எது தப்பு?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எது தவறு?
★ ‘தப்பு’ என்று சுட்டிக் காட்டுவது... ஒருவர் தன்னை மனதளவிலோ, உடலளவிலோ புண்படுத்திக்கொள்வதிலிருந்து தவிர்க்க, சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தை. அவ்வளவே!
‘தவறு’ என்பது, ஒரு மனிதர் தன்னைக் கட்டுக்கடங்கா புலன் ஈர்ப்பிலிருந்து காத்துக்கொள்ள, பெரியவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு உணர்வு. ஒரு பாதுகாப்பம்சம் மட்டுமே.
★ ஆனால் இன்று... ‘தப்பு’ துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
‘தப்பு என்ற சொல்லை, தங்கள் தவறுகளை மறைப்பதற்காக, மற்றவர்களின் கண்களை மூட வைக்கும் ‘மிளகாய்தூள்’ போல் பலர் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
★ தவறு செய்யும் போது அல்லது தவறு செய்கிறோம் என்ற உணர்வு வரும் போது தவறுக்குப் பயப்படுவதைவிட, ‘மற்றவர்கள் தவறாகப் பேசிவிடுவார்களே!’ என்று பயப்படும் கூட்டம்தான் அதிகம்.
★ நாம் தவறு என்று சொல்வது நம்மைப் பொறுத்த வரையில் மட்டுமே சரி. மற்றவருக்கு அதே தவறு, 100 % சரியாக இருக்கலாம்.
ஏனென்றால்... ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு ஜாதிக்கும் - தவறு என்பது வேறுபடுகிறது.
★ நாம் மற்றவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதே, கிட்டத்தட்ட தவறுதான்.
விஷயம் இப்படியிருக்க...
உறவினர்களும் இன்றைய சமுதாயமும் எதைத் தவறு என்று சுட்டிக் காட்டுகிறதோ, அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, அதை அச்சாணியாகக் கொண்டு செயல்படுவது மிகப் பெரிய தவறு.
ஜென் ஞானிடம், "எது தவறு?" என பேராசிரியர் கேட்டார்.
பதிலுக்கு ஞானி, "எது சரி?" என்றதும் தீவிரமாக யோசித்த பேராசிரியர், "எதுவெல்லாம் எனக்குத் தவறு எனப் படவில்லையோ, அதுவெல்லாம் என்னைப் பொறுத்தளவு சரி" என்றார்.
ஞானி, "பார், உன் கேள்விக்குப் பதில் உன்னிடமேயிருக்கிறது. உனக்குச் சரியெனப்படாத எல்லாமே தவறுதான்" என்றார்.
"எது தவறு?" என்ற கேள்விக்கு ஞானி பதில் சொல்லி முடித்தவுடனே பேராசிரியர் மீண்டும் ஆழமாய் கேட்டார்:
"எது உண்மையிலேயே தவறு?"
அதற்கு ஞானி, "உண்மையாகவே அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?" எனக் கேட்டதற்கு, “ஆமாம்” என்றார்.
ஞானி, “இப்படிக் கேள்வி கேட்பதே தவறுதான்” என்றார்.
பேராசிரியர், “இப்படிச் சொன்னால், பின் எப்படித்தான் நான் தெளிவடைவதாம்?” எனத் தாழ்ந்த குரலில் கேட்க,
ஞானி சொன்னார்...
“உன்னைக் குழப்புவதற்காக நான் இப்படிப் பேசவில்லை.
உன்னைக் குழப்பிக் கொண்டிருப்பதைக்
குழப்பத்தான் இப்படிப் பேச
வேண்டியிருக்கிறது.
எது தவறு என ஆராயாதே.
உண்மையில் தவறு என்ற ஒன்றே இல்லை.
தப்பு, தவறு, நீதி, நியாயம் தாண்டி
இயல்பாய் வாழ். உன்னைக்
குழப்புவதைக் குழப்பு.
தெளிவடைவாய்!” என்றார்.

திருந்துவதும் திருந்த விடுவதும் தியானம்
- சுஃபி போதனை. Menders have to mend. TAO Teaching
• அதாவது திருத்த
நினைப்பவர்களே
முதலில்
திருந்த வேண்டும்.
'இது தப்பு, அது தப்பு' என்று
சுட்டிக்காட்டி மற்றவர்களிடம் தவறு
செய்கிறோம் என்ற உணர்வை உருவாக்க
உதவும் தப்பு என்ற வார்த்தை ஒரு
வீச்சரிவாளுக்குச் சமம்.
வீச்சரிவாளைப் பயன்படுத்துவதற்கு - 'அதை எப்போது? எங்கே? எதை வெட்டுவதற்காகப் பயன்படுத்த வேண்டும்' என்ற தெளிவு வேண்டும்.
புத்தி தெளிவில்லாத பட்சத்தில் தன் சுயவிருப்பு, வெறுப்புகளுக்காகவும், தடுமாறும் எரிச்சல்மனத்திற்காகவும் பல தலைகள் உருளும்.
மற்றவரின் தப்புத்தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு, வாழ்க்கை பற்றிய அனுபவ ரகசியங்களும் மனித மன குண உணர்ச்சிகொந்தளிப்புகள் பற்றிய உண்மை நிலவரமும் தெரிந்திருக்க வேண்டும்.
இவற்றைத் தெரிந்துகொள்ளாமல் நம்மிடம் பல தவறுகளை வைத்துக் கொண்டு மற்றவரின் தவறைத் திருந்த முயற்சித்தால்...
கூரிய வீச்சரிவாளால் குத்திக் குத்தி ரணகளமாக்கப்பட்ட, ஒரு புண்பட்ட மனத்தைத்தான் நம்மால் மற்றவர்களிடம் ஏற்படுத்த முடியும்.
தேவையில்லாத மன, குணப் பிரச்சனைகளை நீக்கி, ஒரு பண்பட்ட மனத்தை உருவாக்க முடியாது. புண்பட்ட மனத்தைத்தான் உருவாக்குவோம்.
மற்றவர்களின் மனதைக் குத்திக் குத்தி ரணகளப்படுத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.
ஈருடல் ஓருயிராக இருந்து, மனம் ஒருமித்து வாழ வேண்டிய கணவன், மனைவி...
வாழ்க்கைத் துணையின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக்காண்பிப்பது அல்லது அவரின் தப்புத்தவறுகளை நினைத்து தன்னைத்தானே புண்படுத்திக் கொள்வது - என்ற இந்த இரண்டு காரியங்களை மட்டும்தான் வாழ்நாள் முழுவதும் பல தம்பதியர் செய்து கொண்டிருக்கிறார்கள். இது வருந்தத்தக்க விஷயம்தான்.
நித்ய சிரத்தானந்தா ஒரு முறை ஒரு மதத் தீவிரவாதியைச் சந்திக்க நேர்ந்தது. சிரத்தானந்தா ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தி, கிடைக்கும் உணவை உண்டு, கிடைத்த இடத்தில் ஆனந்தமாக உறங்கும் ஒரு சந்நியாசி.
| தி ரு த் த ம் | 'தப்பு' 'தவறு' கண்டுபிடிக்கப்பட்டது, உங்களை திருத்திக்கொள்ளத்தான். மற்றவரை வருத்திக்கொள்ள அல்ல! |
மதத் தீவிரவாதிக்கு சிரத்தானந்தாவின் ஆனந்தத்தைப் பார்த்து ஏகப்பட்ட பொறாமை வந்துவிட்டது.
சிரத்தானந்தா உல்லாசமாகப் புல்தரையில் படுத்துக்கொண்டு, ஆகாயத்தைப் பார்த்துச் சிரித்தவாறு தன் நன்றியை இறைவனுக்குக் காணிக்கையாக்கிக் கொண்டிருந்தார். எரிச்சலடைந்த தீவிரவாதி, "நீயெல்லாம் ஒரு சன்யாசியா?" என்று கேட்டார்.
சிரத்தானந்தா. "ஏனப்பா... நான் சந்நியாசிதான். அதில் எனக்கேதும் சந்தேகம் இல்லை. உனக்கென்ன சந்தேகம்...?" என்றார்.
தீவிரவாதி, "ஒரு சன்யாசி என்றால் குருமார்களையும் ரிஷிகளையும் மதிக்க வேண்டும் என்று உனக்குத் தெரியாதா?" என்று திரும்பக் கேட்டார்.
"ம்ம்... தெரியும்".
"மகாவீரரை நீர் மதிக்கிறீரா?"
"ம்ம்..."
"மகாவீரர் எப்போதும் ஒருக்களித்து ஒரு பக்கம் மாத்திரமே படுத்திருப்பார்.
நன்றாக கால் விரித்து, கை விரித்துப் படுத்தால் பல நுண்ணுயிர்களும் நுண் கிருமிகளும் பாதிக்கப்படும் என்ற கருணையால் மகாவீரர் தன்னை எவ்வளவு வருத்திக்கொண்டார்.
நீர் ஒரு சன்யாசியாக இருந்துகொண்டு இப்படி கை, கால் விரித்து உல்லாசமாகப் படுக்கலாமா? எவ்வளவு உயிர்கள் பாதிக்கப்படும்?
இது எவ்வளவு பெரிய தவறு?" என்று தன்னுடைய பொறாமையைத் தணித்துக்கொள்ள சன்யாசி மேல், தவறு என்ற சேற்றை வாரி வீசித் தன்னைத் திருப்தி செய்து கொண்டார் தீவிரவாதி.
சிரத்தானந்தா, "மகாவீரர் ஒருபக்கமாகப் படுத்துத் தூங்கும் போது, எத்தனை நுண்ணுயிர்களை அவர் தூங்கும் பரப்பளவில் கொன்று குவித்தார்?" என்று
| தீ | உங்களின் தீய குணங்களுக்கு |
|---|---|
| ப | மீண்டும் மீண்டும் |
| ச | சக்தியைத் தருவது, |
| க் | உங்களின் குற்ற உணர்ச்சியும் |
| தி | பயமும்தான்! |
சிரிப்போடு கேட்டார்.
மதத் தீவிரவாதிக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை.
மகாவீரர் ‘எதற்காக அப்படிக் கூறினார்? ஏன் அப்படித் தூங்கினார்?’ என்ற எந்த ஒரு விளக்கமும் தெரியாத தீவிரவாதி, மகாவீரரின் அனுபவ உண்மையை தன் குரூரப் பசி தீர்க்கும் வீச்சரிவாளாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்.
சிரத்தானந்தாவிற்கு, ‘ஏன் மகாவீரர்
அப்படி வாழ்ந்தார்?’ என்பதற்கான விளக்கம்
தெரியும். அதனால் அவர் ஆனந்தமாக
இருந்தார். தீவிரவாதியின் வீச்சால் அவர்
பாதிக்கப்படவில்லை.
இதே சாதாரண மனிதராக இருந்திருந்தால். முதலில்... “நாம் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு வந்திருக்கும்.”
இரண்டாவது... புல்தரையில்
இவ்வளவு நேரமாக சந்தோஷத்தோடு
படுத்திருந்தவர் விருட்டென்று
எழுந்திருந்திருப்பார். அந்தச் சூழலே
துக்ககரமாக மாறியிருக்கும்.
மற்றவரின் சூழ்ச்சி நமக்குப்
புரியாததால்தான், மற்றவர்கள் நம்மைக்
குறை சொல்லும்போது, நாம் மனம்
ஒடிந்து போய்விடுகிறோம். மற்றவர்களை
நாம் குற்றப்படுத்தும் போது, நம்முடைய
குரூர உணர்வு திருப்தி அடைந்து, அது
இன்னும் கொஞ்சம் வளர ஆரம்பித்து
விடுகிறது.

மற்றவருக்கு நீங்கள் தர முயற்சிப்பதென்ன? மற்றவருக்குள் குற்ற உணர்வை உருவாக்கும்போதெல்லாம் நீங்கள் குற்றஉணர்விலேயே வாழ்கிறீர்கள். மற்றவருக்குள் சுக உணர்வை உருவாக்கும்போதெல்லாம் நீங்கள் சுகஉணர்விலேயே வாழ்கிறீர்கள். நல்லத்தைக் கொடுங்கள் நல்லதாய் வாழ்ந்திருக்க!
அது தப்பு, இது தப்பு என்று மற்றவரிடம் குற்ற உணர்ச்சியைத் தூண்டி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைப்பதுதான் உண்மையான தவறு.
இன்றிலிருந்து மற்றவர்களின் தவறைச் சரிசெய்ய நேரத்தை வீணாக்காமல், உங்கள் தவறுகளை மட்டும் கண்டுபிடித்து அதைச் சரிசெய்ய நேரத்தைப் பயன்படுத்துங்கள்.
உங்கள் மீதே உங்களுக்கு மதிப்பு கூடும். உங்கள் மீது மற்றவர்களுக்கும் மதிப்பு கூடும்.
அர்த்தமுள்ள சம்பவம்...
பொதுஇடத்தில் அசுத்தம் செய்த தவறுக்காக, அந்தக் குழந்தையை அடித்த கோபக்காரத் தாயிடம் ஜுமல்கி சொன்னார்: “அது என்ன செய்கிறது என அதற்கே தெரியாத நிலையிலிருக்கிறது. ‘தப்பு’ என்ற வார்த்தையைக்கூடத் தெரியாத குழந்தையையாவது தப்ப விடுங்கள். அதற்குள் ‘குற்ற உணர்ச்சி’ தூண்ட புறப்படாதீர்கள். வாழவிடுங்கள்.”
திருத்துவதாய் நினைத்து வருத்துவது முடிவுக்கு வரவேண்டும். வருமா?
மற்றவருக்குச் சுதந்திரமளிப்பது ஒரு வாழ்வியல் தியானம்
குழந்தைகள் சந்தோஷமாயிருப்பதைப் பார்த்து சந்தோஷப்படும் பெற்றோர்கள்...
அவர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். ஏன்?
நெருங்கியவர்களின் சந்தோஷத்தை ஊக்குவிக்கும் எல்லா மனிதர்களும் நெருங்கியவர்களின் சுதந்திரத்தை நசுக்குகிறார்கள். குற்ற உணர்வுகளை உருவாக்கும்படி நடந்துகொள்கிறார்கள்.
சந்தோஷத்தின் அடுத்த படி, ‘சுதந்திரம்’.
அறிந்தோ, அறியாமலோ சுதந்திரத்திற்கு நாம் தடை விதிப்பது - ஏணியில் ஏற ஒருவரை ஊக்குவித்துவிட்டு, அவர் ஏறிக் கொண்டிருக்கும் போது ஏணியைத் தட்டிவிடுவதற்குச் சமம்.
மற்றவரின் சுதந்திரத்தைப் பறிக்காதீர்!
நெருங்கியவர்களிடம் நாம் அதிருப்தியை உணரக் காரணம், நம் சுதந்திரம் பறிக்கப்படும்போது நம்முள் உருவாகும் குற்ற உணர்வுகள்தான்!
மற்றவர்களின் சந்தோஷத்தை ஊக்குவிக்கிறோம்.
ஏன் என்றால், ஆழ்மனதில் நாமும் சந்தோஷமாயிருக்க விரும்புகிறோம்.
ஆனால், மற்றவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறோம்.
ஏனென்றால், ஆழ்மனதில் நாம் சுதந்திரமடைவதில் நமக்கே விருப்பம் இல்லை. இதுதான் பயமாக வெளிப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் நெருங்கியவரைக் கட்டுப்படுத்தும் அல்லது கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் ஒருவரைச் செயல்பட இது தூண்டுகிறது.
"ரொம்ப இடம் கொடுக்கக்கூடாது".
"எப்போதும் நம் கட்டுப்பாட்டுக்குள்தான் மற்றவரை வைத்திருக்க வேண்டும்".
"ஆடவிடாதே!...."
"என் சொல் பேச்சு மீறக்கூடாது..."
இதுபோன்ற பல எண்ணங்கள் மனதில் முளைத்தால், நீங்கள் உங்களின் சுதந்திரத்தை விரும்பாதவர் என்று பொருள். உள்சுதந்திரத்தில் நாட்டமில்லாதவருக்குள் மட்டுமே இதுபோன்ற எண்ணங்கள் முளைக்கும்.
உங்களின் உறவுதானே! விட்டுக்கொடுத்தால் தவறில்லையே? கொஞ்சம் ஆடினால்தான் என்ன.... உங்களுக்குப் பதில் அவர் ஆடட்டுமே.
| [சு]தந்திரம் | | நிறைந்த | | உலகில் | | வாழ்கிறீர்கள்! |
யாராவது ஒருவராவது
சுதந்திரமாயிருக்கட்டுமே.
இது தப்பு வழியல்ல. தப்பிக்கும் வழி.
நெருங்கியவரிடம் நீங்கள் திருப்தியை உணர, முதல் காரியமாக அவர்களின் சுதந்திரத்தை ஊக்குவியுங்கள். உங்களில் ஆழமன பயங்கள் குணமாகும். நீங்களும் அவரும் சேர்ந்து சுதந்திரமாய், திருப்தியாய் வாழ்வீர்கள்.
சுதந்திரமளிப்பது, ‘சுதந்திரம் பெறுவதின்' சூட்சும வழி”.