கொண்டாட்டம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சுசூக்கி (Suzuki)என்பவர் மிகப்பெரிய ஜென் ஞானி. அவர் எழுதிய மிக அழகான ஜென் ஹை கூ ஒன்று...
"ஞானத்தோட ஆரம்பிக்கும் முன்...
மலை மலையாகத் தெரிந்தது
மலர் மலராகத் தெரிந்தது
ஆறு ஆறாகத் தெரிந்தது
ஞானமடையந்த பின்...
மலை மலையாகத் தெரிந்தது
மலர் மலராகத் தெரிந்தது
ஆறு ஆறாகத் தெரிந்தது
இடையில்தான் குழப்பமெல்லாம்."
* புத்து (Buddhu), புத்தா (Buddha) இருவருக்குமே துக்கமில்லை. புத்து என்றால் முட்டாள். புத்தா என்றால் ஞானி.
இப்போது நீங்கள் அனுபவிக்கும் எல்லா துக்கங்களுமே நீங்கள் முட்டாள் அல்ல என்பதற்கான அறிகுறிகள். ஞானம் நோக்கி நகருகிறீர்கள் என்பதற்கான ஆதாரங்கள். உற்சாகத்தோடு முன்னேறுங்கள்!
★ நாடாளும் பலம் பெறுவதாலோ, பணம் குவிந்துவிட்டதாலோ, கொண்டாட்டம் பிறந்துவிடாது. தன்னை ஆளும் பலம் பெறுவதாலும் உள்ளதை ஆனந்தமாய் அனுபவிக்கும் குணம், பக்குவம் உருவாக்குவதாலும்தான் கொண்டாட்டம் பிறக்கும்!
★ திண்டாட்டஉணர்வுதான், உங்களுக்கும் கொண்டாட்டத்திற்கும் நடுவில் தடைச்சுவராய் இருக்கிறதென உங்களுக்குத் தெரியுமா?
- கிருஷ்ண புத்தநிலையில் இருப்பவரை எந்தவொரு திண்டாட்டமும் அசைக்க முடியாது. காரணம்
திண்டாட்ட உணர்வை உதறியெறிந்துவிட்ட தூயநிலைதான்!
★ திண்டாட்ட உணர்வென்னும் நோய் ஒருவரைப் பீடித்திருக்கும் வரை அவர் கண்ணுக்குத் திண்டாட்டங்கள் மட்டுமே தெரியும்.
★ கொண்டாட்ட உணர்வு ஒருவனுள் உதயமாகிவிட்டால் அவனுடைய கண்களுக்கு எல்லாமே கொண்டாட்டமாகத்தெரியும்!
"ராஜாவாக இருந்த நீங்கள் திருவோடேந்தின பிச்சைக்காரன் போல ஏன் வாழ வேண்டும்?" எனப் புலவர் ஒருவர் கேட்டபோது புத்தர் சொன்னார்...
"ஞானமடையும் முன், எல்லாம் என்னோடு இருந்தும் துக்கமாயிருந்தேன். ஞானமடைந்த பின், எதுவும் என்னோடு இல்லாது இருந்தும் ஆனந்தமாக இருந்தேன். இருக்கிறேன். இருப்பேன். இந்த நிலைக்காக எதை வேண்மானாலும் இழக்கலாம்" என்றார்.
குழப்புவதை
குழப்புவது
ஞானத்தீர்வு.
என்னவொரு சுகபோகமான வாழ்க்கை!
புத்தனாகும் முன் கௌதம சித்தார்த்தன் வாழ்ந்தது.
தங்கள் பிள்ளை பின்னாளில் நிச்சயம் துறவியாவான் என்ற உண்மையை முன்கூட்டியே புத்தரின் தந்தை தெரிந்துகொண்டிருந்ததால் தன் மகனுக்கு எல்லாவிதமான சுக போகங்களையும் உருவாக்கிக் கொடுத்திருந்தார்.
இதற்குமேல் அனுபவிக்க இந்த உலகில் ஏதாவது இருக்கிறதா என்ன!" என்றெண்ணும் அளவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் தந்தையார் சித்தார்த்தனுக்குச் செய்து கொடுத்திருந்தும் அவரால் சித்தார்த்தன் புத்தாராவதைத் தடுக்க முடியவில்லை.
வெளிசுகங்களைத் தாண்டி,
உள்சுகம் தேடிப் புறப்பட்டார்,
புத்தனாக மலர்ந்துவிட்டார்.
ஞானம், தியானம் ஆகிய வாழும் கலைகள்,
முறையாய் உருவாக முழுமுதற் காரணமாக
இருந்தவர் புத்தர். ஞானத்தையும் அதை
அடையும் முறைகளையும் வகுத்துக் கொடுத்த
முதல் ஞானி புத்தர்.
புத்தரின் ஞானம் நாம் ஒவ்வொருவரும் அடையப்போகும் இறுதி இலக்கு.
கிருஷ்ணரின் வாழ்வைப் பார்த்தால்
கொண்டாட்டத்தை தவிர, வேறெதுவும்
இல்லை.
கிருஷ்ணரின் வாழ்வு முழுவதும் கொண்டாட்டம்! கொண்டாட்டம்! மட்டுமே
தன்னுடைய கொண்டாட்டத்தில் தன்னுடைய
பக்தர்கள் அனைவரையும் கொண்டாட்டத்தில்
கரையச் செய்தவர் கிருஷ்ணர்.
கிருஷ்ணரின் இந்தக் கொண்டாட்ட நிலை அவரின் ஞானவெளிப்பாடு.
எல்லா ஞானியின் ஞானமும் ஒரே மாதிரியானதே. ஆனால், ஞானம் வெளிப்படும் விதம் விதவிதமாக மாறும்.
புத்தர் தன் ஞானத்தை ஞானவழியாகவும்,

“துக்கப்படுகிறேன்”
என வெட்கப்படாமல்
சொல்ல,
உணர, தாண்ட
புத்திசாலித்தனம்
தேவை!
கிருஷ்ணர் தன் ஞானத்தைக் கொண்டாட்டமாகவும்
பதஞ்சலி தன் ஞானத்தை யோகமாகவும்
இயேசு தன் ஞானத்தை அன்பாகவும்
மீரா தன் ஞானத்தைக் கீதமாகவும் வெளிப்படுத்தினார்கள்.
எல்லா ஞான வழிகளும் இறுதியான ஆனந்தக் கடலில் தான் கொண்டு சேர்க்கும் என்பது உண்மையே.
இருந்தும் அந்தந்தக் கால மனிதரின் மனஅமைப்பிற்கேற்றாற்போல் சில வழிமுறைகள் மிகச் சிறப்பான முறையாக அமையும். அந்த வழியில் சென்றால் ஆனந்தம் நோக்கிய பயணம் எளிதாக இருக்கும்.
இந்தக் கால மனிதரின் மனஅமைப்பிற்கேற்றது கொண்டாட்டம். வாழ்வைக் கொண்டாட முயற்சிப்பதே ஒரு அருமையான ஞானமுறைதான். கிருஷ்ணனின் கொண்டாட்டமும் புத்தரின் ஞானமும்தான் இன்றைய மனிதருக்கு மிகச் சிறந்த ஞான வழிகள்.
அதனால்தான் இன்றைய மனிதன் "கிருஷ்ணபுத்த நிலையை" அடைய வேண்டுமென சொல்கிறேன்.
வாழ்வைக் கொண்டாடுங்கள். வளமான மனிதராவீர்கள்.
"இவ்வளவு திண்டாட்டங்களுக்கு நடுவே நாங்கள் எப்படிக் கொண்டாட முடியும்? இது எப்படிச் சாத்தியமாகும்" என்று சிலர் யோசிக்கலாம்.
இதற்கு கிருஷ்ணர் சொல்லும் இந்த ஞானவாசகத்தை மனதில் பதிய வைத்துக் கொண்டாலே போதுமானது, கொண்டாட்டம் சாத்தியமாகிவிடும்.
"முடிவு இறைவன் கையில் இருக்கிறது. நீ வெறுமனே செயலில் ஈடுபடு"
| கீ | அமைதியின் கீதம் |
|---|---|
| த | சிரிப்பு! முழு சிரிப்பு! |
| ம் |
என்ன அழகான வாசகம்!
நாம் திண்டாட்டம் என உணரக் காரணம் எதிர்காலம்என்ன ஆகும்!'' என்ற நடுக்கம்தான்.
முடிவு இறைவன் கையிலிருக்கிறது என்ற உண்மை உள்ளத்தில் இறங்கிவிட்டால், எதற்குக் கவலை? எதற்கு பயம்? உங்களைப் பிடித்திருக்கும் தேவையற்ற திண்டாட்ட உணர்வு மறைய ஆரம்பித்துவிடும்.
திண்டாட்டம் என்பது வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. வாழ்க்கை பற்றிய நம்முடைய எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டது.
கொண்டாட்டம் உள்ளுணர்வு சம்பந்தப்பட்டது.
வெளி உலகச் சுகபோகங்கள், சொத்துக்கள் சம்பந்தப்பட்டது அல்ல.
ஆனால், நம்மைப் பொறுத்தளவிற்குக் கொண்டாட்டமென்பது வெளிஉலக சுகபோகங்கள், சொத்துக்கள் சம்பந்தப்பட்டது என்று ஆழ்மனதில் தவறாக நம்புவதால்தான் நம்மால் கொண்டாட முடியவில்லை.
திண்டாடுகிறேனே வாழ்வியல் என்ற விஷ உணர்ச்சிக்குக் கொண்டாட்டம் முறிவு மருந்து!
முடிவு இறைவன் கையிலிருக்கிறது. எனவே வாழ்வியல் வெறுமனே ஈடுபடுவது மட்டும்தான் இன்றைய மனிதரின் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
வெறுமனே வாழ்வதென்பது உப்புசப்பில்லாத, சுவாரஸ்யமற்ற வாழ்வல்ல.
எதிர்பார்ப்பில்லாத, பகல் கனவுகள் இல்லாத வாழ்வியல் அணுகுமுறையே வெறுமனே வாழ்வது.
உண்மையில் இந்த நிலைதான் கொண்டாட்டம். முடிவு நம் கையில் இருந்தால்
| உ ண ர் வு | கொண்டாட்டத்தையும் திண்டாட்டத்தையும் உருவாக்குவது உலகமல்ல, உணர்வு. |
விளையாட்டில் சுவை அழிந்துவிடும்.
"முடிவு அவன் கையில்
வாழ்வு உன் கையில்
கொண்டாடு கொண்டாடு!"
-எனும் தாவோ கீதம்படி வாழ்க்கையை அணுகுங்கள். ஆனந்தமடைவீர்கள்.
ஒரு ஜென் ஞானியிடம், "நீங்கள்
இருப்பதோ சாதாரணக் குடிசை. உங்களின் வசதி
படைத்த பக்தர்கள் கட்டிக்கொடுத்ததோ
மாளிகை. இந்த வசதிகள் எதுவுமே
தேவையில்லை எனச் சொல்லி வாழ்கிறீர்கள்...
பார்ப்பதற்குப் பிச்சைக்காரர் போல
இருக்கும் உங்களைச் சுற்றி சதா மக்கள்
சந்தோஷமாக இருக்கிறார்கள். உங்கள் கரம்
படுவதினாலேயே நோய்கள் குணமாகின்றன.
திண்டாட்டமான சூழலில்கூட
கொண்டாட்டத்தோடு வாழ்கிறீர்கள்.
எப்படி இதெல்லாம் உங்களுக்குச்
சாத்தியமாகிறது? இதன் ரகசியமென்ன?" என
வியந்துபோய் கேட்டார் ஒரு எழுத்தாளர்.
ஞானி, "அந்த ரகசியம் - மூன்றே வரிகளில் அடங்கி விடும்" என்றதும்.
எழுத்தாளர், "அப்படியா.... சொல்லுங்கள் சொல்லுங்கள்!" என ஆர்வமானார்.
ஞானி, "ஆமாம்...
நான் சாப்பிடும்போது சாப்படுகிறேன்.
தூங்கும்போது தூங்குகிறேன்.
வாழும்போது வாழ்கிறேன்".

3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் மனிதர்களுக்குக் கொடுத்த பெயர்.. "நடமாடும் கோவில்கள்."
நடமாடும் உங்களுள்
நடனமாடும் இறைவனோடு
நடனமாட ஆரம்பிக்கும்போது
நடனமாடும்
கொண்டாட்டக்காரனாக
நீங்கள்
மாறிப்போவீர்கள்!
குழப்பக் கேள்விகளுக்கு மேலும் குழப்பத்தையே பதிலாகத் தருவது ஜென் ஞானிகளின் பொதுவான அணுகுமுறை.
அந்த ஞானி சொன்னது முழுக்க முழுக்க கிருஷ்ணரின், "வெறுமனே செயலில் ஈடுபடு" என்பதைப் பற்றியது. கொண்டாட்டத்தின் உச்சியில் வாழ்ந்த கிருஷ்ணர் நமக்குத் தரும் வழிமுறை வெறுமனே செயலில் ஈடுபடுவது.
அதாவது செய்யும் செயலில் மாத்திரம் கரைந்து போவது.
எதிர்காலம் மற்றும் வாழ்க்கை பற்றிய
திண்டாட்ட உணர்வுகளைத் தாண்டி, செய்யும்
செயலிலேயே மூழ்கி விடுவது. இது
கொண்டாட்டத்திற்கு எளிதாய் ஒருவரை
அழைத்துச் செல்லும்.
அப்போதுதான் கொண்டாட்டம், ஆனந்தம் என்ற வார்த்தைகள் அனுபவமாக மாறும்.
விழா வந்தால் மட்டும்தான் கொண்டாட்டமா?
சாதித்தால்தான் கொண்டாட்டமா?
ஏன் கொண்டாட்டத்தின் சாவி வெளியில்
இருக்க வேண்டும். இதை நீங்கள்
உணர்ந்துவிட்டால் உங்கள் கொண்டாட்டத்தின்
அதிபதி நீங்களே! வாழ்வின் ஒவ்வொரு
நிகழ்வுகளும் விழாக்களே! சாதனைகளே!
அக்கண்ணுக்கு இவையெல்லாம் தெரிந்து
விடாமல் மறைப்பது மனிதரின் திண்டாட்ட
உணர்வே. கொண்டாட்டத்தை வாழ்வில்
நடைமுறைப்படுத்த ஆரம்பியுங்கள்.

ஒரு தியான சொற்பொழிவில்
சொன்னது...
பிறக்கும்போதே புத்தர் ஒரு
புத்தராகப் பிறக்கவில்லை.
ஒரு காலத்தில்
உங்களைப் போன்றே
திண்டாடிக்
கொண்டிருந்தவர்தான்
புத்தரும்!
சாதாரண சித்தார்த்தனால்
புத்தனாக முடியும்போது
உங்களால் முடியாதா?
துவக்கத்தில் உணர்வு மாற்றம் கடினம் போலத் தோன்றலாம்.
துவண்டு விட வேண்டாம்.
துவண்டு போயிருக்கும் உணர்வைத் துள்ள வையுங்கள். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மாத்திரம் முழுமையாக ஈடுபடுங்கள்.
இறைவன் வாழ அனுமதித்த ஒவ்வொரு நிமிடத்தையும் செயலையும் பரிசாகக் கொண்டாடுங்கள். கொண்டாட்டம் பிறந்துவிடும். கிருஷ்ணபுத்தநிலை உதயமாகும்!
அர்த்தமுள்ள சம்பவம்...
உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்!
திண்டாட்டத்தைக்கூடக் கொண்டாட்டமாய்
தாண்டிவிடுவீர்கள்!
"என்னை மட்டும் இப்படித் திண்டாட வைக்கிறாயே, இதுவா உன் கருணை. கல்நெஞ்சா உனது?" என யோசித்த சூஃபி சீடனின் கனவில் தோன்றிய கடவுள் -
"இரத்தம் வரவர, தோலைக் கிழித்து, தசையை அறுத்து, உள்ளிருக்கும் கட்டியை எடுத்தெறியும் மருத்துவனின் நெஞ்சு கல்நெஞ்சா?" எனக் கேட்டார் கடவுள்.
மேலும் தொடர்ந்த கடவுள் :
"கொஞ்சம் பொறு. அதிக விழிப்புணர்வோடிரு.
திண்டாட்ட காலத்தைத் தாண்டிவிடுவாய்.
உன் கர்மங்கள், எதிர்மறை நினைவுகள்,
கரைந்து காணாமல் போகத் தியானம் செய்.
கொண்டாட்ட காலத்தைத் தொட்டுவிடுவாய்"
எனச் சொன்னார் சீடனிடம்.
ஆனந்தம் அதன் இருக்கையில் அமரட்டும்
“ஆனந்தமாக இருங்கள்” - இது ஒரு தியானம், இது ஒரு சத்யம், இது ஒரு ஆசீர்வாதம்.
☞ உங்களுக்குப் பரிசாகத் தர விரும்பும் தியானம் இது.
எவ்வளவு காலம் துக்கமாயிருக்கப் போகிறீர்கள்.
ஆனந்தமாக இருங்கள்...
இருக்க முயற்சி செய்யுங்கள்...
ஆனந்தமாகவே இருப்பீர்கள்!
ஓய்வாக, நேராக, அமர்ந்து இதை முயற்சியுங்கள்...
பால் நிரப்பப்பட்ட பால் பாக்கெட் போல, உங்களின் மொத்த உடலையும் ஆனந்தம் நிரப்பியிருப்பதாக பாவனை செய்யுங்கள்.
ஒவ்வொரு செல்லும் ஆனந்தசக்தியில் முங்கியிருப்பதாக முழுமையாக ஆழமாக உணருங்கள்...
[ஆ]னந்தம்
‘னந்தம்’ என்றால்...
அது
குறையக் கூடியது.
ஆனந்தம் என்றால்...
அது குறையாதது!
திகட்டாதது!
தித்திப்பானது!
திருப்தியானது!
கொஞ்சம் கொஞ்சமாகப் பொங்க ஆரம்பிக்கும் ஆனந்த உணர்வுக்குள் மூழ்கிப் போங்கள்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதைச் செய்யுங்கள்.
ஆனந்தமாக இருப்பீர்கள். அதன் வழியையும் சுற்றியிருப்பீர்கள்.
☞ உங்களுக்குச் சொல்ல விரும்பும் சத்யமும் இதுதான்.
ஆனந்தமாக இல்லாதிருக்க என்னென்ன செய்ய முடியுமோ, அவ்வளவையும் மனிதர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். தேவை சிறு மாற்றமே.
துக்கம் நோக்கிச் சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தையும் குணச் சக்கரத்தையும் ஆனந்தம் நோக்கிச் சுழல வைத்தால் பிரச்சனை தீர்ந்தது. திருப்புங்கள். ஆனந்தமாக இருப்பீர்கள்.
☞ கடைசியாக, ஆனந்தமாக இருங்கள்!
கடைசியாக ஆனந்தமாக இருங்கள் என ஆசீர்வதித்து...
உங்களின் ஆனந்த வாழ்வுக்குத் துவக்கப் புள்ளி வைக்கிறோம். ஆனந்தமாக இருங்கள்!
‘ஞான அனுபூதி’
என்னில்
பெற்றபின்...
ஒன்பது மாத
ஆனந்த
மௌனத்தைத்
தாண்டி,
என் வழியாய்
இறைவன்
சொன்ன
முதல் வார்த்தை...
"ஆனந்தமாக
இருங்கள்!"