நிரந்தரமான நிரந்தரமின்மை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
புராதன காலத்துக் கதையொன்று...
பூனையைப் பார்த்து பயந்து நடுங்கிக்கொண்டிருந்த எலியைக் காப்பாற்ற நினைத்த மந்திரவாதி, அதை தன் மந்திரசக்தியால் பூனையாக மாற்றினார்.
பூனையாக மாற்றிய பின் அது நாயைப் பார்த்துப் பயப்பட்டது. எனவே அதை நாயாக மாற்றினார். மருவுரு எடுத்த நாய், வேட்டைக்காரனைப் பார்த்ததும் பயந்து நடுங்கியது. எனவே அதை ஒரு வேட்டைக்காரனாக மாற்றினார்.
உருவாக்கிய வேட்டைக்காரன் காட்டுக்குள் வந்தான்.
மந்திரவாதியைப் பார்த்த வேட்டைக்காரனின் மனதைக் கிலி பற்றிக் கொள்ள, சரி ஆனது ஆகட்டும் என நினைத்து அவனை ஒரு மந்திரவாதியாக மாற்றினார்.
புது உருவெடுத்திருந்த மந்திரவாதி அருகே ஒரு பெருச்சாளி வந்து நின்றது. கரப்பான்பூச்சியைப் பார்த்ததும் பீதியடைந்து கத்தும் சில பெண்கள் போல, எலியைப் பார்த்த புது மந்திரவாதி கத்தினான்.
“நீ எலியாக இருக்கத்தான் லாயக்கு எலியாகவே இரு!” என திரும்பவும் எலியாகவே மாற மந்திரவாதி சபித்துவிட்டார்.
★ மனதிலிருக்கும் பயம், துக்கம், மனவேதனை போன்றவை நீங்கள் எந்த வேஷமெடுத்தாலும் உங்களை உலுக்கிக்கொண்டேயிருக்கும் நிரந்தரமான நிரந்தரமின்மைகள்.
இவை உங்களிடமிருந்து நிரந்தரமாகத் துரத்தப்படும் வரை என்ன செய்தாலும் எதைச் சாதித்தாலும் அதில் துக்கமானது இழையோடிக் கொண்டேயிருக்கும்.
★ ஆனந்தம் நிரந்தரம். துக்கம் நிரந்தரமான நிரந்தரமின்மை.
- வாழ்க்கையில் ஏற்படும் திடீர் அதிர்ச்சிகள்தான் நம்மை வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்திற்கு அழைத்துச் செல்லும் வானூர்திகள்!
- அறியாமை இருளுக்குள் தூங்கும் நம் மனதை உலுக்கி, விழிக்கச் செய்யும் சம்பவங்கள்தான் -
வாழ்வில் நாம் சந்திக்கும்
எதிர்பாராத அதிர்ச்சிகளும்,
திருப்பங்களும்.
- நிரந்தரமில்லா துக்கத்தை தொலைத்து நிரந்தரமான ஆனந்தத்தை அடைய, எந்தவொரு அதிர்ச்சியையும் ஆர்வத்தோடு எதிர்க்கொள்ளலாம். தயங்க வேண்டியதில்லை.
- வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் தரும் எதிர்பாரா அதிர்ச்சிகள் என்னும் ஆசான்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். முன்னேற்றம் காணுவீர்கள்.
> "அடுத்த ஏழாயிரம்
வருடங்களுக்குள் தன்னைச்
சுற்றியுள்ள எல்லா
மலைகளையும் அரித்தே
அழித்துவிடும் நயாகரா!" என
ஆராய்ச்சியாளர்கள்
சொல்கிறார்கள்.
ஏற்கெனவே ஏழு மைல்
சுற்றளவுக்கு உள்ள பாறையும்
மண்ணும் அரித்தாகி விட்டது
என்கின்றனர்.
நிரந்தரமாகத் தெரியும்
எல்லாமே நிரந்தரமின்மைகள்.
'மனம்' தான் வாழ,
மனிதனுக்குள் பாய்ச்சும்
நங்கூரம்தான் - எதையும்
நிரந்தரமாக்கிக்கொள்ளத்
துடிக்கும் உத்வேகம். இந்த
நங்கூரம் அறுபடாதவரை
நிம்மதி, ஆனந்தம்,
ஆரோக்கியம் ஆகிய எல்லாமே
வெறும் ஏட்டுச்சுரக்காய்களே!
“வாழ்க்கையில் சொத்து, சுகத்தோடு நிரந்தரமாக கஷ்டமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும்”
என்ற ஒன்றை அச்சாணியாகக் கொண்டு,
வாழ்க்கைச்சக்கரத்தை நிரந்தரமில்லாத உலகத்தில் பள்ளம், மேடு, குழி எனப் பார்த்துப் பார்த்து ஒட்ட முயற்சித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அன்பரும், கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை இது!

உறவானாலும் சரி,
சொத்தானாலும் சரி,
பதவியானாலும் சரி,
மனிதன் அவற்றை
நிரந்தரமாக்கிக்கொள்ளவே
வெகு முயற்சி செய்கிறான்.
இது ஆற்றைக் கட்டிப்பிடித்து
தன்னோடு வைத்துக்கொள்ள
முயற்சிப்பதற்குச்
சமம்!
* “ஆ... ஆத்தி!
அஞ்சு வருஷமாகியும் அப்படியே
மகாலெஷ்மி மாதிரியே இருக்கியே!
என் கண்ணே பட்டுடும்!
* ரொம்ப சந்தோஷம்...
இவ்வளவு வருஷமாகியும் எதையும் மறக்காம
இருக்கிறத நினைக்கிறப்போ....
* என்ன வாழ்க்கை இது, ஒரே மாதிரி போயிட்டிருக்கு?
* மத்தவா இவ்வளவு பேர் நன்னாயிருக்கா,
சிலரை மாத்திரம் ஆண்டவன்
சோதிக்கிறான்!
* ஒரே மாதிரி கஷ்டத்துலேயே அவர் இருக்காரே ஏன்?
* வாழ்க்கையில் நல்லா செட்டில்
ஆயிட்டான்! நிரந்தரமாய் ஒரு சொந்த வீடு!
ஒரு வேலைன்னு இப்ப ரொம்ப
நன்னாயிருக்கான்!”
- இப்படி மனித உரையாடல்கள் நிரந்தரமானதை மையப்படுத்தியே வளர்கின்றன. எது நிரந்தரம்? இக்கேள்வியை மனதில் எழுப்பி விடை கண்டுபிடித்த பின்பு கட்டுரையைத் தொடருங்கள்.
இந்த நிமிடம் சென்னையில் ஒருவர் சுவாசிக்கும் காற்று, சென்னைக் காற்று. சில மணித்துளிகளில் அதே காற்று காஞ்சிபுரத்தை அடைந்ததும் காஞ்சிபுரத்தில் ஒருவர் அதைச் சுவாசிக்கும் போது அது காஞ்சிபுரத்தின் காற்று.
சென்னையின் காற்று, காஞ்சிபுரத்தின் காற்று என்பது அந்தந்த நிமிடத்திற்கு மாத்திரமே உண்மை போன்று தெரியும். உண்மையில் காஞ்சிபுரத்தின் காற்று என்ற தனி காற்று இல்லவே இல்லை.
காற்று இருப்பது உண்மை. அது இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. இன்றைய இந்தியக் காற்று நாளைய இலங்கைக் காற்று.
மனிதனின் உடலும் மனமும் இப்படித்தான் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதன் உயிரோடு இருக்கக் காரணமான காரண சக்தி (ஆத்மா) மட்டுமே உண்மை. நிரந்தரம்.
மற்றபடி இந்தப் பூவுலகில் உலா வரும் கருப்புசாமி, கோவிந்தசாமி என்பதெல்லாம் இந்தியக் காற்று, இலங்கைக் காற்று போலத்தான். அந்த நிகழ்விற்கு (50, 60 வருட வாழ்க்கைக்கு மட்டுமே உண்மை) மாத்திரமே உண்மை போலத் தெரியும்.
உடல் தொடர்ந்து வளர்ந்து கொண்டும் சிதைந்து கொண்டும் இருக்கிறது. அதைத்தான் 'வளர்ச்சிதை மாற்றம்' என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மனிதர் ஒவ்வொரு சுவாசத்தின் போதும் பிறந்து கொண்டும் இறந்து கொண்டும் இருக்கிறார் என்று புத்தர் கூறும் தம்மபதத்தத்துவம் இதுதான்.
மனமானது தொடர்ந்து மலர்ந்துகொண்டும், மறைந்துகொண்டும் இருக்கிறது.
ஒரே நேரத்தில் நேர்மறை, எதிர்மறை இரண்டும் தொடர்ந்து நடந்து கொண்டே
| வா ழ் வி ல் | மனித வாழ்வில் ஆனந்தத்தைத் தவிர மற்ற எல்லாமே நிரந்தரமான நிரந்தரமின்மைகள்தான்! |
இருப்பதுதான் உலக நியதி.
ஆனால், மனிதர்கள் மட்டும் அவர்களின் மனக்கோட்டையென்னும் (சுய எண்ணங்களாலும் சொந்தக் கருத்துகளாலும் கட்டப்பட்ட) கருத்துக் கோட்டையில்....
உலகம் என்பது இதுதான்.
மனிதர்கள் என்பது இவ்வளவுதான்.
உறவு, உணர்ச்சி, உண்மை என்பது இதுதான் என்று சிலர் அறிந்தும் சிலர் அறியாமலும் பல மாயபொம்மைகளை மனக்கோட்டைக்குள் பிடித்து வைத்து அவற்றோடு குடித்தனம் நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.
நிஜம் ஒன்றாக இருக்க, மனிதர்களின் மனக்கருத்துக் கோட்டையில் இருக்கிறது.
அதனால்தான் நிரந்தரமான கருத்துக்கோட்டையில் இருந்து...
வாழ்க்கை, சொத்து, சுகம், மனைவி, மக்கள் எல்லாம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்
எதுவும் தன் கருத்தைத் தாண்டி, தன் எதிர்பார்ப்பைத் தாண்டி, தன் ஆசையைத் தாண்டி போய்விடக்கூடாது என்பதற்காகவும் உழைக்க ஆரம்பிக்கிறார்கள். உழல ஆரம்பிக்கிறார்கள்.
நம் கருத்துக்கோட்டையைப் பற்றிய மாயத்தை விளக்கும் ஒரு அருமையான சம்பவம்.
ஒரு முறை அத்வைத ஞானி திகம்பரரிடம் துக்கம் நிறைந்த கண்களோடு ஒரு பெண்மணி வந்தார்.
திகம்பரர், "என்னம்மா, என்ன பிரச்சனை?" என்று கேட்டார்.
பெண்மணி, "சாமி, என் கணவன் இறந்துவிட்டார்... நீங்கள் முக்காலமும் உணர்ந்தவர். எல்லா வல்லமையும் பெற்றவர். சத்யத்தை அனுபூதியாக அனுபவித்தவர் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
உங்களுடைய தெய்வசக்தியால் எப்படியாவது என் இறந்து போன கணவனை எனக்கு உயிர்ப்பித்து கொடுங்கள். அதுபோதும் இந்த உலகில் வேறு எதுவும் எனக்கு வேண்டாம்" என்று பக்தியோடு கேட்டாள்.
| நி | டைட்டானிக் கப்பல் |
|---|---|
| ச் | கடலில் நீந்திய முதல் நாளில் கப்பலின் கேப்டன் இப்படிச் சொன்னார், "இக்கப்பலை |
| ச | அக்கடவுள் நினைத்தால்கூட கவிழ்க்கவோ, மூழ்கடிக்கவோ முடியாது" |
| ய | நிகழ்வுகள் நிச்சயம் உங்கள் கையில் இல்லை. |
| ம் |
திகம்பரர், "எந்தக் கணவனை நான் உயிர்ப்பத்துக் கொடுக்கட்டும்?" என்று திரும்பவும் கேட்டார்.
திகம்பரர் கேட்டக் கேள்வி அந்தப் பெண்மணியைத் திடுக்கிடவைத்தது. சுற்றியிருந்த மக்கள் மிகப்பெரும் அதிர்ச்சிக் குள்ளானார்கள். ஞானி அந்தப் பெண்ணுக்குத் தீர்வு கொடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க அந்த பெண்ணைக் கலங்கடிப்பார் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை.
பெண்மணி ஈனக் குரலில், "........சாமீமீ!!! என்ன கேக்கறீங்க?" எனக் கேட்டார்.
திகம்பரர், "நான் சரியாகத் தான்
கேட்டேன். எந்தக் கணவனை நான்
உயிர்ப்பித்துக் கொடுக்க வேண்டும்?
உனக்குத் திருமணமான பின்பு வாழ்ந்த கணவனையா? இல்லை,
திருமணமாகி சில வருடம் கழித்து வாழ்ந்த கணவனையா? இல்லை,
திருமணமாகி குழந்தைகள் பல பெற்ற பின்பு வாழ்ந்த கணவனையா? இல்லை,
இப்போது நீ இறந்ததாகச் சொல்லும் கணவனையா? எந்த நிலையில் வாழ்ந்த கணவனை நான் உயிர்ப்பிக்க வேண்டும். அதை முதலில் முடிவு செய்யம்மா. பின்பு அந்த நிலையில் உன்னோடு வாழ்ந்த கணவனை உயிர்ப்பிக்கலாம்" எனச் சொன்னார்.
பெண்மணி இப்போது கலக்கம் நீங்கி
குழப்பத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்.
ஆனால் ஏதோவொரு பெரிய உண்மை இந்த
ஞானியின் பேச்சில் அடங்கியிருக்கிறது
என்பது மாத்திரம் அவருக்குப் புரிந்தது.
"எந்தக் கணவனை? எந்தக் கணவனை?..." என்ற கேள்வி மட்டும் அப்பெண்மணியின் மனதில் தொக்கித் தொக்கி குழப்பிக்கொண்டிருக்க....

எதிர்காலம் நிரந்தரமில்லாதது நிர்ணயிக்க முடியாதது! நிர்ணயிக்கக்கூடியது. நிரந்தரமானது நிகழ்காலம்
நிரந்தரமானதை நேசியுங்கள்.
நிரந்தரத்தில்
வாழுங்கள்!!!
துக்கத்தின் உச்சியில் இருந்த பெண்மணியை எதிர்பாராத அதிர்ச்சி வைத்தியத்தால் கலக்கத்தின் உச்சிக்கு எடுத்துச் சென்று அடுத்தடுத்த கேள்விகளால் குழப்பத்தின் உச்சிக்கு எடுத்துச் சென்ற திகம்பரர், அந்தப் பெண்மணியைப் பார்த்துக் கருணை நிறைந்த புன்முறுவல் புரிந்தார்.
பெண்மணி குழப்பத்தின் உச்சியிலிருந்தாலும் - தன் பிரச்சனைக்குப் பதில் கிடைத்துக்கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் மலர, பெண்மணியின் முகமும் மெல்ல மலர ஆரம்பித்தது.

நல்லவர்களுக்கு
வாழ்க்கை எப்போதும்
கஷ்டமளிக்காது.
அப்படி அது
கஷ்டமளித்தால்...
அல்லது அப்படி
ஒருவர்
உணர்ந்தால்...
இன்னும் அவர்
நல்லவராகவில்லை
என பொருள்!
திகம்பரர் சொன்னார்: "நாம்
நினைப்பது போல் மனிதர்கள்
நிலையானவர்கள் அல்ல.
சிறுவன்,
வாலிபன்,
நடுத்தரமனிதன்,
வயோதிகன்,
- என்ற நான்கு நிலையும் ஒரே மனிதன் வாழ்ந்து தாண்டினாலும் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு உடல், மன நிலையோடு இருக்கிறார்கள்.
மனிதரின் இந்த நான்கு நிலைகளையும்
பொருத்திப் பார்த்தால், அவை ஒன்றோடு
ஒன்று பொருந்தாது. நான்கு நிலைகளும்
நான்கு தனி நபர்களாகத் தோன்றும்.
வாலிபராகும் போது சிறுவன்
இறந்துவிட்டார். சிறுவன் இல்லை.
நடுத்தர மனிதராகும் போது வாலிபர் இறந்து
விட்டார். வாலிபர் இல்லை.
வயோதிகராகும் போது நடுத்தர மனிதர்
இறந்து விட்டார். அவர் இல்லை.
இப்படி ஒவ்வொரு நிலையும் மாறும்
போதும் முந்தைய நிலை இறந்துவிடுகிறது.
இறப்புகளைத் தொடர்ந்து பார்த்தும் நம்மை
வருத்தப்படாமல் பாதுகாப்பது நம் பற்று
உணர்வு (என்னுடையது என்ற போலி
உணர்வு).
என் கணவர் என்ற இயல்பான ஒன்றை பற்றுச் சங்கிலியாக்குவது, என்னுடைய கணவர் என்ற அதீத கற்பனை.
பெண்ணே, இப்போது நீ வருந்துவது எதனால்? என்று கொஞ்சம் யோசித்துப் பார் புரியும். கஷ்டத்திற்குக் காரணம் தெரியும்" என்றார் திகம்பரர்.
இதைக் கேட்ட பெண்மணி மௌனதம் சாதித்தார்.
திகம்பரர், "உன் கணவரின் வாலிபம் இறந்து விட்டது. அதற்காக நீ இவ்வளவு அழவில்லை.
உன் கணவனின் நடுத்தர மனித உடல் மாறி வயோதிகத்தைத் தொட்ட போது நடுத்தர உடல் இறந்துவிட்டது. அதற்காகவும் நீ அழவில்லை.
இப்போது வயோதிகக் கணவனின் உடல் இறந்ததற்காக மாத்திரம் அழுது துக்கப்படுவது, உனக்கே வினோதமானதாகத் தோன்றவில்லையா?"
உன்னுடைய அன்பு உடல் மீதா? கணவன் மீதா? இல்லை...
என்னுடைய கணவன் என்ற உரிமை மீதா?" என்று கேட்டார்.
பெண்மணிக்கு யோசிக்க யோசிக்க என்ன
புரிய வேண்டுமோ அது புரிந்து விட்டது.
அப்படியே சாஷ்டாங்கமாக ஞானியின் காலில்
விழுந்தாள்.
"உண்மையிலேயே கணவன் இறந்ததற்காகத்தான் நான் கஷ்டப்படுகிறேனென்றால், ஒவ்வொரு காலத்தைத் தாண்டி வரும் போதும் என் கணவனின் பழைய உடல் இறந்ததற்காக நான் அழுதிருக்க வேண்டும். ஆனால் அப்படி நான் அழவில்லை.
இப்போது மட்டும் அழுகிறேனென்றால், நிச்சயமாக அது என் கணவன் என்ற உரிமை பறிபோனதால் வந்த ஏக்கத்தால்..." என சிந்தனை செய்தார் பெண்மணி.
இந்த உண்மை புரிந்ததும் அந்தப் பெண்மணிக்கு மனதிலிருந்து பெரிய சுமை இறங்கிவிட்டது போலிருந்தது.
பூமியால் சாப்பிடப்பட பிறந்த
'இரை' மனிதன்.
- குருட்ஜீஃப்
உயிர் உள்ள வரையில்...
பூமி, மனிதனின் உணவு.
அப்புறம் மனிதன் பூமியின்
உணவு.
இது ஒரு நிரந்தரமான கூற்று.
| பழக்கம் | பழி யார் மீதும் அல்ல. பழக்கத்தை விழிப்புணர்வால் மட்டுமே அழிக்கலாம். எனவே விழிப்புணர்வை அதிகரியுங்கள் |
மாற்றம் ஒன்றே நிரந்தரம்!
மாறுவது ஒன்றே உலக இயல்பு !
மாறிக்கொண்டே இருப்பதுதான் வளர்ச்சி!
இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் போதும். நிரந்தரமான உலக இயல்பு, நிரந்தரமாக இல்லாமல் மாறிக்கொண்டேயிருப்பது என்று எளிதாகப் புரியும்.
உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றம், எதிர்பாராத திருப்பம் ஆகியவற்றை சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டு வாழ்க்கைப் பாதையில் வளர்ந்து கொண்டே போவீர்கள். அனுபவ முதிர்ச்சி (Maturity) என்னும் அற்புத மலர் உங்களினுள் மலரும்.
அர்த்தமுள்ள சம்பவம்...
அமெரிக்காவில் பரபரப்பைத் தூண்டிவிட்ட, ஒரு கன்சியூமர் கோர்ட் வழக்கு வினோதமானது.
காரணம் 'வழக்கு தொடுத்தவர்' - திருடன்!
'வழக்கு தொடுக்கப்பட்டது' - திருடப்பட்ட வீட்டின் மேல்!
'வழக்கு' - திருடச் சென்றவர் பயன்படுத்திய வீட்டின் கூரை இடிந்து விழுந்தால், திருடனுக்கு உடலில் பெருமளவு காயம் ஏற்பட்டுவிட்டது!
"எனக்கு திருடச் சென்றதற்கான தண்டனையளியுங்கள். ஆனால், திருடச் சென்ற நான் விபத்துக்குள்ளாகக் காரணமாக இருந்தது ஒழுங்காகக் கட்டப்படாத வீடு, அதனால் நஷ்ட ஈடு தரவேண்டும்'' என்ற திருடனின் வழக்குக்கு, வீட்டின் உரிமையாளர் - பெருமளவு பணத்தைத் தரவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது!
நாம் எதிர்ப்பார்க்காத கோணத்தில் வாழ்க்கையை எதிர்கொள்ள வைப்பது - ‘நிரந்தரமின்மை’ எனும் நிரந்தரவிதி. எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!
சந்தோஷம் தாண்டி உடல், உயிர், ஆவி எல்லாம் ஏவப்படட்டும்...
இரு யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தை அமைதி எனச் சொல்ல முடியாது. அது, அடுத்த போருக்கான ஆயத்த காலம் மட்டுமே.
அதுபோல் இரு பெரும் துன்பங்களுக்கு இடைப் பட்ட நிகழ்வுகளை இன்ப நிகழ்வுகள் எனச் சொல்ல முடியாது. அது, சிறிய துன்பம் மட்டுமே. வேதனையின் அளவு குறைவதற்கு இன்பம் எனச் சொல்லக்கூடாது.
மனிதர்கள் சுகம், சந்தோஷம் எனச் சொல்வதெல்லாமே
குறைக்கப்பட்ட, அல்லது வேறுவிதத்தில் வெளிப்படுத்தப்பட்ட வேதனைகள் மட்டுமே.
இது உணரப்படாத வரை... ஆனந்தத்தைப் பற்றி கற்பனைக்கூட செய்ய முடியாது.
ஆனந்தம் என்பது இடைவெளி இல்லாதது. துன்பம் என்பது நிரந்தரமான நிரந்தரமின்மை. சில இடைவெளிகளைக் கொண்டது. அந்த, இடைவெளிகளே சந்தோஷம். இது தாண்டப்பட வேண்டியது.
| துன்பம் உலக இயல்பு | - | உங்கள் மனதின் இயல்பு. | | ஆனந்தம் பிரபஞ்ச இயல்பு | - | உங்களின் ஆத்மாவின் இயல்பு. |
வாழ்வில் ஒரே ஒரு முறை நீங்கள் ஆனந்தத்தை அனுபவித்திருந்தால்கூடப்போதும்.... அது நிரந்திரமாகியிருக்கும். ஏனென்றால் அது நிரந்தரமானது.
அதையடுத்து நிரந்தரமான நிரந்தரமின்மை என்னும் உலக இயல்பை மீறி பிரபஞ்ச இயல்புக்குள் குதித்திருப்பீர்கள். பாசக்கடல் தாண்டப்பட்டிருக்கும்.
நீங்கள் எவ்வளவு சந்தோஷங்களை வாழ்வில் சந்தித்தவராக இருந்தாலும் சரி... ஒரு சந்தோஷத்திற்குப் பின் ஒரு துன்பத்தை நீங்கள் அனுபவித்துவிட்டால் போதும், தெரிந்து கொள்ளுங்கள். அது சந்தோஷமல்ல, தோஷம். துன்பத்தின் இன்னொரு உரு!
இந்த உண்மை உங்களுள் ஆழ இறங்கட்டும்.
சந்தோஷம் தாண்டி...
உங்களின் மனம்,
உடல்,
உயிர்,
ஆவி
எல்லாம் ஏவப்படட்டும்.
> துன்பத்தின்
> கவர்ச்சிமிகு உரு
> சந்தோஷம்!
ஆனந்தம் அடைந்தாக வேண்டும், அதுவே இலக்கு என்பது ஐஸ்கட்டியாய் மனதுக்குள் இளகட்டும்.
இந்த ஞானக்கருத்துக்களை உணர்ந்து தியானியுங்கள்.