லட்சிய வாழ்க்கை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
இந்தியாவில் குறைந்தது ஒரு சதவிகிதம் பேர் சன்யாசிகள் இருக்கிறார்கள். அவர்களில் குறைந்தது 0.1% நிச்சயம் ஞானியாக முடியும். அதனால்தான் சன்யாசிகளில் யாரோ ஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக, இந்த வம்சத்தையே, சமூகத்தையே தவறு சொல்ல முடியாது. காரணம் இவை ஞானத்தையும், நம் நாட்டு கலாச்சாரத்தையும் உயிரோடு வைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்ட பாரம்பரியம்.
அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்திற்குப் போயிருந்தேன்.
அந்தப் பல்கலைக்கழகம், 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கட்டிடங்கள் அமைந்திருக்கும் நிலப்பரப்பு மட்டும் 22 ஏக்கர். பெரிய பல்கலைக்கழகம் என்பதால் ஒரு பேராசிரியர் என்னுடன் வந்து சுற்றிக் காண்பித்துக் கொண்டே வந்தார்.
பேசிக்கொண்டிருக்கும்போது மிக மிக எளிமையாக ஒன்றன் பின் ஒன்றாக கேள்வி ஒன்றைக் கேட்டார். "இது போன்று உங்கள் நாட்டில் ஏதாவது செய்திருக்கின்றீர்களா?" என்று சாதாரணமாக நம்மைச் சோம்பேறிகள் என்பது போல பேச்சுவாக்கிலேயே சொன்னார்.
மேலும் அங்குப் ஏதோ 20 லட்சம்பேர் ஒன்றுகூடும் சந்திப்பு நடக்கிறது என்றும் சொன்னார். இதை 'பெரிய ஆன்மீகவாதிகள் ஒன்று கூடும் இடம்' (Spritual Gathering) என்று பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டார்.
அதுவரை சாதாரணமாக இருந்த நான்
சிரித்துக்கொண்டே அவரிடம், "இதைவிட 10
மடங்கு அதிகமான பெரிய கட்டிடங்களை,
நீங்கள் மரத்தினாலும், சிமெண்டினாலும்
கட்டி இருக்கும் கட்டிடங்களை, நாங்கள்
கருங்கல்லால் கட்டி இருக்கிறோம். வந்து
பாருங்கள்" என்று சொன்னேன்.
மேலும் அந்தப் பேராசிரியரிடம், "வருடா
வருடம் இந்தியாவிற்கு வந்து பாருங்கள்.
கும்பமேளாவிற்கு 9 கோடி பேர் ஒரே
இடத்தில் சேர்வார்கள்.
கும்பமேளா
எத்துணை ஆயிரம்
ஆண்டுகள்
பழமையானது, யார்,
யார் இதை முன்
நின்று நடத்தினார்கள்
என்பதற்கு
எழுத்துப்பூர்வமான
சாட்சிகள் இன்றும்
இருக்கிறது.
நீங்கள் இங்கு செய்யும் விழாவிற்கு ஒவ்வொரு முறையும் விளம்பரத்திற்காக மட்டும் செய்யும் செலவு ஏறத்தாழ 10 கோடி ரூபாய் என்று சொல்கின்றீர்கள்.
ஆனால் இந்தியாவில் பஞ்சாங்கத்தில் ஒரே வரிதான் இருக்கும். இன்று 'மஹா ஸ்நானன்' என்று இருக்கும் - அந்த ஒற்றை வரியைப் பார்த்துதான் அந்த 9 கோடி பேரும் ஒரே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள். இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை யார் நடத்துகிறார்கள் தெரியுமா? சன்யாசிகள். இந்த கும்பமேளா எத்துணை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது, யார், யார் இதை முன் நின்று நடத்தினார்கள் என்பதற்கு எழுத்துப்பூர்வமான சாட்சிகள் இன்றும் இருக்கிறது.
700 ஆண்டுகளுக்கு முன்பே, 25 ஏக்கர் கருங்கல்லினால் திருவண்ணாமலையில் திருப்பணி செய்திருக்கின்றார்கள். எப்படிச் செய்தார்கள்? என்று உங்களால் இன்னமும் யோசித்துப் பார்க்க முடிகிறதா?. பெங்களூரு ஆஸ்ரமத்தில் கூட ஒரு திருப்பணி செய்து இருக்கிறோம். அது கோவில் என்று கூட சொல்ல முடியாது. மண்டபம் என்றுதான் சொல்ல முடியும். நமக்காவது இயந்திரங்கள் இருந்தது, ஆட்கள் இருந்தார்கள், விஞ்ஞானமும் இருக்கிறது.
ஆனால் 700 வருடங்களுக்கு முன்பே, எந்த இயந்திரமும் இல்லாமல், நவீனநுட்பம் இல்லாமல், ஒரு இவ்வளவு பெரிய
> கோவில் - உள்ளுலக
> பல்கலைக் கழகம்
> என்பதை
> உணர்ந்திருந்ததினால்
> தான் ஊருக்கு
> ஒரு
> கோயில் இருக்க
> வேண்டும் என்று
> சொல்லி
> வைத்திருக்கிறார்கள்.
லட்சியத்திற்காக சக்தியை ஒன்று திரட்டி இருக்கிறார்கள் என்றால், அவர்களின் தன்மையையும், உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கின்ற தன்மையையும் மதிக்க வேண்டும். அதைப்பற்றி குறைவாக மதிப்பிடாமல் அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் கோவில் - உள்ளுலக பல்கலைக்கழகம் என்பதை உணர்ந்திருந்ததினால் தான் ஊருக்கு ஒரு கோயில் இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஒருமுறை என்னிடம் ஒருவர் கேட்டார்! “ஊர்
ஊராக 1000, 2000 பேரைக் கூட்டம் கூட்டமாக
கூட்டி பேசுவதால் உலகத்தை உங்களால்
மாற்றிவிட முடியுமா? இது எல்லாம் கடலில்
கரைக்கும் பெருங்காயம் தானே?” என்று
கேட்டார்.
அவரிடம். “ஆமாமப்பா, கடலில் பெருங்காயம் கரைப்பதினால் கடல் மணக்கிறதோ இல்லையோ, அதைக் கரைப்பதினால் என் கை மணக்கிறது. அதற்காகச் செய்கிறேன்” என்று சொன்னேன்.
அதுபோல் கோவிலைக் கட்டிய ஸ்தபதிகளுக்கு, “நாம் இந்தக் கோவில் கட்டி முடிப்போமா? அதை நாம் பார்ப்போமா? இத்திட்டத்தைத் தொடர முடியுமா?” என்று கூடத் தெரியாது. ஏனென்றால் அடுத்த அரசன் வந்து இதே திட்டத்தைத் தொடர வேண்டுமென்று என்ன கட்டாயம் இருக்கிறது? கிடையாது. ஆனாலும் எடுத்த லட்சியத்திற்காக வாழ்வைத் தியாகம் செய்கின்ற தியாக உணர்வு, உற்சாகம்தான் அவர்களின் வாழ்வாக இருந்திருக்கிறது.