KAILASA Library/அவசிய அறிவியல்/குறை உணர்வு - ஒரு அன்பளிப்புSign in
அவசிய அறிவியல்

குறை உணர்வு - ஒரு அன்பளிப்பு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நமக்குள் ஞானவிடியல் வரும்வரை நாளை என்பது நடக்கவே நடக்காது.

பூமிக்கு வந்துவிட்ட பிறகு ஞானம் அடைவதே லட்சியம் என்பதை மனிதன் மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் கடவுள் குறை உணர்வை மனதில் வைத்து அனுப்பி இருக்கிறார்.

சிலர் என்னிடம் கேட்பதுண்டு, "எப்போதும் ஒரு குறைத்தன்மை என்னிடத் தில் இருக்கிறது" என்று வருத்தத்துடன் சொல்வார்கள்.

அதற்கு அவர்களிடம் இப்படி சொல்வேன், "உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் நிறைய உண்டு. நிறைவை நோக்கி நீங்கள் ஓடுவதற்காகவே, உங்களுக்குள் வைக்கப்பட்டு இருக்கும் விதைதான் குறை."

"அர்ஜுன விஷாதயோகம் கீதையின் முதல் பாகம். அர்ஜுனர் விஷாதயோகம் என்றால் அர்ஜுனனுடைய மனஅழுத்தம். அர்ஜுனனுக்கு மனஅழுத்தம் ஏன் உருவாகியது? ஏனென்றால் அவர் நினைத்ததை எல்லாம் சாதித்து விட்டார்.

இதை ஒரு நடந்த நிகழ்ச்சியிலிருந்து விளக்குகின்றோம். ஒரு வெளிநாட்டு அன்பர் என்னைப் பார்க்க வந்திருந்தார். "எனக்கு ரொம்ப மனஅழுத்தமாக இருக்கிறது. அடைய வேண்டிய அனைத்தையும் அடைந்து விட்டேன். எல்லாம் இருந்தும் இதெல்லாம் எதற்காக? என்ற வெறுமை என்னிடத்தில் வந்துவிட்டது" என்று சொன்னார்.

இந்தியர்கள் கடும் உழைப்பாளிகள் எங்கு சென்றாலும் தங்கள் இலட்சியத்தை நிறைவேற்றி விடுவார்கள். ‘

‘நான் 10 வருடத்தில் அடைய நினைத்ததை நான்கு வருடத்திலேயே அடைந்துவிட்டேன். ஆனாலும் மனநோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றேன்” என்றார். இதுதான் Depression of success, சாதனையினால் ஏற்படும் மன அழுத்தம்.

நாம் புத்திசாலித்தனமாக திட்டம் செய்து நம் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் 40 வயதிலிருந்து 45 வயதுக்குள் Depression of success வந்தே தீரும். இல்லாவிடில் ஏதோ ஒரு பிரச்சினை இன்னும் இருக்கின்றது என்று தெரிந்துகொள்ளுங்கள்.