உங்களுக்குள் தாய்மை மலர...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்களுக்குள் தாய்மை மலர வேண்டுமானால் தியானத்தில் மூழ்குங்கள். உண்மையில் தாய்மை மலருமானால், தானாக ஒவ்வொரு பொறுப்பையும் உணரத் துவங்கி விடுவீர்கள். அடிப்படையான உரிமையான தாய்மைக் குணத்தை உணருங்கள்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய என்று சொல்வதைவிட, அடிப்படையான உரிமை என்று சொல்லலாம். அது உங்களை நீங்கள் உணர்ந்து கொண்டு உங்களுக்குள் இருக்கும் தாய்மையை மலர வைப்பது. இதுவே உங்களுடைய அடிப்படையான உரிமை. அந்த உரிமை உங்களுக்கு மறுக்கப்படுகின்றது.
தியானத்தைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்லப்படாமல், அதனால் நீங்கள் எப்படி மலர்வீர்கள் என்றும், உங்களுக்கு வாழ்க்கை எப்படி ஆனந்தமயமாக மாறும் என்கின்ற தெளிவும் உங்களுக்குத் தரப்படாமல், அதன் முக்கியத்துவம் உங்களுக்குச் சொல்லப்படாமல், அந்த அடிப்படை உரிமை உங்களுக்கு மறுக்கப்படுகின்றது.
ஒவ்வொரு
பெண்ணுக்கும்
உரிய என்று
சொல்வதைவிட,
அடிப்படையான
உரிமை என்று
சொல்லலாம்.
ஒவ்வொரு பெண்ணுக்கும்
உரிய அடிப்படையான பொறுப்பு...
தனக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையை எதிர்கொண்டு, தியானம் என்கின்ற சக்தியைச் சேர்த்து, ஞானமாகிய பூரணமான தாய்மைக்குள் மலர்வது, தாய்மைத் தன்மைக்குள் பூத்திருப்பது, தாய்மைத் தன்மைக்குள் ஆனந்தத்துடன் மலர்வது, ஒவ்வொரு பெண்ணுடைய அடிப்படையான உரிமை. வெறும் வார்த்தைகளை மட்டும் கேட்டுவிட்டு 'மிக அழகாய்ச் சொல்கிறார்' என்று ரசிப்பதோடு விட்டுவிடாமல், இந்த வார்த்தைகளை உங்களுக்குள் வாங்கி, உங்களுக்குள்ளும் தியானத்தைச் சேர்த்து, உங்களுக்குள் இருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையை நீக்கி வாழுங்கள்.
பாதுகாப்பற்றத் தன்மை இருக்கின்றது என்றாலே, தாய்மைக்குள்ளே நீங்கள் malarvatharkaana வாய்ப்புகள் இருக்கின்றது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
தெளிவாக அதைப்புரிந்துகொள்ளுங்கள். நமக்குத்தெரியவேண்டியதெல்லாம் தாய்மைக்குள்ளே மலர்வதுதான். முதல், இடை மற்றும் இறுதியான பெண்களின் பொறுப்பு.
பாதுகாப்பற்றத் தன்மையிலே வாழ்ந்து கொண்டிருப்பது பொறுப்பின்மை.
பாதுகாப்பற்றத் தன்மையை எதிர்கொண்டு, தியாகத்தின் மூலமாக பூரணத்துவத்தை அடைந்து, தாய்மையை தனக்குள் உணர்ந்து, பொங்கும் ஆனந்தத்தை மற்றவர்கள் மீதெல்லாம் பொழிவதுதான், வாழ்க்கையில் இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பொறுப்பு.
இந்தப் பொறுப்பை உணர்ந்து நீங்கள் அனைவரும் நித்யானந்த நிலையடைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்ய ஆனந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன்.
ஆனந்தமாக இருங்கள்!

அவசிய அறிவியல்
பொதுமக்களுக்கு...
தியானத்தையும்,
தியான சத்சங்கத்தையும்
உங்கள் வாழ்க்கையில்
சேர்த்துக்கொள்ளுங்கள்.
‘இன்று பிறந்தது
புதுயுகம்.’
ஒரு பெரிய சினிமா தயாரிப்பாளரிடம் ஒரு உதவியாளர், அவர் எடுத்துக் கொண்டிருக்கும் படத்தைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசி கிட்டதட்ட 50 லட்சத்திற்கான காசோலையை வாங்கிச் சென்றார்.
சாதாரண ஒரு மனிதர்கூட, தனக்குத் தேவையான வார்த்தைகளை அளிப்பதன் மூலமாக, தம்மிடம் இல்லாத ஒரு தகுதியோ அல்லது குணமோ அல்லது வாழ்க்கை முறையோ அல்லது நடக்கப்போகின்ற ஒரு விஷயம் நடப்பதாக பிரமையையோ ஒருவருக்குள் ஏற்படுத்தி, அவர்கள் வாழ்க்கையை தன் கரத்திலே கொண்டு வந்துவிட முடியும்.
அந்தத் தயாரிப்பாளர் சாதாரணமாக ஒரு சாதுவிற்குக் கூட ஒரு ரூபாய் தானம் செய்யாதவர். கேட்டால், சாதுக்களுக்கு உதவி செய்தால் அவர்கள் சோம்பேறியாகி விடுவார்கள் என்பார். இவர் சமுதாயத்தின் அமைப்பை புரிந்துகொள்ளாதவர்.
ஆனால், நம் முன்னோர்கள் புத்திசாலிகள். அவர்கள் ஒவ்வொரு சமுதாயத்தைப் பற்றியும் யோசித்திருக்கிறார்கள். எல்லா சமூகத்திலுமே, அந்த சமுதாய விதிகளைக் கடைப்பிடிக்காமல் எப்போதும் விட்டேத்தியாக இருக்கும் நிலையில் ஒரு 5% மக்களாவது இருப்பார்கள். இப்படி சமுதாயத்திலிருந்து விடுபட்ட நபர்கள் சரியாக கவனிக்கப்படாத போது, சமுதாயத்திற்கு எதிரான செயல்களைச் செய்யும் நபர்களாக மாறிவிடுகிறார்கள்.
எனவே நம் முன்னோர்கள், அவர்களுக்கு மரியாதை கொடுத்து, உணவிட்டு, நமஸ்காரம் செய்து, அவர்களை சாதுக்கள் என்று சமுதாயத்தில் தனியாக ஒதுக்காமல், சமுதாயத்தில் ஒரு பாகமாக முன்னிறுத்தி வைத்தார்கள். அதனால்தான் அவர்கள் சமூகக் கேடு செய்பவராக மாறுவதில்லை. இதனால்தான் மற்ற நாடுகளை விட, இந்தியாவில் குற்ற சதவிகிதம் குறைவாக உள்ளது.