உங்களால் சொர்க்கத்தை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உருவாக்க முடியும்
உலகத்தை மாற்றப் புறப்பட்டவர்கள் எல்லோரும், எழுந்த அந்த வேகத்திலேயே 'வெறி'பிடித்து கீழே விழுந்து இறந்து போயிருக்கிறார்கள், இல்லையேல் 'வெறுப்பில்' கீழே விழுந்து இறந்து போயிருக்கிறார்கள்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்! நம்மால்
உலகத்தை மாற்ற முடியாது. வேண்டுமானால்
நம்மை மாற்றிக் கொள்ள முடியும். நமக்குள்
இந்த உத்வேகத்தை எடுத்து வருவதுதான்
சொர்க்கத்தை உருவாக்கும்.
மற்றவர்களுக்குள் மாற்றத்தை எடுத்துவர
முயற்சிப்பது உண்மையிலேயே வீண்தான்.
மற்றவர்களுக்குள் மாற்றத்தைக் கொண்டுவர
நினைப்பவர்கள், தனக்குள் ஆழ்ந்த எரிச்சலை
சுமந்து கொண்டுதான் இருப்பார்கள்.
> நம்மால்
> உலகத்தை
> மாற்ற
> முடியாது.
> வேண்டுமானால்
> நம்மை
> மாற்றிக் கொள்ள
> முடியும்.
ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு, அன்பர் ஒருவருக்கும், மற்றொருவருக்கும் சிறிது கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்த மற்றொரு நபர் கொஞ்சம் வேகமாக சப்தம் போட்டு இருக்கிறார்.
நம் அன்பர் என்னிடம் "என்ன தண்டனை அவருக்கு கொடுக்கலாம்?" என்று கேட்டார். அவரிடம் சொன்னேன், "எரிச்சலால் கத்துவதே ஒரு தண்ட னை தானே. அவருக்குள் உள்ள எரிச்சலே ஒரு தண்டனை தானே.
உள்ளே எரிந்து புகைவதால் தானே வெளியில் வெடிக்கிறோம். அதுவே நரகம்" என்று.
நரகம் என்பது தப்பு செய்துவிட்டு நரகத்துக்குச் செல்வதில்லை. உண்மையில் நரகத்தில் இருப்பதனால்தான் தப்பே செய்கிறோம். உண்மை என்னவென்றால் உள்ளே ஒரு ஆழமான அழுத்தம் தொடர்ந்து இருப்பதனால்தான் நரகத்தன்மையான செயல்களைச் செய்கின்றோம்.
மற்றவர்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனும் உத்வேகத்தைக் கொடுப்பவர்கள், தாங்களே அதை கடைபிடிக்கவில்லை என்றால், அவர்கள் தங்களுக்குள் நரகத்தைச் சுமந்திருப்பார்கள். யார் யார் தனக்கே அதைக் கொடுத்துக் கொள்கிறார்களோ, அவர்கள் தன்னைச் சுற்றி சொர்க்கத்தை உருவாக்குகிறார்கள்.