நன்றி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நண்பர்களோடு பிக்னிக் செல்ல நூறு டாலர் தர வேண்டுமென வெகு உருக்கத்தோடு ஜானி வேண்டிக் கொண்டார். மேலும், தன்னுடைய முகவரியை சப்தமாக கடவுளிடம் சொல்லிவீட்டுக்குப் பணம் அனுப்பும்படி உரிமையோடு சொன்னார்.
"இன்னும் ஏன் அனுப்பவில்லை?" என மறுநாள் ஆலயம் வந்தவர், கடவுளிடம் கோபித்துக்கொண்டார்.
ஜானியின் செயலை ரசித்த மதபோதகர் தன் பணத்திலிருந்து ஐம்பது டாலரை ஜானி வீட்டுக்கு "இப்படிக்கு - கடவுள்" என எழுதி மணியார்டர் செய்தார்.
அடுத்த நாள் மாலை, ஆலயத்திற்கு வந்த ஜானி கடுகடுப்போடு கடவுளிடம் சொன்னார், "அடுத்த முறை பணம் அனுப்பும்போது மணியார்டர் மூலமாக அனுப்ப வேண்டாம். அந்த போஸ்ட் ஆபீஸில் ஐம்பது டாலரை லஞ்சமாக எடுத்துக்கொண்டு, ஐம்பது டாலர் மட்டுமே எனக்கு அனுப்பினார்கள்".
★ கிடைத்தவைகளுக்கு மனிதர்கள் மதிப்பளிப்பதில்லை.
அதோடு நில்லாமல், கொடுக்கப்பட்டதில் குறைசொல்லிக் கொடுத்தவரையே கொட்டுவதும், "இன்னும் கொடு" எனச் சொல்லி பெற்றுக்கொண்டதை அவமதிப்பதும் நன்றியுணர்வற்றவர்களின் குணாதிசயங்கள்.
★ பீனியல் சுரப்பி, சுரப்பிகளின் ராணி என்றழைக்கப்படுகிறது. நமக்குள் ரம்யமான உணர்வையும் (Sense of well being) இளைப்பாறுதலில் கிடைக்கும் அமைதியையும் (Peace) நம்முள் உருவாக்குவது இந்த பீனியல் சுரப்பி.
★ பீனியல் சுரப்பிக்கும் (Pineal Gland)
சஹஸ்ரார சக்கரத்திற்கும் நேரடித்
தொடர்பு உண்டு.
★ "நன்றியுணர்வோடிருத்தல்" என்னும்
உணர்வுநிலை சஹஸ்ரார சக்கரத்தை
மலரச் செய்யும்.
பீனியல் சுரப்பியைச் சுறுசுறுப்பாக்கும்.
நீ ஒரு அபூர்வம்.
கண் விழித்ததும் இந்த உடலில்
இந்த உலகில் வாழ்கிறாய்.
கண் உறங்கியதும் கனவு
உடலில் கனவு உலகில்
வாழ்கிறாய். கண்கள்
விழித்திருக்கும்போதும்
விழிப்புணர்வு தவறிப்போக
கற்பனை உடலில் கற்பனை
உலகில் வாழ்கிறாய்.
நன்றாய் யோசி...
இம்மூன்று உடலும் இம்மூன்று
உலகமும் ஒன்றுதானோ!
யோசிப்பதைத் தாண்டி சிந்தி.
பல கேள்விகள் நிற்கும்.
அதுவே, உன்னை
தியானத்திற்குக்
கூட்டிச் செல்லும்!
★ நன்றியின்மை, மரியாதையின்மை எனும் குணக்கேடுகளின் வெளிப்பாடுகளான அவமதித்தல், ஏகத்தாளம் ஆகிய எல்லாம் ஒன்றாய்சேர்த்துதான், ஒருவருள் வெறுமையை உருவாக்குகின்றன. அவரின் அருமையை மறைக்கின்றன. மற்றவரின் அருமையையும் அவருக்கு மறைத்து விடுகின்றன.
ஒரு சிறிய கதை.
ஒரு தேவாலயத்தில் புதிய கட்டடம் ஒன்று கட்ட முடிவெடுத்தார்கள்.
அந்த தேவாலயத்திற்கு வரும் ஒரு பெரிய வியாபாரி, "புதிய கட்டடம் கட்டுவதற்கான நன்கொடை முதலில் தந்தது நானாக இருக்க வேண்டும். அதுவும் அதிகமாகக் கொடுத்தது நான் கொடுத்ததாகதான் இருக்க வேண்டும்" என்ற முடிவில்...
2 மில்லியன் டாலருக்கு ஒரு செக் எழுதி எல்லோருக்கும் முன்பாக பாதிரியாரிடம் கொடுத்தார் வியாபாரி.
செக்- 2 மில்லியன் டாலர் என எழுதியிருப்பதை பாதிரியார் படித்துவிட்டு, "சரி. நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்" என்றார் வெகு இயல்பாக.
பாராட்டையும் அவைப் புகழ்ச்சியையும் எதிர்பார்த்த வியாபாரிக்கு பாதிரியாரின் செயல் கோபத்தைக் கிளப்பியது.
"பாராdocumentவிட்டாலும் பரவாயில்லை. ஒரு நன்றியாவது சொல்லியிருக்கலாம். இவ்வளவு பெரிய தானத்தை ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக்கொள்ளவில்லையே" என்ற வேதனையில்,
வியாபாரி, "அந்த செக் 2 மில்லியன் டாலருக்கானது" என்றார் அழுத்தமான குரலில்.
பாதிரியார், "ம்ம்... நான் அதைப் பார்த்தேன்!" என்றார்.
வியாபாரி, "நான் பெரிய வியாபாரிதான். இருந்தும் 2 மில்லியன் டாலர் தானம் செய்வது மிகப் பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன்" என இழுத்தார்.
பாதிரியார் சிரித்துக்கொண்டே, "நான் அதற்கு நன்றி கூற வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். சரியா?" என்றார்.
வியாபாரி, "ஆமாம், ஆமாம், நீங்கள் அதைத்தானே செய்திருக்க வேண்டும்" என்றார்.
பாதிரியார் சிரித்த முகத்தைக் கடினமாக்கி, "ஒருவேளை நான் அத்தனை பேர் முன்பும் நீங்கள் கொடுத்த தானத்தை, நீயும் உன் தானமும் எனக் கூறி தூக்கி எறிந்திருந்தால்" எனக் கேட்க,
இந்த மாதிரி பதிலை எதிர்பார்க்காததால் உள்ளுக்குள்ளே தடுமாறிவிட்டார் வியாபாரி. பாதிரியார், "முறைப்படி பார்த்தால், உன்னை அவமானப்படுத்தாமல், அத்தனை பேர் முன் உன் தானத்தை நான் ஏற்றுக்கொண்டதற்காக நீதான் முதலில் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நீ ஏன் எனக்கு நன்றி சொல்லவில்லை?
சிந்தி...
அப்படியாவது உன் அகந்தை அழியட்டும்" என்று கடினமாகப் பேசிவிட்டு பாதிரியார் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

'நடைமுறை தியானம், தியானம்.
நன்றி! நன்றி! நன்றி!'
என்ற வார்த்தைகளைப்
பயன்படுத்துவதால்
மற்றவர்களை மாத்திரம்
திருப்திப்படுத்தலாம்.
நன்றியுணர்வை
நடைமுறைப்படுத்துவதால்
உங்களையே
திருப்திப்படுத்தலாம்!
அன்று முழுவதும் யோசித்த வியாபாரிக்கு ஒவ்வொன்றாகப் புரிந்தது.
தான் நன்றியுணர்வு இல்லாமல் தவறாக
வாழ்ந்த ஒவ்வொரு மகத்தான நிமிடங்களும்
நினைவுக்கு வந்தது.
கண்ணீர் பொங்கியது.
தன் தவறை உணர்வதற்காகத்தான்
பாதிரியார் அவ்வளவு கோபமாக நடந்து
கொண்டார் என்ற உண்மை புரிந்தது.
அன்றிலிருந்து தான் செய்யும் ஒவ்வொரு
விஷயத்திலும் மற்றவர்களையும்
முழுமையாக மதித்து வாழக் கற்றுக்
கொண்டார். வாழ்க்கைத் தத்துவத்தை ஏற்றுக்
கொண்டார்.
உண்மையான காதலன்,
தன் காதலிக்கு நல்ல பரிசை வாங்கிக்
கொடுத்ததை விட, அதைத் தன் காதலி ஏற்றுக்
கொண்டாளே என்பதற்காகத்தான் அதிகம்
மகிழ்வான்!
உண்மையான மனைவி தன் கணவருக்கு இன்று மிக ருசியாக சமைத்துப்போட்டேன் என்று பெருமைப்படுவதைவிட,
தன் கணவர் அந்த உணவை எவ்வளவு தூரம் ரசித்துச் சாப்பிட்டார், எப்படி அதைத் ஏற்றுக்கொண்டார் என்பதைப் பற்றித்தான் அதிகம் சந்தோஷப்படுவார்.
உண்மையாக தானம் செய்பவரும் -
தான் செய்த தானத்தை நினைத்துப் பெருமை பேசுவதை விட,
‘என் தானத்தை ஏற்றுக்கொண்டார்களே, எனக்குத் தானம் செய்ய வாய்ப்பு கிடைத்ததே’ என்று சொல்லியே சந்தோஷப்படுவார்...
மேற்கூறிய மூன்று நபர்களிடமும் பொதுவாக ஒரு உணர்வு இருக்கிறதே, அதைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?
ஆம்! அது நன்றி உணர்வுதான்.
மனிதர்கள் தன் சாதனைகளை நினைத்துக் கர்வப்படாமல், அதே நேரத்தில் சந்தோஷமாக சாதனைகளை அனுபவிக்க உதவும் ஒரு அருமையான உணர்வுதான் நன்றி உணர்வு.
‘’நன்றி உணர்வோடிருத்தல்’’ இது மிகப்பெரிய தியானமுறை.
ஒரு சாதாரண குண்டூசியில் இருந்து
நாம் சாப்பிடும் உணவு வரை,
எத்தனை மனிதர்கள் அவை நம் கைக்குக்கிடைப்பதற்காக தங்கள் இரத்தத்தையும் சக்தியையும் உழைப்பாக்கியிருப்பார்கள்.
| உ | |
|---|---|
| ழை | சக்தி சிந்தி வந்த மனித உழைப்புக்கு |
| ப் | |
| பு | நீங்கள் தரும் பலன் ஈடாகுமோ? |
ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
பொருட்களைப் பெற கடைகளுக்கு நீங்கள் தரும் பணம், அந்தப்பொருளை பல நிலைகளில் உருவாக்கிய அவர்களுடைய உழைப்பை நிச்சயமாக ஈடுசெய்ய முடியாது.
சிலருக்கு இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்.
ஆனால், இனி சொல்லப் போவதை நீங்கள் மறுக்க முடியாது. நீங்கள் பிறக்கும் போது உங்கள் தாய்க்கு மருத்துவ உதவி செய்த மருத்துவச்சிகளின் கருணையை எண்ணிப் பாருங்கள்.
கருணை மறந்து வெறும் கடமைக்காகவும் காசுக்காகவும் அவர்கள் செயல்பட்டிருந்தால், உங்களின் கையோ, காலோ முடமாகி இருக்கலாம்.
பச்சிளம் குழந்தையாகப் பிறந்த உங்கள் மீது அவர்கள் அன்று காட்டிய கருணைக்கு, இன்று நீங்கள் எதைப் பதிலாகத் திரும்பத் தர முடியும்?
அவர்களின் முகம்கூட உங்களுக்குத் தெரியாது.
முகம் தெரியாத உங்களைப் பரிவோடு பார்த்துப் பராமரித்து, எந்தக் குறைபாடும் நேராமல் பார்த்துக் கொண்ட மருத்துவச்சிகளின் தொழில் நேர்மைக்கும் மனிதநேயத்திற்கும் எதை
அண்டத்துள் பிண்டம்
பிண்டத்துள் அண்டம்
- சித்தர் கூற்று
ஆழ ஆராய்ந்து பார்த்தால்...
ஒவ்வொரு செல்லும்...
தனியாய் யோசித்து
செயல்படுகிறது,
தனியாய் வாழ்கிறது.
எனவே, மனிதன்
ஒரு தனி ஆள் அல்ல -
அவன் பல கோடி
உயிர்களின் தொகுப்பு.
மனிதன் எனும்
பிண்டத்துக்குள் அண்டம் எனச்
சொல்வதை விட
மனிதனின்
ஒவ்வொரு செல்லும்
ஒவ்வொரு அண்டம்
எனச் சொல்ல வேண்டும்
ஆக, உன்னைப் படைத்த
இறைவன் நன்றி பெற
பாத்திரமானவனே
பு
ல
ன்
க
ள்
இன்னொருவரை போல் நீ மாற நினைக்காதே! அது வீண் சிரமம். உள்ளதை உள்ளபடி ஏற்று ஆனந்தப்படு... உனக்கு நீயே நன்றி சொல்....உங்கள் புலன்கள், உங்கள் உடல், உங்கள் உயிர், உங்கள் மனம், உங்கள் மூச்சு என உங்களிடம் உள்ளவற்றிற்கும் நன்றியுணர்வோடு இருங்கள். தியானம் நிகழும். நாம் பதிலாகத் திரும்பத் தர முடியும்!
ஒருவேளை அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால்கூட நம்மால் திரும்பப் பதிலுக்கு எதையுமே தரமுடியாது. அதிகபட்சம் நன்றியுணர்வை அவர்களுக்குத் காணிக்கையாக்க முடியும்.
அதேபோல் குண்டூசியில் இருந்து, கோதுமை மாவு வரை ஒவ்வொன்றையும் உங்களுக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த மனிதர்களுக்குப் பணம் ஈடல்ல. நன்றியுணர்வுதான் அவற்றிற்கு ஈடாக முடியும்.
‘நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.
இந்த நன்றியுணர்வைக் கடைப்பிடிப்பதால்
எனக்கென்ன பலன்?’ என்ற கேள்வி உங்கள்
மனதில் எழலாம்.
நன்றியுணர்வை வாழ்வில்
கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்களைச்
சொல்கிறேன்.
உங்களுக்குப் பிடித்திருந்தால் நன்றியுணர்வை கடைப்பிடிக்க ஆரம்பியுங்கள்.
பலன்கள் ;
* கர்வம் தலை தூக்காது.
* கர்வத்தாலும் அகந்தையாலும்
மற்றவர்களை மனதளவில் துன்புறுத்தி, தான்
என்னும் கொடுமை அரங்கேறாது.
* முகம் பொலிவடைய ஆரம்பிக்கும்.
* நன்றியுணர்வு வெளிப்படும் போது உங்களையும் அறியாமல் முகத்தில் இறுக்கம் தளர்ந்து, குதூகலம் பிறக்க ஆரம்பிக்கும்.

‘கடவுள் தரவில்லையே!’
என்று கோபிப்பதல்ல.
கடவுளிடம் கேட்பதே
அபத்தம்தான்!
இதுவரை கிடைத்த
எல்லாவற்றிற்க்கும் நன்றி
சொல்லிவிட்டீர்களா?...
★ உறவுகளின் விருப்பத்திற்குரியவராக மாறுவது சுலபமாகிவிடும்.
★ கிட்டத்தட்ட எல்லா மனிதர்களும் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது நன்றியுணர்வைத்தான்.
மற்றவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் ஒரு விஷயம் உங்களிடம் இருந்தால் உங்களைச் சுற்றியுள்ள எல்லோரையும் திருப்தி செய்வது வெகு சுலபமாகிவிடும்.
நன்றியுணர்வு ஒரு சுக உணர்வு.
அதை நடைமுறைப்படுத்தக் கற்றுக்கொண்டால் சுகம் உங்கள் கையில்.
நன்றியுணர்வை நடைமுறைப்படுத்திப் பார்த்தால், உணர்வுரீதியாக மேற்கூறிய அனைத்தும் உண்மை என்பது புரிய வரும்.
அர்த்தமுள்ள சம்பவம்...
சீனக் பல்கலைக்கழகமொன்றில் 'எது மாபெருஞ்செல்வம்?' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு வந்திருந்த தாவோ சொற்பொழிவாளரை தீர்ப்பளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது,
“தம்மிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் பக்குவத்தை விட பெரிய செல்வம் இவ்வுலகில் இல்லை. இப்படிப்பட்டவர், செல்வச்சீமானை விட பல மடங்கு திருப்தியோடிருப்பார்” என்றார்.
நன்றியுணர்வு மிக்கவருக்கே இது சாத்தியம். நன்றியுணர்வு மிக்கவராக மாறுங்கள்!
பலரின் விருப்பத்திற்குரியவராக வழி...
தியான
துளிகள்
ஒரு அசிங்கமான குழந்தையை இதுவரை பார்த்திருக்கிறீர்களா...வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழுமிடத்திலிருக்கும் குழந்தைகூட அழகாகவே இருக்கிறது. எளிமையாக இருக்கிறது.
ஆனால், ஒரு அழகான எளிமையான ஆளைப் பார்க்க முடியுமா?
உண்மையான அழகு (Beauty) அல்ல. முகப்பூச்சால் வருவது உண்மையான அழகல்ல.
மழலைக் குழந்தையின் முகத்திலும் மனம் கடந்த ஞானியின் முகத்திலும் தெரியும் அழகு பொலிவு மிகுந்தது. அது இயற்கையானது. அது (Beauty) அல்ல. அது (Grace) அது சக்தியின் வெளிப்பாடு.
உண்மையான அழகு (Grace) சலிப்புத் தட்டாது. மனதையும் உணர்வுகளையும் அலைக்கழிக்காது. மனதைச் சாந்தப்படுத்தக் கூடியது.
| Beauty | | :---: | | வேறு. | | grace | | வேறு. |
(Beauty) எனப்படும் செயற்கை அழகு பொய்யானது. சலிப்புத் தட்டக்கூடியது.
குழந்தை மனிதராகும் போது அதன் அழகு (grace) துடைக்கப்பட்டுவிடுகிறது. முகம் இறுகிப்போகிறது.
காரணமென்ன?
சிந்தித்திருக்கிறீர்களா?
மலர்ந்த மலர்போல்
மனிதரைக் குதூகலமாக இருக்கச் செய்யும் பீனியல் சுரப்பி மிகச் சரியான முறையில் குழந்தைகளிடம் இயங்குகிறது. இதன் வெளிப்பாடே அழகு!
மனிதர்கள் நன்றியுணர்வு பொங்க மற்றவரை மதித்துப்பேசும் போதெல்லாம் அவர்களின் முகத்தில் இன்னுங்கொஞ்சம் அழகு கூடுவதைக் கவனித்திருக்கிறீர்களா?
நன்றியுணர்வை...
வெறும் வார்த்தையளவோடு நிறுத்தாமல், உங்களின் முகபாவங்கள் மற்றும் உடல்மொழிகள் மூலமாக வெளிப்படுத்துவது... உயிரின் ஆழம் வரை சென்று மிக ஆழமாக வேலை செய்யும் ஒரு தியான முறை.
நன்றியை Body Language மூலமாக வெளிப்படுத்தும்போது பீனியல் சுரப்பி இயங்கி, உங்களின் இறுக்கம் உடையும்.
முகத்தை பொலிவடையச் செய்யும்.
குரலில் நயம் சேர்க்கும்
சுருங்கச் சொன்னால், உங்களை குதூகலமானவராக மாற்றும்.
பலரின் விருப்பத்திற்குரியவர்களாக மாறுவீர்கள்.
அழகு!
'பூச்சு'
அல்ல.
அது
ஒரு
'பூப்பு'.
இன்றிலிருந்து மற்றவர் செய்யும் சிறுசிறு உதவிகளைக்கூட தியானகாலமாக மாற்றுங்கள்.
முடிந்தளவு உடல்மொழி மூலமாக, முகபாவம் மற்றும் வார்த்தைகள் மூலமாக நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள். வாழ்வு வளமாகும்!