உள்ளே ஒரு சுற்றுலா
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மதிமயங்கும் மாலைவேளையில், தென்றல் காற்று தொடர்ந்து வீசிக் கொண்டிருந்தது.
அந்த மலையடிவாரத்தில், குதிரைவண்டியில் வந்து சேர்ந்த பக்தர் குதூகலத்தோடு வண்டியிலிருந்து குதித்து, தன் குருவின் குடில் நோக்கி குதூகலத்தோடு ஓடினார்.
அங்கு வாழ்ந்து கொண்டிருந்த ஜொராஸ்ட்ரிய ஞானியின் பக்தராக இருந்த அந்த நடிகர், உலகச் சுற்றுப் பயணம் சென்று விட்டதால் பல மாதங்கள் கழித்து தன் குருவைப் பார்க்கச் செல்கிறார்.
அதனால்தான் அவ்வளவு குதூகலம், அந்த நடிகரின் நடையில்...
நடிகர் “உலகின் ஏழு அதிசயங்களையும் பார்த்துவிட்டேன் சாமி. உங்களின் சாந்தத்திற்கும் ஆனந்த சிரிப்பிற்கும் முன் அவையெல்லாம் வெறும் தூசுக்குச் சமம்.
நீங்கள் எட்டாவது அதிசயம். இல்லையில்லை... அதிசயத்திற்கெல்லாம் அதிசயம்...
பார்க்கும்போதே பார்ப்பவருக்குள் பரவசமாய்ப் பரவும் பரவசம்” என குருவிடம் பக்திப் பெருக்கோடு பேசினார்.
ஜொராஸ்ட்ரிய ஞானி, “பிதற்றாதே! நீயும் ஓர் அதிசயம்தான். ஞானியின் தியானசக்தி வீச்சால் பரவசப்படுவது துவக்க நிலை பக்தனுக்குச் சரி.
எவ்வளவு காலம் என்னையே சார்ந்திருப்பாய்? விடுபடு!
விடுபட்ட அம்புபோல் உன் உள்ளுலகில் நுழை.
பரவசம் பொங்கும் அதிசய உலகின் வழி கண்டு கொள்வாய். அதிசயமே அசந்து போகும் அதிசயமாவாய். பரவசமாவாய். ‘பரம்’ வசம் ஆன, மறுநொடியே நீ பரவசமாவாய்!" என ஆசீர்வதித்தார்.

ஒரே ஒரு முறையாவது
உள்ளே ஒரு சுற்றுலா
சென்று வாருங்கள்.
வார்த்தைகளினால்
விளக்க இயலாத
ஆச்சரியங்களை
அணுஅணுவாக
ரசித்துத் திரும்புவீர்கள்!
* “நம் உள்ளே...
ஏழு கடல் -
ஏழு மலை -
ஏழு வானம் -
இருக்கிறது”
எனச் சொல்லப்படுவது
பொய்யல்ல மெய்.
மெய்யைத் தாண்டிய
மெய் உணர்வு நிலையில்...
இவையும் இவை தாண்டியவையும்
நம்முள்ளேதான் ஒளிந்திருக்கிறது.
உள்ளே ஒரு முறையாவது உள்ளுணர்வுப்
பயணம் செய்து பார்க்காதவரை,
இவையெல்லாம் பொய்யாகத்தான்
தோன்றும். மனம் நம்ப அனுமதிக்காது.
* “ஒரு முறையாவது உங்களோடு நீங்களே இன்பச் சுற்றுலா சென்றிருக்கிறீர்களா?” “என்ன கேள்வியிது? இக்கேள்வியே வினோதமான து” என்றெண்ணுபவர்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை ஒரே ஒருமுறை கூட அனுபவிக்காத அப்பாவிகள்.
★ உள்ளே செல்லும் ஒரே ஒரு சுற்றுலா, வெளியே செல்லும் ஓராயிரம் சுற்றுலாக்கள் தரும் சந்தோஷத் திருப்தியைவிட பலநூறு மடங்கு அதிகமான சந்தோஷத் திருப்தியைத் தரும்.
இரு பெண்களுக்குத் தந்தையான அந்தக் குடும்பஸ்தர் குருவினிடம், “என் இரத்தத்தை வியர்வையாக்கி, இன்று பல இலட்சங்கள் சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன்” என்றார் பெருமையோடு.
குரு, “ஊர், பேர், முகம் தெரியாத அந்த அதிபதிகளுக்காகவா உங்கள் இரத்தத்தையே வியர்வையாக்கினீர்கள்.!
உயிரைக் கொடுத்து உழைத்த உங்கள் சொத்தை, உங்களோடு உழைக்காமலே அனுபவிக்கப் போகிறவர்களுக்காகவா உங்கள் வாழ்வையே தியாகம் செய்தீர்கள்” எனக் கேட்டதும்,
குடும்பஸ்தர் கோபமாக, “யார் அந்த அதிபதிகள்?” எனக் கேட்டார்.
குரு, “மருமகன்கள்!” என்றார்.
★ மற்றவர்களுக்காகச் செலவிடும்
மணித்துளிகளில், சில துளிகள்கூட
தன்னோடு தான் வாழ,
தன்னைத்தானே ரசிக்க, ருசிக்க...
தனிமனிதன் செலவிடுவதேயில்லை.
★ உங்களுக்காக வாழ்கிறீர்களா? இல்லை,
உங்களுக்கென நினைத்து
ஊருக்கும் உலகுக்கும்
உங்கள் வாழ்க்கையை செலவழிக்கிறீர்களா?
★ “யார்
| ஆ | ||
|---|---|---|
| ர | உலகையே மாற்றத் துடிப்பதை | |
| ம் | விட்டுவிட்டு, உங்களை மாற்றத் | |
| ப | துள்ளியெழுந்தால் | |
| மா | ஆனந்த வாழ்வு ஆரம்பமாகும். | |
| கு | ||
| ம் |
யாரோடு வாழ்ந்தார்? யார் எவ்வளவு சாதித்தார்?" எனக் கேட்பதற்கு யாரும் சொர்க்கத்தில் இல்லை.
* நீ வாழ்ந்தாயா, அந்தத் திருப்தி இருக்கிறதா? நீ ஆனந்தமாக இருக்கிறாயா?..., என உன்னைக் கேட்டால், என்ன பதில் சொல்ல முடியும்?
* வாழ்வு இறைவன் அளித்த பரிசு - இந்த வாழ்வு வீணாகி விடக்கூடாது. மேலுள்ள கேள்விகளுக்கு உங்கள் வாழ்க்கை என்ன பதில் சொல்லும்?
* பதில்கள் தரும் உத்வேகத்தோடு, கட்டுரைக்குள் ஊடுருவுங்கள்...
சப்தமே இல்லாத அறை...
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அது புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த நேரம். ரீமஸ் கோச் அந்த அறையைப் பார்வையிடச் சென்றார்.
"உலகத்திலேயே முதல் முறையாக சப்தமே வராத அறையை உருவாக்கியிருக்கிறோம். உங்கள் கனவில்கூட கற்பனை செய்ய முடியாத அளவு நிசப்தத்தில் இந்த அறை இருக்கும்" என்று சொல்லி, பல்கலைக்கழகக் குழு ரீமஸ் கோச்சைப் பார்வையிட அனுமதித்தது.
உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்த ரீமஸ் கோச், வியர்த்த முகத்தோடு குழம்பிப் போய் வெளியே வந்தார்.
பல்கலைக்கழகக் குழுவினர், "ஏன், என்ன ஆயிற்று! ஏன் இப்படிக் கலவரமாகக் காணப்படுகிறீர்கள்?" என்று கேட்டனர்.
ரீமஸ் கோச், "வெளியே இருப்பதைவிட, உள்ளேதான் சப்தம் மிக அதிகமாக இருக்கிறது" என்றார்.
பல்கலைக்கழகக் குழுவினருக்கு பெரிய அதிர்ச்சி! "என்ன சொல்கிறீர்கள்?
| நே ர் எ தி ர் | மனிதர்களின் இன்றைய வாழ்வு முறை (Life style) ஆனந்தத்திற்கு நேர் எதிரானதாக இருக்கிறது. |
உள்ளே சப்தம் இருக்க வாய்ப்பேயில்லை.
உள்ளேதான் சப்தம் அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் சொல்வது அபத்தமாக இருக்கிறது" என்று கோபப்பட்டார்கள்.
ரீமஸ் கோச் மிக நிதானமாக, "ஆமாம். வெளியே இருப்பதைவிட உள்ளேதான் சப்தம் மிக அதிகமாக இருக்கிறது" என்று கூறினார்.
குழுத் தலைவர் ரீமஸ் கோச்சின்
உறுதியான பதிலைப் பார்த்து இவர்
கூறுவதில் ஏதோ உண்மை இருக்கிறது
என்பதை உணர்ந்தவராய், "உள்ளே அப்படி
என்ன சப்தத்தைக் கேட்டீர்கள்?" என்றார்.
ரீமஸ் கோச், "உள்ளே நுழைந்ததும்
வெளியில் கேட்ட சப்தங்கள் துளிகூட
உள்ளே கேட்கவில்லை.
ஆனால், வெளிசப்தத்தைவிட
அதிகமான இரண்டு வித சப்தங்களை என்
வாழ்வில் முதன்முறையாக, முழு
பரிமாணத்தில் கேட்க ஆரம்பித்தேன்"
என்றார்
குழுத் தலைவர், "அப்படியா!. என்ன சப்தங்கள்?" என்று கேட்டார்.
ரீமஸ் கோச், "முதல் சப்தம் -
கொஞ்சம்கூட ஓய்வே இல்லாமல் சதா
இயங்கிக் கொண்டே இருக்கும் என்
மனதின் சப்தம்.
இரண்டாவது - எனது உடலுக்குள் ஓடும் இரத்த ஓட்டத்தின் இயக்க சப்தம்.
உள்ளே இருக்கும் இந்த இரண்டு
சப்தங்களும் இவ்வளவு வலிமை
பெற்றவையென்பதை இந்நாள் வரை நான்
உணரவில்லை. மனிதர்களின் இன்றைய
வாழ்வுமுறை ஆனந்தத்திற்கு நேர் எதிரானது.

முதன்முறையாக இந்த உண்மையை உங்கள் சப்தமில்லாத அறைக்குள்தான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி'' என்று சொல்லி விடைபெற்றார்.
"மௌனத்தின் மதிப்பை முதன்முறையாக அன்றுதான் உணர்ந்தேன். எனக்குள்ளே, எனக்கே தெரியாத ஆச்சரியங்கள் நிறைய இருக்கிறது என்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன்'' என்று தன் டைரிக் குறிப்பில் ரீமஸ் கோச் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆம். ரீமஸ் கோச்சின் கூற்று முழுக்க முழுக்க நிஜம்.
உங்கள் ஒவ்வொருவரின் உள்நோக்கிய
பயணத்திலும் நிறைய ஆச்சரியங்கள் காத்துக்
கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்காத வரை
இந்த உண்மை தெரிய வாய்ப்பில்லை.
ரீமஸ் கோச்சுக்குக் கிடைத்த வாய்ப்பு
எல்லோருக்கும் எளிதாக வாய்க்கக்
கூடியதல்ல.
அப்படியே சில நல்ல வாய்ப்புகள்
அமைந்தால்கூட, எத்தனை பேர் அதைச்
சரியாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பது
மிகப் பெரிய கேள்விக்குறிதான்.
வாழும் ஞானகுருமார்கள்தான் உங்களுக்கு
கிடைக்கக்கூடிய மிக எளிய, அரிய வாய்ப்பு.
உள்நோக்கிய பயணத்தின் மந்திரச்
சாவிகளைத் தருவதுதான் ஞான
குருமார்களின் பணி.
ரீமஸ் கோச்சின் கூற்று, சப்தமில்லாத
அறையை உருவாக்கிய பல்கலைக்கழகக்
குழுவுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ரீமஸ் உணர்ந்த அளவுக்குக்கூட, அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. காரணம், உணர்வு தெளிவின்மை தான்.

- ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம் - உபநிடதம்
- E=mc² 'Matter is Energy Energy is Matter' -Nuclear physics ‘E=mc² எனும் விஞ்ஞானத்தின் இறுதிக்கட்டக் கூற்றானது, ஈசாவாஸ்ய உபநிடதத்தின் முதல் பக்கத்தின், முதல் கூற்று! இரண்டும் ஒரே கருத்தைத்தான் சொல்கின்றன. அது... ‘எல்லாம் சக்திமயம்’ என்பதே!
உணர்வு தெளிவின்மை நம் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு விகிதத்தில் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனைதான்.
உணர்வு தெளிவு நம்மிடம் இல்லாததால்தான் ‘எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வும் விமோசனமும் நம்முள்ளேதான் இருக்கிறது’ என்ற சத்யம் நமக்குப் புரிவதே இல்லை.
தொடர்ந்து நமது பிரச்சனைகளுக்கு வெளி நபர்களிடமும் புத்தகங்களிடமும் தீர்வு தேடி அலையும் நம் உணர்வுக்குள் கீழ்க்கண்ட உண்மைகள் வருவதே இல்லை.
1. உள்ளே இருக்கும் பிரச்சனைக்கு வெளியே தீர்வு தேடுவது மடத்தனம்.
2. அப்படியே கஷ்டப்பட்டுத் தீர்வு கண்டுபிடித்தாலும் அந்தப் பிரச்சனை அந்த நேரத்திற்குத் தடுக்கப்படும். மீண்டும் அதே பிரச்சனை வேறு வடிவில் விஸ்வரூபம் எடுக்கும். அது வாழ்க்கையை மீண்டும் அலைக்கழிக்கும்.
"சில தடவைகள் தியானத்தில் ஈடுபட்டேன். பெரிய மாற்றம் ஒன்றும் நிகழவில்லை” என்று சிலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். சில தடவைகள் தியானத்தில் ஈடுபட்ட உடன் பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல.
முதலில், மனதின் சப்தம் கேட்கப்பட வேண்டும்.
இரண்டாவது, மனதின் இயக்கம் புலப்பட வேண்டும்.
மூன்றாவதாக, மனதைப் புரிந்து அதைக் கடக்க வேண்டும்.
இவை அனைத்தும் நிகழ உணர்வுத் தெளிவு தேவை. உணர்வுத் தெளிவை அதிகப்படுத்துங்கள். அதற்குச்சில டிப்ஸ்...
★ மனதின் சப்தம் கேட்கப்பட, உங்களோடு நீங்கள் செலவிடும் நேரம் அதிகப்படுத்தப்பட வேண்டும்.
மு
ழு
தீ
ர்
வு
பிரச்சனைகளுக்கு மூலகாரணம் உள்ளே இருக்கிறது. பிரச்சனைகளுக்கு முழுத்தீர்வும் உள்ளேதான் இருக்கிறது. காலைக்கடன்கள், உணவு உட்கொள்ளுதல் போன்ற சில மணி நேரங்கள்தான் நீங்கள் உங்களுக்காகச் செலவு செய்யும் நேரம். அதுகூட உங்கள் உடலுக்காக மட்டுமே!
★ உங்கள் மனதின் இயக்கம் புலப்பட, மனதை வெளிச்சமிட்டுப் பார்ப்பதற்கு உதவும் தியானத்திற்காகத் தினமும் ஒரு அரைமணி நேரமாவது கட்டாயம் செலவிட வேண்டும்.
உடலளவில் உங்களுக்காக நீங்கள் செலவிடும் நேரங்களில்கூட உடல் அங்கு இருக்கும். ஆனால், மனம் எதையாவது நினைத்துக்கொண்டு ஊர் சுற்றப் போயிருக்கும்.
★ மனதைப் புரிந்துகொண்டு அதைக் கடப்பதற்கு ஞானக்கருத்துகள் பெரிதும் உதவும். உங்களுக்காகச் செலவிடும் நேரங்களிலெல்லாம் முழுக்க முழுக்க உடல், மனம், உயிர் என்ற எல்லாக் கோணத்திலும் உங்களோடு இருங்கள்.
இவையனைத்தும் கடைப்பிடிப்பவர்க்கு உள்ளே ஒரு சுற்றுலா செல்வதற்கான விசா ரெடி!
அர்த்தமுள்ள சம்பவம்...
பீடிகையோடு ரமணரிடம் ஒருவர் கேட்டார்; "தியானம் செய்வதற்கு என்ன தகுதி வேண்டும்?" என்று.
ரமணர் கேட்டார்:
"உன்னால் மூச்சுவிட முடிகிறதா?"
"முடிகிறது, பகவான்."
"தியானம் செய்ய இந்தத் தகுதி போதும். தியானம் செய்" என்றார்.
மதம், ஜாதி, கலாச்சாரம் மற்றும் உங்கள் பழக்க வழக்கங்களுக்குத் தியானம் அப்பாற்பட்டது. தியானத்திற்காக உங்கள் வழக்கங்களை மாற்ற வேண்டியதில்லை.
சொர்க்கம் தாண்டிச் செல்லுங்கள்...
இவ்வுலகில் மது, மாது, லாஹிரி வஸ்துகள் இல்லாமல் வாழ்ந்தால்... சொர்க்கத்தில் சோமபானம், ரம்பை, மேனகையோடு, கற்பதரு மரத்தடியில் இருந்து நினைத்தபடியெல்லாம் ஆடிப்பாடி வாழலாம் என கற்பனை செய்யாதீர்கள். அது நடக்காது.
அறையில் ஆட முடியாதவரால் எப்படி வீதியில் ஆட முடியும்?
இவ்வுலகைக் கொண்டாடுவதற்கே பக்குவமும் புத்திசாலித்தனமும் பற்றாக்குறையாக இருக்கும்போது மறுவுலகைக் கொண்டாட மட்டும் எங்கிருந்து பக்குவமும் புத்திசாலித்தனமும் வந்து சேரும்?
முதலில் சொர்க்கத்தை இவ்வுலகில் காண வழி செய்யப்பட வேண்டும்.
இவ்வுலகில் சொர்க்கத்தைக் காண உள்ளுலகம் ஒன்றுதான் வழி. உள்ளுலகுக்குள் பயணிக்கத் தெரிந்துகொண்டு விட்டால் மறுஉலகின் கதவு தானாய்த் திறந்து கொள்ளும்.
சொர்க்கமும் சொர்க்கத்தைத் தாண்டிய ஆச்சரிய அனுபவங்களையும் கண்டுகொள்வீர்கள்.
எல்லா ஞானக்கருத்துக்களும் உள்ளுலகிற்கான
விசாக்கள். எல்லாத் தியானமுறைகளும்
உள்ளுலகிற்கான ஊர்திகள்.
> மிகவும் பிடித்த
> தியான அகவிதை...
> “ஒரு செல்
> குழந்தையாகும்
> புனிதமான காலம்
> கர்ப்ப காலம்.
> ஒரு மனிதன்
> தெய்வமாகும்
> புனிதமான காலம்
> தியானகாலம்.”
தியான உளிகளை அனுமதியுங்கள். அது உங்களின் உள்ளே செல்ல துளைகளை உருவாக்கட்டும்.