KAILASA Library/அவசிய அறிவியல்/இந்தியா - தர்மத்தின் அச்சாணிSign in
அவசிய அறிவியல்

இந்தியா - தர்மத்தின் அச்சாணி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இந்த நாடே ஜீவன்முக்தி என்ற ஒரு லட்சியத்தின் மீது உருவாக்கப்பட்ட நாடு. இந்த ஒரே ஒரு லட்சியத்தின் மீது மட்டுமே உருவாக்கப்பட்ட நாடு.

ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இன்னும் நமது நாடு தார்மீகமாக இருக்கிறது.

> ஆலயங்களும்,
>
> ஆசிரமங்களும்தான்
>
> தர்மத்தை
>
> நடத்துகின்ற
>
> மையங்கள்.

மேலைநாடுகளில், வளரும் நாடுகளில், காவல்நிலையம் இல்லாத கிராமமே இருக்காது. 4,60,000 கிராமங்கள் நம் நாட்டில் இருக்கின்றன. ஆனால், 16,000 காவல்நிலையங்கள் தான் இருக்கின்றன.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய
நாடு வெறும் Law Enforcement Department
-ஆல் இயங்கவில்லை.

Dharma Enforcement Department -ஆல் தான் இயங்குகிறது.

ஆலயங்களும், ஆசிரமங்களும்தான் தர்மத்தை நடத்துகின்ற மையங்கள்.

ஒரு கோடி ஆலயங்கள், ஆசிரமங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

Every day, congregation happens in atleast one crore places.

வழிபாடு நடக்கின்ற ஆலயங்களும், ஆசிரமங்களும் இந்தியாவில் மட்டும் ஒரு கோடி இருக்கின்றன.

ஒரு முக்கியமான தகவல், இது வரையிலும் இந்தியாவில்தான் மிகக் குறைந்த குற்ற சதவிகிதம் இருக்கின்றது.

நான் சொல்கின்ற எல்லாமே அறிவியல் பூர்வமான புள்ளிவிவரங்கள். மிகத் தெளிவான புள்ளிவிவரங்கள்.

காரணம் இந்தியாவே Dharma Enforcement Department. வேறு ஒன்றுமில்லை.

நீங்கள் ஏதாவது தவறு செய்தால், உங்கள் அப்பாவைத் தான் திட்டுவார்கள், "என்னப்பா நீ பிள்ளையா வளர்த்திருக்கே?" என்று சாலையில் நம்முடைய உறவினர்கள் அல்லது நண்பர்கள் பேசுகின்ற வார்த்தைதான் நம் எல்லோரையும் தர்மத்தில் வைத்திருக்கிறது.

ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இது மிக முக்கியமான ஒரு விஷயம்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
என்கின்ற சர்ச்சைகளுக்கெல்லாம் போக நான்
விரும்பவில்லை.

அதைப்பற்றி சொல்ல வேண்டுமானால் என்ன சொல்வது?

அதையெல்லாம் அறிவுரீதியாக, இந்த வாத,
விவாதத்திலேயே மகிழ்ச்சி அடைகின்ற
மக்களுக்கு என்று விட்டுவிடலாம்.

கடவுள் இருக்கிறார் என்று சொல்லி வாதம்
செய்கிறவர்கள் ஒரு குழு. இல்லை என்று
சொல்லி வாதம் செய்கிறவர்கள் மற்றொரு குழு.

என்னைப்
பொறுத்தவரை,
'கடவுள்' இருக்கிறாரா?
இல்லையா? என்பது
வாதம் செய்வதற்கான
பொருளல்ல. கடந்து
உள்ளிருந்து
அனுபவிக்க
வேண்டிய உணர்வு.

ஆனால், என்னைப் பொறுத்தவரை, 'கடவுள்' இருக்கிறாரா? இல்லையா? என்பது வாதம் செய்வதற்கான பொருளல்ல. கடந்து உள்ளிருந்து அனுபவிக்க வேண்டிய உணர்வு. கடந்து உள் இருந்து அனுபவிக்க வேண்டிய உணர்வே கடவுள்.

உடனே நாம் கேட்கலாம். "அப்போது கடந்து உள் இருந்து அனுபவித்த ஞானிகள், கடவுள் இருக்கிறார் என்று சொல்கின்றார்களே" என்று.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அந்தக் கடவுள் என்ற சத்தியத்தினாலே சமூகத்திலே சில கட்டுக்கோப்புகள், சில தர்மங்கள் இருக்கின்றது. அதாவது தேருக்கு அச்சாணி மாதிரி, அந்த சத்தியம் இந்தியாவை மட்டுமல்ல, பிரபஞ்சத்தையே சமநிலையில் வைத்திருக்கிறது. Dharma Enforcement Department மாதிரி, சமூகத்திற்குள்ளே மிகப்பெரிய சமநிலையை வைத்திருப்பதற்கு அந்த சத்தியம் உதவுகின்றது.

எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை இது. சத்தியத்தை எடுத்து விட்டோமானால், சமூகத்திற்குள் சமநிலையை வைத்திருப்பது சாதாரண வேலையல்ல, மிகப்பெரிய வேலை. சத்தியத்தை வைத்திருந்தால்தான், சமூகத்தின் சமநிலையை நம்மால் காப்பாற்ற முடியும்.’

தர்மம் எனும் அந்த சத்தியம் இருப்பதனால்தான் இந்தியாவில் அரசாங்கத்தினுடைய சட்டம் மற்றும் ஒழுங்கு சுலபமாக நடக்கின்றது. அவர்களின் பணி எளிதாக இருக்கின்றது.

அதற்குக் காரணம், இந்த சத்தியம்தான். ‘கடவுள்’ என்ற சத்தியம்தான்.

தர்மம் நம்முடைய வாழ்க்கையின் பாகமாக மாறிவிட்டதனால், இந்த சத்தியங்களை உள்வாங்கியவர்கள் தங்கள் சுபாவத்தாலேயே குற்றம் புரியும் செயலுக்கு செல்ல மாட்டார்கள். காரணம் இயற்கையாகவே, மனம் ஒரு ஆனந்த மயமான நிலையிலிருக்கும்.

ஜீவன் முக்தர்கள் இங்கு வாழ்வார்கள்.

தனித்தனியாக காவலர்களை நியமித்து அவர்களை மேற்பார்வை செய்ய வேண்டிய தேவை இருக்காது. அவர்கள் மனதிற்குள்ளேயே காவலர் வந்து மேற்பார்வை செய்துவிடுகின்றாற் போன்று ஆகிவிடுகின்றது.

> சத்தியம்
> இருப்பதனால்தான்
> இந்தியாவில்
> அரசாங்கத்தினுடைய
> இந்த சட்டம்
> மற்றும்
> ஒழுங்கு
> சுலபமாக
> இருக்கிறது.

அதனால்தான் சொல்வதுண்டு, கடவுள் என்ற சத்தியம், ‘கடந்து உள் இருக்க வேண்டிய, உள் இருந்து அனுபவிக்க வேண்டிய உணர்வு’. அது நமது சமூகத்தை சமச்சீராக வைத்திருக்கின்ற மிகப்பெரிய இனிமையான, ஆனந்தமயமான ஒரு சத்தியம்.

அதனால்தான் நமது முன்னோர்கள், இந்த சத்தியத்தை மீண்டும், மீண்டும் உயிரோடு வைத்திருக்கத் துவங்கியிருக்கின்றார்கள்.

‘வாழையடி வாழையென’ ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக, ஞானப் பரம்பரை இங்கிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மூன்றாவதாக, மிக முக்கியமான விஷயம், ஆழமான ஒரு சத்தியம். உங்கள் பக்திக்கும், பிரார்த்தனைக்கும், வேண்டுதலுக்கும், பதிலளிப்பதற்காகவும், அவைகளுக்கு ஏற்ற செயல் புரிவதற்காகவும், அவைகளோடு தொடர்பு கொண்டு விடையளிப்பதற்காகவும், நீங்கள் காணுகின்ற வடிவிலே, அந்த சக்தி வெளிப்படும் பொழுது, அதைத்தான் குரு, அவதாரம், பரமஹம்ஸர், ஞானி என்கின்ற வார்த்தைகளாலே எல்லாம் அழைக்கின்றோம்.

அந்த சக்தி உங்களோடு உறவு கொள்ள, உங்களோடு கலந்துறவாட வெளிப்படும் பொழுது, அதைத்தான், "ஞானி" என்று சொல்கின்றோம். "சத்குரு" என்று சொல்கின்றோம். அவதாரம் என்று சொல்கிறோம். "பரமஹம்ஸர்" என்று சொல்கின்றோம்.

பல ஆயிரக்கணக்கான மக்களுடைய பிரார்த்தனை, ஆழ்ந்த தேடுதல், ஏக்கம்தான் ஒரு குருவை உங்கள் நாட்டில் மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கிறது. குறைந்த தாழ்வழுத்தம் ஏற்பட்டால், எப்படி புயல் அந்த இடத்தில் தானாக ஈர்க்கப்படுகிறதோ, அதுபோல் பல்வேறு மக்களுடைய பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் ஒன்றாகச் சேர்ந்து இறுகும்பொழுது, அந்த உணர்வு ஒரு ஞானியை பூமண்டலத்திற்குள் இழுக்கின்றது.