ஏன் மனிதன் பிறந்தான்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
முல்லா நஸ்ருதீன் தன் கால் அளவைவிட சின்னதாயிருக்கும் ஷுவையே விரும்பி அணிவார். நாள் முழுவதும் அந்த இறுக்கமான ஷு தரும் வலியோடுதான் எல்லா வேலையும் செய்வார். இரவு வீடு திரும்பும்வரை ஷூவைக் கழட்டவே மாட்டார்.
நஸ்ருதீனின் வினோதமான செயலால் ஆச்சரியமடைந்த எதிர்வீட்டுக்காரர், ஏன் அவர் இப்படிப்பட்ட ஒரு ஷுவை உபயோகிக்கிறார் எனக் கேட்டதற்கு,
"நாள் முழுக்க அந்த ஷூதொல்லையைத் தரும். தொடர்ந்து இறுக்கமாயிருக்கும். சிலநேரம் வலிக்குமளவுக்குக் கூட அழுத்தும்" என நஸ்ருதீன் சொன்னார். "என்ன மடத்தனம்! இதற்காகவா அந்த ஷூவைக் அணிகிறீர்கள்?" என வருத்தத்தோடு எதிர்வீட்டுக்காரர் கேட்டதற்கு,
"ச்சேச்சே... அதற்காக இல்லை. ஒரு நாள் முழுவதும் ஷூவோடு போராடி விட்டு, இரவு வீடு வந்தவுடன் அந்த ஷூவை கழட்டும்போது ஒருவித சுகம் உண்டாகும் பாருங்கள்... அந்த சில நிமிட சுதந்திர சுகஉணர்வுக்காக ஒரு நாள் கஷ்டப்படுவது தவறே இல்லை!" என்றார் நஸ்ருதீன்.
★ மனிதன் பிறந்தது ஏன் என்பது புரியாததால், சில நிமிட சுகத்தைத் தரும் பேர், பணம், சுகத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைப்பதுதான் மனித வாழ்வு முறை என்றாகிவிட்டது. அதனால்தான் பேர், பணம், மது மற்றும் எல்லாம் மனிதனுக்கு திருப்பதியைத் தருகிறது.
மனிதன் சில நிமிடங்கள் மட்டும் ஆனந்தமாயிருக்க பிறந்தவனல்ல. அதற்காக வாழ்க்கையை வீணடிப்பது புத்திசாலித்தனமல்ல.

★ எதுவாக இருந்தாலும் அது
நிலையாக, நிரந்தரமாக இருக்க
வேண்டுமென்று நாம் ஏன்
விரும்புகிறோம்?
இந்த ஒரு கேள்வி உள்ளே எழுந்தால்
போதும். அதுவே நித்யானந்தத்திற்கு
அழைத்துச் செல்லும்.
- மனிதன் சந்தோஷத்திற்காகவும், தற்காலிகச் சுகத்திற்காகவும் அலைவது, கோடீஸ்வரன் கோடீஸ்வரனாக
இருக்கும்போதே கையேந்தி பச்சையெடுப்பதற்குச் சமம்.
- மித்யானந்தம் - சிற்றின்பம். நித்யானந்தம் - பேரின்பம்.
- நித்யானந்தம் உள்ளே இருப்பது மறந்து போனதால்தான், நித்ய ஆனந்தத்தை வெளியே தேடித் தேடி மரத்துப் போகிறார் மனிதர். பின் மரித்துப் போகிறார்.
- எந்த ஒரு சுகமாக இருந்தாலும், அந்த சுகம் அடைந்து முடிந்த பிறகு, அனுபவித்த திருப்தி முழுமையாகக் கிடைப்பதில்லை. காரணம் என்ன?
- அனுபவிப்பதை அடையும் வரை இருந்த ஆர்வம். அடைந்து அனுபவித்த பிறகு மாயமாய் மறைந்துபோகிறதே! ஏன்?
மனிதர்கள் விரும்பும்போதெல்லாம்
விரும்பிய அளவு சுகத்தை அனுபவிக்க
வழி ஏதும் இருக்கிறதா?
இவைகள்தான் இன்றைய மருத்துவ ஆராய்ச்சியை ஆன்மீகம் நோக்கித் திரும்பியிருக்கும் வெகு பொது ஜன எதிர்ப்புகள்.
- மனிதர் இப்படி எதிர்பார்ப்பதின் மூலக்காரணம்தான் என்ன? அது எங்கேயிருக்கிறது?
இதற்கு ஒரு அருமையான ஜென் கூற்று பதில் சொல்கிறது:
“ முடிந்தவரை ஓடு !
விடியும் வரை ஆடு !
ஆசை தீர அனுபவி !
தவறே இல்லை.
அப்பொழுதாவது உனக்குத் தெரியட்டும் !
நீ தேடுவது
வெளியே இல்லை என்று...”
வெறுமனே உணவு, உறக்கம், உறவு என்று வாழாமல், அதையும் தாண்டிய ஏதோ ஒன்றை அடையத்தான் மனிதர்கள் பிறப்பெடுக்கிறார்கள். அது என்ன?
கட்டுரையை கவனமாகப் படியுங்கள், புரியவரும்...
ஜுமல்அ அந்த ஊருக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தது. அன்று முரடன் ஒருவன் அவரை வம்பு செய்யும் நோக்கோடு வந்திருந்தான்.
| ஓய்வு | ஓய்வுக்காக - பூரண ஓய்வுக்காக செய்யும் ஒரேயொரு உற்சாகச்செயல் தியானம்! |
|---|
ஜுமல்சியின் குடிசை வெளியில், கரகரப்பான குரலில் முரடன், "ஏய்! யாரது வீட்டுக்குள்ளே!
இங்கே ஞானின்னு புதிதாக வந்திருப்பது யார்?
வெளியே வரச்சொல்...
நானா? அந்தாளா? பார்த்துடலாம்!"
என்று மிரட்டல் விட்டுவிட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.
ஜுமல்சி மெதுவாக வெளியே வந்து, "அப்படி யாரும் இங்கே இல்லையே" என்றார்.
முரடன், "என்னை ஏமாற்ற முயற்சிக்காதே! நீதான் அது.
மக்கள் சொன்ன எல்லா அடையாளமும் உன்னிடம் இருக்கிறது... நீ ஞானிதான்.
நீ ஞானிதான்" என்றான்.
ஜுமல்சி வந்த சிரிப்பைத் தவிர்த்து விட்டு, "இல்லீங்க. நான் என்னை ஞானின்னு ஒருபோதும் சொன்னதே இல்லை. நான் சாதாரண மனுஷன். மக்கள்தான். அப்படிச் சொல்றாங்க" என்றார்.
முரடன், "ஏய்" நீ ஏதேதோ எனக்குத் தெரியாத விஷயமெல்லாம் பேசி என்னை ஏமாற்றப்பார்க்கிறாய்... நான் பல இரவுகள் தூங்குவதே இல்லை.
இரவு முழுவதும் வேட்டையாடுவேன்.
உன்னால் இது முடியுமா?" என்று பெருமை பொங்க சம்பந்தம் சம்பந்த மில்லாமல் கேட்டான்.
ஜுமல்சி, "இதுக்கு சிங்கமாகவோ, புலியாகவோ பிறந்தா போதுங்களே! இதற்காக மனிதராகப் பிறக்க வேண்டிய அவசியமில்லையே..."
ஞானியின் பதிலடிக் கேள்வியால் உள்ளுக்குள் கொஞ்சம் தடுமாறினான் முரடன்.
| தி | துன்பம் என்பதே இல்லை |
|---|---|
| யா | என்பதை |
| ன | தியானம் செய்பவரே அறிவார்! |
| ம் |
இதுநாள் வரை எதைப் பெரிய சாதனையென்று நினைத்திருந்தானோ, அதைச் சாதாரண மிருக குணமென ஞானி சொன்னதில், மனதளவில் பெரிய அடி வாங்கியதைப் போன்று உணர்ந்தான்.
"அதிகரிக்கட்டும். என்னைக் கண்டால் இந்த ஊரே கட்டுப்படும். எல்லோரும் எனக்குப் பயப்படுவார்கள். உன்னால் முடியுமா?"
"இந்த ஊரில் யாராவது உனக்கு மரியாதை தருகிறார்களா?
வெறும் பயத்தால் மக்களைக்
கட்டுப்படுத்த அரக்கன் போதுமே... அதற்கு
மனிதராகப் பிறக்க வேண்டிய அவசியமே
இல்லை."
சாதனை என்று முரடன் நினைத்திருந்த
மனத்தூண்கள் ஞானியின் சோதனையில்
ஆட்டம் கண்டுவிட்டது.
"எல்லோரும் என்னைப் பார்த்து பயப்படுகிறார்களா?
இல்லை என்னை மதிக்கிறார்கள். ?...."
என்ற கேள்விகள் முரடன் மனதில் மீண்டும்,
மீண்டும் வர ஆரம்பிக்க...
ஜு-மல்கி தொடர்ந்தார், "உன் மனது
கெட்டுப்போயிருக்கிறது. அதனால் தூங்க
முடியவில்லை. தூக்கம் வரவில்லை.
மனதில் கொஞ்சம்கூட ஈரமில்லாமல்
மிரட்டினால் அப்பாவி மக்கள்
பயப்படுவார்கள்தான்.
இகத்தில் பெருமைப்படுமளவுக்கு என்ன சாதனை இருக்கிறது?
உனக்குள்ளே வேதனை இருக்கிறது.
அவ்வளவுதான்" என்று சொல்லிவிட்டு
ஜு-மல்கி குடிசைக்குள் சென்று விட்டார்.

பிறப்பு ஓர் அதிர்ச்சி
இறப்பு ஓர் அதிர்ச்சி
இரண்டிலும் கோமா
நிலையைத் தொடுகிறான்
மனிதன்.
இறப்பு - முழு
விழிப்புணர்வோடு நிகழ,
மனிதன் ஞானியாகிறான்.
பிறப்பு- முழு
விழிப்புணர்வோடு நிகழ,
ஞானி மனிதனாக
அவதரிக்க வேண்டும்.
பதில் பேச முடியாத அளவுக்குச் சிந்தனையில் ஆழ்ந்த முரடன், அதே சிந்தனையோடு வீடு சென்றான்.
கிட்டத்தட்ட மூன்று நாட்களாக முரடன் வெளியே வரவில்லை. முரடன் மூன்று நாட்களாக எவ்வளவு முயன்றும் இரவு அவனால் தூங்க முடியவில்லை.
மக்களைப் பார்க்கவில்லை.
விஷயம் தெரிந்த மக்களும் நிம்மதி அடைந்தனர்.
மனம் சோர்ந்துபோய் நான்காவது நாள் காலையில் வெளியே வந்த முரடனின் நடையே மாறிவிட்டது. யாரையும் மிரட்டத் தோன்றாமல் நடந்தான். ஆச்சரியப்பட்டான்.
இதுவரை பார்த்ததால் பயந்து ஒதுங்கியவர்கள், இன்று தன்னைக் கண்டு
> அது எப்படியெப்படி நிகழ
> வேண்டுமோ, அப்படியப்படிதான்
> நிகழ்ந்து கொண்டிருக்கிறது".
>
> இந்த வாசகத்தை அப்படியே
> வாங்கிக்கொள்ளுங்கள்.
>
> இது ஆழப் புரிந்துவிட்டால்
> புரியவரும் உண்மை...
>
> அனைத்தையும் நிகழ்த்துவது
> நீங்கள்தான்" என்று!
>
> -அதிசூட்சும ரகசியம்
கொள்ளாமல் செல்வதைப் பார்த்த முரடன் ‘ஒரு வேளை!’ ஞானி சொல்லியது போல் நான் மனுஷனாக வாழவே இல்லையா.. என்று யோசிக்க துக்கம் தாளாமல் ஓடி வந்து ஜு-மல்கியின் குடிசை வாசலில் விழுந்தான்.
முரடன் முதுகில் தட்டிக் கொடுத்த ஜமல்கி, “தகுதி பெற்று விட்டாய்! அழாதே.
மனிதராகப் பிறந்ததின் நோக்கத்தை
அனுபவமாக உணரத் தேவையான அடிப்படைத்
தகுதியைப் பெற்று விட்டாய். எழு!” என்று
ஆரத்தழுவிக் கொண்டார்.
முரடனைக்கூட முல்லை மலர் போல மாற்றுவது இவர் போன்ற ஞானிகளுக்கு எளிது.
“ஏன் பிறந்தோம்?” என்ற கேள்வி உணர்வுப்பூர்வமாக உள்ளத்திலிருந்து எழுவதுதான் உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்வதற்கான அடிப்படைத் தகுதி.
மனிதர் ஏன் பிறப்பெடுத்தார் என்பதற்கு ரிஷிகள் சொல்லும் பதில் -
“நிலையான, நிம்மதியான, எதனாலும் எப்போதும் அசைக்க முடியாத, நித்யமான ஆனந்தத்தை (முழுச் சுகத்தை) அடைய வேண்டும் என்பதுதான் மனிதப் பிறப்பின் அடிப்படை நோக்கம்”.
“இந்த ஒரு உண்மை மட்டும் உங்களுக்குப் புரிந்துவிட்டால், விளையாட்டு சுவாரஸ்யமாகிவிடும்” என்கிறார்கள்.
இந்தக் கூற்றுகள் உண்மை என்பதற்கு வாழும் ஞானிகளே சாட்சி. இதுபோன்ற
சத்யங்கள் மனிதர்களுக்குத் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும் சுகம், திருப்தி, சமாதானம், நிம்மதி என்று மனிதர்கள் தேடுவது எல்லாமே இந்த நித்யமான ஆனந்தத்தைத்தான்.
இதுதான் மனிதரின் உச்சபட்சக் குறிக்கோள்.
இதை அடையத்தான் மனிதர்கள் பிறந்தார்கள்.
மனிதர் தேடுவது மனிதருக்கு வெளியே இல்லை. அது மனிதருக்குள்ளேயே தான் இருக்கிறது.
உங்கள் பிறப்பின் நோக்கமான ஆனந்தத்தை அடையச் செயல்படுங்கள்.
ஒரு நிமிடம்கூட வீணாக்காதீர்கள்.
அர்த்தமுள்ள சம்பவம்...
ஒரு கண்டிப்பான பேராசிரியருக்கு அன்று பிறந்தநாள் விழா. எல்லா மாணவர்களும் அவரிடம் வந்து வந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னபோது அவர் நன்றி என்று சொல்லாமல், "Same to you... Same to you" என்றே சொன்னார். இது வினோதமாகப்பட்டதால் புதிதாய் வந்த பேராசிரியர் கேட்டார். "ஏன் நன்றி சொல்லாமல், இப்படிச் சொல்கிறீர்கள்."
அவர் சொன்னார், "நானும் மாணவனாய் இருந்து வந்தவன் தானே! எனக்கு வாழ்த்துக்கள் சொல்லும்போது... அவர்கள் மனதில் என்னைப் பற்றி என்ன சொல்வார்கள் என்பது கூடவா தெரியாது!" என்றாராம்.
- ஏன் பிறந்தேன்? என்ற கேள்விக்கான பதில் அனுபவமாகாத வரை, இதுபோல் ஒருவரையொருவர் ஏமாற்றி வாழும் போலி வாழ்வு தொடரும். தவிர்க்க முடியாதது.
ஆன்மீகம் வாழ்வின் ஒரு பகுதி அல்ல...
உங்களின் வாழ்வே ஆன்மீகம்தான்!
மூளையை விற்று, பட்டம் பெறுவது நவீன சட்டம். எளிமையை விற்று, நாகரிகம் பெறுவது நவீன ரகம். வாழ்க்கையை விற்றுப் பணம் பெறுவது நவீன குணம்.
பட்டம், நாகரிகம், பணம் பெற்றபின் திரும்பிப் பார்த்தால் பெற்றவரிடம் கீழ்கண்டவை காணவில்லை... விற்றுவிட்டதால்!
- மூளை;
- எளிமை;
- வாழ்க்கை.
மனிதர்கள் எதற்காக வந்தார்களோ அந்த வேலையை விட்டுவிட்டு, மற்ற எல்லாவற்றையும் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், தன் மூலதனத்தையே விற்று விட்டு முடங்கிப் போயிருக்கிறார்.
> எதைப் பெற...
> இதை விற்றாய்?
>
> உலகம் ஒரு
> தியான களம்!
> விளையாட நீ தயாரா?
வேலை கிடைப்பதற்காக படிக்கிறார். சம்பளம் கிடைப்பதற்காக உழைக்கிறார். நல்ல அந்தஸ்து கிடைக்கச் சாதிக்கிறார்... இவ்வளவு எதற்காக எனக் கேட்டால் வரும் பதில், "நல்ல வாழ்க்கைக்காக!"
நல்ல வாழ்க்கை வாழ என்ன படித்தீர்கள், என்ன உழைத்தீர்கள்?
வாழ்கின்றேன் பேர்வழி என வாழ்வையே மனிதர்கள் இழந்து கொண்டிருக்கும் பரிதாபச் செயல் நிறுத்தத்திற்கு வரவேண்டும்.
வாழ்வு என்பது ஆனந்தமயமானது.
அதை மீண்டும் மனிதனுக்குக் கிடைக்கச் செய்யும் வழிமுறைகளின் தொகுப்புதான் ஆன்மீகம்.
நீங்கள் என்ன தேடினாலும் அதன் உள்நோக்கம் நிலையான, நித்யமான திருப்தி, நிம்மதி, ஆனந்தத்தை அடையத்தான் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?
இதுவரை உணராதவர்கள் இந்தக் கருத்துக்களைத் தியானித்து உணருங்கள், நீங்கள் யாராயிருந்தாலும் உங்களின் இலக்கு ஆனந்தம்தான். உலகம் ஒரு தியானக்களம்! விளையாட நீங்கள் தயாரா? நீங்கள் செல்லும் பாதை எதுவாயினும் அது ஆனந்த வழிச்சாலைகள்தான். அதைத் துரிதமாய் அடைய ஆன்மீகம் உதவும்.
எனவே சொல்கிறேன், ஆன்மீகம் என்பது உங்கள் வாழ்வின் ஒரு பகுதி அல்ல. உங்களின் வாழ்வே ஆன்மீகம்தான் (Spirituality is not a part time job, it is a full time job).
எனவே செய்யும் செயல் எதுவாயினும் அதை இன்னும் அழகாய் செய்யும் ஆன்மீகத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
பிறப்பின் நோக்கம் இறக்கும் முன் பூர்த்தியாகட்டும்!