KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/எதிர்காலத்தைப் பற்றிSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

எதிர்காலத்தைப் பற்றி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கவலைப்படாதீர்கள்!

வித்தியாசமான ஆசைகொண்டிருந்த அந்த இருபத்தேழு வயது நிறைந்தவர் சென்னையில் நடந்த தியான சத்சங்கம் ஒன்றில் சந்தித்தார். அப்போது....

“உங்களுக்குச் சித்துவேலைகூடத் தெரியுமாமே?” எனக் கேட்டதற்கு, அவர் ஏன் அதுபற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறார் என விசாரித்தேன்.

“சித்து வேலைகள் ஒரு வகையான விளையாட்டு. அதன் சூட்சுமங்கள் தெரியாததால் மனிதர்களுக்கு அவை ஆச்சரியத்தைத் தருகின்றன. அது ஒன்றும் ஞானவெளிப்பாடல்ல. அது ஒரு சாதாரண வித்தை” என்ற சில அடிப்படை உண்மைகளை விளக்கிய பின்,

அவரிடம், “சரி சொல்லுங்கள். எதற்காக எந்தச் சித்து வேலையைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள்” எனக் கேட்டேன்.

அவரோ, “எனக்குப் பதினெட்டு கைகளையுடைய அந்தக் காளிமாதேவியை வசியம் செய்யும் கலை அல்லது மந்திரம் சொல்லித் தாருங்கள். காளியிடமிருந்து சில சக்திகளை நான் பெற விரும்புகிறேன்” என்றார்.

அதற்கு, “பதினெட்டு கைகளையுடைய காளியை வசியம் செய்வது ஒருபுறமிருக்கட்டும். முதலில் உங்களுடைய இரண்டுகை காளியை (மனைவி) வசியம் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்” என்றேன்.

* ஏதாவொரு காரணம் சொல்லி, எதிர்காலத்திலேயே உங்களை மனமானது வாழவைக்கும். எதிரிலிருப்பவர்களையும் இருப்பவைகளையும் தொடர்ந்து இழக்கச் செய்து கொண்டேயிருக்கும். இந்தச் செயல் முடிவுக்கு வரவேண்டிய ஒன்று.

Swami

சாதித்தவர்கள் கவலை கொள்வது இறந்த காலத்தை நினைத்து!’ நினைத்து!

சாதிக்காதவர்கள்
கவலைக் கொள்வது
எதிர்காலத்தை
நினைத்து!
நினைத்து!

* எதிர்காலம்,
நிகழ்காலம்,
இறந்தகாலம்

  • என மூன்று காலங்கள் இருந்தாலும் நம் கையில் எப்போதுமே இருப்பது நிகழ்காலம் மட்டுமே.

* நம் கையை விட்டுப்போன இறந்தகாலம்,
இன்னும் நம் கைக்கே வராத
எதிர்காலம்,

  • ஆகியன பற்றிய கவலை கொள்ளல்தான் நம் கையில் இருக்கும் நிகழ்காலத்தை அனுபவிக்கவிடாமல் தடுக்கின்றன.

* எப்போதுமே நம்மிடருக்கும் நிகழ்காலத்தை,

எப்போதுமே நம்மிடமில்லாத இறந்தகாலம்
மற்றும் எதிர்காலம் பற்றிய நினைவுகள்,
கவலைகளுக்காக பலிகொடுப்பது
புத்தசாலித்தனமா? யோசியுங்கள்!

சூரியன் அப்போதுதான் எட்டிப்பார்க்கும் நேரம் நூறு புதுத் துறவிகளோடு நந்தவனத்தில் துறவிகளுக்கான விதிகளை புத்தர் சொல்ல ஆரம்பித்தார்.

ஒவ்வொரு விதியாக சொல்லிக் கொண்டே வந்தார்.

அதில் ஒன்று...

"துறவிகள் துறவறத்தில் பெண்களை நெருங்கக்கூடாது. பெண்களைப் பார்ப்பதைக் கூடத் தவிர்க்க வேண்டும்.

பெண்களின் பாதங்களைப் பார்த்த உடன் ஒதுங்கிவிடுங்கள். நிமிர்ந்துக்கூட பார்க்காதீர்கள்" என்று புத்தர் சொல்லிக்கொண்டே வர....

புதுத் துறவிகளில் ஒருவரான நாதநீதன் எழுந்து, "ஒருவேளை அந்தப் பெண் எனக்கு வணக்கம் தெரிவித்தால், நான் என்ன செய்வது?" என்று கேட்டார்.

நாதநீதன், "அப்போ தலைநிமிராமலே பெண்களோடு பேசிக் கொண்டிருக்கலாம். தப்பில்லை என்கிறீர்களா?" என்று எதிர்கேள்வி கேட்டார்.

"ஹரே! என்ன விதியைத் தலைகீழாக்குகிறாய்? வணக்கம் கூறிவிட்டு உடனே அங்கிருந்து நகர்ந்துவிடு".

"ஒருவேளை! அந்தப் பெண் என்னிடம் உதவிக்கேட்டால்.... அதாவது, 'இந்த இடத்திற்கு எப்படிப் போவது? இந்த கூடையைத் தூக்கி விட முடியுமா?' என்பன போன்று உதவிகள் கேட்டால் என்ன செய்வது?"

"ம்ம்... தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், வேறு யாரும் அருகில் இல்லாத காரணத்தால், நாம்தான் உதவியாக வேண்டும் என்றிருக்கும் போது உதவி செய்யலாம் தப்பில்லை".

"ஒருவேளை! அந்தப் பெண் என்னிடம் 'இது இரவு வேளை. வழிப்பறிக் கொள்ளையர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது. உங்களை நம்புகிறேன். தயவு செய்து என் வீடு வரை வந்து என்னை விட்டுச் செல்ல முடியுமா?' என்று கேட்டால் நான் அந்தப் பெண்ணோடு போகலாமா? கூடாதா?"

"என்னப்பா இப்படிக் கேட்கிறாய்!

மக்களுக்குச் சேவை செய்வதும் துறவியின் பணிகளில் ஒன்றுதான். இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் சமுதாய நலன் கருதி உதவலாம். தப்பில்லை.

ஆனால் அதைசச் சாக்காக வைத்துக்கொண்டு அந்தப் பெண்ணோடு பேசக்கூடாது. தொடக் கூடாது".

| எதிர் காலம் | எதிர்காலம் பற்றிய நிகழ்கால பயங்கள் எதிர்காலத்தைப் பாழக்குகின்றன! |

சரி. "நான் பேசாமல், தொடாமல் அந்தப் பெண்ணோடு பாதுகாப்பு கருதி அவள் வீடு வரை சென்று கொண்டிருக்கும் போது

ஒரு வேளை அந்தப் பெண் ஒரு பெரிய குழியில் தடுமாறி விழுந்துவிட்டால் என்ன செய்வது? அப்போது தொட்டுத் தூக்கிவிடலாமா?"

"வேறு வழியில்லை. காப்பாற்றித்தான் ஆக வேண்டும். கைப்பிடித்துத் தூக்கி விடத்தான் வேண்டும்.

இதுபோன்ற விபத்துக்களில் தொடலாம். தப்பில்லை. காப்பாற்றி வீட்டில் விட்ட கையோடு திரும்பி விட வேண்டும்.

காப்பாற்றியதைச் சாக்காக வைத்து அந்த வீட்டிற்குள் செல்லக்கூடாது".

"அந்தப் பெண்ணை வீட்டில் விட்ட உடன் ஒருவேளை! அந்தப் பெண் என்னிடம் 'என் தந்தை இன்னும் வீடு திரும்பவில்லை. அண்ணனும் வீட்டில் இல்லை.

ஆற்றங்கரையோரம் என்னை அடிக்கடி வம்பு செய்யும் ரவுடி, இந்த தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

நாம் வரும் போதே அதைக் கவனித்து விட்டேன். என் தந்தை அல்லது அண்ணன் வரும் வரை வீட்டில் இருங்களேன்.' என்று கெஞ்சி கேட்டால் என்ன செய்வது?"

சுற்றி உட்கார்ந்த எல்லாத் துறவிகளும் நாதநீதன் கேட்டுக்கொண்டே போவதைப் பார்த்துக் குழம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

சாதாரண மனிதர்களால் நாதநீதனின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினம்.

ஞானிகள் அவர்களின் பதிலிலும் செயலிலும்தான் பெரும்பாலும் தாங்கள் ஞானி என்ற முத்திரையிட்டுச் செல்வார்கள்.

புத்தர், "ஆமாம், ஆமாம். ஒருவேளை... அப்பெண்ணின் அண்ணனும் தந்தையும் வராமலே போகலாம். அதனால் அன்றிரவு நீ அங்கே தங்கியே ஆக

முநாம் வேறு ,
டிநிகழ்காலம் வேறு
யாஎன பிரிக்கவே முடியாது!
து

வேண்டிய கட்டாயம் வரலாம்.

அடுத்த நாள் காலையில் அவள் தந்தையும் அண்ணனும் விபத்தில் இறந்ததாகச் செய்தி வரலாம். பாவம்! அனாதையாக நிற்கும் பெண், உன்னிடம் அபயம் கேட்கலாம். நீயும் மனமிறங்கி அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கலாம்.

அப்புறம் கணவன் - மனைவியாக நீங்களிருவரும் ஆசீர்வாதம் வாங்க என்னிடமே ஒருவேளை வரலாம்'' என்று விறுவிறுப்பாக பேச....

புத்தரின் பதிலில் அதிரடித் திருப்பத்தைப் பார்த்த நாதநீதன் உள்ளுக்குள் நடுங்க ஆரம்பித்து விட்டான்.

புத்தர் தொடர்ந்து, "ஒருவேளை
நீங்களிருவரும் என்னிடம் ஆசீர்வாதம் வாங்க
வரும் போது....

'அறிவு கெட்ட மடையா!
உனக்கெல்லாம் எதுக்கு துறவறம்?' என்று
கூட அப்போது நான் கேட்கலாம்.

அதை இப்போதே கேட்கிறேன்.
சாதாரண கற்பனைகளையே தாண்டாத
உனக்கெல்லாம் எதுக்கு துறவறம்? காவியைக்
கீழே போடு!

மீண்டும் துறவு ஆயத்தக்குழுவோடு சேர்ந்து நான் சொல்லும் வரை மவுன விரதத்தில் இரு'' என்று கூறி அனுப்பிவிட்டார்.

ஒரு வேளை...
அப்படியிருக்குமோ...
இப்படி நடந்து விட்டால்...

என்று எதிர்காலத்தில் நடக்கச்
சாத்தியமான அசம்பாவிதங்களைப் பற்றி
யோசிப்பதும், அதற்கான வருமுன் காப்பது
பற்றிய காரியங்களை யோசிப்பதும் நிச்சயமாக
புத்திசாலித்தனமான செயல்தான்.

Nithyananda

இறந்த காலம்
உண்மையில்
இறந்தது.
அதனால்தான் அப்படி
அழைக்கப்படுகிறது.

எதிர்காலம்
உண்மையில்
எதிரானது.
அதனால்தான் அப்படி
அழைக்கப்படுகிறது.

பரீட்சையில் தோற்றுவிட்டால்...
தொழில் நஷ்டம் வந்துவிட்டால்...
அந்த நோய் வந்துவிட்டால்...

என்று யோசிப்பதும் யோசித்தபின் எதிர்காலத்தை அருமையாக வைத்துக்கொள்ள நிகழ்காலத்தை பயன்படுத்தி அசம்பாவிதங்களைத் தடுக்க முயற்சிப்பதும், தடுப்பதும் இரண்டுமே புத்தசாலி செய்யும் காரியங்கள்தான்.

ஒருவேளை இப்படி நடக்கலாமா, இல்லையா என்பது பற்றிக் கொஞ்சம்கூட யோசிக்காமல், எதிர்காலத்தின் அருமை தெரியாமல், நிகழ்காலத்தை வெறுமனமே வீணடிப்பது, முட்டாள் செய்யும் காரியம்.

ஒருவேளை - ஒருவேளை என்று சதா எதாவது நடந்துவிடுமோ என்று நினைத்து, நினைத்து நிகழ்காலத்தில் பீதியடைவது - இது மனக்கட்டுப்பாட்டை இழந்தவர்கள் செய்யும் காரியம்.

எதிர்கால பயம் பற்றி, ஜே. கிருஷ்ணமூர்த்தி அருமையான ஞானவரிகளில் கூறியிருக்கிறார்...

"நூறு கற்பனைகளில் ஒன்றுகூட நிஜமாவதில்லை.

அப்படியே ஒன்றிரண்டு நிஜமானாலும் அது நம் நன்மைக்கே".

தொழில், உறவுகள், சமுதாய அந்தஸ்து, பதவி ஆகியவற்றின் அசம்பாவிதங்கள் பற்றிய நம் கற்பனை பயங்களுக்கு ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ஞான வரிகள் அப்படியே பொருந்தும்.

"இப்படி நடந்துவிடுமோ!

அப்படி நடந்துவிடுமோ!"

வார்த்தைகளே
எண்ணங்களாகின்றன...
எண்ணங்களே
செயல்களாகின்றன...
செயல்களே
பழக்கங்களாகின்றன...
பழக்கங்களே
குணங்களாகின்றன...
குணங்களே மனிதனை
நிர்ணயிக்கின்றன...
இந்த 'வாழ்க்கைச் சுற்றி'
எங்கு விழிப்புணர்வைப்
புகுத்தினாலும் அங்கு
தியானம் நிகழும்.
காரணம், அங்கு நீங்கள்
நிகழ்காலத்திலிருக்கிறீர்கள்!

என நாம் எதிர்காலம் பற்றிப் பயப்படும் நூறு கற்பனை பயங்களில் ஒன்றுகூட நிஜமாவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அப்படியே நாம் பயந்தபடியே ஏதோ ஒன்று நடந்துவிட்டால்கூட அதுவும் நம் வளர்ச்சிக்கே.

வாழ்க்கை என்பது தொடர்புதிர்கள் நிறைந்த சாலை.

அது பெரும்பாலும் நாம் கற்பனை செய்யாத புதிர்களை வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது. அவற்றைத் தவிர்க்கவும் நம்மால் முடியாது.

ஒருவேளை- ஒருவேளை - என்று எதிர்காலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைவிட,

இவ்வேளை - இவ்வேளை - என்று நிகழ்காலத்தை முழுமையாக எதிர்கொள்ள ஆரம்பியுங்கள்.

நிகழ்காலத்தைச் சரியாகக் கையாள ஆரம்பித்துவிட்டால் எதிர்காலத்தை பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

ஏனென்றால்....

இன்றைய நிகழ்காலம் என்பது நேற்றைய எதிர்காலம்.

நாளைய எதிர்காலம் அது சந்திக்கப்படும் போது நிகழ்காலமாயிருக்கும்.

எனவே நிகழ்காலத்தைச் சந்திக்கத் தெரிந்தால் போதும். எதிர்காலத்தை பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

கவலைப்பட்டாலும் கவலைப்படாவிட்டாலும் சந்தித்தே ஆக வேண்டிய எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராவதே புத்திசாலித்தனம்.

எதிர்கொள்ள ஆரம்பியுங்கள் நிகழ்காலத்தை!

வாழ ஆரம்பியுங்கள் நிகழ்காலத்தில்!

கவலைகளாலும் தேவையற்ற சிந்தனைகளாலும் வீணாகும் நேரமும் சக்தியும் மிச்சமாகும், செயலும் எண்ணமும் தெளிவாக ஆரம்பிக்கும்.

நிகழ்காலத்தில் நினைவொன்றி வாழ வாழ நிச்சயம் வாழ்வு வளமாகும்.

அர்த்தமுள்ள சம்பவம்...

மலை உச்சியிலிருந்த நிட்டியின் மனைவி பயத்தில் கேட்டார்: "ஏங்க! ஒருவேளை இங்கேயிருந்து கீழே விழுந்துவிட்டால்...?"

அதற்கு டூரிஸ்ட் கைடு சொன்னார், "மேடம்! அப்படியேதும் விழுந்துவிட்டால், அப்போது உங்களின் இடப்பக்கத்தில் தெரியும் அழகான காட்சிகளை ரசிக்கத் தவறாதீர்கள்" என்கிறார்.

  • இது வெறும் ஜோக்கல்ல. டெக்னிக். அதிர்ச்சிகளைச் சந்திக்கும்போது மட்டும் நிகழ்காலத்தில் இருந்துவிட்டீர்களென்றால், அந்த நிமிடத்தில் ஆத்மசக்தியை நீங்கள் தொட்டுவிடுவீர்கள்.

இந்த நிமிடம் ஜெயிக்காவிட்டால்...

எந்த நிமிடம் ஜெயிக்கப் போகிறீர்கள்?

பூனைக்கு நிச்சயம் புலி பிறக்காது. அதுபோல் துன்பப்படும் மனிதருக்கு நிச்சயமாய் ஆனந்தம் பிறக்காது.

அவர் துன்பப்படும்வரை இது உண்மை. மாற முடியாதது. துன்பமிருக்கும் வரையில் இது மாற்ற முடியாததும்கூட.

ஒரு மழைத்துளி பூமியை வந்து தொடுவதை, அந்த மழைத்துளியே நினைத்தாலும் தடுக்க முடியாது. காரணம் புவிஈர்ப்பு விதி!

கொட்ட ஆரம்பித்த மழை, பூமியில் கொட்டியே தீரும். உங்களுக்குள் துக்கம் கொட்ட ஆரம்பித்துவிட்டால் அதை உங்களால் தடுக்க முடியாது. இது மன இயல்பு விதி.

இந்த நிமிடத்திலிருந்துதான்

அடுத்த நிமிடம் பிறக்கிறது.

எதிர்காலம் பிரசவமாவது...

நிகழ்காலத்தில் இருந்துதான்!

என்றோ
எங்கோ
பூக்கும்
பூ அல்ல
ஜெயம்!

'பிறக்கப்போவது புலியா? பூனையா?' என்பதை முடிவுசெய்வது இயற்கை.

அடுத்த நிமிடம் நீங்கள் ஆனந்தமாக இருக்கப் போகிறீர்களா, இல்லையா? என்பதை நிர்ணயிப்பது நீங்களல்ல, நிகழ்காலம். எனவே எதிர்காலத்தின் தாய் நிகழ்காலம்.

இந்த நிமிடம் நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?... ஆய்வு செய்யுங்கள்.

அப்படித்தான் அடுத்தடுத்த நிமிடமெல்லாம் இருக்கப் போகிறது.

அப்படித்தான் வாழ்க்கையே அமையப் போகிறது.

இந்த நிமிடம் ஆனந்தமாகிவிட்டால் அடுத்தடுத்த எல்லா நிமிடமும் ஆனந்தமாகிப் போகும்.

எதிர்கால வாழ்க்கை ஆனந்தமயமாக இருப்பதை முயன்றாலும்கூடத் தடுக்க முடியாது.

ஞானிகள் எப்போதும் ஆனந்தமயமாகவே இருக்கும் ரகசியம் இதுதான். வாழ்வில் ஒரு முறை ஆனந்தத்தை ருசித்தவர்களால் மீண்டும் ஒரு முறை துக்கப்படவே முடியாது.

உங்களாலும் இது முடியும்.

தியான காலத்தில் அது கிடைக்கும்.

முதலில் துக்கப்படும் மனதை மாற்றுங்கள்.

இந்த நிமிடத்தில் ஆனந்தமாக இருங்கள்! இருங்கள்!

ஆனந்தமாகவே இருப்பீர்கள்! இது ஒரு டெக்னிக்.

நிகழ்காலத்தில் ஆனந்தத்தைக் கருத்தரிக்கச் செய்யுங்கள். நிச்சயம் உங்களால் முடியும். இந்த நிமிடத்தை ஜெயித்துக்காட்டுங்கள்!.