KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/உன்னதம்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

உன்னதம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கோயில்களின் தத்துவம்

* பக்தி ! சக்தி ! முக்தி !

  • இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று சூட்சுமமான தொடர்புடையவை!

* பக்தியின் பூரணம் சக்தியின் வெளிப்பாடு. சக்தியின் பூரணம் முக்தியின் வெளிப்பாடு.

* உங்களின் பக்தி உணர்வின் அளவைப் பொறுத்தே, நீங்கள் சக்தியைக் கிரகிக்கும் அளவு நிர்ணயிக்கப்படும்.

* பக்தி என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பதற்கும் உண்மையான பக்திக்கும் பெரும்பாலும் சம்பந்தம் இருப்பது இல்லை.

‘எனக்கு அது வேண்டும். எனக்கு இது வேண்டும்...

என்னைக் காப்பாற்று!

எனக்கு அதைக் கொடுத்தால்...’

  • என்ற நோக்கில் இருந்தால், அது பக்தி என்று நினைத்துக்கொண்டு, இறைவனிடம் நாம் நடத்தும் பேரம் பேசுதல் அல்லது வியாபாரம்.

‘நன்றி ! நன்றி ! நன்றி !
இதைக் கொடுத்தாயே நன்றி!
இந்த நிமிடம் உயிரோடிருக்கிறேன்! நன்றி!
நீ செய்ததற்கும் செய்யப்போவதற்கும்
நன்றி!...’

-என்று பக்தியுணர்வு நன்றியுணர்வாகப்
பொங்கப் பொங்க இந்த நொடி நான்
நன்றாகச் சுவாசிக்கக் காரணமான
இறைசக்தியை உள்ளத்தின் ஆழத்திலிருந்து
போற்றினால், துதித்தால், தொழுதால் -
அதுதான் பக்தி.

Nithyananda smiling

பேட்டரி சார்ஜ் செய்வது
போல் நமது உடலும்
மனதும் இயற்கையால்
சக்தியூட்டப்படுவதால்
தான் உடலுக்குப்
புத்துணர்வும் மனத்திற்கு
அமைதியும்
கிடைக்கின்றன!

கோயில்களுக்குள் சென்று கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டுத் திரும்பும் போது ஒருவித அமைதி நம்முள் பிறக்கிறதே, அது எதனால்?

இயற்கையான சூழலில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்து வீடு திரும்பும் போது, ஒருவித அமைதி நம்முள் இருக்கிறதே அது எதனால்?

காரணம் சக்தியூட்டம்தான்.

இயற்கைச் சூழலில் இயற்கையாகவே
இன்னும் களங்கப்படுத்தப்படாத சக்தி
எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.
பேட்டரி சார்ஜ் செய்வது போல் நமது உடலும்

மனதும் இயற்கையால் சக்தியூட்டப்படுவதால்தான் உடலுக்குப்புத்துணர்வும் மனத்திற்கு அமைதியும் கிடைக்கின்றன.

சர்ச்சுகளுக்கு, மசூதிகளுக்கு ஒருவர் சென்று முழுபக்தி நிலையில் (முழு பக்தி = தியானம்) வேண்டிக்கொள்ளும் போது அவரை அறியாமலே திறந்தமனதோடு தெய்வ சந்நிதிமுன் நிற்கிறார். ஒவ்வொரு இறைசந்நிதியும் உலகின் சிறு சிறு சக்தி நிலையங்கள் (Energy hours) மனம் திறந்திருந்தால், அதாவது திறந்த மனதோடு இருந்தால், இயற்கை விதிப்படி சக்தி குறைவாக இருக்கும் நம்முள் தேவையான அளவு வந்து நிரப்பிவிடும். இதனால்தான் கோயிலுக்குச் செல்வது பலருக்கு மனநிறைவைத் தருகிறது.

இந்தக் கோயில்களுக்குச் சக்தி கிடைத்தது எப்படி? ஒரு ஞானி பிராணப் பிரதிஷ்டை செய்து வைக்கும் ஒரு ‘ஸ்தலத்தில்’ அவர் அனுபவப்பூர்வமாக உணர்ந்து அனுபவித்த தெய்வ சக்தி தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இதற்குப் பல உதாரணங்களை நம்மால் தெரிந்துக்கொள்ள முடியும்.

திருப்பதியில் திருத்தலத்தை உருவாக்கிப் பிராணப் பிரதிஷ்டை செய்து வைத்தவர் ‘கொங்கணவர்’ என்ற ஒரு ஞானி. ஒவ்வொரு ஞானியும் ஒரு குறிப்பிட்ட சக்தியை ஒரு கோயிலில் விட்டுச்செல்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு பிரசித்திப் பெற்ற கோயில்களும் வெவ்வேறு விஷயங்களுக்குப் பிரசித்தி பெற்றிருக்கின்றன.

நம் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள்,

1. உங்களின் திறந்த மனதும் பக்தியும் 2. அந்த இடத்தில் இருக்கும் தெய்வசக்தி.

பழனியில் திருக்கோயிலை உருவாக்கிப் பிராணப் பரதிஷ்டை செய்து வைத்தவர்

திபக்தி சக்தியின் திறவுகோல்!
ற
வு
கோசக்தி முக்தியின் நுழைவுவாயில்!
ல்

போகர் என்ற ஞானி. தஞ்சாவூரில் கருவூரார், திருவண்ணாமலையின் அக்னித் தலத்தைப் பிரதிஷ்டை செய்தவர் இடைக்காட்டுச் சித்தர் என்னும் ஒரு ஞானி. சிதம்பரத்தில் திருக்கோயிலைப் பிரதிஷ்டை செய்து வைத்தவர் பதஞ்சலி என்ற ஒரு ஞானி.

மெக்காவில் தொடர்ந்து மக்கள் அலைமோதுவதற்குக் காரணம் அங்கே இருக்கும் ஞானி (இறைத்தூதர்) முகமது நபியால் வெளிப்படுத்தப்பட்ட தெய்வசக்திதான் காரணம். அங்குத் தொடர்ந்து வரும் சக்தியால்தான் மக்கள் பயன் பெற்று, திருப்தி அடைந்து மீண்டும் மீண்டும் செல்கிறார்கள்.

வேளாங்கண்ணியில் மக்கள் கூட்டம் அலை மோதுவதற்கும் அங்கே இருக்கும் ஒரு தெய்வச்சக்திதான் காரணம்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு இடத்தில் ஆன்மீக உணர்வு, பக்தி உணர்வு ஏற்படும்.

நீங்கள் எந்த இடத்தில் எந்தக் கோயிலுக்குச் செல்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ‘உங்களுக்குள் பக்தி உணர்வு ஏற்படுகிறதா? இல்லையா?’ என்பதுதான் மிக முக்கியமான ஒரு விஷயம்.

பக்தி உணர்வு இல்லாமல், பெற்றவர்களும் மற்றவர்களும் சொன்னார்களே என்பதற்காகக் கோயிலுக்குக் கடமைக்காகச் சென்று வந்தால் - அவர் தன்னை ஆத்தீகவாதி என்று கூறிக்கொண்டாலும் அவர் ஒரு நாத்திகவாதிதான்.

இப்படிப்பட்ட மனிதர்கள் பெயரளவில் ஆத்திகவாதியாகவும் உணர்வளவில் நாத்திகவாதியாகவும் இருப்பார்கள்.

கோயிலுக்குச் சென்று, பக்தியுணர்வோடு தெய்வசக்தியில் சிறிது நேரம் அமர்ந்திருக்கும்போது - அங்கே இருக்கும் சக்திகளத்தால் சக்தியூட்டப்படுவதால்தான் நம் உடலில் புத்துணர்வும் மனத்திற்கு அமைதியும் ஏற்படுகின்றன. அப்படியென்றால், ஒன்றை நாம் அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அது நம் உடல் புத்துணர்வு இல்லாமல், சஞ்சலத்தோடு, தவிப்போடு, எரிச்சலோடு இருந்தால் அதற்கும் சக்திக்குறைவே காரணம்.

நமக்குள் மனம் அமைதி இல்லாமல் சோர்வாகவும் மந்தமாகவும் இருப்பதற்குக் காரணம் சக்தியின்மையே. சக்தி குறைவே.

எனவே, ஏதாவது ஒரு வகையில் நம் உடலுக்கும் மனதுக்கும் சக்தியைக் கொடுப்பதற்குக் கற்றுக்கொண்டால் போதும். எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரண கர்த்தாவான சக்திக் குறைப்பாட்டைச் சரிசெய்து நிம்மதியாக, ஆனந்தமாக இருக்கலாம்.

தியானம் உங்களுக்குள் இருக்கும் சக்தியை, நீங்களே பயன்படுத்திக்கொள்ள உதவும் ஒரு வழிமுறை.

கோயில்களுக்குச் சென்று பக்தி உணர்வோடு தெய்வ சந்நிதியில் இருத்தல் என்பது வெளியிலிருந்து சக்தியை உங்கள் உடலுக்கும் மனத்திற்கும் எடுத்துக் கொடுக்கும் ஓர் எளிய முறை.

எதைச் செய்தாலும் முழுமையாகச் செய்யுங்கள். கோயிலுக்குச் சென்றால் அரை மணி நேரமாவது அமைதியாக உட்கார்ந்திருந்து தியானம் செய்யாமல் திரும்பாதீர்கள்!