பிரபஞ்சத்தின் ஆஞ்னா நமது பாரதம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பலபேர் என்னிடம் கேட்பதுண்டு, "ஏன் இந்தியாவில் இவ்வளவு ஞானிகள், சித்தர்கள், ரிஷிகள், சன்யாஸிகள் தோன்றுகின்றார்கள்?"
காரணம், இந்தியாவில் இருக்கின்ற மக்களின் தன்மையால் நிகழ்வது. காலங்காலமாக, பாரம்பரியமாக, இரத்தத்திலேயே, ஆன்மீகவாதிகள் தேடுதலை உணர்கின்றார்கள். தேவையை உணர்கின்றார்கள். இவ்வளவு பிராத்தனைகள், வேறு எந்த நாட்டிலும் நடப்பதில்லை. இவ்வளவு பிரார்த்தனை மையங்கள், எந்த நாட்டிலும் அமைக்கப்படுவதில்லை.
இவ்வளவு தியானம், இவ்வளவு தியாகம் வேறு எந்த நாட்டிலும் செய்யப்படுவதில்லை.
நன்றாகப் புரிந்துக்கொள்ளுங்கள், நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம், உங்கள் தேசத்தைப்பற்றி, உங்கள் பாரம்பரியத்தைப்பற்றி, எத்தனை ஆயிரம் முட்டாள்கள் குறை சொன்னாலும், குற்றம் சொன்னாலும், கவலைப்படாதீர்கள். உங்களிடம் மிகப்பெரும் பலமான “ஆன்ம சக்தி” இருக்கின்றது.
ஆன்மத் தேடுதல் இருக்கின்றது. இன்றைக்கும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவினுடைய, எந்த கிராமங்களுக்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள்.
நான் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு சென்றிருக்கின்றேன். கிராமங்களில் நடந்து சுற்றிய என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன், கிராமங்கள்தான் இந்தியாவின் பலம்.
இந்தியாவினுடைய எல்லாக் கிராமங்களிலுமே மிகப்பெரிய கட்டிடம் கோவிலாத்தான் இருக்கும். அதேபோன்று நகரங்களில்கூட ஆயிரக்கணக்கான நகரங்களை என்னால் சொல்ல முடியும்.
திருவண்ணாமலை, மதுரை, திருப்பதி என அந்தக் கிராமத்திலிருக்கக் கூடிய மிகப்பெரிய கட்டிடம், அந்த நகரத்திலிருக்கக்கூடிய மிகப்பெரிய கட்டிடம், அந்த ஊரில் உள்ள கோயிலாகத்தான் இருக்க முடியும். அந்தக் கோயிலைவிட பெரிய கட்டிடத்தை யாராலும் கட்ட முடியாது. அவ்வளவு பெரிய கோயில்களை அமைத்து இருக்கின்றார்கள்.
அவர்களின் வீட்டைப் பார்த்தீர்கள் என்றால் ஓட்டு வீடாக இருக்கும். சிலரது வீடு ஒட்டையாக இருக்கும். ஆனால் பிரார்த்தனை ஸ்தலங்கள், கருங்கல்லில் இருக்கும்.
நம்முடைய
சமூகமே
உள்உலகத்தை
நோக்கிய
அறிவியலுக்காக
உருவாக்கப்பட்ட
சமுதாயம்.
சாதாரண குடிமகன் மட்டும் அல்ல, அரசர் கூட அப்படித்தான் கட்டி வைத்தார். அவருடைய அரண்மனையை சாதாரண அழிந்து போகக் கூடிய பொருட்களாலும், பிரார்த்தனை ஸ்தலத்தை அழியாத கருங்கல்லாலும் அமைத்து இருந்தார்கள்.
இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்...
நம்முடைய சமூகமே உள்உலகத்தை நோக்கிய அறிவியலுக்காக உருவாக்கப்பட்டது.
அதனால் தான், எத்தனை விளம்பரம் செய்து, எத்தனை பணம் செலவு செய்தாலும், அரசியல்வாதிகளால் கூட்டமுடியாத, சினிமாக்காரர்களால் கூட்டமுடியாத, ஒரு கூட்டத்தை, வெறும் ஒரே ஒரு சொல், ஒரே ஒரு வார்த்தையினால், ஒரு ஞானியால், சத்குருவினால் கூட்டிவிட முடிகிறது.
கும்பமேளாவிற்கு ஒன்பது கோடி பேர் கூடினார்கள் 2007 ஜனவரியில், 9 கோடி பேர் ஒன்று சேர்ந்தார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஒரே ஒரு ரூபாய் கூட விளம்பரத்திற்காக செலவு செய்யப்படவில்லை. பஞ்சாங்கத்தில் அந்தத் தேதியை, இன்றைக்கு மஹாஸ்நானம் என்று எழுதியிருப்பார்கள்.
அவ்வளவு தான், கோடிக்கணக்கான மக்கள் வந்துவிடுவார்கள். அதிலும் நாற்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் நடந்து பயணித்து வருகிறார்கள். ஏறத்தாழ, ஒரு ஐநூறு கிலோ மீட்டருக்கு மேல் அவர்கள் நடந்து வருகிறார்கள்.
'என்ன வேண்டுமானாலும் கொடுக்கிறேன்' என்று சொன்னாலும், 'வருகிறவர்களுக்கெல்லாம் வீடு கட்டிக் கொடுக்கிறேன்' என்று சொன்னாலும் அரசியல்வாதிகளாலும் இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்ட முடியாது. இவ்வளவு பெரிய கும்பலைச் அவர்களால் சேர்க்க முடியுமா? முடியாது. அப்படி சொன்னால்கூட இவ்வளவு பெரிய கும்பலைத் திரட்ட முடியாது.
நம்முடைய பாரம்பரியத்தின் பலம் இதுதான். நம்முடைய கலாச்சாரத்தின் தூண் இது.
இந்த நாடு பிரார்த்தனைக்காகவும், ஞானத்திற்காகவும், ஆன்ம சாதனைக்காகவும் உருவாக்கி வைக்கப்பட்ட கட்டமைப்பு.
This Infrastructure is created specially for spiritual growth.
ஒரு மனிதருக்கு வாழ்க்கையில் பல விஷயங்கள், பல நேரங்களில் தேவைப்படலாம். நம் தேவையைப் பூர்த்தி செய்வதற்கே ஒவ்வொரு சமுதாயமும் உழைத்திருக்கிறது.
ஒவ்வொரு சமுதாயமும், ஒவ்வொரு தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
நமது பாரதம், ஞானத் தேடுதலையும், ஆன்ம ஞானத்தையும் பூர்த்தி செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட சமூகம். முழுமைத்தன்மை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட சமூகம். மொத்த பாரதமுமே, இந்த பூமிக்கு, இறைவன் அளித்த சக்தி தரிசனம்.
பிரபஞ்சம் முழுவதிலும், ஞானத் தேடுதல் இருந்தாலும், பிரபஞ்சத்திற்கு அளிக்கப்பட்ட சக்தி தரிசனம், பிரபஞ்சத்தின் ஆக்ஞா சக்கரம் பாரதம்தான். இதிலிருந்துதான், பிரபஞ்சம் முழுவதும் சக்தி பரவுகின்றது.
நன்றாக ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்த சத்தியங்களைத் தெரிந்து கொண்டதினாலே, இப்பொழுது, உங்களுக்குள் தீக்ஷை நிகழ்ந்து விட்டது.
இந்தச் சத்தியங்களை வாழத் துவங்குவதன் மூலமாக நீங்கள் சாதனையை, ஆன்ம சாதனையை, அடையத் துவங்குகின்றீர்கள்.
இதை வாழ்வதன் மூலமாக, ஜீவன் முக்தர்களாக நீங்கள் வாழுகின்றீர்கள்.
இதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலமாக, இந்த ஜீவன்முக்த தன்மையை உலகமெல்லாம் நீங்கள் பரப்புவீர்கள்.
அதனால், இந்த ஜீவன் முக்தத் தன்மையை உள்வாங்கி, இந்த சத்தியங்கள் மற்றவர்கள் எல்லோருக்கும் சென்று சேர்ந்து, பிரபஞ்சம் முழுவதும், உலகம் முழுவதும் ஜீவன் முக்தர்களாக வாழ்வதற்கான மிகப்பெரிய ஆன்மீகப் பேரலையாக மாறுங்கள்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மட்டும் ஜீவன்முக்தர்களாக வாழ்ந்து ஆனந்தமாக இருந்துவிட வேண்டுமென்று நினைக்காதீர்கள்.
இந்த சத்தியங்கள் எல்லோருக்கும் சென்று, உலகமே ஜீவன்முக்தத் தன்மையை அடையட்டும். உலகமே ஜீவன்முக்தர்களாக வாழட்டும். அதனால் இந்த ஜீவன்முக்த ஞானத்தை, இந்த ஜீவன்முக்த சத்தியத்தை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து, உலகமெல்லாம் பரப்ப, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன்.
ஆனந்தமாக இருங்கள்.

அவசிய அறிவியல்
| ## சீடர்களுக்கு... | உணர்வு மாற்றத்தை முதலில் (Psychological Revelution) உங்களுக்குள் நிகழ்த்துங்கள். ஞானநிலை உங்களுக்குள் மலரத்துவங்கும். |
சீடர்களுக்கு...
வேட்டுவ குலத்திலே பிறந்த, கரிய, பெருத்த ஒரு மிருகத்தை போல்தான் கண்ணப்பர் பார்ப்பதற்கு இருப்பார். வேட்டையாடத் தெரிந்த, அம்புகளையும், வில்லையும் உபயோகப்படுத்தத் தெரிந்த, ஒரு மிருகத்தைப் போலத் தான் அவர் வாழ்ந்து வந்தார். இவர் பெயர் திண்ணப்பர். ஏனென்றால் ஸ்திரமாக இருப்பதால் திண்ணப்பர் என்று பெயர்.
அவருடைய
வாழ்க்கையிலே,
அன்பு, பாசம்,
நட்பு போன்ற
இனிமையான
உணர்வுகளுக்கு
இடமே
கிடையாது.
அவருடைய வாழ்க்கையிலே, அன்பு, பாசம்,
நட்பு போன்ற இனிமையான உணர்வுகளுக்கு
இடமே கிடையாது. ஒன்று ஏதோ ஒரு மிருகம்
இவரை அடிக்க வேண்டும். அல்லது இவர்
அதை அடிக்க வேண்டும். அதுதான் அவர்
வாழ்க்கையின் சாரம்.
ஏதாவது தன்னை அடித்து உண்பதற்கு முன்,
கிடைப்பதை எல்லாம் அடித்துத் தின்பதுதான்
அவர் வாழ்க்கை. அவருடைய வாழ்க்கையை
இந்த இரண்டு வரிகளில் எழுதலாம்.
எப்போதும் இவர் எல்லாவற்றையும் அடித்துத் தின்று கொண்டிருப்பார்.
ஒருநாள், இவரை ஏதோ ஒன்று அடித்துத் தின்று விட்டது.
அவ்வளவுதான். மொத்த வாழ்க்கையுமே முடிந்து விட்டது. அந்த மாதிரியான வாழ்க்கைதான் திண்ணப்பருடையது.
‘ஒரு நாள், ஏதோ ஒன்று இவர் கண்ணில் பட்டது. அதன் கண்ணிலும் இவர் பட்டார். இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் அடித்துச் சாப்பிட்டார்கள்.’
இவர் கண்ணிலே பட்டது ‘சிவலிங்கம்’. ‘காளஹஸ்தியில்’, காட்டுக்கு நடுவில் ‘சிவலிங்கம்’ தான் இவர் கண்ணில்பட்டது. சிவலிங்கத்தின் கண்ணிலும் இவர் பட்டார்.
“அதனால்தான் ஒருவரை ஒருவர் உண்டுவிட்டார்கள்”. இரண்டும் இல்லாத ஒரு நிலையை, அந்த ஒரு வினாடியில் திண்ணப்பர் உணர்ந்தார்.
எங்கிருந்தோ அதன்மீது எப்படியோ பக்தி வந்தது.
எங்கிருந்தோ அன்பு வந்தது.
எங்கிருந்து என்றெல்லாம் அவருக்குத் தெரியவில்லை.
சிவலிங்கத்தைப் பார்த்ததும், அவருக்குள் ஒரு ஆழமான ஈர்ப்பு ஏற்பட்டது. அதை ஆங்கிலத்தில் Cognitive Shift என்று சொல்கிறோம், ஆழமான உணர்வு மாற்றம் (Psyhcological Revolution) நடந்தது.