வாழ்க்கையே விடுதி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நாம் பூமிக்கு வந்தபோது, எப்படி வந்தோமோ, அதே பந்தத்தன்மையில் இந்தப் பூமியை விட்டு வெளியில் போகக் கூடாது. இந்தப் பூமி வாழ்க்கை நமக்கு அளிக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய வாய்ப்பு. நாம் எல்லோருமே வந்து செல்லும் பார்வையாளர்கள்தான். நாம் எல்லோருமே பார்வையாளர்கள் மட்டும்தான்.
நம்முடைய ஆசிரமம் இருக்கும் இடம் பிடதி. கன்னடத்தில் பிடதி தமிழில் விடுதி என்று சொல்வதுதான். பலர் கேட்டார்கள். "ஏன் பிடதியில் ஆசிரமம் வைத்திருக்கிறீர்கள்? என்று"
தெரிந்து கொள்ளுங்கள். "வாழ்க்கையே விடுதி" என்று சொல்வதற்காகத்தான் பிடதியில் ஆசி ரமம் வைத்திருக்கிறோம். நாம் வாழ்க்கையில் தங்கியிருப்பதே சில நாட்கள்தான். விடுதியில்தான் தங்கியிருக்கிறோம். வேறொன்றும் கிடையாது. இங்கு வந்திருப்பதே ஒரு அருமையான வாய்ப்பு.
எல்லோருமே மனித
உடல்
எடுத்திருக்கிறோம்.
மனித உடலெடுத்து
வந்திருப்பதே
மிகப்பெரிய ஒரு
வாய்ப்பு.
எல்லோருமே மனித உடல் எடுத்திருக்கிறோம்.
மனித உடலெடுத்து வந்திருப்பதே மிகப்பெரிய
வாய்ப்பு.
நாம் புரிந்துகொள்ள வேண்டியது இந்த ஒன்றைதான். மனித வாழ்க்கையின் லட்சியம் ஜீவன்முக்தி
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பல மேடைகளில் வேறு வேறு நிகழ்ச்சிகளுக்குச் சென்று சத்தியத்தைப் பகிரும்பொழுது, சத்தியத்தை அதேமாதிரி சொல்ல முடியாது.
மக்கள் எப்படிக் கேட்க வேண்டுமென்று நினைக்கிறார்களோ அப்படியும் சொல்ல வேண்டும். ஏனென்றால், மக்கள் விரும்புகிற விதத்தில்தான், மக்கள் விரும்புவதைத்தான் சொல்ல வேண்டியிருக்கும்.
ஆனால், இந்தப் புத்தகத்தின் மூலமாக நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைத் தெரிந்து கொள்வதற்கு தயாராக இருப்பதால், நான் சொல்ல விரும்புவதைச் சொல்கின்றேன்.
இரண்டு விஷயம்.
நீங்கள் கேட்க விரும்புவதை நான் உங்களுக்கு சொல்வது வேறு.
நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவதைச் சொல்வது வேறு.
நீங்கள் கேட்க விரும்புவதை சொல்ல நினைத்தேன் என்றால், நான் சொல்ல வருகின்ற சத்தியத்தின் முனைப்பை குறைத்துச் சொல்ல வேண்டியிருக்கும். மறைத்து, மறைத்துச் சொல்ல வேண்டியிருக்கும்.
| நான் சொல்ல விரும்புகின்ற சத்தியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியே, இந்தப் புத்தகத்தை படிப்பதால் தான், சொல்ல விரும்புகிற சத்தியத்தை நேரடியாக உங்களுக்குச் சொல்கின்றேன். மனித வாழ்க்கையின் லட்சியம் ஜீவன்முக்தி. இதற்கு நேரடியான அர்த்தம்... "மீதி எல்லாவற்றையுமே அதற்கு அடுத்ததாக பின்னுக்குத் தள்ளிவைத்து விடுகிறேன்." | எதுவாக இருந்தாலும் சரி. ஜீவன் முக்திதான் வாழ்வின் லட்சியம். |
எதுவாக இருந்தாலும் சரி, ஜீவன் முக்திதான் வாழ்வின் லட்சியம்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இதை பரிந்துரைப்பதற்காக சொல்லவில்லை. புரிந்து கொள்ளத்தான் சொல்கிறேன்.
ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
வேறு எதனாலும், வாழ்க்கையின் இறுதியை உங்களுக்குக் காட்ட முடியாது.
வேறு எதனாலும், வாழ்க்கையின் இறுதி உங்களுக்குப் புரியாது.
வேறு எதனாலும், வாழ்க்கையின் சத்தியம் உங்களுக்குள் விளங்காது.
வேறு எதைநோக்கி ஓடினாலும், அது விழலுக்கு இறைத்த நீர்தான். கானல் நீரைப் பின்பற்றி ஓடிக் காலத்தைக் கழிப்பதற்குச் சமம்.
இந்த ஒரு சில சத்தியங்களை உள்வாங்கி நினைத்துப் பாருங்கள்.
ஆனால் என்னவொரு பிரச்சனையென்றால்....
யாருக்கும் அது பற்றித் தெரியாமலேயே போய்விட்டதுதான்.
ஒரு மாலை நேரத்தில், விடுமுறைகளில் அல்லது நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தளர்வோடு, ஓய்வாக அமர்ந்து தனக்குள் தன்னை ஆராய்ந்து பார்ப்பது எனும் பழக்கமே இன்று இல்லை.
‘தனக்குள் தான் அமர்வது’ என்பதற்கு நேரமே
இல்லை. மனிதனுக்கு இழைக்கப்பட்ட
மிகப்பெரிய கொடுமை...
தான் தனக்குள் நிம்மதியாக அமர்ந்து
சிந்திப்பதற்கான நேரமில்லாத உலகத்திலே
அவன் வாழ்ந்து கொண்டு இருப்பதுதான்.
இந்த 21-ஆம் நூற்றாண்டுதான் மிகக்கொடுமையான நரகம்.
Civilization is facing a worst space.
Understand, we have a best place. கட்டிடத்தை பொருத்தவரை, வாழும் இடத்தைப் பொறுத்த வரை அதை நாம் மிக அருமையான இடமாக மாற்றிவிட்டோம்.
மிகவும் மேம்படுத்தி விட்டோம். பாலங்கள் என்ன, சாலைகள் என்ன, அணைகள் என்ன என்று கட்டுமானப் பணியைப் பொறுத்தவரை நாம் அதிகம் தெரிந்து கொண்டோம். வளர்த்துக் கொண்டோம். ஆனால், அதில் வாழும் மனிதர்கள், மன அழுத்தத்திலே இருக்கின்றார்கள். துக்கத்திலே இருக்கின்றார்கள்.
மனிதனுக்கு
இழைக்கப்பட்ட
மிகப்பெரிய கொடுமை
என்னவென்றால்,
தான் தனக்குள்
நிம்மதியாக அமர்ந்து
சிந்திப்பதற்கான
நேரமில்லாத
உலகத்திலே அவன்
வாழ்ந்து கொண்டு
இருப்பதுதான்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இவ்வளவு பெரிய கட்டிட அமைப்புகள் வளர்ந்திருக்கவில்லை. ஆனால், மனிதர்கள், ஆனந்தத்திலே வாழ்ந்தார்கள். தனக்குள்ளே அவர்களால் அமர முடிந்தது.
உலகத்திலே நடந்திருக்கின்ற மிகப்பெரிய கொடுமை மனிதருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய கொடுமை.
21-வது நூற்றாண்டில் இருக்கும் HIV கூட இல்லை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். புற்றுநோய்கூட இல்லை. அதெல்லாம்கூட இரண்டாவது தரமானது. அது எல்லாம் இரண்டாவது தரமான கொடுமைகள்தான். தீவிரவாதம் கூட இல்லை. அதுகூட இரண்டாவது தரமான கொடுமைதான்.
முதல் தரமான மிகப்பெரிய கொடுமை
என்னவென்றால், தனக்குள்ளேதான்அமருகின்ற
அளவுக்கு, தனக்குள்ளே தான் நிம்மதியாக
இருக்கின்ற அளவுக்கு மன அமைப்போ,
நேரமோ இல்லாத கொடுமையான சமூகத்திலே
வாழ்ந்து கொண்டிருப்பதுதான்.
உங்களுக்குள்ளேயே நீங்கள் உட்கார்ந்து,
உங்களை திரும்பிப் பார்த்து, உங்களின்
உணர்வுகளை மேலே கொண்டு வருவதற்கும்,
மற்றும் புதுப்புது விஷயங்கள் நடப்பதற்கான
இடத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பே இன்று
இல்லை.
நீங்கள் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. அமர்ந்து, நிதானமாக உட்கார்ந்து உங்களைத் திரும்பிப் பார்த்து, "நம் வாழ்க்கையை மேம்பாடு செய்து கொள்ளலாமா? வேறு ஏதாவது மாற்றிக் கொள்ளலாமா?" என்று நினைப்பதற்கான நேரமே இல்லை. இதுதான் மனிதருக்கு இழைக்கப்பட்டிருக்கின்ற மிகப்பெரிய கொடுமை.
தன்னைத் தானே, திரும்பிப் பார்க்க நேரமில்லாத வாழ்க்கை.
ஏனென்றால், வேறு எந்தப் பிரச்சினையிலிருந்தும் மனிதரை வெளியில் எடுத்துக் கொண்டு வந்துவிட முடியும். ஆனால், இந்தப் பிரச்சினையிலிருந்து வெளியில் எடுத்துக் கொண்டு வர முடியவே முடியாது.
மீதி எல்லாப் பிரச்சினைக்கும் இதுதான் காரணம்.
HIV-க்கு என்ன காரணம்?
அடக்க முடியாத ஆசை.
ஒழுக்கமில்லாதது. மேம்படுத்திக் கொள்கின்ற அளவுக்கு அவருக்கு நேரமில்லை. மனமும் இல்லை.
தீவிரவாதத்துக்கு என்ன காரணம்?
அடக்க முடியாத கோபம்.
இரண்டிற்குமே ஆதி காரணம் என்ன?
அடக்கமுடியாத ஆசையாக இருந்தாலும், அடக்க
முடியாத கோபமாக இருந்தாலும், அடிப்படைக்
காரணம் என்ன?
தன்னைத் தான் திரும்பிப் பார்த்து மேம்படுத்திக் கொள்ள இயலாதது.
அதனால் தயவுசெய்து அடுத்த 10 நாட்கள், யாரெல்லாம் என்னைக் குருவாக நினைக்கிறீர்களோ, அவர்களிடமிருந்து நான் கேட்கின்ற குருதக்ஷிணை இது. அடுத்து பத்து நாட்கள் உங்களுக்குள் திரும்பிப் பாருங்கள். உங்களிடம் நான் கேட்கின்ற குரு தக்ஷிணை இதுதான். பத்து நாட்கள் திரும்பிப் பாருங்கள்.
ஒருமுறை
உங்களைத்
திரும்பிப்
பார்த்தீர்களென்றால்,
பல விஷயத்தை
நீங்கள்
மாற்றிவிடுவீர்கள்.
"அடுத்து பத்து நாட்களை எப்படி வாழ்க்கை மங்களமயமாக இருக்கமுடியும்?" என்று யோசித்துப் பாருங்கள். நம்ப வேண்டியதில்லை. யோசித்துப் பாருங்கள். யோசித்துப் பார்த்தால் போதுமானது. உங்களுக்குள் புது மன அமைப்பை உருவாக்கத் துவங்குவீர்கள்.
இந்த மொத்தப் புத்தகத்தினுடைய பிரசாதம் என்னவென்றால், இப்போது கோவிலுக்குப் போனால், ஒரு பிரசாதம் வாங்கிக் கொண்டு வருகிறோம் இல்லையா? அந்த மாதிரி நீங்கள் இந்தப் புத்தகத்தை படிப்பதற்கு பிரசாதம்... ஒரு புது மன அமைப்பை, உங்களுக்குள் உருவாக்குவதற்கான விதையை எடுத்துக் கொள்வீர்களானால்,
அதுதான் நீங்கள் எடுத்துச் செல்கின்ற பிரசாதம்.
ஒருமுறை உங்களைத் திரும்பிப் பார்த்தீர்களென்றால், பல விஷயத்தை நீ ங்கள் மாற்றிவிடுவீர்கள்.
உங்களுக்குள்ளே திரும்பிப் பார்க்காமல் இருப்பதுதான் பிரச்சினை.
நீங்கள் பல விஷயத்தை மாற்ற வேண்டும் என்கின்ற பேராசைகூட எனக்கு இல்லை.
உங்களை நீங்கள் திரும்பிப் பார்த்து உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு விஷயத்தை மாற்றுவீர்களானாலும்கூட, இந்த புத்தகத்தின் பிரசாதம் உங்களுக்குக் கிடைத்து விட்டது.
நான் 33 ஆண்டுகள் வாழ்ந்து கற்றதை உங்களோடு பகிர்ந்து கொண்டதற்கான திருப்தியை அடைவேன்.
கற்ற திருப்தியையும், கற்றதை உங்களோடு பகிர்ந்து கொண்ட திருப்தியையும் தவிர வேறு எதுவுமே இல்லை.
மொத்த வாழ்க்கையின் சாரம் இதுதான்.
நீங்கள் ஜீவன்முக்தர்களாக வாழப் பிறந்தவர்கள். ஜீவன் முக்திதான் வாழ்க்கையின் லக்ஷியம்.
உள்திரும்பிப் பார்க்கத் துவங்குங்கள்.
இந்த விநாடியிலிருந்து ஜீவன்முக்தி உங்களுக்குள் மலரத் துவங்கிவிட்டது.
ஆனந்தமாக இருங்கள்.
- பரமஹம்ஸ நித்யானந்தர்.

அவசிய அறிவியல்
- ஒவ்வொருவருக்குமான அறிவியல்...
- உங்கள் ஆயுட்காலம் 300 வருடங்கள்!
- துக்க எதிர்ப்பு சக்தி
* உங்களுக்குள்ளேயே இருக்கும் வரம் தரும் சக்தி... * உங்கள் துக்கத்தின் ஆணிவேரே அசைக்கப்படும்... * நீங்கள் இளைஞரா? வயோதிகாரா?
* பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் அவசியம்... * இன்று பிறந்தது புதுயுகம்... * தர்மத்தை நிலைநிறுத்தும் அமைப்புகள்...
* பாரதம்!- பிரபஞ்சத்தின் ஆஜ்னா
* உன்னத திருப்புமுனை
* உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது...
இவற்றிற்கான சாரமும், விளக்கமும் உள்ளே...
பரமஹம்ஸ நித்யானந்தர் பற்றி...
21-ஆம் நூற்றாண்டில் மெய்ஞானத்தோடு விஞ்ஞானத்தை சமைத்து வழங்கும் ஞான சத்குருநாதர்.
உலக அமைதியை உடனடியாக ஏற்படுத்தும் நேரடித்தீர்வான ஜீவன் முக்தர்களை உருவாக்குவதே என் பிறப்பின் நோக்கம் எனும் அவதாரபுருஷர்.
யோகம், தியானம், தீக்ஷைகள், தியான சிகிச்சைகள் மூலமாக தனிமனிதர்களின் வாழ்வை உயர்த்துவதற்காக, தன்னுடைய ஒரு நாளில் 20 மணி நேரத்தை பொதுமக்களுக்காகவே பயன்படுத்தும் தியாக புருஷர்.
மக்கள் சேவைக்காக 12,000 மேல் தியான சிகிச்சையாளர்களை உருவாக்கி, 300 சன்யாசிகளை உருவாக்கி, சேவைக்காகவே உருவாக்கப்பட்ட 120 தியானபீடங்களின் மூலமாக, 33 நாடுகளில் சேவைகளை செய்துவரும் ஞான புருஷர்.
| நித்யானந்த தியான பீடம், | ISBN 1-60607-089-4 | விலை ரூ. 100/- |
|---|---|---|
| நித்யானந்தபுரி, மைசூர் ரோடு, | Ebook ISBN : | |
| பிடதி, பெங்களூரு - 562109 | 979-8-88572-028-1 | |
| கர்நாடகா. | 978-1-60607-089-5 |