KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/கர்மச் சக்கரம்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

கர்மச் சக்கரம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • பிறக்கும் முன் எப்படி இருந்தீர்கள்?

இறந்த பின் எப்படி இருப்பீர்கள்?

  • தாயின் கருப்பையில் பலகோடி செல்களால் ஆன ஒரு கட்டிபோன்று உருவானக் கரு எப்போது தனிமனித உயிராக மாறுகிறது? எப்போது அந்தக் கருவில் தனி உயிர் நுழைந்தது?
  • உயிர் என்பது என்ன? அது எப்படி இருக்கும்? அதைச் சேகரிக்க முடியுமா? ஏதேனும் ஒரு நவீன விஞ்ஞான முறையால் கண்டுபிடிக்க முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கு அனுபவப்பூர்வமான பதில் கூற முடிந்தவரால் மாத்திரமே கர்மா போன்ற சூட்சுமமான விஷயங்களுக்கு அனுபவ விளக்கம் தர முடியும்.

பல வாசகர்களின் விருப்பத்திற்காக இந்தக் கர்மச்சக்கரம் என்ற கட்டுரையை எழுதியிருக்கிறேன்.

மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறார்கள். இதற்குக் கர்மவினைகள்தான் காரணமா? இந்தக் கேள்விக்குத் தற்போது அறிவியல் பூர்வமான விளக்கம் ஏதும் இல்லை. வேதாந்த விளக்கத்தின் ஒரு சிறு பகுதியை விளக்குகிறேன்.

திருப்தி அடையாத ஆசைகளும் முழுமையாக அனுபவிக்கப்படாத அனுபவங்களும் சேர்ந்தவைதான் கர்மா அல்லது கர்மவினை என்று அழைக்கப்படுகிறது.

இதைப் புரிந்துகொள்ள ஒரு சிறிய கதை....

portrait of a person

கர்மவினைகள்
வாழ்க்கையின் போக்கை
தீர்மானிக்கும்.
வாழ்க்கையையே
தீர்மானிக்காது!

ஒரு கல்வெட்டுபவர் வாழ்க்கையில், ஓர்
அதிசயம் நிகழ்ந்தது. கனவில் ஒரு தேவதை
தோன்றி, "இன்றிலிருந்து நீ எப்படி இருக்க
வேண்டுமென்று விரும்புகிறாயோ அப்படியே
நீ மாறிவிடுவாய்" என்றார்.

இராஜா, தனக்கு அரண்மனை கட்டுவதற்காக
நிறைய கற்கள் வேண்டும் என்று கட்டளை
பிறப்பித்திருந்ததால் கல்வெட்டுபவருக்கு
வேலை மிகவும் கடினமாகி இருந்தது. தன்னை
இவ்வளவு கஷ்டப்படுத்தும் இந்த
இராஜாவாகத் 'தான்' மாறினால் என்ன என்று
யோசிக்க, அடுத்த வினாடி அவர் இராஜாவாகி
விட்டார். கனவு பலித்துவிட்டது.
சந்தோஷமடைந்தார்.

"சரி. இனிமேல் என்னைத்
தட்டிக்கேட்கவோ, கட்டுப்படுத்தவோ
யாருமே இல்லை" என்ற கர்வத்தோடு
உறங்கிவிட்டார். காலை எழுந்ததும் தேரில்
ஊரைச் சுற்றி வலம் வர இராஜாவாக மாறின
கல்வெட்டுபவர் ஆசைப்பட்டு, மந்திரியைக்
கூப்பிட்டார்.

மந்திரி, "அரசே, நேற்றிலிருந்து சரியான மழை. இப்பொழுதும் அது தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது. அதனால் தாங்கள் தேரில் செல்ல முடியாது. என்னை மன்னியுங்கள்" என்றார். இராஜாவுக்கு, "அப்போ மழை என்னை விட சக்தி வாய்ந்ததா? சரி. நான் மழையாக மாற வேண்டும்" என்று நினைத்த அடுத்த வினாடி மழையாக மாறிவிட்டார்.

மழையாக மாறியதும் மழைக்குப் பயங்கரக் கொண்டாட்டம், சந்தோஷம்.

தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மழையைப் பொழிந்தது. ஊரெல்லாம் வெள்ளம். தன்னைவிடப் பெரியவன் யாருமே இல்லை என்ற கர்வம் மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

கார்மேகங்கள் மூலம் மழை நீரைப் பெய்து கொண்டிருக்கும் போது, எங்கிருந்தோ காற்று, சுழன்று வந்து வீசியது. கார்மேகம் கலைந்து போனது. மழைக்கு செம கோபம். "என்ன, காற்று என்னை விட வலிமையானதா! சரி நான் காற்றாக மாறவேண்டும்" என்று நினைத்த அடுத்த வினாடி, காற்றாக மாறிவிட்டார்.

காற்றுக்கு ஒரே குஷி. சுழன்று சுழன்று வீசியது. பெரிய மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது, பல வீடுகளைப் புரட்டிப் போட்டது. ஆனால், எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் மலையைக் காற்றால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. "என்ன, இந்த மலைக்கும் இதில் இருக்கும் பாறைக்கும் என்னைவிட வலிமை அதிகமா! சரி. பொறுத்தது போதும் இனி ஒரு வினாடிகூடக் காற்றாக இருக்க நான் விரும்பவில்லை. நான் மலையாக மாற விரும்புகிறேன்" என்று நினைத்த வினாடியிலேயே மலையாக மாறிவிட்டார்.

மலையாக மாறியதும் நிம்மதி அடைந்தது போல் உணர்ந்தார். காற்றோ, மழையோ, நெருப்போ எதுவும் தன்னை இனிப் பாதிக்க முடியாது என்று தெரிந்ததும் ரொம்ப சந்தோஷமடைந்தார்.

பொழுது விடிந்தது. ஒரு கல்வெட்டுபவர் கடப்பாரை, கோடாரி, உளி கொண்டு வந்து மலையைப் பிளக்க ஆரம்பித்தார். மலையால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. எந்த எதிர்ப்பும் காட்டமுடியவில்லை. அவர் வெட்டும் ஒவ்வொரு வெட்டும் இடிபோல் இருந்தது.

"என்ன, இந்தக் கல்வெட்டுபவன் இவ்வளவு வலிமையானவனா! யாராலும் கொஞ்சம்கூட அசைக்க முடியாத என்னை இவ்வளவு சுலபமாக வெட்டுகிறானே! போதும். எல்லாம் போதும். இனி ஒரு வினாடிகூட மலையாக இருக்க முடியாது,

நீ ரா சைஆசை நிராசையால் உந்தப்பட்டு, நிராசையிலேயே முடிவதால்தான் மீண்டும் மீண்டும் ஆசை உருவாகிறது.

உடனே கல்வெட்டுபவனாக மாற வேண்டும்'' என்று நினைத்த வினாடியிலேயே கல்வெட்டுபவராக மாறிவிட்டார்.

தொடங்கிய இடத்திற்கே வந்துவிட்டார். ஒரு சக்கரம் முடிந்துவிட்டது. இனி எப்படி இருக்க வேண்டும் என்பது அவருடைய ஆசையைப் பொறுத்தது. இதுதான் ஆசையால் தொடர்ந்து நடக்கும் வினைகள்.

கல்வெட்டுபவர் ஏதாவது ஒரு நிலையிலாவது முழுமையாகக் கர்வமில்லாமல், இயற்கை கொடுத்த நிலையை அனுபவித்து வாழ்ந்திருந்தால் இந்தச் சக்கரம் தொடர்ந்திருக்காது.

எந்த ஓர் ஆசையிலும் அவர் "முழுமையாக திருப்தி'' அடையாததால்தான் 'அடுத்தென்ன, அடுத்தென்ன!' என்று தேடிக்கொண்டு செல்ல வேண்டியதாயிற்று.

இந்தக் கதையில் அவரது ஆசையும் எண்ணமும் மாற மாற அவர், பல நிலைகளில் மாறிவிட்டார். அதேபோன்றுதான் ஒவ்வொருவரும் அவர்கள் இறக்கும் போது அவர்கள் கொண்டிருக்கும் ஆசை, எண்ணங்கள், கோபங்கள், அனுபவங்களைப் பொறுத்து அவர்களது அடுத்த பிறவி நிர்ணயமாகிறது.(மனிதர்கள் தொடர்ந்து விதவிதமாகப் பிறவி எடுத்தாலும் திருப்தி அடையாவிட்டால் அரசனும் ஆண்டியும் ஒன்றே.)

கல்வெட்டுபவரில் இருந்து ஆரம்பித்து, கல்வெட்டுபவராகவே முடிந்த வாழ்க்கைச் சக்கரத்தில், ஏதோ ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தால், அவருடைய கர்வமும் ஆசையும்தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்று விளக்கப்பட்டிருந்தால், அவர் புரிந்துகொண்டிருப்பார். கர்மச்சக்கரம் நின்று போய் இருக்கும். ஏதாவது ஒரு நிலையை முழுமையாக அனுபவித்திருப்பார்.

அதேபோல் உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்மச்சக்கரத்தை நிறுத்தி ஆனந்த நிலை அடையும் கலையை மெல்லச் சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் அவதாரங்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள்.

கர்மாவைப் பற்றிய விளக்கம் புரிந்துகொள்வது கடினம் என்று எண்ணுபவர்களுக்குச் சில கேள்விகள்.

★ ஏன் ஒரே வீட்டில் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று புத்திசாலியாகவும் இன்னொன்று மண்டாகவும் இருக்கிறது?

ப'அபாயங்களிடமிருந்து அபயம் அளி இறைவா!' என
க்வேண்டமாட்டேன்.
கு
வஅபாயத்தை எதிர்கொள்ளும் பயமற்ற பக்குவத்தைக்
ம்கொடு என்றே பிரார்த்திப்பேன்.

★ ஏன் சிலருக்கு மட்டும் அதிர்ஷ்டம் கொட்டுகிறது?

★ ஏன் சிலர் கை வைக்கும் காரியம் மட்டும் விளங்குவதில்லை?

★ ஏன் சிலருக்கு மாத்திரம் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதபோதுகூடப் பெரிய பெரிய நோய்கள் வருகின்றன?

இவ்வளவு வேறுபாடுகளுக்கும் காரணம், முன்ஜென்ம வினைகளே! (முழுமையாக அனுபவிக்கப்படாத ஆசைகளே! அதிருப்தியே!)

விழிப்புணர்வைக் கொஞ்சம் கொண்டு வந்தால் போதும். கர்மச்சக்கரத்தை நிறுத்திவிடலாம். கஷ்டங்களை நிறுத்திவிடலாம்.

அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர்
எளிய முறைதான் தியானம். அந்தந்தக்
காலத்து மக்களுக்கு ஏற்றாற்போல்,
தியானத்தையும் ஆன்மீகச் செய்திகளையும்
மக்களுக்குச் சேர்ப்பதற்காகத்தான் ஞானிகள்
இவ்வுலகிற்கு வருகிறார்கள்.

வி ழி ப் பு ண ர் வை க் கொண்டுவாருங்கள். ஆ சை க ளை ப் பகுத்து ஆராயுங்கள். சா த்தி ய மா க க் கூ டி ய வ ற் றைக் கண்டுபிடியுங்கள்.

சாத்தியமாகக் கூடிய ஆசைகளையும் அனுபவங்களையும் முழுமையாக அனுபவியுங்கள். நிராசை, அதிருப்தி... நிராசை, அதிருப்தி....

என்ற கர்மச்சக்கரத்தின் ஓட்டத்தை
எளிதில் தடுத்துவிடலாம். கர்மச்சக்கரம்
என்ற மிகப்பெரிய ஆன்மீகப் பகுதியைச் சில
பக்கங்களில் இதற்கு மேல் எளிமைப்படுத்த
முடியாது.

முயற்சியை முழுமையாகச் செய்யுங்கள்

எல்லாம் சாத்தியமே!

Nithyananda speaking

கூரையைப் பிய்த்துக்
கொட்டுவார் கடவுள் எனக்
காத்திருக்காதீர்கள்.

ரோடு போடுவதே
முடியுமென்றால்,
புள்ளியையும் நீங்களே
வைக்கலாமே!

பக்குவத்தைக் கேட்காதீர்கள்.
அது உங்களிடமே இருக்கிறது.
அதை வெளிப்படுத்த
ஆரம்பியுங்கள்.

முதலில் கலைஞராவீர்கள்.
கடைசியாய்
ஞானியாவீர்கள்!