உணர்வுமாற்றமே வாழ்வின்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உன்னத திருப்புமுனை
தன்னை அறியாமல் ஏதோ ஒரு காரணத்தினாலே பக்தி பொங்கியது. அகத்திலுள்ள ஊற்று திறந்தது. அன்றிலிருந்து, இவருடைய வாழ்க்கையில், வேறொரு பொருளிற்கும், விஷயத்திற்கும் இடம் இல்லாமல் போனது.
அது வரை, சத்தியமாக, ஸ்திரமாக தெரிந்து கொண்டிருந்த வெளி உலகம், திடீரென்று மங்கலாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது.
அதுவரையிலும் உணர்ந்தே பார்க்காத, நினைத்தே பார்க்காத பக்தி என்ற உணர்வு ஆழமாக தெரிய ஆரம்பித்தது. அதனால்தான் சீடர்களிடம் எப்போதும் சொல்வோம், அந்த உணர்வு மாற்றம் நிகழ்கின்ற வரையிலும், (Psychological Revolution) வெளிஉலகம் பல நிறங்களில், பல வண்ணங்களில் பளபளவென்று ஸ்திரமாகத் தெரியும். உள் உலகம் கருப்பு வெள்ளையில் (Black & White) மங்கலாகத் தெரியும்.
உணர்வு மாற்றம் நடந்துவிட்டதென்றால், உள் உலகம் பளபளவென்று பல வண்ணங்களில் தெளிவாகத் தெரியும். வெளி உலகம் மங்கலாக கருப்பு வெள்ளையில் தெரியும்.
Blessed are those who experience this transformation, this cognitive shift.
இந்த உணர்வு மாற்றத்தை உணர்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம், அந்த உணர்வு மாற்றம் மறைவதற்கு முன்பே அதை ஆழமாக, ஸ்திரமான, அனுபூதியாக மாற்றிவிட வேண்டும்.
சில நேரத்தில், அந்த உணர்வு மாற்றத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டோமானால் அது அணைந்துவிடும். அந்த உணர்வு மாற்றம், ஆரம்பத்தில் நெருப்பு பிடிப்பது போன்றது.
துவக்கத்தில் சின்ன அகல் தீபம் போன்றது. நாம் செய்ய வேண்டுயது, அதைக் காப்பாற்றி, பெரும் நெருப்பாக வரும் வரை காப்பாற்ற வேண்டும்.
காற்றடித்து அணைந்துவிடாமல், அதற்கு பல்வேறு விதமான உதவிகளை, மற்ற எரிபொருட்களைச் சேர்த்து, அதை உயிரோடு வைக்க வேண்டும். அது பிடித்து, காட்டுத் தீ போல பரவிவிட்டதென்றால், அதற்குப்பிறகு, எவ்வளவு காற்றடித்தாலும், என்ன மழை வந்தாலும் கவலை இல்லை.
உணர்வு
மாற்றத்தை
உணர்பவர்கள்
ஆசீர்வதிக்கப்
பட்டவர்கள்.
அந்தக் காற்றினால் இன்னும் ஆழமாக, வேகமாகத்தான் எரியும். அந்த அளவிற்கு பிடித்து நம் உணர்வு முழுவதையும் எரிக்கின்ற வரை, ஒரு பெரிய கற்பக விருட்சம், காமதேனு கிடைத்தாற் போன்று அந்த விளக்கைக் காப்பாற்ற வேண்டியது நம் பொறுப்பு.
அதை நம் ஹ்ருதய கர்ப்பத்தில் வைத்துத் தாங்கி, எரிபொருள் சேர்த்து, மற்றவர்களுடைய சந்தேகம் என்கின்ற காற்று வந்து அணைத்து விடாமல் பார்த்து, மீண்டும் மீண்டும் செய்கின்ற தியானங்கள் என்ற எரிபொருளைச் சேர்த்து, சத்சங்கம் என்ற துருத்தியாலே ஊதி, ஊதி அதை காட்டுத்தீயாக மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றி விட்டோமானால், மற்றவர்களின் சந்தேகம் என்ற காற்று அடித்தாலும்கூட, இன்னும் ஆழமாக வேகமாகத்தான் எரியும்.
சில நேரத்தில், துரதிர்ஷ்டசாலிகள், அந்த விளக்கு கிடைத்த உடன் தவறாக பயன்படுத்துபவர்கள் அல்லது பயன்படுத்த தெரியாமல் இருப்பார்கள். உடனேயே வேறு வழியில்லாமல், வெளியில் எடுத்துக்கொண்டு சென்றால், மற்றவர்கள் என்ன செய்வார்கள்? யாராவது ஒருவர் ‘ப்பூ’ என்று ஊதி அணைத்துவிடுவார்கள். வேறு ஒன்றும் வேண்டாம், வீட்டில் போய் பத்து நிமிடம் செல்போனில் யாருடனாவது பேசினால் எல்லாம் முடிந்துவிடும். உயர்ந்த நிலை என்னவாகும், காணாமல் போய்விடும்.
Congnitive shift நடந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அதை அப்படியே உள்வாங்கி, காட்டுத்தீயாக
மாறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ
அதைச் செய்வதுதான் சாதனை.
கனவுலகின் சந்தேகம் வலுப்பெற்றால் விழித்துக் கொள்வோம்!
வால்மீகி கண்ணை மூடி “மரா” “மரா” என்று
உச்சரித்தபொழுது, அவர் மனம் எப்படிப்
போயிருக்கும் என்று, என்னால் நன்றாகக்
கண்டுபிடிக்க முடியும். கட்டாயமாக, பத்து
முறைகளாவது வீட்டிற்குத் திரும்பிவிடலாமா
என்று யோசித்திருந்திருப்பார்.
கனவுலகின்
சந்தேகம்
வலுப்பெற்றால்
விழித்துக்
கொள்வோம்!
“என்னடா இது? நாம் வேலையில்லாத வேலையைச் செய்துகொண்டு இருக்கிறோம். சரி உண்மை தான், கர்மம் தான், என்ன செய்வது? ஒருவேளை இங்கு வந்த சாமியார் சொன்னதெல்லாம் உண்மையென்று யாருக்குத் தெரியும்,” என்று இப்படி மனம் உலுங்கும், உலுக்கி இருக்கும்.
புத்தர் கட்டாயமாக பத்து முறையாவது அரண்மனைக்கு வந்துவிடலாம் என்று யோசித்திருந்திருப்பார்.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், வீட்டை விட்டு விட்டுச் சென்றது உண்மை என்பது போல், பத்து முறையாவது திரும்ப வந்து விடலாம் என்று யோசித்திருந்திருப்பார் என்பதும் உண்மைதான்.
அந்தப் படிகளை எல்லாம் நானும் செய்திருக்கின்றேன் என்கின்ற அனுபவத்தினாலே, அந்த அனுபூதியினாலே, உங்களுக்குத் தெளிவாக சொல்கிறேன். தெரிந்துகொள்ளுங்கள். அவர் கடந்த படிகளை எல்லாம் நானும் கடந்து இருக்கிறேன் என்பதனால், என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன் அகங்காரத்தினால் அல்ல.
அனுபூதியில் இருந்து சொல்கிறேன், கட்டாயமாக அவர்களுக்கு குழப்பம் இருந்திருக்கும்.
ஆனால், அதைத் தாண்டி ஸ்திரமாக நிற்பவர்தான் சாதனை புரிபவர். அது தான் சாதனை.
தியான
நுட்பத்தை
உங்களுக்குள்
சேர்க்கும்
முன்பு, உங்கள்
உணர்வுக்குள்
பெரும் மாறுதல்
உண்டாக
வேண்டும்.
நீங்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் பொழுதே, ஒரு சந்தேகம் வரும், "ஆஹா! இது கனவுதான்" என்று. இதே சந்தேகம் வலுப்பெற்று ஆழமானால் விழித்துக் கொள்வீர்கள்.
அந்தச் சந்தேகம் வலுப்பெறாமல், அதுவும்
ஒரு எண்ணம்தான் என்று அடித்துவிட்டு
போனதென்றால் திரும்பவும் கனவுக்குள்ளேயே
போய்விடுவீர்கள்.
Psychological Revolution நிகழும் பொழுது நீங்கள் இந்த நனவைப் பார்க்கும் பொழுது, இந்த உலகைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகம் இது. "இந்த உலகம் உண்மையிலேயே உண்மைதானா? இதைத் தாண்டிய ஒரு சத்தியம் இருக்கின்றதா?" என்கிற சந்தேகம் ஏற்படும்.
அந்தச் சந்தேகம் வலுப்பெறுவதற்கு நீங்கள் துணை நின்றீர்களானால், நனவு என்கிற இந்த கனவில் இருந்து விழித்துக்கொள்வீர்கள்.
இதுவும் ஒரு எண்ணம்தான் என்று ஓடவிட்டீர்களென்றால், என்னாகும்? மீண்டும் இந்தக் கனவுக்குள்ளேயே சிக்கிக் கொள்வீர்கள்.
தியான நுட்பத்தை உங்களுக்குள் சேர்க்கும் முன்பு, உங்கள் உணர்வுக்குள் பெரும் மாறுதல் உண்டாக வேண்டும்.
நெருப்பை வைப்பதற்கு முன்னால், பீரங்கியில் மருந்து இடித்தாக வேண்டும். பல பேர், இந்த நெருப்பை மட்டும் வைத்து வைத்துப் பார்க்கின்றார்கள்.
வெடிப்பதும் இல்லை.
எதுவும் நடப்பதும் இல்லை.
ஒரு பத்து நாள், நெருப்பை மட்டும் பீரங்கியில் வைத்து, சொருகி சொருகிப் பார்த்து, பீரங்கி வெடிக்கவில்லையென்றால் என்ன செய்வீர்கள். “ஓ! இந்த நெருப்புக்கு பீரங்கியை வெடிக்க வைக்கும் சக்தி இல்லை, அப்போது இந்த தியான நுட்பமே தவறு” என்று நினைத்து விட்டுவிடுகிறார்கள்.
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்...
பத்து நாட்கள்,
நீங்கள் எதை
எதையெல்லாம் ஆழ்ந்து,
ஆசையாலும்,
அச்சத்தாலும் பிடித்து
கொண்டிருக்கிறீர்களோ,
அதையெல்லாம்
உணர்வுபூர்வமாக
விட்டுவிடுங்கள்.
இந்த தியான நுட்பத்தையே தவறு என்று சொல்பவர்கள் பல பேர் இருக்கின்றார்கள். பலரை பார்த்து இருக்கிறேன். ஒரு பத்து நாள் மட்டும் முயற்சி செய்வார்கள். மற்றவர்களுக்கும், ஞானிகளுக்கும் நிகழ்ந்தது போன்று நமக்கு நடக்கவில்லையென்றால், இந்த தியான நுட்பமே தவறு என்று சொல்லிவிடுவார்கள்.
தியானத்தில் தவறு கிடையாது.
இந்த நுட்பத்திற்கு முன் செய்ய வேண்டியதைச் செய்திருக்க மாட்டார்கள்.
இப்போது, நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய வேலையைச் செய்ய வேண்டும். எது எதன் மீதெல்லாம் ஆழ்ந்த பிடிப்பு இருக்கிறதென்று பாருங்கள். அந்த வேரை எல்லாம் உலுக்கி விடுங்கள்.
அந்த வேரை எல்லாம் உலுக்கிய பிறகு, தியானம் எனும் நெருப்பை வைத்தால், பீரங்கி வெடிக்கும்.
அதற்குமுன்பாக எந்த நெருப்பை வைத்தாலும் ஒரு பிரயோஜனமும் இருக்காது. இந்த நுட்பம் ஆழமான நுட்பம். பத்து நாட்கள், நீங்கள் எதை எதையெல்லாம் ஆழ்ந்து, ஆசையாலும், அச்சத்தாலும் பிடித்துக்கொண்டிருக்கிறீர்களோ, அதையெல்லாம் உணர்வுபூர்வமாக விட்டுவிடுங்கள்.
உடல் ரீதியாக விடுங்கள் என்று சொல்லவில்லை.
உணர்வு ரீதியாக விட்டுவிடுங்கள்.
உணர்வு ரீதியாக விட்டாலே, மிகப்பெரிய Psychological Revolution நடந்துவிடும்.
உணர்வு மாற்றம் நிகழ்ந்தால் உலகின் பயனே மாறிவிடும்.
கண்ணப்பருக்கு, லிங்கத்தைப் பார்த்தவுடனேயே மிகப்பெரிய உணர்வு மாற்றம் ஏற்பட்டது. அதற்குப்பிறகு, அவர் வாழ்க்கையே மாறிவிட்டது. அதே காட்டில்தான் வாழ்ந்தார். அது வரையிலும், ஒரு மிருகத்தைப் பார்த்தால், “தான் அதை உண்ண வேண்டும்” என்று நினைப்பார். ஆனால் இப்பொழுது, அதைக் சிவனுக்குப் படைக்க வேண்டும் என்று நினைக்க துவங்கினார்.
அதற்கு முன்பெல்லாம், ஒரு மலரைப் பார்த்தால், பறித்துத் தன் காதலிக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால், இப்போது அதை ‘ஈசனுக்கு’ வைக்க வேண்டும் என்று நினைக்கலானார்.
அதற்கு முன்பெல்லாம், ஓடையைப் பார்த்தால்,
தான் குளிக்க வேண்டும் என்று நினைப்பார்,
விழுந்து புரள வேண்டுமென நினைப்பார்.
ஆனால், இப்போது அந்த நீரைக் கொண்டு
அபிஷேகம் செய்ய வேண்டும் என்று யோசிக்க
துவங்கினார்.
“உணர்வு மாறியதால் உலகமும் மாறியது.”
உலகத்தினால் தனக்கு இருக்கும் உபயோகம் மாறியது.
ஆழமான உணர்வு மாற்றம் நடந்துவிட்டதென்றால், பணத்தின் மதிப்பு மாறிவிடும்.
அதே பணத்தைத்தான் சம்பாதிப்பீர்கள், அதே பணத்தை வைத்து இருப்பீர்கள். ஆனால் காரணம் வேறாக மாறிவிடும். உணர்வு வேறாக மாறிவிடும்.
“புளியம்பழம் ஓடு” போல, ஒன்றை ஒன்று ஒட்டாது இருக்கும்.
பழுத்த புளியம்பழத்தைத் தட்டிப் பார்த்தீர்களென்றால் தெரியும். அதன் ஓடையும், பழத்தையும் தனித்தனியாக எடுத்துவிடலாம், இரண்டும் ஒட்டாது.
பழுக்காத புளியங்காயாக இருந்தால், இரண்டையும் பிரிக்க முடியாது. சதையும், ஓடும் ஒட்டி இருக்கும்.
பழுத்துப்போன புளியம்பழமாக இருந்தால், ஓடும் சதையும் தனித்தனியாக இருக்கும். ஆழமான உணர்வு மாற்றம் நடந்த மனமாக இருந்தால், பழுத்த மனமாக இருந்தால், ஓடும் புளியம்பழமும் போல இருப்பீர்கள்.
வெறும் காயாக மட்டும் இருப்பீர்களானால்,
இரண்டும் ஒட்டியே இருக்கும். சதையும்
தோலும் ஒட்டியே இருக்கும். அதுதான் பெரிய
பிரச்சினை. காய் பழுத்து புளியம்பழமாக
மாறுவதுதான் இங்கு தேவை. அதே காட்டில்
இருந்தாலும், அதே சுவையில் இருந்தாலும்,
வாழ்க்கையினுடைய பயன் மாறிவிட்டது.
தினந்தோறும், கண்ணப்பருடைய ரொட்டீன் (Routine) மாறிவிட்டது. ஆற்றிலே குளிப்பார். பிறகு வாயிலே நீரை நிரப்புவார். பன்றிகளைக் கொன்று அதன் மாமிசத்தைப் பக்குவப்படுத்துவார்.
ஆழமான உணர்வு
மாற்றம் நடந்த
மனமாக இருந்தால்,
பழுத்த மனமாக
இருந்தால், ஓடும்
புளியம்பழமும்
போல
இருப்பீர்கள்.
எப்படிப் பக்குவப்படுத்துவாரென்றால்... நெருப்பில் காட்டி தன் வாயால் மென்று பார்த்து, ருசியான பகுதிகளை எல்லாம் தனியாக எடுத்து வைத்துவிடுவார்.
பக்திக்கு விதிமுறைகள் கிடையாது.
பக்தியினுடைய லீலைகளைப் பாருங்கள்.
ஆகம விதிப்படி, ஆலயத்திலே, இறைவனுக்கு நிவேதனமாக வைப்பதற்கு, சமைப்பவர்கள் கூட வாயைக் கட்டிக் கொண்டுதான் சமைக்க வேண்டுமாம். ஏனென்றால், தவறிக்கூட எச்சில் சிதறிவிடக்கூடாது என்பதற்காக.
அந்த மாதிரியெல்லாம் செய்து எடுத்துக்கொண்டு வருகின்ற சாப்பாட்டைச் சாப்பிடாத, சும்மாகூட திரும்பியும் பார்க்காத ஈசன், கண்ணப்பர் வாயிற்குள் போட்டு, எச்சிலால் மென்று, ருசியாக இருக்கும் உணவை, தனியாக எடுத்து வைக்கும் உணவை, உண்ணுவதற்காக இறங்கி வருகிறார்.
‘சபரி பாட்டி’யாவது பரவாயில்லை. கொஞ்சம் நன்றாகக் கொடுத்தாள், சைவ உணவாகத்தான் இருந்தது. ஒரு பக்க காயைக் கடித்து பார்த்து, பழுத்துவிட்டதா என்று பார்த்து, மற்ற கடிக்காத பாகத்தைத் தான் கொடுத்தாள்.
‘சபரி பாட்டி’ இராமருக்குக் கொடுத்ததில், 20% மட்டும்தான் கடிபட்டது. மீதி பாகம் எல்லாம் அப்படியேதான் இருந்தது. கண்ணப்பர் ஈசனுக்குக் கொடுத்தது நூறு சதவிகிதம் அவர் எச்சில் என்ற சாஸில் ஊற வைத்தது. நூறு சதவிகிதமும் எச்சில்! சிலரால் இப்படி நினைத்துக் கூட பார்க்கமுடியாது.
அபிஷேகத்திற்கு வாயில் வைத்திருந்த தண்ணீரை தான் ஊற்றுவார். அந்தக் காட்டுப்பூவை எல்லாம் பறித்தார் இல்லையா? அதையெல்லாம் தன் சடையில் சொருகிக் கொண்டு எடுத்து வருவார். ஈரும் பேனுமாக உள்ள சடையில் சொருகிக் கொண்டு வந்த பூக்களை இறைவனுக்கு சூட்டுவார்.
ஏற்கனவே சுவைத்துப் பார்த்த பன்றி மாமிச உணவை, வைத்து, “அப்பனே சாப்பிடு” என்று சொல்வார். சாப்பிடும் போது “உனக்குத் தனிமை வேண்டும்” என்று சொல்லி, இவர் எழுந்து போய்விடுவார்.
பக்தியினால்,
பக்குவமோ,
உணர்வில்
பழுத்தலோ
நடக்காமலேயே
ஆகம அந்த
விதிகளை
உடைப்பது
பெருந்தவறு.
அந்த லிங்கத்திற்கு தினந்தோறும் பூஜை செய்ய ஒரு பூஜாரி வருவார். பண்டிதரான அவர் ஒரு அவருக்கு இதைப்பார்த்தவுடனே அடிவயிறு கலங்கிவிட்டது. அதுவரை அவர் “யாரோ வந்து சிவனுக்கு அவமரியாதை, அசிங்கம் செய்துவிட்டு போய்கின்றார்கள்” என்று நினைத்துக் கொண்டார்.
இது காலங்காலமாக இருக்கின்ற பிரச்சினை. ஆகமத்திற்கும், பக்திக்கும் இருக்கின்ற பிரச்சினை. நாமெல்லாம் நினைப்போம், ‘பக்திதான் ஜெயிக்க வேண்டுமென்று’. சில நேரங்களில் அது போன்று தீர்ப்பு கொடுத்துவிட முடியவில்லை.
பக்தியென்ற பெயரால், பக்குவம் இல்லாதவர்கள் கூட அறவழிகளை உடைக்கத் துவங்கிவிடுகிறார்கள். அந்த பிரச்சினைகளுக்காகத்தான் விதிகளைக் காப்பாற்ற வேண்டி இருக்கிறது.
பக்தியினால், பக்குவமோ, உணர்வில் பழுத்தலோ நடக்காமலேயே ஆகம விதிகளை உடைப்பது பெருந்தவறு.
இந்த சிவாச்சாரியார் வந்து பார்த்துவிட்டு, அடிவயிறு கலங்கி, எதையும் கையினால் தொடாமல், வேறு ஒன்றை வைத்து, அந்த இடத்தைச் சுத்தம் செய்தார். அவர் முறைப்படி தண்ணீர் வார்த்து, பூஜை செய்து நைவேத்யம் வைத்துவிட்டு சென்று விடுகிறார்.
சற்று நேரத்திற்கு பிறகு வந்த கண்ணப்பார், "யாரப்பா இப்படி எல்லாம் அசிங்கம் செய்து வைத்தது" என்று பார்த்தார். மீண்டும் அவற்றையெல்லாம் சுத்தம் செய்துவிட்டு, அவருடைய முறைப்படி திரும்பவும் பூஜை செய்தார்.
ஈஸ்வரனுக்கு இரண்டு தார வாழ்க்கையாக இருந்திருக்கும். ஒன்று ஆகம விதிப்படி நடக்கும் பூஜை, மற்றொன்று அன்பு முறைப்படி நடக்கும் பூஜை.
கண்ணப்பரை ஆட்கொண்ட பக்தி,
அவருக்குள் பொங்கிய ஒருவருக்குள் அன்பு
பொங்கிவிட்டதென்றால், ஆகம விதிகளை
உடைப்பதில் தவறு இல்லை.
கண்ணப்பர்
மாதிரி
அன்பு பொங்கி
விட்டதென்றால்,
ஆகம விதிகளை
உடைப்பதில்
தவறு இல்லை.
நடந்த ஒரு நிகழ்ச்சி. இராமகிருஷ்ண மடத்தில், ஒரு பிரம்மச்சாரி பூஜை செய்து கொண்டு இருப்பார். பூஜா விதிமுறைகள் மிகக் கடுமையானவை. ஆச்சாரமான சடங்கும், ஒழுக்கமும் இருந்தால்தான் செய்ய முடியும்.
ஆனால், இராமகிருஷ்ணர் பூஜை செய்வதை பார்த்தீர்களென்றால், ஆச்சாரத்திற்கும் சடங்குக்கும் சம்பந்தமே இருக்காது. அவர் பூஜையை ஆரம்பித்தவுடனே, நைவேத்யம் கொண்டு வந்து வைத்து, பாதியை இவர் சாப்பிட்டுக் கொண்டே, மீதியை "நீ சாப்பிடு" என்பார் காளிதேவியிடம். எல்லாமே விந்தையாக இருக்கும். அப்பேற்பட்ட பக்தி பெருக்கினால் பூஜை நடக்கும்.
அந்த பிரம்மச்சாரி, அதையெல்லாம் படித்து மிகவும் வியப்படைந்துவிட்டார். மடத்தில் இருக்கின்ற மூத்த துறவியிடம் சென்று இவர் கேட்கிறார், "நானும் இராமகிருஷ்ணர் மாதிரியே பூஜை செய்ய வேண்டும். ஆனால், என்னை இவ்வளவு சடங்கு ஆச்சாரத்தோடு கட்டுப்படுத்தி வைக்கிறீர்களே?" என்று.
அந்த சன்யாசி, நல்ல தபஸ்வி. அவர் மிக அழகாக சொல்கிறார்! "இராமகிருஷ்ணர் செய்தது போன்றே, நீ பூஜை செய்ய வேண்டுமென்று சொல்வது, பொங்குகின்ற பக்தியினால் அல்ல. இந்த சடங்காச்சார்யங்களை கடைப்பிடிக்க முடியாத சோம்பேறித்தனத்தினால். இதை முதலில் தெளிவாகத் தெரிந்துகொள்" என்று சொன்னார்.
இத்தனை
இலட்சம் மக்கள்
உருவாகியும், ஒரு
கண்ணப்பர்தான்
இதுவரையிலும்
உருவாகி
இருக்கின்றார்
என்று யாரும்
நினைக்க மாட்டேன்
என்கிறார்கள்.
இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம்
இருக்கிறது. "இராமகிருஷ்ணர், பக்தி
பொங்கியதால் அப்படி பூஜை செய்தார்.
உண்மைதான். ஆனால், இரவு முழுக்க அன்னை
காளியை நினைத்து தூங்காமல் பிரார்த்தனை
செய்தார். நீயும் பதினோரு நாட்கள் மட்டும்
அவ்வாறு செய்.
அவர் வாழ்க்கை முழுவதும் தூங்காமல் காளியையே நினைத்து உருகிக் கொண்டிருந்தார். நீ வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டாம், பதினொரு நாட்களுக்கு மட்டும் அவ்வாறு செய். பதினொரு நாள், பக்தி பொங்கி பக்குவம் அடைந்துவிட்டாயானால், அவரை போன்றே நீயும் பூஜை செய், வேண்டாம் என்று சொல்லவில்லை". என்று சொன்னார்.
மிக அழகாக நாம் சாஸ்திரங்களை உடைத்து விடுகின்றோம். ஆனால், அதை உடைக்கின்ற அளவுக்கு அன்பின் பக்குவம், அன்பின் முதிர்ச்சி நமக்கு நடந்திருக்கின்றதா? என்று யோசிப்பதில்லை.
எல்லோருமே 'கண்ணப்பர்' போன்றே மாறிவிடவேண்டுமென்று நினைக்கின்றோம். எல்லோருமே கண்ணப்பரை உதாரணம் காட்டுவது, எதைக் காண்பிக்கிறது என்றால் அவர்களின் சோம்பேறித்தனத்தைதான்.
ஒரு பெரிய பிரச்சனை...
ஆகமமா? அன்பா?
பக்தியா? பாரம்பரியமா? என்று இருப்பதில், எது பெரியது என்று கேட்பதுதான்.
இது ஒரு பெரிய பிரச்சினை. இந்த பிரச்சினை வரும்பொழுதெல்லாம், எல்லோரும் காட்டுகின்ற உதாரணம் என்ன?
கண்ணப்பரைத்தான்.
ஆனால், இத்தனை இலட்சம் மக்கள் உருவாகியும், ஒரு கண்ணப்பர்தான் இதுவரையிலும் உருவாகி இருக்கின்றார் என்று யாரும் நினைக்க மாட்டேன் என்கிறார்கள்.
கண்ணப்பர், பாரம்பரியத்தை உடைத்தார்
என்பது உண்மைதான். ஆனால், பாரம்பரியத்தை
உடைப்பவர் எல்லாம் கண்ணப்பராக
மாறிவிட்டார் என்பது உண்மை கிடையாது.
கண்ணப்பருடைய பூஜையை, அன்பாகவும், ஆழமாகவும், பக்தியோடும் வெளிப்படுத்தினார் என்பதை கேட்டு, நாளைக்கு என் பிரம்மச்சாரிகளே, பாதி பேர், ஆனந்தேஸ்வரருக்கு கொடுக்கும் நைய்வேத்தியத்தை இவர்கள் பாதி சாப்பிட்டு, மீதியை அவருக்கு வைத்தால், நான் விடுவேனா? '
'மாட்டேன்".
கண்ணப்பரின் பக்தி பழுத்தல் உங்களுக்குள்ளும் உங்களையும் நடந்திருந்தால் அனுமதிப்பேன்.
சொல்லப்போனால் பக்தி பழுத்தல் நடந்திருந்தால், நான் அனுமதிக்க வேண்டிய தேவையே இல்லை. தானாகவே அப்படித்தான் நடக்கும். தானாகவே அப்படித்தான் பொங்கும். தானாகவே கண்ணப்பர் மாதிரி உங்களுக்குள்ளும் நடக்கும். அந்த மாதிரி உணர்வு நடந்தால், யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.
அதனால்தான், 'ஈஸ்வரன்' அவருடைய பூஜையை ஏற்றுக்கொள்கின்றார். தினந்தோறும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இப்படி பூஜை செய்து கொண்டிருந்தார்கள்.
ஈஸ்வரன் பார்த்தார், "என்ன இது? தினமும் ஒருவருக்கொருவர் திட்டி க்கொண்டு இருக்கிறார்களே!. இந்த சிவாச்சாரியாருக்கு, கண்ணப்பருடைய பக்தியை வெளிப்படுத்த வேண்டும்" என்று நினைத்தார்.
அதே சமயத்தில் சிவாச்சாரியார் முடிவு செய்தார், "யார் இந்த இடத்தில் வந்து அசிங்கம் செய்கிறார்கள்?" என்று இன்று பார்க்க வேண்டும். அவர் பூஜையை முடித்துவிட்டு, தூணின் பின்புறம் மறைந்து நின்று கொண்டார்.
திடீரென்று கருத்த, திரண்ட மேனியோடு, வில் அம்புடன் ஒரு வேடர் வருவதை பார்த்த உடனே, சிவாச்சாரியாருக்கு கோபம் பொங்கியது. அவனை சத்தம் போடுவதற்காக வெளியே வரலாம் என்று நினைத்தார். அப்படி நினைத்தவுடனே, அடிவயிற்றிலிருந்து ஒரு பயம். எழுந்தது.
| கல்லின் மூலமாக கடவுளை வழிபடவில்லை. கல்லையே கடவுளாக கண்டார் | "ஆஹா, அவர் உருவத்தைப் பார்த்தால், இவர் நம்மை என்ன செய்வார் என்றே தெரியாது, வேண்டாம், இவர்தான் என்று கண்டு பிடித்துவிட்டோம். நாளைக்கு பத்து, இருபது பேரோடு ஒன்றாக வந்து வேண்டுமானாலும் இவரிடம் பேசிப் பார்க்கலாம். இவர், தனியாக கையாளக் கூடிய ஆள் கிடையாது" என்று அமைதியானார். தன் வலியும், மாற்றான் வலியும், மாற்றான் துணை வலியும் தெரிந்த சிவாச்சாரியார். "வேண்டாம், ஒன்றும் செய்ய வேண்டாம். இவர் என்ன செய்கிறார் என்று மட்டும் பார்க்கலாம்" என்று அந்த தூணின் மறைவிலிருந்தே நின்று பார்த்து |
கொண்டிருந்தார்.
திண்ணப்பர் வந்தார். தன் வாயிலிருந்த தண்ணீரை ஊற்றினார். தலையில் இருந்த பூவை எல்லாம் எடுத்து வைத்தார். கொண்டு வந்த பொட்டலத்தை வைத்தார். வைத்து விட்டு "அப்பனே சாப்பிடு" என்றார். கொஞ்ச நேரம் அமர்ந்து விசிறியால் வீசிக்கொண்டு இருந்தார்.
திடீரென்று, ஈஸ்வரனுடைய இரண்டு கண்களில் ரத்தம் வரத் துவங்கியது.
அந்த லிங்கத்திற்கு முகம் உண்டு. முகலிங்கம் என்று சொல்வார்கள். அந்த மாதிரியான லிங்கம்.
ஒரு கண்ணிலே இரத்தம் வரத்தொடங்கியது. முதலில் இடது கண்ணில் இரத்தம் வர ஆரம்பித்தது.
கண்ணப்பருக்கு தாங்க முடியவில்லை.
ஏனென்றால் அவருடைய பக்தி ஸ்தூலமான பக்தி. அவருக்கு தெரிந்ததெல்லாம் அந்த கல் கடவுள், தான் அதைக் காப்பாற்ற வேண்டும். அவ்வளவுதான்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்...
அவர் கல்லின் மூலமாக கடவுளை வழிபடவில்லை. கல்லையே கடவுளாகக் கண்டார். கல்லின் மூலமாக வழிபடுவது என்பது, உங்கள் கற்பனையில் வழிபடுகிறீர்கள், அவ்வளவுதான்.
பலமுறை பார்த்து இருக்கின்றோம், மக்கள் “ஆனந்தேஸ்வரர்” முன்னால் நின்று கொண்டு, “ஓ! பிரபஞ்ச சக்தி என்று ஒன்று இருக்கிறது. அதை நேரடியாக கும்பிட முடியாது. இந்த சிலை வழியாகக் கும்பிடலாம் என்று நினைத்துக்கொண்டு, “அப்பா! சக்தியே! எனக்கு அருள் செய்”, என்று வேண்டுவார்கள்.
பக்தி
இல்லாமல்,
எதுவுமே
நடக்க
முடியாது.
சத்தியமாக அவருக்கு எதுவும் நடக்காது. தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவருக்குள் பக்தி இல்லாமல், எதுவுமே நடக்க முடியாது. மிஞ்சிப்போனால், அவருடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். அவ்வளவுதான்! காரணம் என்னவென்றால், அவருக்குள்ளே இருக்கின்ற சக்தியாலேயே அவர் அதை நிறைவேற்றிக்கொள்வார்.
ஆனால், பக்தியினுடைய உச்சம், பிரபஞ்ச சக்தியை கல்லாகவோ, மண்ணாகவோ, களிமண்ணாகவோ, உலோகமாகவோ பார்த்து, அதற்குப்பிறகு தெய்வ சக்தியை மனதால் பாவனை செய்து அதை தெய்வமாகப் பார்ப்பது இல்லை.
“மூர்த்தியையே தெய்வமாகப் பாவித்து பார்ப்பது இல்லை. கல்லையே கடவுளாகக் காணல்”.
பக்தி உணர்வில் பல்வேறு நிலைகள் இருக்கிறது. இது “பராபக்தி” கல்லென்று நினைப்பதில்லை. அதனால்தான், நம் ஆஸ்ரமத்தில் பூஜை செய்யும்போது பார்த்தீர்களென்றால், அபிஷேகம் செய்யும் போது பச்சைத் தண்ணீர் ஊற்ற மாட்டோம். அதை கல் என்று நினைத்து பூஜை செய்வதில்லை. அதுவே தெய்வம்.
அங்கு அவர் சாக்ஷாத் இருந்தால் எப்படி நடக்கவேண்டுமோ, அப்படி நடக்க வேண்டும். சிவாச்சாரியார் செய்தது பூஜை. கண்ணப்பர் செய்தது சேவை. சேவை பராபக்தி வரும் பொழுதுதான் நடக்கும்.
‘சிவாச்சாரியார்’ கல்லின் மூலமாகக் கடவுளைக் காண முயற்சிக்கிறார்.
இவர் கல்லையே கடவுளாகக் காண்கின்றார்.
அவருக்குத் தெரிந்ததெல்லாம், சிவன் கண்ணில் இரத்தம் வருகின்றது. அதற்கு மேலே வேறு எந்த யோசனையும் கிடையாது.
நாமாக இருந்தால் லிங்கத்தையே மாற்றி
விடுவோம். ஆனால் கண்ணப்பருடையது
பராபக்தி.
தியாகத்தின்
உச்சத்தை
காதல்
வயப்பட்டவர்
களால்தான்
தொடமுடியும்.
நாமெல்லாம், தெய்வத்தைவிட நம்மை முக்கியமாக நினைக்கின்றோம். கண்ணப்பர், நான் என்கின்ற அகங்காரத்தை விட, தெய்வத்தை முக்கியமாக நினைக்கின்றார்.
தெய்வம் என்று அந்த லிங்கத்தை உணர்ந்து விட்டார். கண்ணிலே இரத்தத்தைப் பார்த்துவிட்டு, அருகிலுள்ள பச்சிலை, மூலிகைகளை வைத்து வைத்தியம் பார்க்கிறார். வைத்தீஸ்வரருக்கே வைத்தியம் செய்கின்றார்.
தூங்குபவர்களைக்கூட எழுப்பலாம். ஆனால் தூங்குகின்றார் போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியுமா?
உண்மையிலேயே இரத்தம் வந்திருந்தால், கண்ணப்பருடைய வைத்தியத்திற்குக் கட்டுப்பட்டு நின்றிருக்கும். ஈசன் இரத்தம் வருகின்ற மாதிரி நடிக்கின்றார். அதனால் எந்த வைத்தியத்திற்கும் அது கட்டுப்படவில்லை.
கண்ணப்பருக்கு ஏகப்பட்ட வைத்தியங்கள் தெரியும். ஆந்திராவில் வேடர்களுக்கு, பல்வேறு மூலிகை வைத்தியம் தெரியும். எலும்பு முறிவுகளுக்கு அவர்கள் போடும் 'மாவுக்கட்டு' இந்தியாவிலேயே மிகவும் அது பிரபலம் வாய்ந்தது. ஒரு நாளைக்கு எத்துனை ஆயிரம் பேருக்கு கட்டுப் போடுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. அந்த மூலிகை மிகவும் சக்தி வாய்ந்தது.
கண்ணப்பர் மூலிகைகளையும், பச்சிலைகளையும் வைத்து வைத்தியம் பார்க்கிறார். ஒன்றும் நடக்கவில்லை. கடைசியில் முடிவு செய்தார் கண்ணுக்குக் கண்ணை தருவதுதான் ஒரே வழி என்று உடனே தன் கண்ணையே ஈசனுக்கு தந்தார். தியாகத்தின் உச்சத்தை காதல் வயப்பட்டவர்களால்தான் தொடமுடியும்.
உலகத்திலேயே முதன் முறையாக Eye Trans-plant Surgery நடக்கிறது. கண் மாற்று அறுவை சிகிச்சை நடக்கின்றது. தன்னுடைய கண்ணையே பெயர்த்து, 'ஈசனுக்கு' வைக்கின்றார். ஒரு கண்ணை வைத்து விடுகிறார். கண்ணில் இரத்தம் வருவது நின்று போய்விடுகிறது.
இதையெல்லாம் பார்த்து, நடுங்கி நின்று கொண்டிருக்கிறார் சிவாச்சாரியார். இரத்தம் நின்றவுடனே இவருக்கோ ஆனந்தக்கூத்து. தன்னுடைய உடம்பிலிருந்து கண்ணை எடுத்ததற்கான வலியே இல்லை. ஆனந்தக் கூத்தாடுகிறார்.
பராபக்தியின் உச்சம்.
மிகை உயர்ந்த உணர்வு நிலையில் உள்ள மனிதர்களுக்குதான் இது நடக்கும்.
பட்டறிவையே பகுத்தறிவென்று நினைத்துக்கொண்டு வாழ்கின்ற முட்டாள்கள் இந்த சத்தியங்களை உணர முடியாது. இதனுடைய ஆழம் அவர்களுக்குப் புரியவே புரியாது. இதை புரிந்து கொள்வதற்கும், அவர் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருக்காது.
இதை வாழ்ந்தவர்தான், இந்த ருசியை ஒரு முறையாவது ருசித்தவர் மட்டும் தான். அர்ப்பணிப்பு, தியாகம் என்பதை உணரமுடியும்.
தன்னுடைய வாழ்க்கையில், ஒரு முறையாவது காதல் வயப்பட்டவரால்தான், தியாகம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள முடியும்.
தன்னைக் கொடுத்தல் என்பது ஆழ்ந்து உணர்வுப்பூர்வமாக காதல் வயப்பட்டவருக்குத்தான் நடக்கும். வேறு யாருக்கும் நடக்காது.
மூளைரீதியாக காதல் வயப்படுவதென்றால் என்ன தெரியுமா? அந்த நபரிடம் இருந்து தனக்கு என்ன வரும் என்று எதிர்பார்த்து நடிப்பதுதான்
அவர் காதலில்
எதிர்பார்ப்பும்
இல்லை, பேரமும்
இல்லை. தியாகம்
மட்டும் தான்.
மூளைரீதியாக காதல் வயப்படுவது. இந்த
சமூகத்தில் நடந்த பெரிய கொடுமையே, காதல்
வயப்படுவது கூட மூளை ரீதியாக மாறிவிட்டது.
இதயம் ரீதியாக அல்ல.
அதனால்தான் கண்ணப்பருடைய காதல்வயப்படுதலே கூட, சிவச்சாரியாரின் கற்பனைக்கு ஏற்ற மாதிரி பார்த்துவிட்டுதான் வருகிறது.
நான் பார்த்திருக்கிறேன், நம்முடைய கிராமங்களில் கிராமங்களில், வயதான பாட்டிகள் யாராவது இறந்துவிட்டால், அந்த இடத்திற்கு சென்ற உடனே அழமாட்டார்கள். வீட்டுக்குச் சென்று, சாதாரண புடவை கட்டிக் கொண்டு, சாதாரண நகையை மாற்றிக் கொண்டு வந்து, பிறகு ‘ஓ!’ வென்று அழுவார்கள்.
“துக்கம், என்ற செய்தி கேட்ட உடனேயே பொங்கி வரவேண்டுமே? ஏனப்பா அந்த மாதிரி வரவில்லை?”
உடை மாற்றிக்கொண்டு வருகின்ற வரைக்கும் அவர்கள் சாதாரணமாகத் தான் இருந்தார்கள். இங்கே வந்தவுடனே “ஐயோ! மாமா, விட்டுட்டு போய்விட்டீர்களே. ஐயோ! பாட்டி, விட்டுட்டு போய்ட்டீங்களே”, என்று கூப்பிட்டு அழுவார்கள். இருந்தால் போய் இருப்பார்களா?
இது என்ன பக்கத்திலுள்ள பட்டணமா? கூப்பிட்ட உடனே போவதற்கு? கிடையாது.
போலித்தனமான அன்பு. போலித்தனமான பக்தி, போலித்தனமான காதல். சாரம் இல்லாததாக போய் இருந்தது.
"கண்ணப்பர்" "ஈசனோடு" ஆழ்ந்த உணர்வு மயமான காதலிலே விழுந்து இருந்தார்
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று, நம்முடைய ஸ்தோத்திரங்கள் சொல்லியதை, காதலாகிக் கசிந்து கண்ணில் இரத்தமே வருகிறது என்று சொல்ல வேண்டும். ஆனால் ஆனந்தத்தினாலே.
ஆனால், "ஈஸ்வரன்" அதோடு விடவில்லை. ஈஸ்வரன் எப்பொழுதும் உச்சத்தை பார்த்த பின்தான் விடுவார். நடுவில் விடமாட்டார். திடீரென்று இரண்டாவது கண்ணிலும் இரத்தம் வர ஆரம்பித்தது. உடனே இவர் என்ன செய்கிறார், நமக்கு தான் இன்னொரு கண் இருக்கிறதே என்று, இன்னொரு கண்ணையும் எடுக்கிறார்.
இவர் எனக்குகொன்று, உனக்கு ஒன்று என்று
கூட யோசிக்கவில்லை. நாமாக இருந்தால்
அவ்வாறுதான் முடிவு செய்திருப்போம்.
அவர் காதலில் எதிர்பார்ப்பும் இல்லை,பேரமும் இல்லை. தியாகம் மட்டும் தான்.
கொடுப்பது மட்டும் தான். அதனால்
கவலையேபடாமல், இன்னொரு கண்ணையும்
அம்பினாலே எடுக்கின்றார்.
> தன் உணர்வில்
>
> எப்போது கல்லை
>
> "சிவனாக"
>
> நினைத்தாரோ,
>
> அப்பவே அது ‘
>
> ‘சிவனாக”
>
> மாறிவிட்டது.
எடுப்பதற்கு முன்பு, திடுக்கென்று ஒரு யோசனை! இன்னொரு கண்ணை எடுத்துவிட்டால், "எனக்கு கண் தெரியாதே, ஈசனின் கண் எங்கே இருக்கிறதென்று நான் எப்படிக் கண்டுபிடிப்பேன்" என்று. அதனால் தன்னுடைய இடது காலை எடுத்து, ஈசனுடைய வலது கண் மீது ஊன்றுகிறார், அடையாளம் தெரிவதற்காக.
எந்தக் கண்ணிலிருந்து, (இரண்டாவது கண்ணில்) இரத்தம் வருகிறதோ, அந்த வலது கண் மேல், தன் இடது காலை அடையாளத்திற்காக வைக்கிறார். பிரபஞ்சமே நடுங்குகின்றது. இப்பேற்பட்ட பக்தியுடைய ஒருவர், கல்லை
கடவுள் என்று நினைத்தால், கல்லும் கடவுளாக மாறியே தீர வேண்டும்.
வேறு வழியே இல்லை. பிராண பிரதிஷ்டை நடந்து விடுகிறது. பிராண பிரதிஷ்டை, செய்கின்றவருடைய பிராண சக்தியின் ஸ்திரத் தன்மையை பொறுத்துதான் நடக்கும்.
இப்பேற்பட்ட பக்தர், தன் உணர்வில் எப்போது கல்லை "சிவனாக" நினைத்தாரோ, அப்பொழுதே அது "சிவனாக" மாறிவிட்டது. சிவனுடைய கண் மீது, இவர் காலை வைக்கின்றார்.
பிரபஞ்சமே நடுங்குகிறது. தேவர்கள் எல்லாம் நடுங்குகிறார்கள்,
ரிஷிகளும் முனிவர்களும் நடுங்குகிறார்கள்.
எது தன்
வாழ்வின்
ஆதாரம் என்று
நினைக்கிறாரோ,
அதை தியாகம்
செய்யத்
துணிந்துவிட்டார்.
தேவேந்திரர் ஓடிச்சென்று கண்ணப்பரை
தடுக்கலாமா என்று நினைக்கிறார். அவரிடம்
ஈஸ்வரன் சொல்கிறார், "சும்மா இரு"
நிறுத்தவும் பயம். ஏனென்றால், அங்கு நடந்துகொண்டு இருப்பது, தியாகத்தின் உச்ச த்திலே நடந்து கொண்டிருக்கின்ற லீலை. தடுக் கவும் முடியாது. சரி நடக்கட்டும் என்று விடவும் முடியாது.
தேவர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும், கிம்புடுவர்களும் அத்தனை பேரும் நடு நடுங்கி நிற்கின்றார்கள்.
ஈசன் ஆனந்தமாக லீலையை ரசித்துக் கொண்டிருக்கிறார். மாட்டுத்தோலாலே செருப்பை அணிந்த கண்ணப்பன், செருப்பையும் கழட்டாமல், தன் இடது காலை எடுத்து, ஈசனுடைய வலது கண்ணின் மீது வைக்கிறார்.
தேவி நடுங்குகிறாள். "ஒரே ஒருமுறை, நான் விளையாட்டாக, கண்களை கையால் மறைத்ததற்காகவே, என்னை பூலோகத்திற்கு அனுப்பி, காஞ்சியில் தவம் இருக்கச் செய்து, திருமணம் செய்து கொண்டீர்களே! இவர் காலால் மறைக்கிறாரே" என்று நடுங்குகிறாள்.
ஏனென்றால், அவளுக்குத் தெரியாது, நிகழ்ந்து கொண்டிருப்பது பக்தியின் வெளிப்பாடு. மொத்தமும் லீலை. காலை வைத்து, இடத்தை நினைவில் கொண்டு, இடத்தை தொட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்டு, கண்ணப்பர் இரண்டாவது கண்ணைத் தோண்ட, அம்பைச் சொருகினார்.
தன் கண்ணில் அம்பை சொருகிய அந்த வினாடி, கண்ணை எடுத்த அந்த வினாடி, "ஈசன்" பிரசன்னமாகி கண்ணப்பர் முன் உதித்தார்.
அருமையான கதை:
இறுதி தியாகத்திற்கும் தயாராகி, அவர் அந்த தியாகத்தை செய்யத் தொடங்கிய உடனேயே, 'தான்' என்கின்ற அகங்காரம் அழிந்து, சிவத்தன்மை அவருக்குள் வெளிப்பட்டது. ஞானமடைந்து விட்டார்.
இவர், இரண்டாவது கண்ணை தோண்ட
முயற்சித்த போதே, மூன்றாவது கண்
திறந்துவிட்டது.
எது தன் வாழ்வின் ஆதாரம் என்று
நினைக்கிறாரோ, அதை தியாகம் செய்யத்
துணிந்துவிட்டார்.
ஒரு வேடருக்கு, உடல் தானே ஆதாரம்.
வேறு எதுவும் இருக்காதே.
அவர்களுக்கு பலம்தான் வாழ்க்கை.
அதையே தியாகம் செய்யத் துணிந்து விட்டார்.
அப்போதே அவர் காதலின் உச்சத்தை,
பூர்ணத்துவத்தை அடைந்து விட்டார். ஆழமான
உணர்வு மாற்றம் (Cognitive shift) நடந்து
விட்டது.
பொறுப்பெடுக்கத்
தெரியாத
பக்தி, பக்தி
கிடையாது. அது
பொழுதுபோக்கு.
நாம் எதை சத்தியம் என்று நினைக்கிறோமோ, அது அவருக்கு அசத்தியமானது. நாம், எதை அசத்தியம் என்று நினைக்கிறோமோ, அது அவருக்கு சத்தியமானது. அது அவருக்குள் அனுபவப்பூர்வமாக மாறிவிட்டது. அதனால்தான் தைரியமாக, கண்ணை வெளியில் எடுத்தார்.
நாம் சொற்பொழிவெல்லாம் நன்றாகத்தான் கேட்போம். அதை நடைமுறைப்படுத்தும்போது மட்டும் நன்றாக இருப்பதில்லை. வெளியில் சென்று ஒரு பத்து செங்கல்லை எடுத்து வந்து வைக்க வேண்டுமென்றால்
என்ன செய்வோம், "ஐயோ! கை செவந்துவிட்டதே" என்று யோசிப்போம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்து கச்சேரி கேட்கலாம், ஆட்டம் ஆடலாம். அதனால் தான், விவேகானந்தர் மிக அழகாக சொல்வார், "எப்போது பார்த்தாலும் ராதா கிருஷ்ணா, ராமா கிருஷ்ணா என்று ஆட்டம் ஆடிக் கொண்டே பஜனை பாடிக்கொண்டே, ஒரு வேலையும் செய்யாத இந்த கும்பலை எல்லாம் கட்டி வைத்து உதையுங்கள்!!" என்றார்.
அவர் இங்கே வந்தார் எனில், எத்தனை பேரை கட்டி வைத்து உதைப்பாரென்று தெரிந்து கொள்ளுங்கள். தெளிவாகச் சொல்கிறார், "உருப்படியாக எந்த ஒரு விஷயத்தையும் சாதிப்பதற்கு பொறுப்பு எடுக்காமல், வெறுமனே ராதா கிருஷ்ணா, கோவிந்தா என்று ஆட்டம் ஆடிவிட்டு, கீர்த்தனம் செய்து கொண்டிருக்கின்ற சோம்பேறிகளை கட்டி வைத்து உதையுங்கள்" என்று சொல்கிறார்.
"ஈசனுக்கே"
கண்
கொடுத்தவர்
"கண்ணப்பன்".
பொறுப்பெடுக்கத் தெரியாத பக்தி, பக்தி கிடையாது. அது பொழுதுபோக்கு.
இங்கு தியாகத்தின் உச்சத்தை கண்ணப்பர் வெளிப்படுத்துகிறார். தனக்கு எது வாழ்க்கை என்று நினைத்தாரோ, அதைக் கொடுத்து விடுகிறார். அந்த வினாடி சிவத்தன்மை மலர்ந்து விடுகிறது.
ஈசன் தோன்றி, "அப்பா, உள் கண்ணை, எனக்கு
நீ தந்ததனால், கண்ணப்பனாவாயாக" என்று
ஆசிர்வாதம் செய்கிறார்.
மிக அழகாக ஈஸ்வரன் சொல்கிறார்,
எனக்கு ஏற்கனவே ஒன்றரை கண்தான் இருந்தது. ஏனென்றால் மூன்று கண்களில் பாதி தேவிக்கு சொந்தம்.
அதனால் எனக்கு ஒன்றரை கண்தான் இருக்கின்றது. அதிலும் ஒன்று நீ கொடுத்ததாக போனதாலே, இப்போது எனக்கு அரை கண் தான் இருக்கிறது" என்கிறார்.
என்னில் சரி பாதி தேவி. மீதி இருந்த ஒன்றரை கண்ணில், ஒன்று இப்போது கண்ணப்பர் கொடுத்தது. மீதி அரைக்கண்தான் என்னுடையது. அரைக்கண்ணனாக என்னை மாற்றிவிட்டாயே" என்று ஈசன் சொல்கிறார்.
“ஈசனுக்கே” கண் கொடுத்தவர் “கண்ணப்பன்”.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், கண்ணப்பர் இருந்த நேரத்தில், எத்தனையோ புத்திசாலித்தனமான நபர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அந்த லிங்கத்தையே மாற்றுகிறவர்கள். அந்த புத்திசாலிகள் எல்லாம் அவர்களெல்லாம் வரலாற்றிலே வாழ்ந்து கொண்டிருக்கவில்லை.
அவர்களெல்லாம், பிரபஞ்சத்தின் வழிகாட்டியாக இருக்கவில்லை. ஆனால், “கண்ணப்பர்” வெறும் இரண்டு கண்களை மட்டும்தான் கொடுத்தார். அதுவும் ஒரு கண்தான். இரண்டாவது கண்ணை எடுக்கும் பொழுதே ஈஸ்வரன் வந்து விட்டார். அதுதான் முதல் கண் தானம். முதல் கண்தானம் ஈசனுக்குத் தான் கொடுக்கப்பட்டது. ஈசனுக்கு கொடுத்ததினாலே, வரலாற்றிலே வாழும் ஞானியானார். இன்றும் தன்னகத்தில் உள்ள எல்லா சிவாலயங்களிலும், கண்ணப்பர் சிலை இல்லாத சிவாலயங்கள் இருக்காது.
லிங்கத்தை மாற்றுகின்ற நபர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் வந்து போய்விட்டார்கள். யாருக்குமே அவர்களைத் தெரியாது. செத்த பிறகு, புதைத்தார்களா? எரித்தார்களா? என்று கூட யாருக்கும் தெரியாது. காணாமல் போய்விடுவார்கள்.
ஆனால், கண்ணப்பர் போன்ற பக்தி உணர்வுப் பெருக்கை, தியாகத்தை வெளிப்படுத்தியவர்கள், வாழ்ந்து காட்டியவர்கள் அழிவதே இல்லை. ஆழமான உணர்வு மாற்றம் கண்ணப்பருக்குள்ளே நடந்துவிட்டது. எதை நாம் சத்தியம் என்று நினைக்கின்றோமோ, அதை அவர் அசத்தியம் என்று உணர்ந்தார். நாம் எதை அசத்தியம் என்று நினைத்தோமோ, அதை அவர் சத்தியம் என்று உணர்ந்தார்.