வாழ்க்கையை முழுமையாக
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
வாழலாம்
மன அழுத்தம் வரும் போது, நாம் மூன்று பாதைகளும் சந்திக்கின்ற முச்சந்தியின் நடுவில் இருப்பது போன்று இருக்கும்.
(1) அடிமைத்தனம் (Addiction)
(2) தற்கொலை எண்ணம் (Suicide intention)
(3) தியானம் (Meditation)
அடிமைத்தனம் என்பது ஆண்கள் குடிப்பது மட்டுமல்ல. பெண்கள் தொலைக் காட்சி முன்பு உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பதும் ஒரு அடிமைத்தனம்தான். ஆண்கள் மதுவை ஊற்றி அழுத்தத்தை மூடுகிறார்கள். பெண்கள் தின்பண்டங்களை வாயில் போட்டு அடைத்து மனஅழுத்தத்தை மூடுகின்றார்கள்.
குடிப்பது, புகைபிடிப்பதைக்கூட சமுதாயம் என்றாவது ஒருநாள் தவறு என்று சொல்லும் போது, அந்தக் குற்ற உணர்வினால் மாறிவிட முடியும். ஆனால் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்துகொண்டே இருப்பது, சாப்பிட்டுக் கொண்டே இருப்பது இவற்றைத் தவறு என்று சமுதாயம் எதுவும் சொல்லாது. இதுதான் பெரிய தீங்கு. எனவே அடிமைத்தனம் ஒரு பாதை.
அடுத்து நடைப்பிணமாக வாழ்தல் (தற்கொலைக்குக் குறைவான தற்கொலை)
விவேகானந்தர் சொல்கிறார் “நடைப்பிணமாக வாழ்பவர்கள் தயவுசெய்து அறையை விட்டு வெளியே வராதீர்கள். ஏனென்றால் ஏற்கனவே சமூகத்தில் துக்கம் அதிகமாகத்தான் உள்ளது. அவர்களைப் பார்த்தால் நமக்குச் சிரிப்பு வரும். ஆனால் அவர்கள் எந்தக் காரணம் கொண்டும் சிரிக்க மாட்டார்கள்.” என்று.
தற்கொலை இரண்டு விதம். ஒரே நொடியில் முடித்துக் கொள்வது. இது தைரியசாலிகள் செய்வது. மற்றொன்று மரணம் வரவில்லையே என்று நடைப் பிணமாக வாழ்வது. இவர்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்குத்
> வாழ்க்கையின்
>
> லட்சியம் என்ன
>
> என்று ஆழ்ந்து
>
> யோசித்து, அதற்காக
>
> வாழ்க்கையைத்
>
> தியாகம்
>
> செய்வதுவே
>
> தியானம்.
தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பதற்குக்
காரணம், தொடர்ந்து எரிச்சலைத் தன்னுள்ளே
கொண்டிருப்பதால்தான்.
மூன்றாவது பாதை, வெகு சில புத்திசாலிகள் மட்டுமே எடுப்பது. அது தியானம். வாழ்க்கையின் லட்சியம் என்ன என்று ஆழ்ந்து யோசித்து, அதற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்வதுவே தியானம்.
ஒரு ‘அயனத்திற்காக’ வாழ்க்கையைத் தியாகம்
செய்வதுதான் தியானம். அயனம் என்றால்
பாதை. ஒரு லட்சியம், ஒரு அயனத்தைப்
பிடித்து, அதற்காக வாழ்க்கையைத் தியாகம்
செய்வது. இந்த மூன்றாவது பாதையைத்
தேர்ந்தெடுப்போமானால் இன்று பிறந்தது
புதுயுகம்,
பெரும்பாலானவர்கள் முதலிரண்டு பாதையைத்தான் தேர்ந்தெடுக்கின்றார்கள். இந்த இரண்டையும் கடந்து மூன்றாவது பாதையைத் தேர்ந்தெடுக்கும் தியானிகள்தான் வாழ்க்கையை முழுமையாக வாழ்கின்றார்கள்.
நமக்குள் உடல்பலம், மனபலம், ஆன்மபலம் என முப்பலமும் இருக்கிறது. ஒரு லட்சியத்திற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்கின்ற பலம் ஆன்ம பலம்.
நாம் நம் நாயன்மார்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தோமானால், எவ்வளவு தூரம் லட்சியத்திற்காக வாழ்ந்திருக்கின்றார்கள் என்பது புரியும் ஒரு நாயன்மார் சிவனை யாராவது தவறாகப் பேசி னால், அவரது நாக்கை வெட்டிவிடுவார். இன்று வரை, நாம் அவரை வழிபடுகிறோம். அது அவர் செய்த செயலுக்காக அல்ல. இலட்சியத்துக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்ததற்காக. என்ன தடை வந்தாலும், என்ன எதிர்ப்பு வந்தாலும், கொண்ட இலட்சியத்தை விடுவதில்லை என்று நின்றதற்காகத்தான் அவரை வழிபடுகிறோம்.
இன்னும் பல நாயன்மார்கள் பூப்பறித்து மட்டும் ஞானமடைந்திருக்கிறார்கள். அவர்களையும் நாம் வழிபடுகின்றோம். பூப்பறித்தல் சாதாரண வேலைதான். ஆனால் உயர்ந்த இலட்சியத்திற்காக அதைச் செய்திருக்கிறார்கள். அதுதான் காரணம்.
> ஒரு
> லட்சியத்திற்காக
> வாழ்க்கையைத்
> தியாகம்
> செய்கின்ற
> பலம் ஆன்ம
> பலம்.
ஒரு சாலையை புனரமைப்பதற்காக பத்து பேர் கல், ஜல்லி எல்லாம் வாரிக் கொட் டுவது சாதாரணமான பணி போன்றிருக்கும். ஆனால் இந்தியாவையே இணைக்கின்ற நெடுஞ்சாலைக்காக அவர்கள் அதைச் செய்யும் போது பெரும்பணியாக மாறிவிடுகின்றது.
'சாக்கிய நாயனார்' என்று ஒரு நாயனார், தினமும் சிவலிங்கத்தை கற்களைக் கொண்டே அடித்தார். கல்லெறிந்து வழிபடுவார். இன்று அவரை நாம் வணங்குகிறோம். காரணம் பக்தி. அவர் புத்த மதத்தைச் சார்ந்தவர்.
மலர் எடுத்துப் போட்டால், யாராவது ஏதும் சொல்வார்கள் என்று கற்களை மலராய்க் கொண்டு வழிபட்டார். செய்கின்ற செயலைவிட இலட்சியத்திற்கு மரியாதை அளிக்கப்பட்டிருக்கின்றது.
ஆழ்ந்து தெளிந்த இலட்சியத்தை உள்வாங்கி, அதற்காகத் தியாகம் செய்யப்பட்டால் அதுவே ஆன்மபலம்.
ஆன்மபலம் இல்லாமல், உடல்பலம் மட்டும் இருப்பவர் ‘ரௌடியாக’ மாறிவிடுகிறார்.
அதேபோல் ஆன்மபலம் இல்லாமல், மனபலம் மட்டும் இருப்பவர் ‘தீவிரவாதியாக’ மாறிவிடுகிறார்.
ஆன்மபலம் இருக்கும்போது மட்டும்தான் மனிதர் ‘மனிதராக’ மாறுகிறார்கள்.
ஆன்மபலத்திற்குள்
நுழைவோமானால்,
நாம் ஏமாற்றவும்
மாட்டோம்,
ஏமாற்றப்படவும்
மாட்டோம்.
ஆன்மபலம் இல்லாமல் உடல்பலம் மட்டும் இருந்தால், அவர் புத்தி சுவாதீனமற்றவராக இருக்கிறார். அவர்களுக்கு புதுயுகம் என்ற கனவு எல்லாம் ஒன்றும் புரியாது. இவர்கள் புதுயுகக் கனவினால் ஏமாற்றப்படுவார்கள்.
ஆன்மபலமின்றி, மனபலம் மட்டும்
கொண்டிருப்பவர்கள் புதுக் கனவைக்
கொண்டு மற்றவர்களை ஏமாற்றுவார்கள்.
ஏமாற்றுபவர்கள், மனபலம் மட்டும்
உடையவர்கள். ஏமாறுபவர்கள், உடல்பலம்
மட்டும் உடையவர்கள்.
ஆனால் ஆன்மபலத்திற்குள் நுழைவோமானால், நாம் ஏமாற்றவும் மாட்டோம், ஏமாற்றப்படவும் மாட்டோம். இந்த உடல்பலத்தையும், மனபலத்தையும் தாண்டி ஆன்மபலத்திற்குள் நுழைந்தால் “இன்று பிறந்தது புதுயுகம்.”
இத்துணை கருத்துக்களின் சாரம், “புதுயுகம் என்பது காலம் காலமாக நமக்கு அளிக்கப்பட்டு வரும் கனவு.” ஆன்மீகவாதிகளாகட்டும், தத்துவவாதிகளாகட்டும் சமூகத் தலைவர்களாகட்டும், அரசியல்வாதிகளாகட்டும், என்ன துறையாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அதில் ‘புதுயுகம் வரும்’ எனும் கனவு எல்லோருக்கும் அளிக்கப்பட்டு வரும்.
புதுயுகம், நாம் காலம் காலமாக காணும் கனவு. கனவு ஏன் நிஜமாகவில்லை என்றால், கனவைக் கொடுத்தவர்கள் தங்கள் வாழ்வை அல்ல, மற்றவர்கள் வாழ்வைத் தியாகம் செய்ய வைத்தார்கள்.
சிலநேரத்தில் நுட்பம் தெரிந்தவர்களாக இருந்ததால், சமுதாய எழுச்சியினைக் காரணமாகக் கொண்டு, இந்தக் கனவை நனவாக்கி விடலாம் என்ற தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள்.
இந்த இரண்டு காரணங்களால்தான் புதிய யுகம் என்கிற கனவு கனவாகவே இருந்தது. இப்போது அந்த இரண்டையும் தவிர்த்து விட்டால், நாம் செய்ய வேண்டியது சமுதாயப் புரட்சி அல்ல, தனி மனித எழுச்சி என்பது புரிய வரும்.
நாம் நமக்குள் ஒரு துளி ஞானத்தை வளர அனுமதித்தால், 'தன்னைத்தான் நோக்குதல்,' 'தன்னைத்தான் ஆராய்தல்' என்ற செயலை நடக்க அனுமதித்தால் நமக்குள் மட்டுமல்லாது, நம்மைச் சுற்றியும் பிறந்தது புதுயுகம்.
முதலிலேயே சொன்னது போல், புதுயுகக் கனவை நனவாக்குகின்ற நுட்பத்தைக் கொடுத்திருக்கின்றோம். இதனைக் கருத்தாக மாற்றி இருக்கின்றோன். இதனை நனவாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு. கருத்தை நனவாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கனவு என்பது வெறும் பாவனை. அதனுடன் நுட்பம் இணையும் போது கருத்தாக மாறுகின்றது. கருத்தை நடைமுறைப்படுத்தும்போது அது நனவாக மாறுகின்றது.
> 'தன்னைத்தான்
> நோக்குதல்,' '
> தன்னைத்தான்
> ஆராய்தல்' என்ற
> செயலை நடக்க
> அனுமதித்தால்
> நமக்குள்
> மட்டுமல்லாது,
> நம்மைச் சுற்றியும்
> பிறந்தது புதுயுகம்.
நான் சொன்னதுபோல் இன்று பிறக்கட்டும் புதுயுகம். இந்தக் கருத்துக்களை நீங்கள் பின்பற்ற நினைத்தால், கடைபிடித்தால், கடைபிடிக்க முடிவெடுத்தால், இன்று பிறந்தது புதுயுகம்.
வாழ்க்கையில் ஒரு துளி தியானத்தைச் சேருங்கள். இதைச் சேர்த்தோமானால், இன்று பிறக்கட்டும் புதுயுகம் என்ற வார்த்தையை இன்று பிறந்தது புதுயுகம் என்று மாற்றி விடலாம்.
இந்த இனிமையான ஞானக் கருத்துக்களும், ஞான வரிகளும் உங்களுக்குள் புகுந்து ஆழ்ந்து வேலை செய்து, தனிமனித எழுச்சியை ஏற்படுத்தி தியானத்தில் உங்களை மலரச் செய்யும்.
தியானம் உங்களுக்குள் மலர்ந்து, உங்களை மட்டுமல்லாமல், இந்த உலகையும், இந்த யுகத்தையும் மாற்றி அமைக்கும்.
தியானமும், தியான சத்சங்கமும் உங்களுக்குள் ஏற்படுத்தும் எழுச்சியின் மூலமாக, இன்று பிறந்தது புதுயுகம்.
ஆனந்தமாக இருங்கள்!


அவசிய அறிவியல்
குடும்பத்திற்கு....
ஆனந்த சமாஜமாக
ஒன்றாக
வாழ்ந்தோம் என்றால்,
சத்ய யுகத்திற்குள்
நுழைந்துவிட்டோம்.
சா சாதாரண சமுதாயத்தில்...
இரண்டு மனிதர்கள் ஒன்றாக சேரும்பொழுது...
1 மனிதரின் பலம் + 1 மனிதரின் பலம் = 2 மனிதர்களின் பலத்தை உருவாக்குகின்றார்கள்.
இரண்டு நபர்கள் சேர்ந்து ஒரு அலுவலகத்தை அமைத்தார்கள் என்றால், அந்த அமைப்பிற்கு இரண்டு நபர்களின் பலம் இருக்கும். அந்த இரண்டு பேருக்கும் ஒத்து வரவில்லையென்றால், அதே அமைப்பிற்குப் பாதி பலம் தான் இருக்கும்.
காரணம் தங்களுக்குள் அடித்து மாய்ந்து கொள்வதற்கே இவர்களின் சக்தி சரியாகிவிடும். அப்போது ஒரு அமைப்பு உருவாகியதற்கான பலனாக, சமுதாயத்திற்கு என்ன வந்து சேரும்? யோசித்துப் பாருங்கள்.
அப்பொழுது,
1+1= சேர்ந்தால் 1 மனிதரின் பலம் தான் பலனாகவரும்.
ஒரு மனிதரின் புத்திசாலித்தனம்தான் சமுதாயத்திற்கு பலனாக வந்து சேரும்.
பாதி நலன்தான் சமுதாயத்திற்கு சென்று சேரும். இது அடித்துக் கொள்ளும் அமைப்பினால் கிடைக்கும் பலன்.
இன்னும் சற்று புத்திசாலித்தனமாக இயங்கும் அமைப்புகளில் ...
1 மனிதர் + 1 மனிதர் சேர்ந்தால் கிடைக்கும் பலன் = 2 மனிதர்கள் என்ற பலம் வரும்.
அதுவே, கொள்கை ரீதியாக ஒரே கருத்துக்கள் நுழைந்து, ஒரே வாழ்க்கை முறையை ஏற்றவர்கள் ஒன்றாக சேர்ந்தார்கள் என்றால், அது 100 பேருக்கு சமம். அப்பொழுது ஒன்றும் ஒன்றும் பதினொன்று கிடையாது. அது 111. (1+1=111).
விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கிறார், "கொள்கை ரீதியாக ஒன்றிணைந்தவர்கள் இருவர் சேரும்போது, 100 பேருக்குச் சமமான சக்தியை வெளிப்படுத்துகிறார்கள்" என்று.
இன்றைய சமுதாயத்தில் பத்துப்பத்து ரூபாயாக பத்துப்பேர் சேர்ந்து பணம் சேர்த்தார்கள் என்றால் 100 ரூபாய் கிடைக்கும். அந்த நூறு ரூபாயும், ஒரே ஒருவரால்தான் அனுபவிக்க முடியும். இரண்டு பேர் அனுபவிக்க வேண்டுமானால், இரண்டு பேரும் தனித்தனியாக 50, 50 ரூபாயாக அனுபவிப்பார்கள்.
மூன்று பேர் அனுபவிக்க வேண்டுமென்றால், ஒருவருக்கு 33 ரூபாய் என, மூன்றுபேர் மட்டும் அனுபவிக்கலாம்.
ஆனால், சக்தியை பொறுத்தளவிற்கு,
பத்து பேர், பத்துப்பத்து வோல்டேஜ்
கொடுத்தார்களென்றால், அது 100 வோல்டேஜ்
ஆகிவிடும். அதை பத்து பேர் தொட்டாலும்
அவர்கள் ஒவ்வொருவருக்குமே 100, 100
வோல்டேஜ் சக்தி கிடைக்கும். பத்து பேர்
பத்து வோல்டேஜ்தான் போட்டாலும், அந்த
10 பேருக்கும் 100 வோல்டேஜ் ஷாக்தான்
அடிக்கும்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எல்லோரும் மனரீதியாக கொள்கை ரீதியாக ஒன்றாகச் சேருவதாலேயே ஒரு சக்தி உருவாகின்றது. அந்தச் சக்தி குழுவாக, குருவின் சங்கத்தோடு இணையும் போது நிகழ்வதுதான் சமாஜங்கள். சமாஜம், குழுவின் சக்தியை ஸ்டெப்ட் அப் செய்யும் சக்தி டிரான்ஸ்பார்மர் ஆகும்.
> மனரீதியாக
> கொள்கை
> ரீதியாக
> ஒன்றாகச்
> சேருவதாலேயே
> ஒரு சக்தி
> உருவாகின்றது.
நாம் எல்லோரும் 10 வோல்டேஜ் கரண்டைக் கொடுத்தாலும், ஒரு குருவால் நிர்மாணிக்கப்பட்ட சங்கத்துடன் இணையும்போது, 1000 வோல்டேஜ் ஆக திரும்ப வரும்.