மனஅழுத்தமும், ஆராய்ச்சி அறிக்கையும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எந்தெந்த நாடுகளில் எல்லாம் சாதுக்கள் இல்லையோ, அந்தந்த நாடுகளில் எல்லாம் குற்ற சதவிகிதம் அதிகமாக உள்ளது.
உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு பிச்சைக்காரர் சாதாரணமாக தன்னை நோக்கி வந்தால்கூட, அந்த நபர் பயந்து நடுங்கிவிடுவார். ஏனென்றால், அங்கு பிச்சைக்காரர் சமுதாயத்திற்கு எதிரான நபர்.
இதைப்பார்க்கும்பொழுது நம் முன்னோர்கள் எவ்வளவு ஆழமாக யோசித்து, எவ்வளவு காரணத்தோடுதான் சமுதாயத்தை வடிவமைத்திருக்கிறார்கள் என்பது புரிய வரும். ஒரு மனிதருக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால், அவருக்குள் தீவிரவாதமோ மற்ற எண்ணங்களோ எழாது.
வறுமையில் இருப்பவர்களை மட்டும்தான் தீவிரவாதத்திற்குத் தூண்ட முடியும். இதை முன்கூட்டியே அறிந்த நம் முன்னோர்கள், ரிஷிகள், சமுதாயத்திலிருந்து விடுபட்ட 5 சதவிகிதத்தினரையும் சமூகத்தில் நல்ல அந்தஸ்து கொடுத்து வைத்திருந்தார்கள். இதனால் இவர்கள் தீவிரவாதிகளாக மாற வேண்டிய தேவை இல்லாமல் போனது.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு சமூகவியல் பற்றி ஆராய்ச்சி செய்கின்ற நான்கு மேலை நாட்டு பல்கலைக்கழகங்கள் தங்களின் ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடித்தது...
"மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் வாழ்க்கை காலம் வெறும் 400 வருடங்கள்தான். ஆனால் அங்கு மன அழுத்தத்திற்காக மருந்து எடுக்கின்ற நோயாளிகளின் அளவு 66% ஆக உள்ளது. மூன்று நபர்கள் இருந்தார்கள் என்றால், அதில் 2 பேர் மனநிலை சரியில்லாதவர்கள்," என்று ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடித்துள்ளார்கள்.
அதே ஆராய்ச்சியில் நம் நாட்டில், மன அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 0.6% மட்டும்தான் என்பதையும் கண்டுபிடித்துள்ளார்கள்.
கடந்த 5000 ஆண்டுகளில், குறைந்தது 3000 கலாச்சாரத் தாக்குதல்கள், படையெடுப்புகள், சமூகவியல் கலாச்சார மாறுதல்களைப் பார்த்துவிட்டாலும், இந்திய சமூகம் மட்டும் தன்னிலை மாறாத வெற்றி நடையிடுவதைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, அந்த மேலை நாட்டு பல்கலைக்கழகங்கள் இங்கு நம் நாட்டிற்கு வந்துள்ளன.
அவர்கள் செய்த ஆராய்ச்சியின் போது, நாம் நம் நாட்டில் பொதுவாகக் கடைப்பிடிக்கும் ஒரு 50 விதிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்கள்.
உதாரணத்திற்கு, ஒரு மனைவியோடு வாழ்தல் எனும் பண்பாடு நம் நாட்டில் 82% ஆக உள்ளது. ஆனால் அமெரிக்காவில் பெரும்பாலும் Single parents ஆக இருக்கிறார்கள். அதாவது தாயோ அல்லது தந்தையோ இருவரில் ஒருவர் குழந்தைகளுடன் இருக்க மாட்டார்கள்.
இதுபோன்ற குடும்பங்களின் எண்ணிக்கை மட்டும் 57%. வெளிநாடுகளில் வாகனம், மனை, மனைவி மூன்றையும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொண்டிருக்கும் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்.
மேலும், 85% பேர் தங்கள் உறவினர்கள் தன்னுடைய உடலை மரணத்திற்குப் பின் பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு தனியாக இறக்கிறார்கள். 47% பேர் தன்னுடன் மனம் விட்டு யாரும் சண்டை போடக்கூட துணையின்றி இறக்கிறார்கள்.
இது போன்ற 50 விதிகளை ஆராய்ச்சி செய்ததின் முடிவில் அவர்கள் சொல்கின்றார்கள்... “இந்திய கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் குறைந்தது 5000 வருடங்கள் உளவியல், மனையியல், மனத்தின் போக்கு போன்றவற்றை ஆராய்ச்சி செய்திருப்பார்கள்” என்று.
5000 வருடங்களாக எத்தனையோ கலாச்சாரத் தாக்குதல்கள், போர்கள், புதிய தலைமுறைகளையும் இந்தக் கலாச்சாரம் கடந்து வந்துள்ளது என்றால், எத்தனை சத்தியங்கள் நிறைந்த உண்மைகள் இருக்கும் என்றெண்ணிப் பாருங்கள்.
மேலும் அவர்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட ஒவ்வொரு விதியுமே பல்லாயிரம் வருடங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர்தான் நடைமுறை வழக்கத் திற்குக் கொண்டு வரப்பட்டது என்று ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளார்கள்.