ஆசை அச்சத்தின் ஆணிவேர்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கரைந்தோடும் நுட்பம்
வால்மீகிக்கு ஞானத்தால் ஆழமான உணர்வு மாற்றம் நடந்தது. ஆனால் அவருக்கு நாரதர் வந்து, வாழ்க்கையைப் பற்றிச் சொன்ன விளக்கத்தினால் அந்த ஆழமான உணர்வு மாற்றம் நடந்தது.
கண்ணப்பருக்குள்ளே, பக்தியினால் ஆழமான உணர்வு மாற்றம் நடந்தது.
சில நேரத்தில் மூளையால், பட்டறிவு எதெல்லாம் ஸ்திரமான விஷயம் என்று நினைக்கின்றோமோ, அது உலுக்கப்படும் பொழுது தான் Psychologi-cal Revolution நடக்கும்.
சில நேரத்தில், உணர்வினால், பக்தி எதையெல்லாம் சத்தியம் என்று நினைக்கிறதோ, அது உலுக்கப்படும் பொழுது, அது உணர்த்தப்படும் பொழுது, இந்த Psychological Revolution நடக்கும்.
மூளை ரீதியாக நடந்தால், அது ஞானத்தால் ஏற்படுகிற உணர்வு மாற்றம்.
பக்தியால் நடந்தாலும் பரவாயில்லை.
நீங்கள் பக்தி
யோகியாக
இருந்தால்,
உங்களுக்கு
எதுவும் வேண்டாம்,
குருநாதரை பார்த்த
உடனேயே, அந்த
உணர்வு மாற்றம்
நடைபெற்றுவிடும்.
ஞான யோகியாக இருந்தாலும் சரி, பக்தி யோகியாக இருந்தாலும் சரி.
"கண்ணப்பர் பக்தி யோகி"
வால்மீகி "ஞான யோகி"
சீடர்களுக்கு சொல்ல விரும்புவது...
உணர்வு மாற்றம் எந்த விதத்தில் நடத்தாலும்
பரவாயில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில்
அது நடந்தாக வேண்டும்.
யார் யாரெல்லாம் அறிவு ரீதியாக இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம், உணர்வு மாற்றம் நடப்பதற்கு உண்டான வழி என்னவென்றால், எதையெல்லாம் ஆசை, அச்சத்தோடு பிடித்து வைத்திருக்கிறீர்களோ, அதையெல்லாம் உலுக்கி விடுங்கள்.
அதையெல்லாம் உங்கள் உணர்வில் இல்லாமல் வாழ்ந்து பாருங்கள்.
நீங்கள் பக்தி யோகியாக இருந்தால், உங்களுக்கு எதுவும் வேண்டாம், குருநாதரை பார்த்த உடனேயே, அந்த உணர்வு மாற்றம் நடைபெற்றுவிடும்.
வேறு ஏதாவது நுட்பம் தேவை என்று நினைத்தீர்களென்றால், உங்களுடைய
ஆசை, அச்சத்தை உலுக்கிவிட்டு, எதையெல்லாம் இல்லாமல் வாழமுடியாதென்று நினைக்கிறீர்களோ, அதெல்லாம் இல்லாமல், பத்து நாட்கள் வாழ்ந்து பாருங்கள்.
அந்த பயம் உங்களை உலுக்கட்டும். ஆசைகள் உங்களிடமிருந்து கரைந்து செல்லட்டும்.
உங்கள் உணர்வை தயார்படுத்திவிட்டு, இந்த ஞான நெருப்பை உள்ளே வைத்தீர்களானால், ஞான பீரங்கி உங்களுக்குள் வெடிக்கும். ஞானநிலை உங்களுக்குள் வெடிக்கும்.
மனம் கடந்த நிலை நடக்க வேண்டுமென்றால், உங்களுக்குள்ளே உணர்வு மாற்றம் (psychological Revolution) நடந்து இருக்க வேண்டும்.
முதலில் இந்த உணர்வு மாற்றத்தை (psychological Revolutionஐ) உங்களுக்குள் நடத்துங்கள்.
'வால்மீகி' கண்டதை,
'கண்ணப்பர்' உணர்ந்ததை
உங்களுக்குள்ளும் உணர்வீர்கள்.
இந்த சத்தியங்களின் மூலமாக, இந்த தியான நுட்பத்தின் மூலமாக, "சிவத்தன்மை" "நித்யானந்த நிலை", உங்கள் எல்லோருக்குள்ளும் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன்.


அவசிய அறிவியல்
ஜீவன் முக்த சமுதாயத்திற்கு...
நீங்கள்
ஜீவன் முக்தர்களாக
வாழப்பிறந்தவர்கள்.
அது தான் உங்கள்
வாழ்க்கையின்
லக்ஷியம்.