என்ன தெரியும் நமக்கு?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஜொராஸ்ட்ரிய சீடன், "என் குரு பெரிய ஞானி" என்றார்.
பண்டிதர், "உன் குருவுக்கு என்ன தெரியும்?" என்றார்.
"ஜொராஸ்ட்ரிய சீடன், "தனக்குத் தெரியாதவற்றை, தெரியாது என்று தைரியமாகச் சொல்லத் தெரியும்" என்றார்.
★ "எனக்கு எல்லாம் தெரியும்"
என்ற எண்ணமிருக்கும் வரை,
எதையுமே புரிந்துகொள்ள முடியாது.
"ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை?"
என்பதைக்கூட புரிந்துகொள்ளமுடியாது!
★ "எனக்கு என்ன தெரியும்?" என்ற கேள்வி தோன்றிய பின்புதான், "எதையுமே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்பதை ஓரளவாவது புரிந்துகொள்ள முடியும்.
igstar “எனக்கு என்ன தெரியும்!” என்ற ஆச்சரியம் அரும்பிய பின்புதான் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள ஆரம்பிப்பீர்கள்1 “தெரியாது” என்ற உண்மை புரிய ஆரம்பிக்கும்.

‘எல்லாம் தெரிந்தவன்
எல்லாம் தெரிந்ததாக
எப்போதுமே
காட்டிக்கொள்ள மாட்டான்’.
- ஞானம்
‘எல்லாம் தெரியாதவன்
எல்லாம் தெரிந்தவனாக
காட்டிக்கொள்வதைத்
தவிர்க்க முடியாது’.
- அஞ்ஞானம்
ஓவியக் கல்லூரியில் தான் பயின்றபோது வரைந்த ஒரு ஓவியத்தை, பல வருடம் கழித்து வீட்டிற்கு வந்திருந்த தன் நண்பரான டாக்டரிடம் காட்டினார் நிட்டி.
தன் நண்பர் ஓவியத்தின் சிறப்புப் பற்றி என்ன சொல்லப் போகிறார் என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
நண்பர் பதிலேதும் சொல்லாததால், “ஓவியத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று நிட்டி ஆர்வம் பொங்க கேட்டதற்கு, “இந்தப் படத்திலிருக்கும் மனிதருக்குத் தோல் வியாதி இருக்கிறது” என்றார். அந்த பதிலால் நிட்டி நொந்து போனார்!
igstar நண்பரின் பதில் உண்மையானது என்றாலும், அது முழுமையானது அல்ல. “தெரியும்” என்ற எண்ணம் இருக்கும்வரை இதுபோன்ற சிறிய வட்டத்துக்குள் சிக்கிக் கொள்வோம். வளர்ச்சி தடைப்பட்டு விடும்.
ஆனால், நாம் வளர்ந்தவராகவும் மிகச் சரியாக எல்லாவற்றையும் செய்பவராகவும் நம்ப ஆரம்பிப்போம். “எனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது” எனும் சிறுவட்டத்திற்குள் சிக்கிக் கொண்டால்!, வாழ்வின் சுவையானப் பகுதிகளைக் கசக்கி எறியும் ஒருவராக மாறிவிடுவோம்...
அர்த்தம் பொதிந்த அற்புதமான வரலாற்று நிகழ்ச்சியொன்று...
ஜியார்ஜ் குருதீப் ஆன்மீக உலகின் ஒரு ரத்தினக்கல். அவர் ஒரு ஞானி. அவுஸ்பென்ஸ்கி ஒரு திறமையான கணிதமேதை. ஒரு சிறந்த தத்துவவாதி.
ஜியார்ஜ் குருதீப் மிகவும் வித்தியாசமானவர். அவரிடம் எந்த ஒரு பிரச்சனையை எடுத்துச் சென்றாலும் அதற்கு மிகச் சரியான தீர்வு கொடுப்பார் என்று குருதீப்பைப் பற்றி அவுஸ்பென்ஸ்கி கேள்விப்பட்டார். இதைக் கேள்விப்பட்டதும் அவரின் பல நாள் கேள்விகளுக்கு விடை கிடைக்க, ஜியார்ஜ் குருதீப்பைச் சந்திக்கச் சென்றார் அவுஸ்பென்ஸ்கி.
அவுஸ்பென்பஸ்கி, ஜியார்ஜ் குருதீப்பிடம், "உங்களிடமிருந்து பல விஷயங்களைக் கேட்டுத் தெளிவு பெற நான் விரும்புகிறேன். என்னுடைய கேள்விகளுக்கு விளக்கம் கொடுப்பீர்களா?" என்று கேட்டார்.
குருதீப், "நிச்சயமாக" என்றார்.
மெத்தப் படித்தவர்களுக்கும் நிறைய எனக்குத் தெரியும் என்ற எண்ணம் படைத்தவர்களுக்கும்தான் இயற்கையிலேயே நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் வருகிறது.
ஏகப்பட்ட விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது நம்மைப் பொறுத்தளவு பெருமைக்குரியது. 'இதனால் தனிமனித வளர்ச்சிக்கு பலன் என்ன?' என ஆராய்ந்து பார்த்தால், குறிப்பிடுமளவிற்குப் பலனில்லை என்பதே உண்மை.
| தெ | 'தெரியாது' என்பது |
|---|---|
| ரி | புரியாதவரை- |
| யா | வாழ்வின் அர்த்தமும் புரியாது. |
| து | பிறந்த காரணமும் தெரியாது. |
தேன் இனிக்கும். மாம்பழம் தித்திக்கும். பால் இதமளிக்கும் என்று பலமுறை படிப்பதால், அறிவின் செறிவு அதிகமாகலாம்.
ஆனால் தெளிவு பிறக்காது. பலன் கிடைக்காது.
இது மருத்துவம், விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட எல்லா அறிவுக்கும் பொருந்தும். ஒரு சொட்டுத் தேன், ஒரு துண்டு மாம்பழம், ஒரு துளி பாலை ஒரே ஒருமுறை சுவைத்துப் பார்த்திருந்தால் போதும், இனிப்பு என்ற அறிவு, 'இனித்தல்' என்ற அனுபவமாக மாறியிருக்கும்.
தெளிவு பிறந்திருக்கும். பலன் கிடைத்திருக்கும்.
அவுஸ்பென்ஸ்கி தன்னுடைய பெரிய பெரிய படிப்பால் சுயவாழ்க்கைக்குத் தேவையில்லாத பலவற்றையும் அறிந்து வைத்திருந்தார்.
அவ்வளவு அறிந்திருந்தும் அறிவின் பயனாகிய அனுபவம் அவருக்குக் கிடைக்கவில்லை. அதன் விளைவுதான் சந்தேகங்கள்! கேள்விகள்!
ஞானிகளின் அணுகுமுறை எப்போதுமே வித்தியாசமாக இருக்கும். ஆனால், பிரச்சனைக்குச் சரியான தீர்வு தரக்கூடியதாக இருக்கும்.
குருதீப், "அவுஸ்பென்ஸ்கி! நாம் பேச ஆரம்பிப்பதற்குமுன் ஒரு சிறு காரியத்தைச் செய்து முடித்துவிடுங்கள். ஒரு காகிதத்தை எடுத்து உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என்பதை ஒரு பெரிய பட்டியலிடுங்கள்.
உங்களுக்கு என்னென்ன தெரியும் என்பதைப் பற்றி ஒரு முடிவுக்கு நாம் இருவரும் வந்துவிட்டால், அது நம் இருவருக்குமே மிகப் பெரிய உதவியாக
| கு றை க ள் | தன்னைப் பற்றி முழுமையாய் தெரிந்து கொள்ளாதவரே அடுத்தவரின் குறைகளைப்பற்றி தெரிந்துகொள்ள, அவர்களின் குணம், நடை, உடை, பாவனையை அவர் நோக்கப்படி அலசி ஆராயத் துடிப்பார். |
இருக்கும். உங்கள் நேரம் வீணாகாது. என் நேரமும் மிச்சமாகும்.
உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதிருக்கும் சில விஷயங்களில் மாத்திரம் நான் என் கவனத்தைச் செலவிட்டு ஒரு நல்ல தீர்வு கொடுக்க முடியும்" என்றார்.
அவுஸ்பென்ஸ்கி பக்கத்து அறைக்கு
ஒரு வெள்ளைக் காகிதத்தையும் ஒரு
பேனாவையும் எடுத்துக்கொண்டு
உண்மையாகவே தனக்குத் தெரிந்த எல்லா
விஷயங்களையும் பட்டியலிடச் சென்றார்.
ஒரு நிமிடம்... இரண்டு நிமிடம்...
நிமிடங்கள் தாண்டத் தாண்ட
அவுஸ்பென்ஸ்கிக்கு நடுக்கம் ஏற்பட
ஆரம்பித்தது. அவரது நம்பிக்கை, தெளிவு
எல்லாம் ஒவ்வொன்றாகச் சரிய
ஆரம்பித்தது.
தனக்குத் தெரியும் என்று இதுவரை
நம்பிக் கொண்டிருந்த ஒவ்வொன்றையும்
"உண்மையாகவே நான் புரிந்து
கொண்டிருக்கும் விஷயங்கள் எவ்வளவு?"
என்ற பூதக்கண்ணாடியால் ஆராய்ச்சி
செய்யச் செய்ய, அவுஸ்பென்ஸ்கிக்குள்
தடுமாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.
இந்த நிகழ்ச்சி நடைபெறும் நேரம்
கடுங்குளிர் காலம். அந்தச் சூழலில்
ஒருவருக்கு வேர்த்துக் கொட்டுவதற்கான
வாய்ப்பே இல்லை. ஆனால்,
அவுஸ்பென்ஸ்கிக்கு வேர்த்துக் கொட்டியது!

காகிதத்தில் ஒரு வார்த்தைகூட எழுத முடியவில்லை.
“எனக்கு இவ்வளவு தெரியும்” என்று நம்பிக்கொண்டிருந்த ஒவ்வொரு விஷயத்திற்கும் “எனக்குத் தெரியவில்லை. இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது பல இருக்கிறது. முழுமையாக எனக்கு எதுவுமே தெரியாது” என்ற பதில் மாத்திரமே கிடைத்தது.

உங்களுக்கே தெரியாத
பெரிய எதிரி மனம்!
எதிரிகளையும்
துன்பங்களையும்
உருவாக்கும் எதிரியை
சரியாய் எடைபோடுங்கள்.
இந்த எதிரி நண்பனானால்,
ஜென்ம விரோதியையும்
நண்பனாக்கும் ‘வசியகுணம்’
உங்களைத்
தொற்றிக்கொள்ளும்.
45 நிமிடங்கள் தாண்டிய நிலையில்...
முழுவதுமாக வேர்த்துக் கொட்டியிருந்த
நிலையில்... ஒரு வார்த்தைகூட பேச முடியாத
நிலையில், உறுதிபட அவருக்குத் தெரிந்தது.
“எனக்கு ஒன்றுமே தெரியவில்லை” என்று!
இந்த உணர்வுத் தெளிவோடு குருதீப்
காலடியில் வெற்றுக் காகிதத்தை
அவுஸ்பென்ஸ்கி வைத்தார்.
தன்னைப் பற்றி முழுமையாய் தெரிந்து
கொள்ளாதவரே அடுத்தவரின்
குறைகளைப்பற்றி தெரிந்துகொள்ள,
அவர்களின் குணம், நடை, உடை,
பாவனையை அவர் நோக்கப்படி அலசி
ஆராயத் துடிப்பார்.
ஜியார்ஜ் குருதீப், அவுஸ்பென்ஸ்கியை மெல்லிய புன்னகையோடு பார்த்தார். “உங்களுக்குள் நிகழ்ந்த இந்த மாற்றத்தால் ஒரு விஷயம் உறுதியாகியிருக்கிறது.
‘உண்மையில் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை’ என்ற உணர்வுத் தெளிவு பெற்றதால், எல்லா இடங்களிலும் தேடிய பின்னும் கிடைக்காத அந்த ஏதோ ஒன்றை (உங்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் தரும் ஞானத்தை) பெறுவதற்கான அடிப்படைத் தகுதியை அடைந்திருக்கிறீர்கள்” என்று அதே சிரிப்போடு குருதீப் சொல்லி முடித்தார்.
அவுஸ்பென்ஸ்கி போலவே நாமும் ஒரு சிறிய ஆராய்ச்சியை செய்து பார்த்தால்...
நாம் ஒவ்வொருவரும் நிச்சயமாக தெரிந்துகொள்ள வேண்டிய அந்தத் தெரியாததை (Unknown is God) நாம் தெரிந்துகொள்ள முடியும்.
⋆ அதிகபட்சமாக நமக்கெல்லாம் என்ன தெரியும்?
சில மனிதர்கள்...
சில விஷயங்கள்...
சில இடங்கள்...
⋆ "யார், யார் நமக்குத் தெரிந்தவர்கள்?" என்று ஒரு பட்டியலிடலாம்.
உங்களின் பெயர் மற்றும் உங்களை ஒருமுறை பார்த்து தெரிந்து வைத்திருப்பவர்கள் இரண்டாயிரம் பேர்.
உங்களின் பெயர், விலாசம், பெற்றோர் வரை தெரிந்து வைத்திருக்கும் நண்பர்கள், உறவினர்கள் ஆயிரம் பேர்.
உங்களின் குணம், நடவடிக்கைகள் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் பத்து பேர்.
மொத்தமாக உங்களோடு நேரடியாகச் சம்பந்தபட்டவர்கள் 300-லிருந்து 350-க்குள் இருப்பதே பெரிய விஷயம்! சந்தேகம் இருப்பவர்கள் ஒரு பேப்பரை எடுத்துப் பட்டியலிட்டுப் பார்த்தால் உண்மை புரியும்.
இத்தனை கோடி மக்கள் இருந்தும் அதில் நமக்குத் தெரிந்திருப்பது சில மனிதர்கள் மட்டுமே. அந்தச் சிலரில் நம்மை உண்மையாகப் புரிந்து கொண்டவர்கள் 'யார்? யார்?' என்று எண்ண ஆரம்பித்தால் ஐந்து விரல்களைத் தாண்டுவது பலருக்குக் கடினம்.
| சூ | சூட்சுமம் - 1: தெரிந்ததெல்லாம் 'தெரியாததற்குள்' |
|---|---|
| ட் | ஒடுங்குகிறது. |
| சு | சூட்சுமம் - 2: தெரியாததெல்லாம் 'தெரிந்ததற்குள்' |
| ம | ஒடுங்கியிருக்கிறது. |
| ம் |
நம் கதி இப்படியிருக்க, மற்றவர்களின் கதி எப்படி இருக்கும்? ஒரு சிறு ஆய்வு செய்யலாமே! எவ்வளவு விஷயங்கள் நமக்குத் தெரியும்?
ஒவ்வொரு துறையிலும் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இருக்க, பன்னிரெண்டாவது வரை வருடத்திற்கு ஐந்தாறு புத்தகங்கள் படித்ததைத் தாண்டி, கல்லூரியில் ஒவ்வொரு வருடத்திற்கும் படித்த ஒரு சில புத்தகங்கள் மற்றும் அவ்வப்போது படித்த பத்திரிகைகள். கதைகள், டி.வி.யில் பார்த்த சில சம்பவங்கள், செய்திகளைத் தாண்டி உண்மையில் நமக்கு என்ன தெரியும்?
நம்முடைய சொந்த ஊரிலேயே நாம் இதுவரை ஒருமுறைகூட பார்த்திராத தெருக்கள், வீடுகள் நிறைய இருக்கும். சொந்த ஊரே அப்படியிருந்தால் உலகம்?!?!
நமக்குத் தெரிந்த சில மனிதர்கள், சில விஷயங்கள், சில இடங்களை மட்டும்தான் மையமாக வைத்து நாம் இயங்குகிறோம்.
உண்மையில், நிஜத்தில் ஒரே ஒரு மனிதரைப் புரிந்துகொள்வது என்பது இமாலய சாதனை! உங்களை முழுமையாகத் தெரிந்துகொண்ட, புரிந்துகொண்ட ஒருவரைக்கூட இதுவரை சந்திக்கவில்லை என்பதுதான் இதற்கு சாட்சி.
ஒரு ஜென் ஞானியின் சுருக்கமான கூற்று இதை நாம் புரிந்து கொள்ள உதவும்.
உன்னைப் புரிந்துகொள்ள வேண்டுமா?
- உலகைப் புரிந்துகொள்!
உலகைப் புரிந்துகொள்ள வேண்டுமா?
- உன்னைப் புரிந்துகொள்!
உங்களையும் மனிதர்களையும் பற்றிய பிரமிப்புகள் தெரிய ஆரம்பித்தால் பிரம்மாண்டத்தின் (இறைசக்தியின்) வெளிப்பாடுகள் பற்றி நாம் தெரிந்து கொண்டது எவ்வளவு என்று புரிய வரும். கடலுக்கும் ஒரு துளி நீருக்கும் உள்ள வித்தியாசம்தான் அது என்று புரிய வரும். அவுஸ்பென்ஸ்கிக்குக் கிடைத்த தெளிவு நமக்கும் கிடைக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்...
நமக்குத் தெரியாது என்கிற விஷயமாவது நமக்குத் தெரிந்தால், குறைந்தது நமக்குத் தெரியாது என்கிற விஷயமாவது நமக்குத் தெரிய வரும்.
நமக்குத் தெரியாது என்கிற விஷயம்கூட நமக்குத் தெரியாத வரை, நமக்குத் தெரியாது என்கிற விஷயம், கடைசி வரை, நமக்குத் தெரியவே தெரியாது.
நமக்கு என்ன தெரியும் என்ற தெளிவுக்கு முதலில் நாம் வந்து விட்டால், அவுஸ்பென்ஸ்கியைப் போல் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அத்தியாவசியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ளத் தகுதி பெற்றுவிடுவோம். தெரிந்துகொள்ள ஆரம்பியுங்கள்...
அர்த்தமுள்ள சம்பவம்...
ஜேத வனத்தில் புத்தரிடம் கேட்கப்பட்டவைகளில் சில...
- "மிகவும் இருள் நிறைந்த இரவு எது?" "அறியாமை!"
- "மிகவும் கூர்மையான வாள் எது?" "கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள்!"
☛ 'என்ன தெரியும் நமக்கு?'
என்ற கேள்வியை மந்திரம்
போலப் பயன்படுத்தி உங்களை உழுது
பாருங்கள். பண்படுவீர்கள்!
இறைவன் இருக்குமிடம் வரை
ஊடுருவுங்கள்...
|
| ஒரு வரைபடத்தை உங்களால் பார்க்க முடிகிறதென்றால், அதற்குக் காரணம் வரைபடமல்ல. வரைபடத்திலிருக்கும் இடைவெளிகளே காரணம். ஆனால், படத்திலிருக்கும் இடைவெளிகளின் மகத்துவம் இதுவரை நமக்குத் தெரிந்திருக்காது. | |
|---|---|
| தியான உளிகள் |
“இடைவெளிபடிப்பதைசாத்தியமாக்குகிறது .”
- இந்த வாக்கியத்தைப் படிக்க முடிகிறதா? இடைவெளி படிப்பதைச் சாத்தியமாக்குகிறது என்ற மேலுள்ள வரியை நீங்கள் படிக்க, புரிந்துகொள்ள உதவுவதே - அதிலிருக்கும் அச்சிடப்படாத இடைவெளிகள்தான்
அமைதியையும் வெற்று
வெளியையும்
தியானித்துப் பாருங்கள்.
ஊடுருவல் எளிதாகும்.
உங்களின் பேச்சுகூட வார்த்தை - இடைவெளி - வார்த்தை - இடைவெளி என்றே வருகிறது. மிக வேகமாக ஒருவர் பேசினால் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. காரணம் - பேச்சின் வேகம் அதிகரிக்கும்போது இடைவெளிகளின் அளவு குறைகிறது.
பேச்சு புரிவதுகூட இடைவெளிகளால்தான்.
இப்படி நீங்கள் ஆராய, ஆராய பல அதிசயங்கள் புலப்படும். உங்களின் வார்த்தைகளுக்கு இடைப்பட்ட அமைதிதான் வார்த்தைகளையே புரிய வைக்கிறதென்றால் எது பெரியது... சப்தங்களா? அமைதியா?
அமைதியிலும் ஒன்றுமில்லா வெற்று வெளிகளிலும் எல்லாம் வல்ல சக்தி ஒளிந்திருக்கிறது. உங்களுக்குத் தெரிந்தவைகளுக்கு உள்ளே ஊடுருவுங்கள்... தெரிந்ததற்குள் ஒடுங்கியிருக்கும் தெரியாதவைகள் [சூட்சுமம் -2] தெரிய ஆரம்பிக்கும். தியானித்துப் பாருங்கள்!