KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/நித்ய ஆனந்தம்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

நித்ய ஆனந்தம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* ஆனந்தம் என்பது பலருக்குத் தெரியாத ஒன்று. தெரிந்த சிலருக்கு அது புரியும் ஒன்று. அனுபவித்து உணர்த்த வெகு சிலருக்கு அது விளக்க முடியாத ஒன்று.

* "ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.
அதையும் தாண்டி....
ஆனந்தம் இங்கேதான் இருக்கிறது.
ஆனந்தத்தை இப்படிக்கூட அடையலாம்.
இதுதான் ஆனந்தம்"
என்று சுட்டிக்காட்ட முடியும்.
ஆனால் ஆனந்தத்தை விளக்க முடியாது.

* எல்லா ஞானிகளின்
ஞானஉபதேசங்களும் தியானமுறைகளும்
அந்த ஆனந்தக் கடலை காட்டத்தான்.

* தனிமனிதர்கள் தங்கள் தனி வாழ்வில் தனக்குள்ளேயே ஆழ்ந்து கண்டுபிடிக்க வேண்டிய ஒன்றுதான் இந்த ஆனந்தம்!

மேலோட்டமாய் வாழும் அந்த நபர், "என்ன இது! நாற்பது வருடமாக தியானம் செய்துவிட்டேன். இன்னும் முக்தி கிடைத்தபாடில்லையே" என நொந்தபடி பேசினார் ஜென் ஞானியிடம்.

ஞானி மெதுவாய் சொன்னார் "நாற்பது வருடம் தானே... நாற்பது ஜென்மங்களில்லையே!"

portrait
  • ஞானமடைய சொடுக்கிடும் நேரத்தை விட குறைவான நேரத்தையே இறைசக்தி எடுத்துக்கொள்ளும். 99.9செல்சியஸில் இருக்கும் நீர் 100செல்சியஸில் நீராவியாக மாற எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளுமோ, அவ்வளவு நேரம்தான் திடமானமனம் கரைய எடுத்துக்கொள்ளும்.
  • ஆனால், சாதாரண நீர் 99.9செல்சியஸில் அடைய எவ்வளவு நேரமாகும்.

அதற்கு எவ்வளவு வெப்பமும் சக்தியும் முயற்சியும் தேவைப்படும்.

ஒருவேளை நீர் பனிக்கட்டியாக உறைந்து போயிருந்தால்...

  • பலர் மனம் பனிக்கட்டிதான்.
  • உங்களுக்குள் உஷ்ணம் உருவாக்கபட வேண்டும்.
  • உழைக்க ஆரம்பியுங்கள்! நெருப்பு பற்றிக்கொண்டால், அடுத்த நிமிடமே காணாமல் போகும் கற்பூரக்கட்டிப் போல மனம் காணாமல் போகும் அற்புதம் நிகழும்.

ஆனந்தத்தின் ஞானத்தேடல் கொஞ்சம் விசித்திரமானது போலத் தோன்றும்.

காரணம்...

ஆனந்தமாக இருப்பது இயற்கை...

ஆனந்தமில்லாமல் இருப்பதுதான் செயற்கை.

வாழ்வில் தொடர்ந்து ஆனந்தமே இல்லாமல் செயற்கையாகவே வாழ்ந்து பழகிவிட்டால் - செயற்கையே இயற்கை என்ற பிரம்மை உருவாகி விட்டது. இயற்கை, செயற்கை போல சராசரி மனிதருக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது.

ஞானத்தேடல் விசித்திரமாகத் தெரியக் காரணம் இதுதான்.

ஒரு ஜென் ஞானியைத் தேடி ஞானத் தேடுதலோடு சீடர் ஒருவர் அணுகுமுறை

ஜென் ஞானிகளின் அணுகு முறை வித்தியாசமானது.

அவர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதற்கே சிலநேரம் தனிப் பக்குவம் தேவை.

சீடர் ஜென் ஞானியிடம், “நான் ஞானம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? எனக்குத் தெரிந்த எல்லா வழியையும் முயற்சித்துப் விட்டேன்...”என்றார்.

ஜென் ஞானி , “அது மிக சுலபமப்பா” என்றார்.

சா
க
ச
ம்

ஆனந்தம் மாபெரும் சாகசம்! அப்படியா, எனக்கு அந்த வழியை உடனே கற்றுக்கொடுங்கள்''.

''அது மிகக் கடினப்பா''.

சீடர் குழம்பி விட்டார், ''சாமி, என்ன சொல்கிறீர்கள்! எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஞானம் அடையும் வழிமுறை மிகச் சுலபம். ஆனால், அதைக் கற்றுக் கொடுப்பது மிக கடினமென்று சொன்னால் நான் என்னவென்று புரிந்துகொள்வது...''என்று குழம்பியவர் புலம்பினார்.

''அந்த வழி மிக மிகச் சுலபம். அதனால்தான் அதை உனக்கு கற்றுக் கொடுப்பது மிக மிகக் கடினம்''.

''எனக்கு நீங்கள் சொல்வது கொஞ்சம்கூட புரியவில்லை''.

ஜென் ஞானி, ''இன்னும் அந்த வழியைப் பற்றி நான் விளக்கக்கூட ஆரம்பிக்கவில்லை. அதற்குள் புரிந்துகொள்வதே கடினம் என நீ சொல்கிறாய். அதை உனக்கு கற்றுக்கொடுப்பது, எப்படியப்பா சாத்தியம்?'' என்றார்.

சீடர், ''கடினமானாலும் சரி. அதை எனக்குத் கற்றுக் கொடுங்கள்'' என்றார்.

ஜென் ஞானி, ''நான் சொல்வதை நீ காதால் கேட்டுப் புரிந்துகொள்வது கடினம்தான். சரி. ஒருமுறை அந்த மிக மிக எளிமையான வழியை, நீயே முயற்சித்துப் பார். அப்புறம்தான் எல்லாம் புரியும்'' என்றார்.

சீடர், ''சீக்கிரம் சொல்லுங்கள்...'' என்று குஷியாகிவிட்டார்.

ஜென் ஞானி -

முஇதே உடலில், இதே உலகில்
டிஇதைவிடப் பல கோடி மடங்கு!
யுஉன்னால் ஆனந்தமாயிருக்க முடியும்!
ம்

★ "அது மரத்தின் ஊடே செல்லும். ஆனால் சப்தம் சிறிதும் எழுப்பாது செல்லும். அதை நீ கண்டுபிடிக்கவேண்டும்.

★ பச்சைப்பசேல் என முளைத்திருக்கும் புல் பூண்டுகளைச் சிறிதும் அசைக்காமல் அவற்றைக் கடந்து செல்லும். அதையும் - நீதான் கண்டுபிடிக்க வேண்டும்.

நீரில் விழுந்த பின்னும் அதில் எந்தவித
அலைகளையும் ஏற்படுத்தாத அந்த ஒன்றையும்
நீதான் கண்டுபிடிக்க வேண்டும். அதைக்
கண்டுபிடி. ஞானமடைவாய்" என்றார்.

சீடருக்குச் சந்தோஷம் தாளவில்லை.
'இவ்வளவு எளிமையான முறையிருப்பது
முன்பே தெரிந்திருந்தால் எப்போதோ ஞானம்
அடைந்திருப்பேனே!

மரம், புல், நீர் இருக்கும் இடம் சென்று
தேடினால் இவர் சொல்வதை எளிதில்
கண்டுபிடித்துவிடலாமே. இதைக் கற்றுக்
கொள்வதையா கடினம் என்று சொல்கிறார்!'
என்று வியந்தவாறே தேட ஆரம்பித்தார்.

தொடர்ந்து ஒரு மாத காலம்
முயற்சித்தும் சீடரால் மரம், புல், நீர்
ஆகியவற்றில் சிறு சலசலப்புகூட
ஏற்படுத்தாமல் செல்லும் அதைக்
கண்டுபிடிக்கவே முடியவில்லை.

A spiritual figure in folded hands posture with philosophical verses below

வானம் எங்கேயிருக்கிறதென மேகம் தேடினால் வானம் அதற்குக் கிடைக்குமா?

எது வானம்? எது மேகம்?
எனப் பிரிக்க முடியாத
காற்றுத் தொகுப்பு அவை.

மனிதன் வேறு
ஆனந்தச்சக்தி வேறு
என பாவித்து ஆனந்தத்தைத்
தேடினால் அது கிடைக்காது.

ஆனந்தச் சக்தியின் பகுதியான
மனிதனால் அதைக்
கண்டுபிடிக்க மட்டுமே முடியும்.

அதைக் கண்டுபிடிக்க அதில் கரைந்து போக வேண்டும்!

தேடித் தேடி சீடர் நொந்ததுதான் மிச்சம்.

கடைசியாக ஞானியிடம் திரும்பிய சீடர், "என்ன பொருள் அது? என்னால் அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை" என்று கேட்டார்.

ஜென் ஞானி, "பொருளா? அது பொருளே அல்லப்பா?" என்றார்.

"அப்படியென்றால், அது ஒன்றுமே இல்லாததா?"

"ம்ம்... அதை அப்படிக்கூட அழைக்கலாம்".

> நித்யானந்த கடல்!
>
> மலை உச்சியைத் தொட்டதும்
> மலைச்சரிவின் முதல் அடி
> ஆரம்பமாகிறது.
>
> அறிவு, அழகு, அதிகாரம்,
> பணம், பண்பு, புகழாரம். இதில்
> உச்சிக்குச் செல்வது
> உள்ளுலகில் சரியத்தான்.
>
> உச்சிக்குச் செல்லாமல் நடுவில்
> அகப்பட்டவனையே அகங்காரம்
> ஆட்கொள்ளும்.
>
> "என் துறை, என் ஆசை, என்
> தொழில் ஆகியவற்றில்
> என்னால் முடிந்தளவு உச்சிக்குச்
> செல்வேன்" என சொல்லித்
> திரியாமல், செய்துகாட்டினால்...
>
> உள்சரிவின் முதல் அடி
> தெரியும். நித்ய ஆனந்தக் கடலின்
> வழி தெரியும்!

"இப்படியெல்லாம் சொன்னால், பிறகு எப்படித்தான் நான் அதைத் தேடுவது?" என்று கேட்டார் குழப்பத்தின் உச்சியில்.

"ஏப்பா, நன்றாக யோசித்துப் பார். நான் அதைத் தேடு என்றா சொன்னேன்? கண்டுபிடி என்று மட்டும்தானே சொன்னேன்.

நிச்சயமாக அதைக் கண்டுபிடித்து விடலாம். கண்டுபிடிப்பது மிக மிகச் சுலபம். மாறாக அதைத் தேட ஆரம்பித்தால் அதைக் கண்டுபிடிப்பது மிக மிகக் கடினம்.

இப்போது யோசித்துப் பார். நான் முன்பு சொன்னது புரிய வரும்" என்றார் ஜென் ஞானி.

ஞானி கூறிய சூட்சுமத்தை ஓரளவு புரிந்து கொண்ட சீடர், ஆர்வமிகுதியால், "தயவுசெய்து நாம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த அது எதுவென சொல்லுங்கள்" என்றார்.

"அது வேறெதுவும் இல்லை.

எங்கும் நிறைந்திருக்கும் ஆனந்தசக்திதான் அது" எனச் சொல்லி முடித்தார் ஜென் ஞானி.

சூட்சுமம் புரிந்த சீடர் வெகு விரைவிலேயே ஆனந்த சக்தியைக் கண்டுகொண்டார்.

ஞானம் அடைவது என்பது ஆனந்தச்சக்தியை, அனுபவம் தாண்டிய அனுபூதியாக உணர்வது.

சதா ஆனந்தத்தில் திளைத்திருந்தும் திகட்டாமல் இருக்கும் நிலைதான் அந்த ஞான அனுபூதி நிலை.

இது நிச்சயமாக எல்லோருக்கும் சாத்தியமாகக்கூடிய ஒன்றுதான். சொல்லப்போனால் ஞானமடைவது என்பது ஒவ்வொரு மனிதரின் பிறப்புரிமை அல்லது பிறவி உரிமை.

பிறந்ததிலிருந்து ஆனந்தமில்லாத செயற்கைத்தன்மையை தொடர்ந்து பார்த்ததால், திகட்டாமல் இருக்கும். நிலையான ஆனந்தம் என்பது சற்றே விசித்திரமாக சிலருக்குத் தோன்றலாம்.

ஆனால், ஆணித்தரமாக என்னால் சொல்ல முடியும்... முயற்சித்தால் நிச்சயம் அது சாத்தியம்தான். நீங்கள் நித்யமான ஆனந்தத்தை அடைய முடியும். ஆனந்த நிலை அடைவது மிக மிகச் சுலபம்தான்!

அர்த்தமுள்ள சம்பவம்...

தாந்த்ரீக ஞானியிடம் சீடன், "ஆனந்தமாயிக்க நான் ஆசைப்படுகிறேன்" என்றான்.

ஞானி, "உண்மையாகவா?" என்று கேட்க,

சீடன் "ஆமாம்.. ஆமாம்..." என்றான்.

"அது மிக எளிது. உன் கோரிக்கையின் இரு கடைசி வார்த்தைகளை நீக்கிவிடு. ஆனந்தமாயிருப்பாய்!"

சீடன் "எது... எது...?" என்று கேட்க,

"ஞானி," ஆசைப்படுகிறேன் நான், என்ற இரண்டையும் அழி. எது மிஞ்சுகிறது பார்" என்றார்.

  • ஞானக்கருத்துக்களை உள்ளே வரவிடுங்கள்.அது சண்டையிட்டாவது ஜெயித்துவிடும்!

புற உலகிலிருந்தே

நித்யானந்தமாக மாறலாம்!

தியான

உளிகள் | வீட்டைவிட்டு காட்டுக்கு ஓடாதே. காட்டில் மரத்தடியில் அமர்வதால் மட்டும் ஞானம் கிடைத்துவிடாது. |

வீட்டில் ஓரிடத்தில் அமைதியாய் இருக்க முடியாதவரால், காட்டிற்குச் சென்றால் மட்டும் அமைதி ஆகிவிட முடியும் என நம்புவது மாயை.

ஓர் உண்மை... சம்சாரியாய் இருப்பதற்கான அதிகபட்ச மனப்பக்குவம்தான், சந்நியாஸியாக வாழ்க்கையைத் தொடர இருப்பவருக்கான குறைந்தபட்சத் தகுதி.

வெளிஉலகில் தாங்கிப் பிடிக்க குடும்பம் இருக்கிறது.

உள்உலகில் தடுமாறினால்....

யாருமில்லை தாங்கிப் பிடிக்க!

இங்கு தடுமாறுபவரை, தடுமாறுபவரே

தாங்கிப் பிடிக்க வேண்டும்.

எனவே சொல்கிறேன்...

| | | :--- | | மனிதனாய் அரும்பிய பின்னும் எறும்பு போல்... எதற்கோ ஓடிக்கொண்டே இருக்கிறாய். அது எதற்கு என உனக்காவது தெரியுமா? சொல் மனிதா! |

சன்யாசம் தப்பிப்பவருக்கான தப்பும் வழி அல்ல. நித்ய ஆனந்தம் பெற தீர்க்கமான முடிவு எடுத்துவிட்டவரின் தீர்க்கமான வழி.

அது கொண்டாட்ட வழி. தனி வழி.

புற உலகில் பார்க்க வேண்டியதையெல்லாம் பார். அனுபவி, எதிலும் குறைவைக்காதே.

எவரோடும் எதனோடும் உன்னைக் கட்டிப்போடாதே.

மனதளவில் எப்போதும் தனித்தன்மை உடையவனாயிரு.

எங்கும் எதிலும் சிக்கிக்கொள்ளாதே. யாருக்கும், எதற்கும் அன்பென்ற பெயரில் கூட அடிமையாயிராதே.

அன்பை வழங்கும் வள்ளலாயிரு. நித்ய ஆனந்தமாக இருக்க அதுபோதும்.

நித்ய ஆனந்த நிலையடைய இருக்குமிடத்திலிருந்தே முயற்சி செய்.

உடலின் ஒவ்வொரு செல்லையும் இயங்கச் செய், சக்திக்கு தியானத்தையும் புத்திக்கு ஞானக்கருத்துக்களையும் தொடர்ந்து சேர்.

சன்யாஸம் ஒரு ஞானவழி. அது ராஜ வழி.

ஆனால் முழுமூச்சோடு முயன்றால்...

வெளிஉலகிலிருந்தே உள்உலகில் நித்யானந்தத்தை அடையலாம்.

நித்யானந்தமாகவே மாறலாம்.

ஒவ்வொருவருக்கும் இது சாத்தியமானதே!