KAILASA Library/அவசிய அறிவியல்/உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது....Sign in
அவசிய அறிவியல்

உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது....

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சில சத்தியங்களை நினைத்தாலே போதும், அது என்னுடைய தொண்டைக்குள் வார்த்தை போக்குவரத்து நெரிசலையே ஏற்படுத்தி விடும்.

ஜீவன் முக்தியைப்
பற்றிச் சொல்ல
வேண்டுமென்றால்,
உடனே
தொண்டைக்குள்
மிகப்பெரிய
போக்குவரத்து
நெரிசலே
உருவாகின்றது.

ஏகப்பட்ட சத்தியங்கள், “நான் வெளியில் வரவேண்டும், நான் வெளியில் வர வேண்டும், நான் வெளியில் வரவேண்டும்” என்று போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன.

கடந்த ஆறு ஆண்டுக் கால பொது வாழ்க்கையில் ஏறத்தாழ 5000 மணிநேரம் பேசியிருக்கின்றேன்.

பொது மக்களோடு, அதாவது தனி மனிதர்களோடும், பொது மக்களோடு‌ம், பேசியிருப்பதை கணக்கிடாமல் மொத்தமாக 5000 மணி நேரத்திற்கு மேல் பேசியிருக்கின்றேன். எல்லாவற்றையும் வீடியோவில் பதிவு செய்து, பதிவு செய்து சேகரித்து வைத்திருக்கிறார்கள்.

பல்வேறு நாடுகளில் பல்வேறு மேடைகளில் பேசியிருக்கின்றோம். அது எத்தனை ஆயிரக்கணக்கான மேடைகள் என்று எனக்கும் தெரியவில்லை.

அங்கு எங்குமே வார்த்தைகளுக்காக நான் காத்திருந்ததில்லை. வார்த்தைகள் வராமல் தடுமாறியதில்லை.

வார்த்தைகள் சிக்கியதில்லை.

ஆனால், ஜீவன் முக்தியைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், உடனே தொண்டைக்குள் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலே உருவாகின்றது. ஜீவன் முக்தி எனும் நினைவே போதும்.

இது வார்த்தைகள் இல்லாமல் ஏற்படுகின்ற தடுமாற்றமல்ல. வார்த்தைகள் வெளியே வராமல் ஏற்படுகின்ற தடுமாற்றம்.

வார்த்தைகள் வராமல், பொங்குகின்ற ஆனந்தமயமான உணர்ச்சிப் பெருக்கால் நிகழும் மாற்றம்.

பல்வேறு சத்தியங்கள் "நான் வெளிவர வேண்டும், நான் தான் முதலில் வெளிவர வேண்டும், நான் வெளிவர வேண்டும்" என்று போட்டியிடுகின்றது. வார்த்தைகள் தங்களுக்குள்ளேயே மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலையே ஏற்படுத்துகின்றது.

அதில் சில சத்தியங்களை உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

நீங்கள் யாராக இருந்தாலும், நீங்கள் மனிதராக இருப்பதினாலேயே உங்கள் வாழ்வின் லட்சியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்...

உங்கள் வாழ்க்கையின் அடிப்படை லட்சியம் ஜீவன் முக்தி.

அதிக நேரம் வேறு வேறு கருத்துக்களை,
வேறு வேறு வார்த்தைகளை அலங்கரித்துச்
சொல்வதைவிட, நேரடியான சில
சத்தியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள
விரும்புகின்றேன்.

மனித வாழ்க்கையின் லட்சியம் ஜீவன்முக்தி.

தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

வேறு எதுவுமே மனித வாழ்க்கையின் லட்சியம் கிடையாது. மனித வாழ்க்கையினுடைய லட்சியம்.... ஜீவன் முக்திதான்.