KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/அன்புக்கு வைக்கப்படும்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

அன்புக்கு வைக்கப்படும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அணுகுண்டு!

"புத்திகெட்டவன்..... எப்படித் தாறுமாறாக வண்டி ஓட்டுகிறான் பார்" என தன்னைத் தாண்டி பைக்கில் சென்றவரைப் பற்றி, பின்னால் அமர்ந்திருந்த நண்பரிடம் திட்டிய முகுந்தனின் பைக் தடுமாறிப் போனது!

முகுந்தனின் செயலால்...

முகுந்தனின் பின்னால் வந்த பைக்குக் தடுமாறிப் போனது!

நண்பர், "அவனைக் குறைசொல்லி, நீயும் அதே தவறைச் செய்து விட்டாயே" என்றார்.

முகுந்தன், "இல்லை. அவன் அப்படித் தாறுமாறாகச் செல்லாவிட்டால் அது நடந்திருக்காது" என்றார்.

நண்பர், "பார். உன்னால்தான் நமக்குப் பின்னால் வந்தவர் தடுமாறிப் போனார். ஆனால், அவர் நம்மைக் குறைச்சொல்லவில்லை. சும்மா சிரித்து வைத்தார். அதனால்தான் அவருக்குப் பின்னால் வந்த வாகனங்கள் தடுமாறவில்லை" என்றார்.

முகுந்தன், "இல்லையில்லை...." எனத் தன்னை நியாயப்படுத்தி தொடர்ந்து விவாதம் செய்ய ஆரம்பித்தார். கடைசியில், முகுந்தனின் நண்பர் கோபித்துக்கொண்டதுதான் மிச்சம்.

• எல்லா விவாதங்களும் வருத்தத்தின் விருத்தங்கள்.

★ விவாதம் = வீண் வாதம்.

★ விவாதம்

  • நாக்கிற்குப் பிடித்த கேடு.
  • தொண்டையைப் பிடித்துக் கொண்ட தொல்லை.
  • நட்பில் கலக்கப்படும் நச்சு.
  • அன்பிற்கு வைக்கப்படும் அணுகுண்டு.

இப்படியெல்லாம் சொல்வது மிகைப்படுத்துவது போலத் தோன்றலாம். கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெரிய வரும்.

★ விவாதத்தின் மூலம் மற்றவருக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைக்க முயற்சிப்பது, தீவிரவாதத்தால் நட்பை வளர்க்க முயற்சிப்பது போன்றது.

★ ஒரு விவாதத்தை நீடிப்பது, ஓரடி வரப்பிற்காக நீதிமன்றத்தை நடுவது போன்றது. நம்மில் பலரிடம் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லை. அதை உணராத காரணத்தால்தான். அடுத்தவர் விட்டுக்கொடுக்க வேண்டுமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முட்டாள்
புத்திசாலி
ஆகிய இருவருமே
விவாதத்தில்
இறங்கமாட்டார்கள்.
காரணம் -
முட்டாளால் அது முடியாது.
புத்திசாலிக்கு
அது அவசியமில்லை!
நீங்கள் யார்?

பைரவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்....

பைரவரும் தர்மராஜரும் விவாதிக்க ஆரம்பித்தால், அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி அவர்களாக வைத்தால்தான் உண்டு. ஒருமுறை பைரவரும் தர்மராஜரும் தித்திக்கும் வடநாட்டு இனிப்பு வகை ஒன்றை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பைரவர், "தர்மா, இந்த இனிப்பைச் சாப்பிடும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" என்று கேட்டார்.

தர்மராஜர், "இனிப்பு சாப்பிடுகிறேன் என்று தோன்றுகிறது!" என்றார்.

பைரவர், "என்ன தர்மா, அறிவுபூர்வமாக ஏதாவது பதில் கொடுப்பீர்கள் என்று பார்த்தால், வில்லங்கமாகப் பேசுகிறீரே!

நாம் இனிப்பு சாப்பிடுகிறோம் என்ற
நினைப்பில் சாப்பிடுவதால்தான், இது
சுவையாக தெரிகிறது.

ஒருவேளை சிறு வயதிலிருந்து இனிப்பு என்ற வார்த்தைக்கு, கசப்பின் அர்த்தத்தை நமக்குத் தெரிவித்து வளர்த்திருந்தால், நம்மால் இனிப்பே சாப்பிட முடியாது" என்றார்.

தர்மராஜர், "பைரவ், அங்கதான் நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

கசப்பு என்ற வார்த்தையையே நமக்குச் சிறு வயதிலிருந்து இனிப்பிற்குப் பதிலாகக் கூறியிருந்தால், நம் மனதில் இனிப்பு என்ற வார்த்தைக்குப் பதிலாக கசப்பு என்ற வார்த்தை மாறி இருக்கும்.

அது வெறும் வார்த்தை மாற்றமாக மாத்திரமே இருக்கும்.

நீங்கள் சொல்வது போல இனிப்பைச் சாப்பிடவே முடியாமல் போகாது" என்றார்.

பைரவர், "என்ன தர்மா!
எல்லாவற்றையும் தவறாகப் புரிந்து
வைத்திருக்கிறீர்கள்.

இனிப்பு என்றால் கசப்புதான் என்று நம் மனதில் மாற்றிப் பதிய வைத்து விட்டால், அந்த வார்த்தையோடு மற்றவர்கள் நமக்கு உணர்த்தும் உணர்வுகளும் சேர்ந்துதானே மனதில் பதிவாகும்.

portrait of a swami / guru sitting and gesturing
  • உங்களுக்கு நெருக்கமானவர்களை நோகடிக்க வேண்டுமா?
  • நண்பர்களை எதிரிகளாக மாற்ற வேண்டுமா?
  • சிறிய சாதனைக்கும் பெரும் வேதனைகளை அனுபவிக்க வேண்டுமா?
  • நேரத்தை வீணடிக்க வேண்டுமா?
  • எரிச்சலூட்டும் மனிதராக நீங்கள் மாற வேண்டுமா?

ஒன்றே ஒன்று செய்யுங்கள்...

அதுபோதும்,
எதற்கெடுத்தாலும்
விவாதியுங்கள்!

பிஞ்சு மனதில் கசப்புதான் இனிப்பு என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டால், பாகற்காயின் சுவை அந்த மனிதனுக்கு ரொம்ப பிடித்துப் போகும்.

இனிப்பு வகை, பாகற்காயின் சுவையை விட மாறிய வேறு ஒரு சுவையாகத் தெரிந்தாலும், அது உடலுக்குக் கேடு, அந்தச் சுவையைச் சாப்பிடுவது தவறு என்ற உணர்வே இனிப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும்" என்றார்.

தர்மராஜர், "ஹா... ஹா... ஹா...!

உங்களுக்கு நன்றாகப் பேசத்தெரியும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக நீங்கள் பேசுவது எல்லாமே சரியாகிவிடாது பைரவ். அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

கசப்புதான் இனிப்பு என்ற மாற்றுப் பதிவால், 'கசப்பு' என்பது ஒரு நல்ல சுவை என்று மனதில் பதியலாம். இயற்கைதான்.

பிஞ்சு மனதில் கசப்பு ஒரு அருமையான சுவை என்று பதிய வைத்தால், பாகற்காய் சுவையாகத் தெரியும். அதுவும் இயற்கையே.

ஆனால், இனிப்பு நாக்கில் பட்டவுடன், அதுவும் ஒரு அருமையான சுவை என்று தெரிந்தாக வேண்டும். அப்படிச் செயல்பட்டால்தான் அந்த உடல் இயற்கையாக செயல்படுகிறது என்று பொருள்.

உண்மை இப்படியிருக்க, இனிப்பின் மீது மனதிற்கு வெறுப்பு வந்துவிடும் என்பதை ஒருக்காலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" - என்றார்.

பைரவர், "மனோதத்துவப்படி, மனோவசியக் கொள்கைப்படி நான் சொல்வது உண்மை... மனப்பதிவு அப்படியேதான் உடலின் மூலம் வெளிப்படுத்தப்படும். இனிப்பு கசப்பாகத்தான் தெரியும்".

தர்மராஜர், "இல்லை, இல்லை... மெய்ஞானத்தின்படி உடலுக்கென்று ஒரு தனி ஞானம் உண்டு....

எஅமைதிக்காக நாடுகள் யுத்தமிட்டு உயிரைப் பலியிடுகின்றன.
ட்அன்பிற்காக மனிதன் வாதமிட்டு உறவைப் பலியிடுகின்றான்.
டாஅதனால்தான் அமைையும் அன்பும் எட்டாக்கனியாய் அன்று
க்முதல் இன்றுவரை தொடர்கிறது.
க☞ யார் இதைத் தடுப்பது?
னி

‘இறைவன் உன்னை நம்பி உடலை விடவில்லை. உன் உடலின் 80%க்கு மேற்பட்ட இயக்கங்கள் தானாக நடைபெறும்படிதான் வைத்திருக்கிறார்.

உடல் அதற்கே உரிய ஞானத்தில் இயங்கிக் கொண்டு இருப்பதால்தான் நீங்கள் என்ன சாப்பிட்டாலும் உடல் செரிமானமும் பெருமூச்சும் இரத்த ஓட்டமும் தானாக நிகழ்கிறது’ என்று சூஃபி ஞானி ஒருவர் சொல்கிறார்.

இப்படி உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஞானம் இருக்கும் போது, நாக்கு அதற்கே உரிய ஞானத்தின்படி இனிப்புச் சுவையின் அருமையைக் கண்டுபிடித்துவிடும். நீங்கள் கூறுவது போல இனிப்பு கசப்பாகாது.

விவாதத்தின் அளவு
விவேகமின்மையின் அளவு
விவேகியால்
விவாதித்து
வில்லங்கத்தை
வளர்க்க முடியாது.

மனதில் வேண்டுமானால் வார்த்தைகள் மாறலாம். ஆனால் உணர்வு மாறாது. இனிப்பைக் கசப்பு என்ற பெயரில் சாப்பிட்டாலும் அது இனிக்கும். மாறாக கசக்காது”.

பைரவர், “என்ன... அளந்துவிடுகிறீர்களா?”

இப்படி இந்த விவாதம் தொடர்ந்துகொண்டே இருந்தது. முடிவு வரவேயில்லை. இருவரும் அவரவர் கருத்தை சுற்றிச் சுற்றி பேசிக் கொண்டேயிருந்தார்கள்.

விவாதிக்கச் செலவிடப்படும்
புத்தி, சக்தி, நேரம்
மிச்சமானால்...
சாதிக்கத் தேவையான
புத்தி, சக்தி, நேரம்
அதிகமாகும்!

விவாதத்தின் அழகே விவாதிக்கும் ஒருவர்
பேசுவதை கவனிக்கும்போது, அதுவே
மிக மிகச் சரியானது என நம்ப வைக்கும்.
அடுத்தவர் பேச ஆரம்பித்ததும், ‘அவர்தான்
சரி. முந்திப் பேசியவர் தவறு’ என்று நம்ப
வைக்கும். மீண்டும் முந்தியவர் பேச
ஆரம்பித்ததும், ‘இவரே சரி’ என்று நம்ப
வைக்கும்.

விவாதங்களை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் இருவருடைய கருத்துக்களுமே தவறாக இருக்கும்.

சில நேரங்களில் ஒரே கருத்தை இருவரும் வெவ்வேறு விதங்களில் பேசி, விவாதத்தை வாக்கு வாதமாக்கிக் கொண்டு இருப்பார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும். நாம் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டோம் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக, நம் கருத்தை நிலைநிறுத்த உதவும் எல்லா விஷயங்களையும் வாதங்களாக எடுத்து வைப்போம். ஒருவேளை எதிராளியின் கருத்தை நாம் சொல்லியிருந்தால் அதற்குத் தக்கபடி நாம் பேச ஆரம்பித்திருப்போம். எதிராளியைப் போல் நாம் பேசியிருப்போம். நம்மைப் போல் எதிராளி பேசியிருப்பார்.

உங்களின் எல்லா மனவருத்தங்களுக்கும் மூலகாரணத்தை யோசித்துப் பாருங்கள். விளையாட்டாக ஆரம்பித்த கருத்து மோதல், விவாதமாக மாறி, பின் வாதம் வாக்குவாதமாகி, வாக்குவாதம் சண்டையாகி, மனவருத்தம் வந்திருக்கும்.

பிடிவாதத்தின் வெளிப்பாடுதான் வாக்குவாதம்.. வாக்குவாதத்தின் வர்ணம் பூசப்பட்ட பகுதிதான் விவாதம்.

விவாதத்தின் நெடியை உணர்ந்து, விவாதத்தின் வாதத்தன்மையை அறிந்து, அதிலிருந்து உங்களையும் உங்கள் தன்மையையும் காப்பாற்றிக்கொள்ள, விட்டுக்கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள்.

நேரமும் சக்தியும் பண்பும் மிச்சமாகும். மனவருத்தங்கள் குறையும். நீங்கள் உங்களுக்குள் விருத்தி அடைவீர்கள்.

அர்த்தமுள்ள சம்பவம்...

பிரபல வக்கீலின் குழந்தை விக்ரமிடம், டீச்சர் கேட்டார்:

“Marry என்ற வினைச்சொல்லின்

எதிர்கால வினைச்சொல் என்ன?”

குறும்பாய்ச் சிரித்த விக்ரம், “Divorce” எனச் சொன்னான்.

  • விவாகரത്തுகூட விவாதம் தரும் பரிசே!

வளரும் சமூகமானது சரியாய் வளர வேண்டும்.

உதவுவீர்களா?

உறவாடலுக்கு உயிரோட்டம் தரும் ரகசியம் - உரையாடல்!

லோகோ

NSP தியான முகாமில் கர்னல் சந்தோஷ்குமார் கேட்டார்: "விவாதிக்க வேண்டாம் என்று நீங்கள் சொன்னால், நாங்கள் மனிதர்களோடு உறவாடுவது எப்படி?"

மேலும் கேட்டார்: “விவாதிக்க வேண்டாமென்றால், நாங்கள் பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமா?" என்று.

> உரையாடு
>
> உற[வு]வாடுவது
>
> சரியாகும்.

“ஆம்! அப்படி எடுத்துக்கொண்டாலும் சரியே.

மனிதர்கள் உரையாடி, உறவாடுவதில்லை.

விவாதித்தே உறவாடுகிறார்கள்....

இது நிச்சயம் நிறுத்தத்திற்கு வரவேண்டும்” எனச் சொன்னேன்.

உண்மையான உரையாடலில்...

* மற்றவரின் பேச்சுக்கு முக்கியத்துவமளிப்பீர்கள்.

* பேசுவதைவிடக் கேட்பதையே அதிகம் விரும்புவீர்கள்.

* அவர் பேசி முடிக்கும் முன்பே, இதைத்தான் சொல்ல வருகிறார் என யூகிக்கமாட்டீர்கள். ★ வார்த்தைகள் மூலம் வர்ணிக்க பிரயத்தனப்படும் அவர்களின் உணர்வுகளை உணர, நீங்கள் பிரயத்தனப்படுவீர்கள்.

மேற்கண்ட நான்கு உண்மைகளில் ஒன்று உங்களிடம் இல்லாவிட்டாலும் நீங்கள் செய்வது உரையாடலல்ல.

உபயோகமற்ற விவாதம்தான் என முடிவுசெய்து கொள்ளுங்கள்.

உறவாடலுக்கு உயிரோட்டமளிக்க உரையாட ஆரம்பியுங்கள்.

பேசுவதைவிடக் கேட்பதையும்

வார்த்தைகளைவிட உணர்வுகளையும்

உங்களைவிட மற்றவர்களையும் அதிகம் மதிக்க ஆரம்பித்தால்,

விவாதம் எனும் மனக்கோளாறு இருக்குமிடம் தெரியாமல் மறைந்து போகும். உறவாடல் உற்சாக உருவெடுக்கும்.

உரையாடல் என்ற போர்வைக்குள் இருக்கும் விவாதகாலங்களைச் சுத்திகரிக்க ஆரம்பியுங்கள்.

விவாதகாலம் தியான காலமாகட்டும்.