பாதுகாப்பற்றத்தன்மையைத் தாண்டும் நுட்பங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்களுக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையை எதிர்கொண்டு முழுமையான பூரணத்துவத்தை, தாய்மையை உங்களுக்குள் மலர வைக்கும் நுட்பம் தியானம்.
நம்முடைய ஆனந்த ஸ்புரண தியான முகாம்களிலே இது ஒரு அடிப்படையான பாடம். நம் எல்லோருக்கும் இருக்கின்ற 5 விதமான பாதுகாப்பற்றத் தன்மையை எதிர் கொள்வது, நேரிடையாக எதிர் கொள்வது.
1. முதலாவது: பாதுகாப்பற்றத் தன்மை. சொத்து சுகங்களை இழந்து விடுவோமோ என்ற பயம். 2. இரண்டாவது: நம்முடைய உடலின் ஏதோ ஒரு பாகத்தை நோயின் மூலமாகவோ, விபத்தின் மூலமாகவோ, இழந்து விடுவோமோ என்பது இரண்டாவது பயம்.
3. மூன்றாவது: நம்முடைய நெருங்கிய நண்பர்களோ, உறவினர்களோ, குடும்பத்தவர்களோ நம்மை விட்டு இறந்து விடுவார்களோ என்ற பயம். நெருக்கமானவர்களின் அன்பையோ அல்லது அவர்களையோ இழந்துவிடுவோமோ என்பது மூன்றாவது பயம்.
4. நான்காவது : அடுத்து அறியாத, தெரியாத, புரியாத ஒன்றைப் பார்த்து பயம். (பேய் பிசாசுகள்)
5. ஐந்தாவது : மன அழுத்தம் வந்துவிடுமோ
என்ற பயம். இது இந்தக்
காலத்திலுள்ள பயம்.
இந்த 5 விதமான பாதுகாப்பற்றத் தன்மையையும்
நேராக எதிர்கொண்டு, அதைத் தாண்டி அனாஹத
சக்கரமான அன்பு நிலைக்குச் செல்வது.
உங்களுக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத்
தன்மையை எதிர்கொண்டு முழுமையான
பூரணத்துவத்தை, தாய்மையை உங்களுக்குள்
மலர வைக்கும் நுட்பம் தியானம்.
வெறும்
வார்த்தைகளை
மட்டும்
உள்வாங்காமல்,
சிறிது
ஞானத்தையும்
உள்ளே
சேருங்கள்.
இது பல பேருக்கும் சென்று சேர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு, முக்கியமாக பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எந்த அளவிற்கு உதவி செய்கின்றது என்பதை உணர்ந்ததினால், பெண்களும் எளிதில் செய்யும் வகையில் தியானங்களையும், தியான முகாம்களையும் வடிவமைத்து வருகிறோம்.
உண்மையில் உங்களுக்குள் பெண்மையை மலரச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் வெறும் வார்த்தைகளை மட்டும் உள்வாங்காமல், சிறிது ஞானத்தையும் உள்ளே சேருங்கள்.
நமக்கெல்லாம் மனதிலே தோன்றும் “நாமெல்லாம் எங்கே தியானத்தைச் செய்வது என்று?”.
ஒரு அடிப்படையான விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். செய்யாமல் எதையும் சாதிக்க முடியாது. கலந்து கொள்ளாமல் எந்த உயர் நிலையையும் அடைய முடியாது.
நடனத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாட்டியம் ஆட வேண்டும். பார்ப்பதனால் மட்டும் தெரிந்துகொள்ள முடியாது.
காலையிலிருந்து மாலை வரை டி.வி. முன்னால் உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருந்தால் மட்டும் நடனத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியுமா?
ஆடுபவர்களுக்கு மட்டும்தான் நடனம் தெரியும்.
செய்யாமல்
எதையும்
சாதிக்க
முடியாது.
கலந்து
கொள்ளாமல்
எந்த உயர்
நிலையையும்
அடைய
முடியாது.
நீச்சலைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நீந்த வேண்டும். அதைவிட்டு எவ்வாறு நீச்சல் கற்றுக் கொள்வது, எவ்வாறு நீந்துவது என்பதைப் பற்றி ஒரு நூறு புத்தகம் படித்தாலும், நீச்சலைப்பற்றித் தெரிந்துகொள்ள முடியாது. குதித்த உடன் இடது காலை வேகவேகமாக ஆட்டவும், வலது காலை உதறவும், முன்கைகள் இரண்டையும் முந்தித் தள்ளவும் என்றிருக்கும். இதை மட்டும் தெரிந்துகொண்டு, நீங்கள் நீரில் குதித்தால் என்னவாகும்? கடப்பாறை நீச்சல்தான் நடக்கும். கடப்பாறையை நீரில் போட்டால் என்னவாகும்? மூழ்கிப் போகும். அதுதான் நடக்கும்.
வெறும் கேட்பதினால் எதையும் சாதித்துவிட முடியாது. நீச்சல் தெரிய வேண்டுமானால் நீந்தத் துவங்குங்கள். நடனம் தெரிய வேண்டுமானால் ஆடத் துவங்குங்கள். அது தான் வாழ்க்கையின் உண்மையைக் காட்டும். நடனத்தின் தாத்பரியத்தைக் காட்டும்.