KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/கடவுள்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

கடவுள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

★ கடவுளுக்கு உருவம் உண்டு.

★ கடவுளுக்கு உருவம் இல்லை.

★ உருவம், அருவம் இரண்டுமே கடவுள்தான்.

★ உருவம், அருவம் இரண்டிற்கும் அப்பாற்பட்டவர் கடவுள்.

★ கடவுள் என்பது மனிதர்கள் உருவாக்கிய கருத்து.

★ கடவுள் என்ற ஒன்று பிரபஞ்சத்தில் இல்லவே இல்லை.

★ கடவுள் தவிர வேறு எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை.

★ கடவுள்தான் எல்லாம் - என்ற ஓர் உண்மையின் பல முகங்கள்தாம் . மேற்கூறிய 7+1 கூற்றுகள்.

★ இந்த 8 கூற்றுகளில் ஏதாவது ஒன்றைப் பிடித்துக்கொண்டு தொங்குவது, அதைப் பற்றிக் கற்பனைசெய்து விவாதித்துக்கொண்டே இருப்பது மனதின் இயல்பு. மனித சுபாவம்.

★ கடவுளைப் பற்றி விவாதிப்பதைவிட, உங்கள் மனதைக் கடந்து உங்கள் உள்ளே இருப்பதை (கடவுளை) அடைவது மாத்திரமே பயனைத் தரும். விவாதிப்பதால் நேரம் வீணாகும். பலன் இல்லை!

ஒரு நாள் பார்வையற்ற ஒருவர், புத்தரிடம் அழைத்து வரப்பட்டார்.

வந்தவரோ, பார்ப்பதற்குத்தான் பார்வையற்றவர். ஆனால், எவ்விதமான தத்துவங்களையும் கரைத்துக் குடித்தவர் போல் தர்க்கம் செய்வதில் கெட்டிக்காரர்.

எந்த விஷயத்தைப் பற்றி கேட்டாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதை நிரூபிக்காமல் விட மாட்டார். அவரிடம் வாதம் செய்கிறவர்கள் அவர் சொல்வதைக் கேட்க வேண்டுமே ஒழிய, அவர் மனதில் கொண்டிருக்கும் கருத்தில் மாற்றம் காண வைக்க முடியாது.

உதாரணமாக, உலகத்தில் வெளிச்சம் என்று ஒன்று கிடையாது என்று வாதிடுவார். யாராவது அவரிடம் வெளிச்சம் என்ற ஒன்று உண்டு என்று சொன்னால், உடனே அவர் எப்படி வாதிட ஆரம்பிப்பார் தெரியுமா?

"இந்த உலகத்தில் வெளிச்சம் ஒன்று உண்மையிலேயே இருக்குமானால், அதைப் பிடித்துக் கொண்டுவந்து என்னிடம் காட்டுங்கள்.

நான் அதைச் சுற்றிப் பார்க்க வேண்டும். நுகர்ந்து பார்க்க வேண்டும். தொட்டு விளையாட வேண்டும். இதை எல்லாம் செய்ய முடிந்தால் வெளிச்சம் இருப்பதை ஏற்றுக்கொள்வேன்" என்று வாதிட ஆரம்பிப்பார் அந்தப் பார்வையற்றவர். வெளிச்சத்தை யாரால்தான் கட்டி எடுத்துக்கொண்டு வர முடியும்! எப்படி அதைச் சுற்றிப்பார்க்க முடியும்? விளையாட முடியும்?

இதையெல்லாம் யாருமே செய்யாததினால் அந்தப் பார்வையற்றவர் சொல்வது உண்மை என்று நிரூபணமாகிவிடும். பார்வையற்றவரும் தான் 'வெற்றி பெற்று விட்டோம். வாதத் திறமையில் தன்னை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை' என்கிற இறுமாப்போடு அலைந்து கொண்டிருந்தார்.

அந்தப் பார்வையற்றவருக்கு எப்படி உண்மையை உணர வைப்பதென்று தெரியாமல் ஊர்மக்கள் குழம்பிப்போனார்கள்.

அவரைப் புத்தரிடம் அழைத்துச் சென்றார்கள். புத்தரை வந்து பார்த்தவுடன் வாதிட ஆரம்பித்து விட்டார். “ஒளி என்று ஒன்று இல்லவே இல்லை. அப்படி ஒன்று இருந்தால் நிரூபியுங்கள்” என்று தத்துவார்த்தமாக வாதிட ஆரம்பித்தார்.

புத்தர் எந்தப் பதிலும் பேசாமல், தன்னுடைய மருத்துவரை அழைத்து அவருக்கு

portrait

கடவுள்
என்பது
கடந்து
உள் இருந்து
அனுபவிக்க
வேண்டிய
ஆனந்த ரசம்!
ஆனந்த நிலை!!
ஆனந்தம்!!!

வைத்தியம் பார்க்க உத்தரவிட்டார். அந்த
வைத்தியரும் அவரோடு எந்த தர்க்கமும்
செய்யாமல் வைத்தியம் செய்ததன் பலன்,
பார்வை கிடைத்தது.

பார்வை கிடைத்தவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒவ்வொரு வண்ணத்தையும் கண்டு ரசித்தார். நிறைய மலர்களையும் பழங்களையும் கொண்டுவந்து புத்தரின் காலடியில் வைத்துச் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

“புத்த பகவானே! நான் கண்மண் தெரியாமல்
குருட்டுத்தனமாக வாதம் செய்திருக்கிறேன்.
என்னோடு மற்றவர்களும் வாதமிட்டு என்னை
நாசம் செய்துவிட்டார்கள்.

நல்ல வேளை. நீங்கள் என்னோடு வாதிடவில்லை. நீங்களும் வாதம் புரிந்திருந்தால் நானும் வாதம் செய்து வீணாகியிருப்பேன்.

ஆனால், இப்போதோ வெளிச்சம் உள்ளது
என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன்”
என்று உண்மையாக மனமுவந்து பேசினார் அந்த
மனிதர்.

இந்தப் பார்வையற்றவரைப் போல, விடாக்கண்டன், கொடாக்கண்டன், பாணியில் வாதம் செய்கிறவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். இந்தப் பிடிவாதக்காரர்கள் எதைப் பற்றிப் பேசினாலும் பரவாயில்லை. ‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா?’ என்று பேச ஆரம்பிப்பதுதான் அபாயகரமானது.

பல நேரங்களில் நாத்திகவாதிகள் என்னிடம் வந்து வம்புக்கு இழுப்பார்கள். “கடவுள் இருக்கிறாரா? உங்களால் நிரூபிக்க முடியுமா?” என்றெல்லாம் கேட்பார்கள்.

‘கடவுள் இருக்கிறார்’ என்பதை அவர்களிடம் தீர்க்கமாக எடுத்துச்சொல்வேன். அதற்கு மேலும் அவர்கள் பிடிவாதமாக இருந்தாலும் பார்வையற்றவரிடம் புத்தபெருமான் மௌனம் சாதித்தது போல நானும் மௌனமாக இருந்து விடுவேன்.

இந்த விஷயத்தில் மௌனம் சாதிப்பது தோல்விக்கான அறிகுறி அல்ல. கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க நாம் முயற்சி செய்தால், ஒருவேளை நிரூபித்துவிட்டால், அந்த விஷயம் கடவுளைவிடப் பெரிதாகிவிடும். கடவுள் நிரூபிக்கப்படும் அளவுக்குத் தாழ்ந்த ஒன்றல்ல; சாதாரண விஷயமல்ல.

பகுத்தறிவினால் நிரூபிக்க முடியாத ஒரு நிலையே கடவுளின் இருப்பாகும். அதை அனுபவிக்க முடியும். பார்வையற்றவருக்கு எப்படி வாதம் செய்தாலும் வெளிச்சத்தை நிரூபிக்க முடியாதோ, அதேபோல் ஒரு நாத்திகவாதியிடம் எத்தனை வாதம் செய்தாலும் இறைவனை நிரூபிக்க முடியாது.

கடவுள் நிரூபிக்கப்பட முடியாமல் இருப்பதுதான், கடவுள் சாதாரண மனிதரின் அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதற்கான நிரூபணம். இன்னொரு கருத்துப்பொதிந்த கதை ஒன்றைச் சொல்கிறேன்...

ஒரு குளிர்ந்த பனிப்பிரதேசத்தில் குளிரினாலும் பனியாலும் மரத்தடி போல

நீ ரூ ப ண ம்பகுத்தறிவினால் நிரூபிக்கமுடியாத ஒரு நிலையே கடவுளின் இருப்பாகும். அது அனுபவிக்க முடியும்!

உறைந்து கிடந்தது ஒரு பாம்பு. அந்த வழியாக வந்த பார்வையற்றவர் ஒருவர் கையில் சிக்கியது அது.

அதை மெதுவாகத் தடவிப்பார்த்துவிட்டு, "ஆஹா, ஊன்றி நடக்க நல்ல கோல் கிடைத்துவிட்டது" என்று சந்தோஷப்பட்டார், அந்தப் பார்வையற்றவர்.

அந்த வழியாக வந்த ஒரு ஞானி, அவர் செய்கையைப் பார்த்து, "அப்பா! இது கோலல்ல! பாம்பு. இன்னும் சிறிது நேரத்தில் வெயில் வந்துவிடும்.

வெயில் வந்தவுடன் பாம்புக்கு உணர்வு வந்து உனக்குத் தீங்கு செய்துவிடும்" என்றார்.

ஞானி சொன்னதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தனக்கு நல்ல கோல் கிடைத்துவிட்டது. தன்னிடமிருந்து அதைப் பறித்துவிடத்தான் ஞானி இந்த மாதிரிப் பேசுகிறார் என்று நினைத்தார் அவர். கடைசியில் அந்தப் பாம்பு அவரைக் கடித்தபிறகுதான் உண்மை புரிந்தது அவருக்கு.

இதே போல்தான் ஞானிகள் ஒவ்வொரு முறையும் மனிதரைக் காப்பாற்ற முற்படும் போதும், மனிதர்கள் தங்கள் மதியீனத்தால் சந்தேகித்துத் தங்களது வாழ்க்கையைத் தானே நரகமாக்கிக் கொள்கின்றனர்.

‘கடவுள் எங்கு இருக்கிறார்? ஏன் கடவுள்? எதற்காகக் கடவுள்?’ என்று கேள்வி கேட்டுவிட்டு விடாமல் - ‘எப்படிக் கடவுள் இருப்பார்? ஏன் கடவுள் இருக்கக் கூடாது?’ என்று உங்களை நீங்களே பகுத்தறிய முயற்சி செய்யுங்கள். கடவுளை உங்களால் பரிபூரணமாக அனுபவிக்க முடியும். அந்த அனுபவம் உங்களுக்குக் கிடைத்துவிட்டால் ஆனந்தம்தான்!