KAILASA Library/அவசிய அறிவியல்/ஆனந்த சமாஜங்கள் உங்கள்Sign in
அவசிய அறிவியல்

ஆனந்த சமாஜங்கள் உங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அடிப்படை வாழ்க்கைமுறை

ஒரு நாள் கடவுள் தோன்றுவார், வெண்குதிரைகள் பூட்டிய தேரில் கல்கி அவதாரமாக வருவார். வந்து, மகனே கவலைப்படாதே! யாம் பார்த்துக் கொள்கிறோம். உனக்காக சொர்க்கத்தைக் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்வாரா என்ன?

நாம்தான் நமக்குத் தேவையான சமுதாயத்தை, நமக்குத் தேவையான ஆனந்த சமாஜத்தை, நம்மைச்சுற்றி தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

நம் எல்லோருக்குமே ஆனந்தமான வாழ்க்கைதான் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் நம்மைச் சுற்றியோ வேறு மாதிரியான சமூகம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இருக்கும் இடமே நரகம் போன்ற தோற்றத்தை தந்துவிடுகின்றது.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், சொர்க்கம், நரகம் என்பது புவியியல் ரீதியானது அல்ல. அது உணர்வு ரீதியானது.

இதயமும், சமூகமும் ஒன்றாக இருக்கும் இடம்தான் சொர்க்கம். இதயமும் சமூகமும் தனித்தனியாக இருக்கும் இடம்தான் நரகம்.

ஆனந்த
சமாஜ
நிர்மாணம்
என்பது
முதலில் நம்
அடிப்படை
உரிமை.

இப்போது நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

என்னென்ன பிரச்சனைகள் நமக்கு இருக்கின்றன என்று நமக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் சொல்கிறோம், ஆனந்த சமாஜ நிர்மாணம் என்பது முதலில் நம் அடிப்படை உரிமை.

இரண்டாவது நம் அடிப்படைத் தேவையுமாகும்.

நன்றாக யோசித்துப் பாருங்கள், “எத்தனை நாட்கள்தான் பக்கத்து வீட்டு மனிதரையே முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருப்பது?

வேறு மனநிலையில் இருக்கும் ஒருவரை முறைத்துப் பார்ப்பதினால், நாம் தான் துக்கத்திற்குள் போகிறோம். நாம்தான் நரகத்திற்குள் போகிறோம்.

எவ்வளவு நாட்கள்தான் நம்மைச் சுற்றியிருக்கும் சமூகத்துடன் சண்டை போட்டுக்கொண்டேயிருப்பது?

எவ்வளவு நாட்கள் இதுபோன்ற இடத்தில் வாழ முடியும்?

ஆனந்தமாக
வாழ்வதும்,
தன்னைச் சுற்றி
ஒரு ஆனந்தமான
சமுதாயத்தை
உருவாக்கிக்
கொள்வதும்,
ஒவ்வொரு
மனிதரின்
பொறுப்பு.

நம்மைச் சுற்றி ஆனந்த சமாஜத்தை அமைத்துக்
கொள்வது என்பது நம் ஒவ்வொருவரின்
அடிப்படைக்கடமை, அடிப்படை உரிமை,
அடிப்படைத் தேவை மற்றும் அடிப்படை
பொறுப்பு ஆகும்.

அடுத்த ஜென்மம் எங்கு எடுப்போம் என்று யாருக்கும் தெரியாது. எப்படியிருக்கும் என்றும் தெரியாது.

அடுத்த ஜென்மம் முதலில் இருக்குமா? இல்லையா? என்று கூடத் தெரியாது.

உங்களில் யாருக்காவது தெரியுமா? யாருக்கும் தெரியாது இல்லையா. அதனால்தான் சொல்கின்றோம்; இப்பொழுதே, இருக்கப்போகும் நூறு வருடத்தில், வாழும் வாழ்க்கையையே ஆனந்தமாக வாழ்வதும், தன்னைச் சுற்றி ஒரு ஆனந்தமான சமுதாயத்தை உருவாக்கிக் கொள்வதும், ஒவ்வொரு மனிதரின் பொறுப்பு. ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை.

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒவ்வொரு மனிதருக்கும் இது ஆன்ம சாதனை. நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். நம்மைச்சுற்றி ஒரு ஆனந்த சமாஜத்தை நிர்மாணித்துக் கொள்ளுதல், ஒவ்வொரு மனிதருக்குமான ஆன்ம சாதனை. இது ஒரு அடிப்படையான வாழ்க்கை முறை.

இந்தியாவில் ஜெயின் சமூகத்தினர் எல்லாரும் பொருளாதாரத்தில் வளர்ந்திருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா?

அவர்கள் சங்கமாகச் சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளத் துவங்கியதுதான்.

இன்றைய நிலையில் உலகத்தில் 80 சதவிகித பொருளாதாரம் வெறும் நான்கே நான்கு சமூகத்தினர் கையில்தான் இருக்கின்றது. இந்த நான்கைந்து குழுக்களின்பொருளாதாரம்தான்உலகத்தின்மொத்தப்பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கின்றது.

நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், புள்ளி விபரங்கள் சொல்கின்றது. அமெரிக்காவின் ரிசர்வ் வங்கி அமெரிக்க அரசாங்கத்திற்குச் சொந்தமானது அல்ல. யூதர்களுக்குச் சொந்தமானது என்று.

அமெரிக்காவின் ஒரு கைப்பிடியளவு எண்ணிக்கையிலிருக்கும் யூதர்களின் கையில்தான் அமெரிக்காவின் பொருளாதாரம் இருக்கின்றது. 1937-ல் நடந்த பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, இந்தக் குறிப்பிட்ட சங்கத்தினர்தான், இனத்தினர்தான் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கையில் எடுத்தார்கள். தைரியமாக ஒன்றாக நின்று பொருளாதாரத்தை உயர்த்தி நிறுத்தினார்கள்.

யூதர்கள் இவ்வளவு பெரிய அமைப்பாக, பலம் வாய்ந்தவர்களாக மாறியதற்குக் காரணம், அவர்களின் குரு துவக்கி வைத்த சங்கத்தை அவர்கள் அப்படியே தங்கள் வாழ்க்கைக்குள் எடுத்து வந்ததுதான்.

ஆனந்த சமாஜங்கள் பண ரீதியாக மட்டுமல்லாமல், சமூக ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் உதவிகள் செய்யும்.

எவ்வாறு புத்தருடைய சங்கம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய நன்மையைச் செய்கிறதோ, மஹாவீரர் உருவாக்கிய சங்கம் எப்படி உலகிற்கு மிகப்பெரிய நன்மையைச் செய்கிறதோ, மோசஸ் உருவாக்கிய சங்கம் உலகிற்கு உதவி செய்கின்றதோ, சங்கரர்உருவாக்கிய சங்கம் மிகப்பெரிய நன்மை செய்கிறதோ,

அதைப்போல் பூமியில் தோன்றும் ஒவ்வொரு ஞானியும் உருவாக்கும் சங்கமும் உலகிற்கு மிகப் பெரிய நன்மையைத் தந்து கொண்டேயிருக்கும்.

சங்கத்தின் மூலமாகத்தான் சமுதாயத்திற்கு மிகப்பெரிய சேவை செய்ய முடியும்.

சங்கத்தில் ஏதோ ஒரு சில தவறுகள் தான் நிகழ முடியும். சங்கத்தில் இல்லாத ஒருவர் 5000 தவறுகள் செய்தார் என்றால், சங்கத்தில் இருப்பவர் அதிகபட்சமாக ஒரு சில தவறுகள்தான் செய்வார்.

தவறுகள் நிகழக் காரணமே peer pressure என்ற ஒன்றுதான். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதேபோன்று நாமும் வாழ வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவதுதான். அது வழிகாட்டியாக, ஒரு மிகப் பெரிய வாழ்க்கையை வழிநடத்தும் மிகப் பெரிய உள் மன சக்தியாக, மிகச் சரியான சூழ்நிலையாக மாறினால் வாழ்க்கையை மேல்நோக்கி அழைத்து வரும் மிகப் பெரிய உந்து சக்தியாக மாறிவிடும். தவறான நோக்கத்திற்காக இருந்தால் அதுவே கீழ்நோக்கி அழைத்துச் செல்லும் சக்தியாக மாறி விடும்.

சங்கத்தில் இணையும் பொழுது மிகப்பெரும் வளர்ச்சியைக் காண்பீர்கள்.

> ஒவ்வொரு
> நாளுமே
> உங்கள்
> வாழ்க்கை
> கடவுள்
> உங்களுக்குக்
> கொடுத்த
> நன்கொடை.