குரு சக்திக்குள் கரைந்து விடும் சமாஜங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்கள் வாழ்வில் உயர்வும், தாழ்வும் மாடிப்படியிலிருந்து உருட்டிவிட்ட பந்து போன்று ஒவ்வொரு வினாடியும் சக்தியால் கூடிக்கொண்டே செல்ல வேண்டுமா? அல்லது கீழிருந்து உருட்டிவிட்ட பந்து போன்று வினாடிக்கு வினாடி
சக்தி குறைந்து கொண்டே செல்ல வேண்டுமா? என்பது உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தை வைத்து, அது ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்துத்தான் முடிவாகும்.
அந்தச் சூழ்நிலையால் ஏற்படும் அழுத்தத்தை, நம்முடைய மன அமைதிக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்வதைத்தான் மெய்மை என்று சொல்கிறோம்.
உடம்பால் நீங்கள் எதை சாத்தியமென்று நம்புகின்றீர்களோ, அதை வாழ்தல் மெய்மை.
உடலாலே சத்தியத்தை வாழாமல், வெறுமனே வாழ்க்கையில் சத்தியத்தை உணர்ந்துவிட முடியும் என்று ஒருபோதும் முடிவெடுத்து விடக்கூடாது. உடலாலே எவரொருவர் மெய்மையை உணர்கின்றாரோ அவரே முழுமையான வாழ்க்கையை வாழ்கின்றார்.
எப்படியோ பூமிக்கு வந்துவிட்டோம். 70
வருடம், 80 வருடம் இருக்கப் போகிறோம்.
அவ்வளவுதான்...
இருக்கும் 70 வருடத்தை, உங்கள் வாழ்க்கையை ஏன் மற்றவர்களுக்காகக் கொடுக்கிறீர்கள்.
இக்கருத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளுமே கடவுள் உங்களுக்குக்
கொடுத்த நன்கொடை.
> அன்பிற்காகவும்,
> பணிவிற்காகவும்
> மட்டும்
> வணங்குவதைத்
> தான் ஆனந்தத்
> திமிர்
> என்கின்றோம்.
கடவுளிடம், "அப்பனே நேற்று ஒருநாள் கொடுத்தாய். நான் நினைத்தது போன்று ஆனந்தமாக இருந்தேன்" என்று சொல்வது என்பது நாம் கடவுளுக்கு அர்ப்பணிக்கின்ற மலர். ஒவ்வொரு நாளும் இரவு உறங்கச் செல்லும் முன் "இதோ பாரப்பா! நான் எதை ஆனந்தமென்று நினைத்திருந்தேனோ, அதைப்போன்றே நான் ஆனந்தமாக இருந்தேன். என்னைச் சு ற்றியிருந்தவர்களையும் ஆனந்தமாக இருக்க வைத்திருந்தேன். இந்த நாள் உன் காலடியில் சமர்ப்பணம்" என்று சொன்னீர்கள் என்றால், உங்களுடைய வாழ்க்கையில் கணக்கு வழக்கை மிகச்சரியாக வைத்திருக்கிறீர்கள் என்று பொருள்.
இவ்வாறு இருப்பவர்கள் எதற்கும் தயாராக இருப்பார்கள். "நான் என் வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்தேன். மற்றவர்களையும் என்னால் முடிந்த அளவிற்கு ஆனந்தமாக வைத்திருந்தேன்" என்ற தெளிவுடன் இருப்பார்கள். 'நாம் யார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்' எனும் திறம் வரும்.
இதைத்தான் 'ஆனந்தத் திமிர்' என்று சொல்கிறேன். "நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும்" என்று பாரதி சொல்வார். நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தில், நீரில், நெருப்பில் என பஞ்சபூதங்கள் தாண்டிய எதிலும் அஞ்சாததன்மைதான் இந்த ஆனந்தத் திமிர்.
அன்பிற்காகவும், பணிவிற்காகவும் மட்டும் வணங்குவதைத்தான் ஆனந்தத் திமிர் என்கின்றேன். இந்த நிலையைத்தான், "நாம் யார்க்கும் குடியல்லோம்
நமக்கென
ஒரு
சொர்க்கத்தை
உருவாக்கிக்
கொள்ளலாம்.
நமனை அஞ்சோம்" என்று செய்வேன். எதற்கும் அஞ்சாத ஆனந்தத் திமிர் நிறைந்தவர்களாக, ஆனந்தத்தின் உச்சத்திலேயே வாழ்பவர்களாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.
சமாஜங்கள் உங்களுக்குள் ஆனந்தத் திமிரை நிறைத்துவிடும்.
நம்மைச்சுற்றி நாமே ஆனந்த சமாஜத்தை
உருவாக்கிக் கொள்ள வேண்டியது நம்முடைய
கடமை, பொறுப்பு. இதற்கெல்லாம்
அப்பாற்பட்டு இதுதான் நம் வாழ்க்கையின்
மெய்மையாகும்.
இன்னொரு முக்கியமான விஷயம். புத்தர் உருவாக்கிய சங்கம் 2500 வருடங்கள் பழமையானது. மஹாவீரர் உருவாக்கிய சங்கம் 2000 வருடங்கள் பழமையானது. அதில் பல நன்மைகள் நிகழ்ந்தன. இவர்கள் அன்று உருவாக்கிய சங்கங்களில்கூட ஏன் ஒன்றிரண்டு தவறுகள் நடந்தது என்பதை ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு நமக்கு இன்று கிடைத்திருக்கிறது.
புத்தர் உருவாக்கிய சங்கம், மஹாவீரர் உருவாக்கிய சங்கம், கிருஷ்ணர் உருவாக்கிய சங்கம், சங்கரர் உருவாக்கிய சங்கம், நமக்கு ஏற்கனவே கிடைத்திருப்பதனாலும், அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து விட்டதனாலும் என்னென்ன இடங்களில் தவறுகள் நிகழ வாய்ப்பிருந்திருக்கின்றது என்று தெரிந்து கொண்டதனாலும், இதற்கு மேல் தவறுகள் வரமுடியாத ஒரு அழகான சங்கத்தை உருவாக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கின்றது.
அதனால் நிச்சயம் ஒவ்வொருவருக்குள்ளும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உறவுகள் ரீதியாகவும், ஆன்ம ரீதியாகவும் இந்தச் சங்கம் எனும் அமைப்பு மிகப்பெரிய வளர்ச்சியை உருவாக்கிவிடும்.
நமக்கென ஒரு சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
ஆனந்த சமாஜம் என்பது உங்களுடைய வாழ்க்கையையே மாற்றிவிடக் கூடியது. சங்கம் என்பது உங்களுடைய வாழ்க்கையின் ஒரு அடிப்படைத் தேவை. அதனால்தான் சங்கத்தின் தேவையைப் பற்றி, முக்கியத்துவம் பற்றி உங்களுக்குச் சொல்கிறோம்.
ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பம் என்று ஒன்று இருந்தது. அதில் மனிதரின் எல்லா பிரச்சி னைகளும் பார்த்துக் கொள்ளப்பட்டன.
எப்படியோ, ஏதோ ஒரு காரணத்தால் கூட்டுக் குடும்ப முறை இப்போது அழிந்துவிட்டது. அதனால் ஏற்பட்ட உபவிளைவுகளுக்கும், இன்றைய சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்குமான உன்னத தீர்வு, நம்முடைய ஆனந்த சமாஜங்கள்தான்.
சங்கம் என்பதன் மதிப்பை புரிந்து கொள்ளுங்கள்.
சமாஜங்கள் உருவாகத் துவங்கினால்தான்,
சமுதாயத்திற்கு நம்மால் ஏதாவது சேவைகள்
செய்யமுடியும்.
சமாஜங்கள்
உருவாகத்
துவங்கினால்தான்,
சமுதாயத்திற்கு
நம்மால்
ஏதாவது
சேவைகள்
செய்யமுடியும்.
ஒன்றுமில்லை. இரண்டு பேர் வேறு வேறு வீட்டில் தங்கிக் கொண்டு என்னதான் சிரித்துப்பேசி சேவைகள் செய்தாலும், பெரிதாக அவர்களால் என்ன செய்துவிட முடியும்? ஆனால், ஒரே இடம் எனும் போது இருவருக்குமே நிர்வகிப்பது மிக எளிதாக இருக்கும்.
இது நமக்கும் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டு வரும். சமூகத்திற்கும் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டு வரும். இந்த உதாரணத்தை நன்றாகப் புரிந்துக் கொள்ளுங்கள். பத்துபேர் பத்து வோல்ட் கரண்டைக் கொடுத்தால் 100 வோல்ட் கரண்டாக மாறும். ஞானி எனும் சத்குருநாதர் இருந்தால், அது ஸ்டெப் அப் டிரான்ஸ்பார்மராகும் அப்போது, 1 இலட்சம் வோல்ட் கரண்டாக மாறிப் போகும்.
அப்போது 10 வோல்ட் சக்தியைப் போட்ட அத்தனைப் பேருக்கும் எத்தனை வோல்ட் சக்தி கிடைக்கும்? தெரியுமா? ஒவ்வொருக்குமே 1 லட்சம் வோல்ட் சக்தி கிடைக்கும்.
இந்த சமாஜங்கள், நமக்கு நாமே தயாராக்கிய, நாமே நமக்கு தயாரித்துக் கொள்ளக் கூடிய எல்லா சக்திகளும் நிறைந்தது.
உடல் பலம், மன பலம், அறிவு பலம், ஆன்ம பலம், மட்டுமல்லாமல் பண பலம் நிறைந்த ஒரு உருவமாக, ஒரு சங்கமாக, ஒரு சமாஜமாக நாம் உருவாகிவிட்டோம், என்றால் நமக்கு நாமே ஒரு சொர்க்கத்தை உருவாக்கிவிட்டோம். சத்யத்திற்குள் நுழைந்துவிட்டோம் என்ற நிம்மதியான மகிழ்ச்சியைப் பெறலாம்.


அவசிய அறிவியல்
| நாட்டுக்கு... | பிரபஞ்சத்திற்கு அளிக்கப்பட்ட சக்தி தரிசனம் 'இந்தியா'. இங்கிருந்துதான் பிரபஞ்சம் முழுவதும் சக்தி பரவுகிறது. |