KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/கலைSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

கலை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு ஜப்பானியக் கதை...

தாய் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கையில்...

மகன், “அம்மா, அம்மா! என்னைவிட்டுப் போகாதே... நீ என்ன சொன்னாலும் செய்கிறேன்” என அழுது புலம்புவதைப் பார்த்த தாய் சொன்னார்:

“உன் அப்பா என்னிடம் சொன்னதைச் சொல்கிறேன். அதைக் கடைப்பிடித்தால் உடலில் உயிர் இருக்கும்வரை ஆனந்தமாயிருப்பாய்” என்று.

அவ்வளவு துக்கத்திலும் மகன் ஆர்வமானான். “என்ன அது?” எனக் கேட்டான்.

அதற்கு அம்மா “கலைஞனாகு! பெரிய கலை வித்துவானாகத்தான் ஆக வேண்டுமென்ற அவசியமில்லை.

உனக்குக் கழிவறை சுத்தம் செய்யும் பாக்கியம் கிடைத்தாலும் சரி. கவலைப்படாதே. நீ சுத்தம் செய்வது போல இன்னொருவர் சுத்தம் செய்யக்கூடாது. உன்னுடைய வேலைப்பாடு அவ்வளவு தனித்துவமும் கலைநயமும் மிகுந்ததாக இருக்க வேண்டும்” எனச் சொல்லி முடித்ததும் கண்மூடினார் நிம்மதியாக!

★ கலை என்பது... கவலையை மறக்கடிக்கும் ஒரு இனிமையான துறை.

★ கலை என்பது... நம்மிடமிருக்கும் மிருதுத்தன்மையை வெளிக்கொண்டுவரும் அருமையான முறை.

★ ஒவ்வொரு மனிதரின் தனித்தன்மையை தயக்கமில்லாமல் வெளியே கொண்டுவர உதவும் ஒரு அருமருந்து கலை.

★ ஒரே ஒரு துறையிலாவது கலைத்துவம் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு அம்சத்தை இழக்கிறீர்கள்.

முக்கியச் செய்தி...

"பிளாட்பாரத்தில் காய்கறிகள் விற்பது போல, ஜப்பானில் எலக்ட்ரானிக் சாதனங்களை தராசில் 'கிலோ இவ்வளவு பணத்திற்கு' என விற்பார்களாம்" என ஜப்பானின் சாதனைகளை விளக்குவதற்கு இப்படிச் சிலர் விளையாட்டாய் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஜப்பானின் சாதனைக்கான ரகசியங்களைப் பற்றி தொழிலதிபர்கள் சொல்லும் சுவாரஸ்யமான செய்திகளைத் தொகுத்து வெளியிடப்பட்டப் புத்தகம் ஒன்றில், "என் சாதனையின் ரகசியம் இதுதான்" என நீங்கள் மேலே படித்த கதையைக் குறிப்பிட்டிருந்தார் ஒரு தொழிலதிபர்.

செய்யும் செயல்தான் தியானம்.

பூரண கலைத்துவம்தான் ஞானம்.

இயல்பான, மிருதுவான வாழ்வுதான் ஆனந்தம்.

மேற்கண்ட வாழ்வியல் அடிப்படைகளுக்குச் சான்றாக வாழும் ஒரு ஹஸிட் (Hasid) ஞானிதான் ரஸி ஹு மோஸ்.

படைப்பாற்றல் (Creativity) என்பது இறைசக்தியின் மிக முக்கியமான வெளிப்பாடுகளில் ஒன்று. இதை அனுபூதியாக உணர்ந்தவர் ரஸி ஹு மோஸ். ரஸி ஒரு அருமையான சிற்பி.

சிற்பக்கலை மூலம் இறைநிலையை அடையும் ஆன்மீக குருகுலக் கல்வியை ரஸி நடத்தி வந்தார். கார் ஜீ என்பவர் ரஸியின் சீடர்களிலேயே மிகச் சிறந்தவர். அற்புதமான சிற்பி.

ஒருமுறை ரஸியை பேராசிரியர் ஒருவர் சந்திக்க வந்திருந்தார்.

இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது, கார் ஜீ அவரே உருவாக்கிய ஒரு அழகான குழந்தையின் சிலையை குருவிடம் காண்பித்து, பாராட்டுப் பெறுவதற்காக சந்தோஷமாக வந்து கொண்டிருந்தார்.

‘கூரையைப் பிய்த்துக் கொட்டுவான் கடவுள்’ எனக் காத்திருக்காதீர்கள். ரோடு போடுவதே முடியும் என்றால் புள்ளியையும் நீங்களே வைக்கலாமே!

பக்குவத்தைக் கேட்காதீர்கள். அது உங்களிடமே இருக்கிறது.

அதை வெளிப்படுத்த ஆரம்பியுங்கள். முதலில் கலைஞனாவீர்கள். கடையாய் ஞானியாவீர்கள்!

ரஸி ஹு மோஸ் பேராசிரியரிடம், “அதோ வருகிறாரே அந்த இளைஞர் ஒரு மிகச் சிறந்த கலைஞர். என்னிடம் ஐந்தாறு வருடங்களாக ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பலர் அடையாத ஒரு நல்ல நிலையை ஒரு வருடத்திற்குள் அவர் அடைந்திருக்கிறார்” என்றார்.

பேராசிரியர், “மற்றவர்களைவிட இவ்வளவு சீக்கிரத்தில் ஒரு நல்ல நிலையை இந்த இளைஞரால் மட்டும் எப்படி அடைய முடிந்தது?” எனக் கேட்டார்.

ரஸி “நாம் முழுமையாகச் செய்தால், செய்யும் செயலே தியானம்தான் என்ற என்னுடைய ஆன்மீகப் போதனையின் சாராம்சத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு விட்டார்.

க லை | வாழ்க்கைச் சம்பவங்களைச் சுவையான பதார்த்தமாக்கும் தெய்வத்தேன் கலையம்சம். சிற்பக்கலையில் அவர் மேலும் வளர நான் கற்றுத் தரும் ஒவ்வொரு பாடத்தையும் அவருடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நடைமுறைப்படுத்தினார்.

அவரது வாழ்வே கலைகளின் தொகுப்பாகிவிட்டது. இதுதான் அந்த இளைஞரின் துரித வளர்ச்சிக்குக் காரணம்..." என்று ரஸி பேசிக் கொண்டே இருக்க... கார்ஜு, அவர் வடித்திருந்த சிலையை குருவின் பாதத்தில் வைத்துவிட்டு, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து, மலர்ந்த முகத்தோடு எழுந்து குருவின் வார்த்தைக்காக குழந்தைபோன்று சிரித்த முகத்தோடு கைகூப்பி நின்றார்.

ரஸி, "என்ன இது?" என்று இகழ்ச்சி நிறைந்த குரலில் கேட்டார்.

கார் ஜு, "குருவே, சென்ற வாரம்
பக்கத்து வீட்டுக் குழந்தை ஒரு லட்டை
ரசித்து ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டே
இருந்தது. அது கண்கொள்ளா காட்சியாக
இருந்தது! அதை அப்படியே தத்ரூபமாக
வடித்துவிட்டேன்!" என்றார்.

ரஸி, "ஒருமுறை நன்றாக இந்தச்
சிலையை பார்த்துவிட்டு சொல் - நீ
தத்ரூபமாக வடித்திருக்கிறாயா என்று?"
என்று கேட்டார்.

கார் ஜு குருபக்தியோடு அந்தச்
சிலையை மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து
பார்த்துவிட்டு, "குருவே! தத்ரூபமாகத்தான்
வடித்திருக்கிறேன்!" என்றார்.

portrait of a person smiling with hands folded and inspirational quote

அவ்வளவுதான். அடுத்த வினாடி குருவின் முகம் மாறிவிட்டது.

ரஸியின் கண்கள் கோபத்தைக் கொப்பளித்தது.

குழந்தைச் சிலையை எதிரே இருந்த பாறை மீது தூக்கி வீசினார்.... 'டமார்' என்ற சப்தத்தோடு சிலை நான்கைந்து துண்டுகளாக உடைந்து விழுந்தது.

"முட்டாள்! குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தது- லட்டு. இனிப்பும் எச்சிலும் கலந்து எப்படி ஒரு குழந்தையின் வாயில் இருந்து ஒழுகும்!

லட்டின் உடைந்த சில பருக்கைகள்
குழந்தையின் உடலிலும் மடியிலும் ஒட்டிக்
கிடக்கும் என எல்லாவற்றையும்
விழிப்புணர்வோடு வடித்த நீ - குழந்தை
எப்போதும் இரண்டு கரங்களால்தான்
சாப்பிடும் என்பதைக் கவனத்தில்
கொண்டுவர ஏன் மறந்தாய்?

குழந்தை எந்த உணவையும் பார்த்துப் பார்த்துப், ரசித்து ரசித்துச் சாப்பிடும். அடுத்து குழந்தையின் கண்களில் ரசனையும், பிரமிப்பும் இல்லவே இல்லை!

இதுபோன்ற கேவலமான குறைகளோடு இனி
ஒரே ஒருமுறை வந்தாலும் உன்னை
இங்கிருந்து துரத்தி விடுவேன்.

போ! என் முன் நில்லாதே!" என்றார் கடுமையாக.

பேராசிரியருக்கு அங்கு என்ன
நடக்கிறது என்று புரிந்துகொள்ள
முடியவில்லை.

தத்ரூபமாக, பார்ப்பதற்கு ஒரு குழந்தையைப் போன்றே இருக்கும் ஒரு சிலையைப் பேராசிரியர் தன் வாழ்நாளில் இதுவரை பார்த்ததே கிடையாது.

கருணையே வடிவமான குரு, கோபத்தின் உச்சிக்குச் சென்றதும், சிலையை உடைத்தெறிந்ததும் பேராசிரியரைக் குழப்பத்தின் உச்சிக்கே எடுத்துச் சென்றது...

தலைகுனிந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருந்த ரஸியைப் பார்க்கப் பார்க்க பேராசிரியருக்குக் கோபம் வர ஆரம்பிக்கிறது.

ஒன்றிரண்டு மிகச் சிறிய தவறுகளுக்காக இவ்வளவு மூர்க்கமாக நடந்து கொண்ட ரஸியை ஒரு சில கேள்விகளாவது கேட்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பேராசிரியர் “ரஸி ஹு மோஸ்!” என்றார்.

தலைநிமிர்ந்த ரஸியைப் பார்த்த பேராசிரியர் அதிர்ந்தார். ரஸியின் கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது.

ரஸி, “பார்த்தீர்களா! எவ்வளவு அழகான குழந்தை சிலை அது! பார்ப்பதற்கு ஒரு குழந்தை உண்மையாகவே உட்கார்ந்திருப்பது போன்று எவ்வளவு அருமையாக கார்ஜு வடித்திருக்கிறான்!” என்று சொல்லி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

பேராசிரியர், “இவ்வளவு சந்தோஷப்படுகிறீர்கள். சிஷ்யன் மீது இத்தனை பாசம் வைத்திருக்கிறீர்கள். அப்புறம் ஏன் இவ்வளவு மூர்க்கமாக நடந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார்.

ரஸி ஹு மோஸ் மெல்லிய புன்னகையோடு, “நான் பாராட்டியிருந்தால் அவன் திருப்தி அடைந்திருப்பான். சந்தோஷப்பட்டிருப்பான். அகங்காரம் (Ego) அப்படியே இருக்கும்.

எதிர்பாராத சம்பவம் நிகழும்போதுதான் ஒருவரின் ஈகோ உலுக்கப்படும். இது ஒரு டெக்னிக்.

வா ழூ ம் க லைஉண்மையான கலைஞர்கள், தங்களுள் இருக்கும் அந்த ஆனந்த சக்தி மையத்தை அடிக்கடி தொட்டுத்தொட்டுப் பார்ப்பவர்கள். ☞ நீங்களும் தொடலாம் ஆனந்தத்தை... வாழும் கலைக் கலைஞனானால்!

சிற்பக்கலை மூலம் வாழும் கலையை நான் கற்றுத் தருகிறேன்.

இந்த ஒரு விஷயத்தில் நான் கண்டுபிடித்துக் கூறிய குறைகளை, அவன் அவனுடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பார்த்துப் பார்த்து தன்னை மாற்றிக்கொள்வான். அவ்வளவு பக்குவம் பெற்றவன்.

பாராட்டைவிட, டெக்னிக்கைத் தருவதுதான் இந்த நேரத்தில் இவனுக்கு சரியானது. இனி சிலை வடிப்பிலும் தன் தனிப்பட்ட வாழ்விலும் அவன் இன்னும் அதிக விழிப்புணர்வோடு நடந்து கொள்வான்.

வாழ்க்கையில் மிருதுத்தன்மை தானாக வந்து சேரும்.

புகழ வேண்டிய சூழ்நிலையில் இப்படி நடந்து கொள்வதற்குத்தான் கருணையும், ஞானமும் தேவை" என்றார்.

பேராசிரியரின் கண்களிலும் நீர்!

ஓவியம், சிற்பம், காவியம் போன்றவை
மட்டுமே கலை அல்ல. கலைநயத்தை நம்
வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்த
முடியும்.

பேசும் கலை,

படிக்கும் கலை,

பழகும் கலை,

ஏன், சமைப்பதுகூட ஒரு கலைதான்!

கலைநயம் கொண்ட ஒருவரின் கலை
வெளிப்பாடு எதுவாக இருந்தாலும் அதன் மீது
நம்மையும அறியாமல் ஈடுபாடு வரும்.

சொல், செயல்,
முகபாவம்,
சிந்தனை
ஆகிய நான்கிலும்
கலையம்சம் சேர்.

வாழ்வைத் தனியாகக்
கொண்டாட வேண்டிய
அவசியமே இருக்காது.
வாழ்வே
திருவிழாவாகி இருக்கும்.

☞ கலை சேருங்கள்

கடலில் பெருங்காயத்தைக் கரைப்பதால் கடலுக்கு நறுமணம் கிடைக்கிறதோ இல்லையோ - முதலில் நம் கை முழுவதும் பெருங்காய நறுமணம் மணக்கும்.

நம்முடைய கலை வெளிப்பாட்டால் மற்றவருக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லையோ - முதலில் நமக்குள் சந்தோஷம் பிறக்கும். திருப்தி மலரும்.

இசை, ஓவியம், காவியம் போன்ற சில துறைகள் மட்டுமே கலைகள் என்று நினைத்துவிடாதீர்கள்!

பாத்திரம் கழுவுவதில் இருந்து... ஷூ பாலீஷ் செய்வது வரை... குழந்தைக்குத் தலைவாருவதில் இருந்து ... தொழில் செய்யும் திறமை வரை... என வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் கலைநயத்தைக் கொண்டுவரலாம்.

இந்தத் கலையின் மொத்தத் தொகுப்புதான் வாழும் கலை.

வாழும் கலைநயத்தை நயம்படக் கற்றுக்கொண்டால், வயப்படாததைக்கூட வயப்படுத்திவிடலாம்!

கலை உணர்வோடு ஒவ்வொரு செயலையும் செய்ய ஆரம்பித்தால், சந்தோஷத்திலிருந்து... திருப்தி வரை, நம் ‘சுயம்' விரும்பும் எல்லாவற்றையும் வசப்படுத்திவிடலாம்.

அர்த்தமுள்ள சம்பவம்...

அந்தப் புகழ்பெற்ற ஓவியர், எவ்வளவு பணம் தருவதாகச் சொன்னாலும்,தான் வரைந்த ஓவியங்களைத் தரமாட்டார். “அப்படி நடந்துகொள்வது எதனால்?” எனக் கேட்டபோது,

“நான் வரைவது எனக்காக, உனக்காக அல்ல.
என் உயிரைக் கலந்து வரைந்த கலை அது.
அது பொருளல்ல. என் பிள்ளை! பிள்ளையை எவன்
காசுக்காக விற்பான்?” என கேட்டார்.

  • கலை என்பது வாழ்வில் திருப்தி அலையைச் சேர்ப்பது.
  • கலை என்பது கவலையைக் களைவது.

துன்பத்தைக்கூட நயமாய்

அனுபவியுங்கள்... அது தடுக்கப்படும்!

| தியான | | :---: | |

| | உளிகள் |

'சாலை இப்படி திடீரென வளைந்திருக்கக்கூடாது' என சைக்கிளிலிருந்து விழுந்தவன் சொன்னால் அது நியாயமானதாக இருக்குமா...

'சில வருடங்களுக்கு முன் இது நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்' என சொல்வோம், நமக்கு நல்லது நிகழும் போதெல்லாம்.

'இவ்வளவு சீக்கிரத்திலேயே இப்படி நடந்திருக்கக்கூடாது' என நொந்துகொள்வோம், நமக்குக் கெடுதி நிகழும்போதெல்லாம்.

சைக்கிள் ஓட்டுவது ஒரு கலை.

அந்தக் கலையை முறையாய் பயிலாதவரே 'சாலை கோணல்' எனச் சொல்வார். வாழ்க்கையை நடத்துவதும் ஒரு கலையே.

வாழும் கலை பயிலாதவரே எனக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது என்பார்.

வாழும் கலை கற்றவர் வாழ்க்கைச்சாலையைப் பற்றி குறை சொல்லமாட்டார்.

வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டுவதில் நயம் சேர்த்துக் கொண்டேயிருப்பார்.

நாம் சந்திக்கும் தோல்விகள், நம் வாழ்வுக் கலையை வளர்க்க உதவும் பயிற்சிக் களங்கள்.

கஷ்டப்பட்டால்கூட, முழுமையாய் கஷ்டப்படுங்கள். அப்படிச் செய்தால் கஷ்டம் அதன் இஷ்டம்போல், உங்களைக் கஷ்டப்படுத்துவது தடுக்கப்படும்.

வாழ்வில் வரும் இன்பமானாலும் துன்பமானாலும் - அதை ஆழமாய் அனுபவியுங்கள்.

நயமாய் அனுபவியுங்கள்.

காரணம், அந்த நிமிடம் அது தவிர்க்க முடியாதது.

துன்ப காலத்தைக்கூட ஆழ்ந்தனுபவித்து...

அதை தியான காலமாக்குங்கள்!

தெரிந்தவைகளுக்கு உள்ளே