், நீ வந்தாலும் வருவாய், வராமல்
போனாலும் போவாய். நான் வெடித்தால்
இறந்துவிடுவேனே!"
விதைக்கு இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மை
நீங்கினால் ஒழிய விருட்சம் வளர முடியாது.
விதையை விருட்சமாக்குபவர் சத்குருநாதர்!
நானும் உங்களைப் போல் விதையாகத்தான் இருந்தேன். தைரியமாக எழுந்து நின்று வெடித்ததினால்தான் இன்று விருட்சமாக மாறினேன். இன்று உங்களுக்குள்ளும் இந்த விருட்ச நிலை மலர முடியும். நீங்களும் விருட்சமாக மாற முடியும். மாறுங்கள் என்று ஒவ்வொரு விதைக்கும் தைரியம் கொடுத்து, அந்த விதை விருட்சமாக மாறுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி அந்த விதைக்குப் பாதுகாப்பற்றத் தன்மையைத் தாண்டி, விருட்ச நிலைக்குள் நுழைவதற்கான தொழில் நுட்பத்தை வழங்குபவர்தான் குருநாதர்.
விதைக்கு பாதுகாப்பற்றத் தன்மையை நீக்கி, விருட்ச நிலைக்கு மலர்வதற்கான தொழில்நுட்பம், அந்தப் பாதுகாப்பற்றத் தன்மையைத் தாண்டிச் செல்லக்கூடிய மனோபக்குவத்தை வழங்கக்கூடிய உள் உலக தொழில்நுட்பம் தான் தியானம். பெண்கள் தங்களுடைய வாழ்க்கைக்குள் ஒரு துளி, ஒரு சிறிது, இந்த ஞானக் கருத்துக்களையும், ஞானத்தையும் சேர்த்தாலே போதுமானது.
ஆனால், அதெல்லாம் எனக்குப் பொறுப்பு என்று தோன்றவில்லை.தலையாய பொறுப்பு என்று... தனக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையை எதிர்கொண்டு, அதைத் தாய்மைக்குரிய பூரணத்துவமாக மலர்த்துவதுதான் பெண்மையின் மிகப் பெரிய பொறுப்பு.
எப்போது தனக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையை ஒரு பெண் எதிர்கொண்டு தாய்மை நிலையை அடைகின்றாரோ, அப்பொழுது அவர் முழுமையை அடைந்து விடுகின்றார். அவருடைய பொறுப்பைச் சாதித்து முடித்து விடுகின்றார்.
தனக்குள் இருக்கும் ‘தாய்மை’ என்ற பூர்ணத்துவத்தை அடைந்தே தீருவார்கள்.
ஆயிரக்கணக்கான பொறுப்புக்களைப் பற்றி
நாம் பேசிக் கொண்டிருக்கலாம். பல நபர்கள்
பேசுகின்றார்கள்.
பெண்கள் என்றால் ஒழுங்காக சமைக்க
வேண்டும் வேலைக்குப் போக வேண்டும்,
வீட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும்,
எத்தனையோ பொறுப்பு என்று...
ஒரு அழகான கதை...
ஒளவைப் பிராட்டியைப் பற்றிய கதை. ஒளவைப் பிராட்டி இளமையாகவும், ஒரு அழகான இளம் பெண்ணாகவும் இருந்ததாகவும், பலபேர் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், இந்த உலக வாழ்க்கை பந்தம் வேண்டாமென்று விநாயகரை வேண்டி முதுமையான உடல்நிலையை அடைந்ததாகவும் கதை சொல்கின்றது.
தாய்மைக்குரிய
பூரணத்துவத்தை
மலர்த்துவதுதான்
பெண்மையின்
மிகப் பெரிய
பொறுப்பு.
எந்த அளவிற்கு கதை நடந்தது என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று உண்மை. அவர் வேண்டிப் பெற்றது உடல் ரீதியான முதுமையா? என்பதும் எனக்குத் தெரியாது. உள்ள ரீதியான முதுமை, உள்ள ரீதியான ஒரு ஆழ்ந்த தாய்மை என்ற உணர்வை அடைந்ததால் தான் அவர் ஒளவைப் பிராட்டி என்ற நிலையை அடைந்தார்.
அவர் உடல் ரீதியாக முதுமை அடைந்தாரா? இல்லையா? என்பது பற்றி நமக்குத் தெரியாது. உள்ள ரீதியான அந்த முதிர்ச்சியால், தாய்மை என்கின்ற நிலையை அடைந்து விட்டார். தாய்மை என்கின்ற நிலைக்கு அவர் சென்று விட்டார். தாய்மை என்கின்ற நிலையை அவர் அடைந்து விட்டதனால்தான், அவரை ஔவைப் பிராட்டி என்று சொல்கிறோம்.
இதெல்லாம் தத்துவ ரீதியான வெளிப்பாடுகள். அதனால்தான் இந்த மாதிரி கதைகளாகச் சொல்கிறார்கள். தனக்குள் இருக்கின்ற ஆழ்ந்த பாதுகாப்பற்றத் தன்மையைத் தாண்டி தாய்மை நிலையை மலர விட்டதுதான் அந்த ஔவைப் பிராட்டியின் அற்புதமான சாதனை.
ஔவைப் பிராட்டி அற்புதமாகப் பாடுகிறாள்.
"சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி, எனக்குள்ளே இறைவனைக் காட்டி," என்று விநாயகர் அகவலில் பாடுகிறார். தனக்குள்ளே தாய்மை நிலையை உணர்ந்ததினால்தான் ஔவையை 'ஔவைப் பிராட்டி' என்று சொல்கி றோம்.
ஒவ்வொருவரும் தமக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையை தியானத்தின் மூலம் எதிர்கொண்டு, அதைத்தாண்டி முழுமையான ஒரு தாய்மைக் குணத்தை அடைவதைத்தான், உண்மையில் பொறுப்பு என்ற வார்த்தையால் விளக்குகிறேன்.