KAILASA Library/அவசிய அறிவியல்/சங்கம்- தர்மத்தை நிலை நிறுத்தும் அமைப்புSign in
அவசிய அறிவியல்

சங்கம்- தர்மத்தை நிலை நிறுத்தும் அமைப்பு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“உலகத்திலேயே மிகவும் வெற்றிபெற்ற, நெடுநாள் நிலைத்திருந்த அமைப்பு எது?” என்பதை ஆராய்ந்தோமானால் அது புத்தர் உருவாக்கிய சங்கம் தான்.

இன்று எத்தனையோ மல்டிநேஷனல் கம்பெனிகள் வந்துவிட்டன. ஆனால் அன்று புத்தர் உருவாக்கிய சங்கத்தின் மதிப்பை எதனோடும், எந்த அமைப்போடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. சங்கம் ஒப்பிட முடியாதது.

> யார் சங்கத்திற்குள்
> வந்தாலும்,
> அவர்களுடைய
> உடல் நிலை,
> மனநிலை,
> பொருளாதார நிலை,
> உணர்வு நிலை,
> ஆன்ம நிலை என
> ஐந்தையும்
> சங்கம்
> உயர்த்திவிடும்.

உலகத்திலேயே மிக நீளமான, காலத்தால்
பரிசோதிக்கப்பட்ட முறையாகவும்,
மிகத் தொன்மையாகவும், மிகக் குறைந்த
தவறுகள் நடைபெறும் அமைப்பாகவும்,
இன்றும் இந்த பூமியில் இருப்பது
சங்கங்கள்தான்.

ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

தவறில்லாத ஒரு அமைப்பே இருக்க முடியாது. நாம் சுவாசம் செய்யும்போது கூட எத்தனையோ கிருமிகளைக் கொல்கிறோம். அப்படிப் பார்த்தால் சுவாசிப்பதும் தவறுதான் இல்லையா?

நான் அந்த தவறை சொல்லவில்லை.

தர்மத்தை நிலைநிறுத்தி, மனிதகுல வளர்ச்சிக்கு நேரடியாய் உதவிய, மனிதர்களின் வளர்ச்சிக்கு நேரடியாய் உழைத்த அமைப்பைப்பற்றி ஆராய்ந்தோமானால், அது மிகக் குறைந்த தவறுகளோடு, காலம் காலமாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் உதவி செய்து வருவது 'சங்கங்கள்' மட்டுமே.

யார் சங்கத்திற்குள் வந்தாலும், அவர்களுடைய உடல் நிலை, மனநிலை, பொருளாதார நிலை, உணர்வு நிலை, ஆன்ம நிலை என ஐந்தையும் சங்கம் உயர்த்திவிடும்.

இதில் பொருளாதாரம் என்பது மிக முக்கியமான வார்த்தை. இந்த பொருளாதாரத்தைப் பற்றி புத்தர் சொல்லவில்லை. ஆனால் இன்றைய மனிதர்களுக்கு என தியானபீடத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் ஆனந்த சமாஜத்தில், பொருளாதாரத்தை நாம் சேர்ந்திருக்கின்றோம். இதை காலத்திற்கு ஏற்றவாறு சேர்த்திருக்கின்றோம். இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் செய்ய வேண்டிய தேவை வந்துவிட்டது.

பொருளால் பல கம்பெனிகள் ஒன்றாக சேர்ந்திருந்தாலும், உணர்வில் நன்றாக சேர்ந்தவர்களால்தான் உலகத்திற்கு உதவ முடிந்திருக்கிறது.

உலகத்திற்கு சேவை செய்ய முடிந்திருக்கின்றது.

உணர்வால் ஒன்றிணைந்தவர்கள்
உள்ளுலகத்திலும், வெளியுலகத்திலும் உச்ச
சுகத்தைத் தொடுவார்கள்.

உண்மையைச் சற்று நேர்மையாக யோசித்துப் பாருங்கள்.

யார் சங்கத்திற்குள் உள்ளே வந்தாலும், உடல்ரீதியாக, உயிர் ரீதியாக பொருளாதார ரீதியாக, ஆன்மீக ரீதியாக அவர்களை உயர்த்தும். அதற்கான தானியங்கி நுட்பங்கள் (Automatic mechanism) இந்த சங்கங்கள்.

பொருளால் பல
கம்பெனிகள் ஒன்றாக
சேர்ந்திருந்தாலும்,
உணர்வில் நன்றாக
சேர்ந்தவர்களால்தான்
உலகத்திற்கு உதவ
முடிந்திருக்கிறது.

ஒரு லேத்தோ(Lathe) அல்லது மிஷினுக்குள்ளோ ஒரு கம்பியை உள்ளே நுழைத்தோமானால், அந்த கம்பி ஒரு பொருளாக மாறி வெளியே வரும். அதுபோல்தான் சங்கம் என்பதும். ஒரு மனிதரை சங்கம் எனும் மிஷினுக்குள் நுழைத்து ஜீவன் முக்தராக (Jeevan Mukta) வெளியே எடுக்கும் தானியங்கி நுட்பங்கள்தான் ஆனந்த சமாஜங்கள். சங்கத் திற்குள் ஒருவர் நுழைந்து விட்டால், அவர் வெளியே வரும்போது ஜீவன் முக்தராக வருவார்.

உடல், மனம், பொருள், உறவு, ஆன்மா எனும் இந்த ஐந்து நிலைகளிலும் ஒரு மனிதரை உச்சத்திற்கு, மேல் நிலைக்கு அழைத்து வரும் அமைப்புதான் இந்த சங்கம்.

யாரும், எதையும் இழக்காமல், எல்லாவற்றையுமே பெற்றுக் கொள்ளக் கூடிய அமைப்பு சங்கம்.

இதன் காரணத்தை ஆராய்ந்து பார்த்தோமென்றால், மனரீதியாக, கொள்கை ரீதியாக, விருப்பத்துடன்தான் இங்கு ஒருவர் சங்கத்துடன் ஒன்றிணைகின்றார்.

நமக்குச் சாதகமான, இனிமையான ஒரு சூழ்நிலை மட்டும் அமையுமானால் நம் வாழ்க்கையின் தரம் (quality) ஆயிரம் மடங்கு உயர்ந்துவிடும் இல்லையா? உண்மையில் பார்த்தீர்களென்றால், பல்வேறு இடங்களில் தீவுகளாகப் பிரிந்திருப்பதால்தான் நமக்கு வந்து சேர வேண்டிய பல விஷயங்கள் நம்மை வந்து சேர்வதே இல்லை.

| ஒருவரிடம் இருப்பது தன்னிடம் இல்லை என்ற ஏக்கம், பொறாமை, இயலாமை, குற்றஉணர்ச்சி இதுவெல்லாம் இருக்கும்வரைதான். | பல பேருடன் பழகுவதும், இருப்பதும், பல பேருடன் நட்போடு இருப்பதும் ஒவ்வொருவருக்குள்ளும் மிகப்பெரிய பலத்தையும், மன நலத்தையும் கொடுக்கும். எப்போது பிரச்சினை வரும்? ஒருவரிடம் இருப்பது தன்னிடம் இல்லை என்ற ஏக்கம், பொறாமை, இயலாமை, குற்றஉணர்ச்சி இதுவெல்லாம் இருக்கும்வரைதான். எல்லோரும் ஒரே நிலையில் வாழ்வதே, எல்லாவித பிரச்சினைகளையும் தவிர்த்து விடும். ஒரே ஒரு கொள்கையோடு வாழ்பவர்களுடன் இணைந்து வாழ்வதே, மிக இனிமையைத் தரும். |

அதைத்தான் சங்கம் என்று சொல்கின்றோம்.

சங்கம் மற்றவர்களுக்கு உதவுவதைவிட உங்களுக்கு அதிக பலன்களைக் கொடுக்கும்.