மரணம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மனித எலும்புகள் குவிந்திருந்த இடத்திலிருந்த ஞானி டயோஜீனஸ். அந்தக் குவியலை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த மாவீரர் அலெக்சாண்டருக்கு ஆச்சரியம்.
ஆர்வம் மேலிட அலெக்சாண்டர் கேட்டார் “இந்தக் குவியலுக்குள் அப்படியென்ன ஆராய்ச்சி, என்ன தேடுகிறீர்கள்?”
ஞானி டயோஜீனஸ், “என்னால் கண்டுபிடிக்க முடியாத ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்?” என்றார்.
“அவ்வளவு வினோதமானதா அது?”
“ஆம். இந்தக் குவியலில் உள்ள உன் தந்தையின் எலும்புகளுக்கும் அவரது அடிமையின் எலும்புகளுக்கும் வித்தியாசம் ஏதுமிருக்கிறதா எனத் தேடுகிறேன்... இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார் ஞானி.
★ ஜனனத்திற்கும் மரணத்திற்கும் இடையில்தான் எல்லா வேறுபாடுகளும் தெரிகிறது. இருக்கிறது. அப்புறம் இல்லை.
மனிதன் மரணிக்கும் போது உடல் இறக்கிறது. மனம் தன் கதையைத் தொடர்கிறது. மீண்டும் ஜனனம்! மீண்டும் மரணம்!
சாம்பல்கூட மிஞ்சாத அளவுக்கு உடலை எரித்தாலும் சாகாத மனம் சாக வேண்டாம். இந்த நிகழ்வுதான் நிஜமான மரணம்.
இந்தச் சுபநிகழ்வு நிகழும்போதுதான் மனிதர் தெய்வமாகிறார். பக்தர் புத்தனாகிறார்.

உள்மூச்சில் ஜனனமும் வெளிமூச்சில் மரணமும் தொடர்ந்து நிகழ்கிறது.
இந்த மரணத்திற்கும்
உயிர் உடலைவிட்டுப் பிரியும்
போது..
நிகழும் மரணத்திற்கும்
வித்தியாசங்கள் மிக மிகக்
குறைவு.
மூச்சை விழிப்புணர்வோடு
எதிர்கொள்வது மரணத்தை
எதிர்கொள்வதற்குச்
சமம்!
மனம் உயிரோடிருக்கும் வரை நீங்கள்
வாழ்வதில்லை. மனமே உங்கள் மூலமாக
வாழ்கிறது. மனம் மரணிக்கும் போதுதான்
முதல் முறையாக நிஜமாய் நீங்கள்
பிறக்கிறீர்கள்.
* பிறந்துகொண்டே, இறந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.
* என்றோ பிறந்த மனிதர், என்றோ ஒரு நாள் இறப்பார் - என்பது மாயை.
* ஒவ்வொரு நொடியும் பிறப்பும்
இறப்பும் உடலில்சம அளவில் நடந்து
கொண்டே இருக்கிறது.
- இது அறிவியல் பூர்வமான உண்மையும் கூட!
* மரணத்தை நேருக்கு நேராகச்
சந்தித்துவிட்டால் அடுத்த கணமே
ஞானம் கிடைத்துவிடும்.
"கத்தியில்லாமல் கொலை செய்!
முயற்சியின்றி செத்துவிடு!
ஆனந்தத்தில் பிறப்பதற்கு!"
இந்த அர்த்தம் பொதிந்த ஜென் வரிகளின் ஆழத்தைப் புரிந்துகொள்ள ஒரு சிறிய சம்பவம்.
பெருமாங்குடியில் மரணம் என்ற தலைப்பில் கேசவரிஷி தியானச் சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவின் கடைசி வரிகளாக,
“திரும்பச் சொல்கிறேன்.
வாழும் போது சாவைப் பற்றி யோசிக்காவிட்டால்,
சாகும் போது வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் புலம்ப வேண்டிநிற்கும்” என்று சொல்லி விடைபெற்றார்.
அடுத்த நாள் காலை சீடர் ஸ்வரூபனுக்குப் பெருத்த சந்தேகம். குருவிடம் சென்று, “சாமி, சாவைப் பற்றி எவ்வளவோ யோசித்துவிட்டேன்.
ஒன்றுமே புரியவில்லை!
நான் வாழும் போதே சாவைப் பற்றிப் புரிந்துகொள்வது எப்படி?” என்றார்.
கேசவ ரிஷி, “நீ பிறந்துகொண்டே இறந்துகொண்டு இருக்கிறாய். இதை தியானித்துப்பார். புரியும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
ஒரு நாள் முழுவதும் முயற்சித்தும் எந்தப் பலனும் இல்லை.
மறுநாள் ஸ்வரூபன், “சாமி, எனக்குப் புரியவில்லை. வேறு வழி சொல்லுங்கள்” என்றார்.
கேசவ ரிஷி, “நீ இறந்துகொண்டே பிறந்துகொண்டு இருக்கிறாய். இதைத் தியானித்துப்பார்” என்று கூறிவிட்டு சென்றார்.
மீண்டும் ஒரு நாள் முழுவதும் முயற்சித்தும் ஒரு வரியின் அர்த்தத்தைக்கூட ஸ்வரூபனால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
“எனக்கு ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவுத் தெரியும். நீங்கள் உதவி செய்தால் போதும். நான் ஞானமடைந்து விடுவேன்” என்று கேசவ ரிஷியிடம் சீடராகச் சேரும்
| த | வாழ்விடமிருந்து தப்பிக்கலாம். |
|---|---|
| ப் | |
| பி | மரணத்திடமிருந்து தப்பிக்க முடியாது! |
போது தான் சொன்ன வரிகளில் பொதிந்திருந்த செருக்கு, இன்று ஸ்வரூபனின் இதயத்தில் சுருக் என்று குத்தியது.
"குரு சொன்ன ஒரு வரிக்கே என்னால் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆன்மீகம் எனக்குத் தெரியும் என்று இது நாள் வரை, நான் நினைத்திருந்தது வெறும் அறிவுச் செருக்கு மட்டும்தானா!" என்று ஸ்வரூபனுக்குப் புரிய ஆரம்பத்த நிமிடத்தில் தொண்டையைத் துக்கவலி தொற்றிக்கொண்டது.
மூச்சை விழிப்புணர்வோடு எதிர்கொள்வது. மரணத்தை எதிர்கொள்வதற்குச் சமம்.
குருவின் வாசகத்தைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் செருக்கு கொஞ்சம் கூடக் குறையவில்லை ஸ்வரூபனுக்கு. குருவிடம் சென்று ஒரே வரியில், "இதுவும் புரியலை. வேறு வழி சொல்லுங்க" என்று கேட்டு நின்றார்.
கேசவ ரிஷி சிரித்துக்கொண்டே, "சரி... ஒரு முறை செத்துப் பார்?" என்றார்.
திடுக்கிட்ட ஸ்வரூபன், "சாமீ! அது எப்படி சாமி சாத்தியம்" என்று சத்தமிட்டு விட்டார்.
கேசவ ரிஷி, "ஸ்வரூபா! உனக்குத்தான் ஆன்மீகம் பற்றி எல்லாம் தெரியுமே!
சாவது ரொம்பச் சுலபமப்பா.
அமைதியாக உட்கார்ந்து, அசையாமல், கத்தியில்லாமல் உன்னைக் கொலை செய். நீ முயற்சியின்றி செத்துவிடுவாய்.
இதை எல்லாம் பார்த்து ரசி!" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
அடுத்த நாள் முழுவதும் என்ன செய்தாலும் என்ன யோசித்தாலும் அது முயற்சியே என்று தெரிய தன் அறியாமையின் ஆழமும், அகங்காரத்தின் உயரமும் ஸ்வரூபனுக்குப் புரிந்தது. கர்வம் குறைந்தது.
பொழுது எப்போது விடியும் என்று காத்துக்கொண்டு இருந்த ஸ்வரூபன், கேசவ ரிஷி குடிசையைவிட்டு வெளியே வந்ததுதான் தாமதம், "சாமி! என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு ஒன்றுமே தெரியாது. எனக்கு ஒன்றுமே தெரியாது"என்று
| ம | மரணம் |
|---|---|
| ர | சுகத்தின் உச்சம், |
| ண | சுதந்திரத்தின் உச்சம்! |
| ம் |
சிறுவன் போலப் புலம்பினார்.
கேசவ ரிஷி மார்போடு அணைத்துக்கொண்டு, "அழாதே! தகுதி பெற்றுவிட்டாய்! இனி கற்றுக்கொள்வது சுலபம், வா!" என்று ஆலமரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.
கேசவ ரிஷி, "நீ பிறக்கும் போது முதலில் என்ன செய்தாய்?" என்று கேட்டார்.
"முதலில் சுவாசித்திருப்பேன். மூச்சை இழுத்திருப்பேன்."
"நீ இறக்கும் போது கடைசியாக என்ன செய்வாய்?"
"கடைசியாக மூச்சை விடுவேன்."
நீ தொடர்ந்து மூச்சை இழுத்துக்
கொண்டும், வெளியே விட்டுக்கொண்டும்
தானே இருக்கிறாய்!"
"ஆமாம்..."
"தெரிந்து கொள்! மூச்சை இழுக்கும்
போது நீ பிறக்கிறாய், மூச்சை வெளிவிடும்
போது நீ இறக்கிறாய்.
தொடர்ந்து மூச்சை உள்ளே இழுத்து,
வெளியே விடும் ஒவ்வொரு முறையும் பிறந்து
கொண்டே இறக்கிறாய், அல்லது இறந்து
கொண்டே பிறக்கிறாய்.
இந்த நிமிடம் நீ வெளியே விட்ட காற்று,
உள்ளே வராவிட்டால் நீ இறந்துவிட்டதாகத்
தானே அர்த்தம்! வெளியே விட்ட காற்று
மீண்டும் உள்ளே வந்ததால் நீ பிழைத்தாய்.
மீண்டும் பிறந்தாய்.
இப்போது புரிகிறதா?" என்றார்.

உடலும் உயிரும்
ஓய்ந்துபோனதால் மட்டுமே
உடலைவிட்டு
உயிர் பிரியக்கூடாது.
பட்டப்படிப்பில்
தங்கப்பதக்கம்
பெற்றவன் படித்த
திருப்தியோடு, தன்
பல்கலைக்கழகத்தைவிட்டு
நன்றியுணர்வோடு பிரிவது
போல....
வாழ்ந்த திருப்தியோடு உயிர்
உடலிலிருந்து
விடைபெற வேண்டும்.
இது நிகழ, ஒவ்வொருவரும்
வாழும் கலையிலும் தங்கப்
பதக்கம் பெற்றாக வேண்டும்.
☞ நீங்கள் தயாரா?
ஸ்வரூபன் தன் குழப்பத்திலிருந்து
விடுபட்டு நன்றிப் பெருக்கோடு மௌனமாகத்
தலையாட்டினார்.
கேசவ ரிஷி, "அமைதியாக உட்கார்ந்து உன்னுடைய மூச்சின் ஓட்டத்தைக் கவனித்தாலே போதும். அது ஒரு மிகப் பெரிய தியானம். மூக்கின் நுனிக்கு உன் கவனத்தைக் கொண்டுசெல். மூச்சு உள்ளே வருவதையும் வெளியேறுவதையும் மாத்திரம் கவனி.
விழிப்புணர்வோடு அதிகமாக அதிகமாக நீ என்று நினைத்துக்கொண்டு இருக்கும் உன்னுடைய அகங்காரம் உன்னை விட்டுத்தானே அகலும்.
அகங்காரம் செத்துவிடும்" என்றார்.
ஸ்வரூபனும் சிரத்தையோடு தியானத்தில் ஈடுபட்டார். முக்தி பெற்றார்.
புத்தர் தன்னுடைய உடலைவிட்டுப் பிரியும் தறுவாயில் இந்தத் தியானத்தைத்தான் விப்பாசனா என பெயரில் உலகுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
இந்தத் தியானம் ஒன்றை மாத்திரமே செய்து ஞானம் பெற்றவர்கள் பலர். இதற்கு வரலாற்றுச் சான்றுகள்கூட இருக்கிறது.
நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே.
பூரகம்,
ரேசகம்,
கும்பகம்...
இடக்கலை,
பிங்கலை,
சுழுமுனை....
பற்றிய கவலை வேண்டாம்.
வெறுமனே உள்வரும்
வெளிசெல்லும் மூச்சின்மேல்
கவனம் வை!
தியானம் நிகழும்!
'மூச்சோட்டத்தைக் கவனிப்பது' மிக எளிமையான, ஆனால் மிக வலிமையான தியானம். முயற்சிசெய்யுங்கள்!
அர்த்தமுள்ள சம்பவம்...
பார்வதிக்கு ரகசியங்களை சிவன் விளக்கும்போது, "மூச்சைக் கவனிப்பது தூய்மையற்றவருக்கே மிகக் கடினம்" என்றார்.
பத்து நிமிடம்கூட அமைதியாக உட்கார்ந்து
மூச்சைக் கவனிக்க முடியாத அளவுக்கு,
மனிதமனம் மாசடைந்திருக்கிறது.
மாசு நீக்கப்பட வேண்டும்.
மூச்சுக்காற்றால் நீங்கள் உயிர் வாழ்வில்லை... பின் எதனால்?
| தியான |

உளிகள் | “ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் கலந்த காற்றைச் சுவாசிப்பதால் மட்டும் மனிதன் உயிர் வாழவில்லை. மூச்சிழுக்கும் காற்றுக்குள் இருக்கும் அந்த சக்திதான் மனித உயிரோட்டத்தின் மூலகாரணம். நான் அதை ஆர்கான் எனர்ஜி என்று குறிப்பிடுகிறேன்” என வில்லியம் ரிச் என்ற ஜெர்மானிய உளவியலாளர் சொல்கிறார். |
> உயிரின்
> ஓடம் மூச்சு.
>
> மூச்சுப்பாதை
> தியானசாலை!
நாம் சுவாசிப்பது ஆக்ஸிஜனைத்தான் என்ற உண்மைகூட சில வருடங்களுக்கு முன்வரை விஞ்ஞானிகளுக்கே அது யூகம்தான். நிரூபிக்கப்பட்ட பின்பே, அதை உண்மை என மனிதர்கள் நம்புகிறார்கள்.
மூச்சுக்காற்றின் உயிர்ச்சத்தாக ஒன்று இருக்கிறது என சொல்லும் அளவுக்கு விஞ்ஞானம் இன்று யூகித்திருக்கிறது.
இது நிரூபிக்கப்பட பல காலங்கள் ஆகும்.
ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே நம் ரிஷிகள்...
“மூச்சுக்காற்று என்பது
உயிர்ச்சத்தான பிராணாவை
எடுத்துவரும் ஓடம் மட்டுமே.
நீங்கள் உயிர் வாழ்வது
மூச்சின் ஓட்டத்தால் அல்ல,
பிராணனின் ஓட்டதால்தான் சாத்தியமாகிறது”
என உணர்ந்து சொல்லியிருக்கிறார்கள்.
மூச்சோட்டத்தைக் கவனித்துத் தியானம் செய்ய ஆரம்பித்தபின், முதலில் உங்களின் விழிப்புணர்க்குள் வருவது மூச்சுக்காற்று எனும் ஓடம் மட்டுமே.
தொடர்ந்து கவனிக்கக் கவனிக்க விழிப்புணர்வு அதிகமாகும்.
விழிப்புணர்வு அதிகமாகும் போதுதான்
ஒவ்வொரு உள்மூச்சிலும் உடலுக்குள் வரும் பிராணசக்தியை முழுமையாய் உணர்வீர்கள். சக்திமயமாவீர்கள். ஆனந்தமயமாவீர்கள். கடைசியாக, பிரபஞ்ச மையமாகவே மாறுவீர்கள்.
மூச்சின் சத்தான பிராண சக்தியை உணரும் வரை மூச்சோட்டத்தைப் கவனியுங்கள். சுவாச காலத்தையெல்லாம் தியான காலமாக்குங்கள்! ரகசியங்கள் வெளிப்படும்.
நீங்கள் செய்யும் செயல் எதுவானாலும் அந்தச் செயலைச் செய்ய உள்ளே வந்து வெளியே செல்லும் மூச்சைக் கவனித்துக் கொண்டேயிருங்கள்!
மூச்சைக் கவனித்தபடியே செயலில் ஈடுபடுங்கள்.
செயல்களில் ஈடுபட்டபடியே மூச்சைக் கவனியுங்கள்!
