எங்கே இருக்கிறார் கடவுள்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
★ அனைத்து மதங்களின்,
அனைத்து ஆன்மீகப் பாதைகளின்
- எல்லா வழிபாட்டுமுறைகளும் எல்லா தியானமுறைகளும்
உங்களுக்குள் இருக்கும் இறைசக்தியின் விஸ்வரூபத்தை உணரத்தான்.
★ இரண்டே இரண்டு வகை மனிதர்கள்தான் சாத்தியம்.
கடவுளான மனிதர்.
மனிதராக இருக்கும் கடவுள்.
★ எங்கும் எதிலும் நிறைந்திருப்பவர் இறைவன் (GOD).
- மெய்ஞ்ஞானக் கூற்று.
எங்கும் எதிலும் நிறைந்திருப்பது சக்தி (Energy).
- விஞ்ஞானக் கூற்று.
படித்த எந்த ஒரு மனிதராலும் இரண்டையும் பொருத்திப் பார்த்து முடிவுக்கு வருவது எளிது.
★ அதாவது, மெய்ஞ்ஞானம் சக்தியைத்தான் இறைவன் என்று குறிப்பிடுகிறது. விஞ்ஞானம் இறைவனைத்தான் சக்தி என்று குறிப்பிடுகிறது.
இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்லும் முன்பு, ஒரு சிறிய கதை.

கடவுள் என்ற அந்த
ஒன்று தான் பிரபஞ்சம்
உருவாகக் காரணம்!
நீ
உருவாகக் காரணம்.
ஏன்,
நீயும் பிரபஞ்சமும்
இயங்குவதற்கே
அதுதான் காரணம்!
சேவானந்தார் என்று ஒரு சீடர், வெளியூர் சென்று விட்டு ஆஸ்ரமம் நோக்கி வந்து கொண்டிருந்தார். தூரத்தில் ஒரே கூட்டம். என்ன நடக்கிறது என்று ஆவலோடு எட்டிப்பார்த்தார். சேவானந்தாருக்கு அதிர்ச்சி... நாய் ஒன்று தட்டில் கிடந்த சாப்பாட்டைச் சாப்பிட முயன்று கொண்டிருந்தது.
அதன் மீது சேவானந்தரின் குரு அமர்ந்து கொண்டு சவாரி செய்து கொண்டிருந்தார்.
சேவானந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன கண்றாவி இது! குருவே, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று குழப்பத்தோடு கேட்டார். குருவோ சாவகாசமாகப் பதில் சொன்னார். "பார்த்தால் தெரியவில்லையா...? யாரோ ஒரு பிரம்மம். பிரம்மத்தில் பிரம்மத்தைப் பிசைந்து வைத்திருக்கிறது. அதை நாலு கால் பிரம்மம் சாப்பிட முயற்சி செய்கிறது. அதன்மேல் இன்னொரு பிரம்மம் சவாரி செய்கிறது. இந்த மாபெரும் நிகழ்ச்சியைப் பல பிரம்மங்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றன. அவ்வளவுதான்!" என்றார் குரு.
குருவின் பேச்சைக் கேட்ட மக்கள், "என்ன பைத்தியக்காரத்தனம் இது!" என்று திட்டிவிட்டுக் கலைந்து சென்றனர். ஆனால், சீடர்
சேவானந்தருக்கு மட்டும் குருவின் பேச்சில் மிகப் பெரிய உண்மை ஒளிந்து கிடப்பதாகத் தோன்றியது.
பக்கத்தில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு தியானிக்கத் தொடங்கினார். தட்டும் பிரம்மம். சாப்பாடும் பிரம்மம். நாயும் பிரம்மம். குருவும் பிரம்மம். மக்களும் பிரம்மம் என்று குருவின் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சேவானந்தரின் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன.
சிறிது நேரம் கழித்து வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, உணர்வுகள் பெருக ஆரம்பித்தன. கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைச் சுற்றி உள்ள எல்லாமே பிரம்மம் என்பதைச் சேவானந்தரால் உணர முடிந்தது.
ஒவ்வொன்றிலும் இறைசக்தி, இறைவன் ஆனந்தமாக நடமாடுவதை அவரால் உணர முடிந்தது. ஒரு கணத்தில் எல்லாமே மாறிவிட்டது சேவானந்தருக்கு. நான் என்ற எண்ணம் மறைந்து, தான் என்ற உணர்வு பிறந்தது, 'எல்லாம் பிரம்மம்; எங்கும் பிரம்மம்; எனக்குள்ளும் பிரம்மம்' என்கிற பூர்ண அனுபவம் பிறந்தது. ஆனந்தம் என்னும் பெருங்கடல் தனக்குள்ளும் வெளியிலும் எப்போதும் நிரம்பிக்கிடப்பதை அனுபவித்தார். ஞானத்தின் முதல் அனுபவத்தைச் சேவானந்தர் பெற்று விட்டார்.
எல்லாம் பிரம்மம்; இறைவன் எங்கும் இருக்கிறார். எல்லா இடத்திலும் இறைசக்தி பரிபூர்ணமாக இருக்கிறது என்பதை எடுத்துச்சொல்லத்தான் இந்தக் கதையைச் சொன்னேன்.
இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றால், அவர் இல்லாத இடம் என்று ஓர் இடம், ஏன் ஓர் அணுகூட இருக்க முடியாது.
| வி | விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார் | |
|---|---|---|
| ஞ் | ||
| ஞா | - ஒரு செல்லுக்குள் பிரபஞ்சமே தெரியும்! | |
| ன | ||
| ம் |
இறைவன் சக்தி வடிவானவர். இறைவன் உருவம் அற்றவர் என்பது ஆன்மீகத்தின் அடிப்படை உண்மை. இறைவன் ஒரு தனி ஆளாக இருக்க முடியாது. அது ஒரு சக்தியாக இருக்கலாம். இறைச் சக்திக்கு உருவம் கொடுப்பது மதங்கள்தான். -இது ஒரு நல்ல துவக்கம். முடிவு அல்ல.
இறைவன், சக்தி வடிவில் இருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்? இதற்குக் குவாண்டம் பிசிக்ஸ் (Quantum physics) அருமையான விளக்கம் சொல்கிறது. ஒவ்வோர் அணுவிறகுள்ளும் 99.99 சதவீதம் வெற்றிடம்தான் இருக்கிறது. அந்த வெற்றிடத்தில் தொடர்ந்து அதிர்வுகள்தான் இருந்துகொண்டே இருக்கின்றன. அந்த அதிர்வுகள்தான் சக்தியாக வெளிப்படுகின்றன. ஒவ்வோர் அணுவும் சக்திமயம். ஒவ்வொரு பொருளும் சக்திமயம். இன்றைய விஞ்ஞானம் அனைத்தும் சக்தியால் நிறைந்திருக்கிறது என்று கூறுகிறது.
மெய்ஞ்ஞானம்
கண்ணோட்டத்தில்
பார் -
முழுப் பிரபஞ்சமே
சாதாரண ஒரு
சொல்லாகத்
தெரியும்!
இதைத்தான் ‘இறைவன் சக்தி வடிவானவர்’ என்றும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவர் என்றும் சொன்னார்கள் நம்முடைய ஞானிகள். இது மெய்ஞ்ஞானம்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் வளராத காலத்திலேயே, நம்முடைய ஞானிகள் இந்தப் பிரம்மாண்டமான உண்மையை எடுத்துச்சொல்லி இருக்கிறார்கள். மனித அறிவுக்கு எட்டாத, மனித மனதிற்குப் புலப்படாத ஏதோ ஒன்றை நிதர்சனமான அனுபவமாக உணர்ந்ததால் மட்டுமே, இவ்வளவு பெரிய உண்மைகளை அவர்களால் சொல்ல முடிந்தது.
சக்தி அழிவில்லாதது. ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறும். பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மறைந்துவிடும். அதன் பிறகு இரும்புப் பட்டை, கார்பன் துண்டுகளில் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிந்து வேறு ஒரு பொருளாகவோ, அல்லது பேட்டரியாகவோ மாறிவிடும்.
அது போலத்தான் மனித உயிர் உருவான பின், ஒரு குறிப்பிட்ட காலம் வரை மனிதனாக இருந்துவிட்டுப் பின்பு காற்றில் கலந்து விடுகிறது.
காற்றில் கலந்த உயிர், மீண்டும் மனிதனாக உயிர் பெறுகிறது. இப்படிச் சக்தி மாறி மாறித் தோன்றிக்கொண்டே இருக்கிறது. பிரபஞ்ச இயக்கத்தில், பிரபஞ்சக் கால அட்டவணையில், மனிதத் தோற்றம் ஒரு கணநேர நீர்க்குமிழி போன்றது.
இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று ஞானிகள் சொன்னது இதைத்தான். மனிதனிலும் துரும்பிலும் அடிப்படையாக இருப்பது சக்தியே. சக்தியே எங்கும் நிறைந்திருக்கிறது. அந்த சக்திதான் இறைவன் . ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறி உருவம் எடுத்தாலும் சக்தி எப்போதும் நிலைத்திருக்கிறது.
நமது உடல்கூட நமது உயிர்ச்சக்தியின் ஒரு போர்வை மட்டுமே. கடவுள் ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறார். ஒவ்வோர் அணுவிலும் இருக்கிறார்!
எல்லாம் இறைவன் விளையாட்டு!
“அவர் செய்யும் தவறுகள்கூடப் புனிதமானவை” எனச் சொன்ன ஜென் ஞானியிடம் “யார் அவர்?” எனச் சீடர் கேட்டார்.
“இறைவன்” என்றார் ஞானி. எல்லாமே இறைவனின் செயல். அதில் சிலவற்றை மனிதன் தவறு என்பதால் சிலவற்றைப் புனிதம் என்கிறார். உண்மையில் இறைவன் இரண்டுக்கும் இடைப்பட்டவர்.
மொத்தப் பிரபஞ்சமும் இறைவனின் விளையாட்டுக்களம். இந்த விளையாட்டுக்களத்தில்... இறைவனின் அசைவுகள்... ஒருவருக்கு நடனமாகவும் ஒருவருக்கு ருத்ர தாண்டவமாகவும் ஒருவருக்கு அமைதியின் முழுmessagesாகவும் தெரிவதே லீலை.
★ ஆக்கம்,
அழித்தல்,
காத்தல்
என்ற மூன்று செயல்களையும் சர்வசாதாரணமாக நிகழ்த்தும்
இறைசக்திதான் நம்மையும் ஆட்டிப்படைக்கிறது.
மொத்தப் பிரபஞ்சத்தின் மீது எந்த அளவிற்கு இறைவனுக்கு அக்கறை இருக்கிறதோ, அதே அளவுக்கு உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லின் மீதும் இறைசக்திக்கு அக்கறை இருக்கிறது.
- உங்கள் உடலில்.... ‘எந்த செல் எவ்வளவு நாள் வாழ வேண்டும். எந்த செல் எப்போது அழிய வேண்டும்’ என்று திட்டமிடுவது நீங்கள் அல்ல. ‘எந்த செல் எப்போது உருவாக வேண்டும். எந்தக் காரியம் எப்போது உலகில் நிகழ வேண்டும்’ என்று திட்டமிடுவதும் நீங்கள் அல்ல.
- அனைத்தையும் திட்டமிட்டு திட்டமிட்டபடியே எல்லாவற்றையும் திண்ணமாய் நடத்தி முடிப்பது இறைவன். எது நடந்தாலும் அது இறைக் கணக்குப்படி நல்லதில்தான் முடியும்.
- முடிவு வரை பொறுத்திராமல் நடுவில் பார்த்தால் சில நேரம் நம்மைச் சுற்றிக் கெட்டது நடப்பது போலத்தான் தோன்றும். ஏன், இறைவன் என்ற ஒருவர் இருக்கிறாரா என்ற சந்தேகம்கூடத் தோன்றும்.
- எல்லாம் இறைவன் விளையாட்டு என்னும் உண்மை புரியாதவரை விளையாட்டு. வினையாகத்தான் தெரியும். புரிந்துவிட்டால் வினைகூட விளையாட்டாய் தெரியும்.
நிட்டி ராஜூக்கு அன்று காலை ஒரு சந்தோஷமான செய்தி காத்துக் கொண்டிருந்தது.
டிசம்பர் 31 - 2000.
“வாழ்த்துக்கள் நிட்டி ! உனக்கு அஸிஸ்டன்ட் மேனேஜர் புரோமோஷன் கிடைத்திருக்கிறது. இந்தா...” என்று அவருடைய புரோமோஷன் கடிதத்தைக் கொடுத்தார் M.D.
M.D. அறையைவிட்டு வெளியே வந்ததும் எல்லோரும் நிட்டியைப் புகழ்ந்தார்கள். நிட்டி, "நல்ல விஷயம்... என்னை மாதிரி சாதாரண ஆளுக்கு இவ்வளவு பெரிய பதவி கிடைத்தது ரொம்ப பெரிய விஷயம்.
எல்லாம் இறைவன் விளையாட்டு" என்று சந்தோஷத்தோடு கூறிவிட்டுச் சென்றார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அடுத்த செய்தி வந்தது.

கேட்டதையெல்லாம்
கொடுக்கும் சக்தி
கடவுளுக்கு உண்டு என
நம்புகிறீர்கள்.
கேட்கிறீர்கள்...
ஆனால், கேட்டதை
எப்போது, எப்படிக் கொடுக்க
வேண்டும் என்ற புத்தியும்
கடவுளுக்கு உண்டு என
நம்ப மறுக்கிறீர்கள்.
கடவுள் வள்ளல்
மட்டுமல்ல.
புத்திசாலியும் கூட!
M.D. "சாரி நிட்டி! தவறுதலாக பெயர் மாற்றி அடிக்கப்பட்டுவிட்டது.
பதவி உயர்வு கிடைத்தது ந்ழ். மோகன் ராமுக்கு.
உங்களுக்கல்ல...
சாரி, கஷ்டப்படாதீர்கள் நிட்டி!" என்றார்.
நிட்டி, "நல்ல விஷயம். எல்லாம் இறைவன்
விளையாட்டு. இதில் நீங்கள் ஏதும் தவறு
செய்ய வில்லையே. நீங்கள் ஏன் சாரி
சொல்கிறீர்கள்?
வருத்தப்படாதீர்கள்" என்று M.D-க்கு ஆறுதல் சொல்லிச் சென்ற நிட்டியை ஆச்சரியத்தோடு M.D. பார்த்தார்.
ஜனவரி 1 -2001. மேனேஜர் அறையில்...
M.D. "சாரி நிட்டி, ரொம்ப கஷ்டமாயிருக்கு எனக்கு..." என்றார்.
நிட்டி, "கஷ்டப்பட வேண்டாமென்று
நேற்றே சொன்னேனல்லவா சார்..." என்று
சமாதானம் சொன்னார்.
M.D. "நேற்றைய அதிர்ச்சியைவிட இன்று இன்னும் மோசமான செய்தி வந்திருக்கிறது. உங்களை நம் சூப்ரவைசர் கோபாலுக்கு அஸிஸ்டன்டா பதவிக் குறைப்பு செய்திருக்கிறார்கள்.
சாரி. எனக்குக் கஷ்டமாயிருக்கிறது" என்றார்.
நிட்டி, “ஆஹா... அப்படியா! இதுமாதிரியான பதவிக் குறைப்பு ஆயிரத்தில் ஒருவருக்கு நடப்பதே பெரிய விஷயம்தானே.
இறைவனின் இந்த விளையாட்டும் நன்றாகத்தான் இருக்கிறது.
நல்லது! என் சந்தோஷம் இதனால் பாதிக்கப்படவில்லை. நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க? நிம்மதியா இருங்க சார்" என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு விட்டார்.
ஜனவரி 2-2001.
காலை 11.00 மணி.
M.D. "சாரி நிட்டி, எனக்கு ரொம்ப ரொம்பக் கஷ்டமாயிருக்கிறது...
குழப்பம் கம்ப்யூட்டரில் நடந்த குளறுபடியால், நேற்று பதவிக் குறைப்பு செய்ததாய் தவறான செய்தி வந்து சேர்ந்துவிட்டது..." என்றார்.
நிட்டி, "நல்ல விஷயம்தானே!
என் பதவிக் குறைப்புதான் சரியாகி விட்டதே. இன்னும் ஏன் கஷ்டப்படுகிறீர்கள்?" என்று கேட்டார். M.D. "சாரி நிட்டி, உன்னை வேலையை விட்டே தூக்கிட்டாங்க!" என்று வருத்தத்தோடு சொன்னார்.
நிட்டி ஒரு முறை மேலே பார்த்துவிட்டு, "சார், லட்சத்துல ஒருத்தர்க்குக்கூட இப்படி நடக்காது. தப்பே செய்யாமல் தண்டனை கிடைக்காது.
காரணமே இல்லாம எப்படி வேலை போகும். சாத்தியமே இல்லை. இறைவன் என்னமா விளையாடறார் சார்!
எல்லாம் நல்லத்துக்குத்ததான், ஓ.கே. நான் விடைபெறுகிறேன். நீங்க தேவையில்லாம கஷ்டப்படாதீர்கள். நிம்மதியாக இருங்க சார்!" என்று கூறிவிட்டுச்
| பி ரா ர் த் த னை | பயம், ஆசை வரும் நேரம் மட்டுமே, உங்கள் பிரார்த்தனை நேரமாக உள்ளது. |
சென்றார்.
"இந்த சூழ்நிலையை இப்படிக் கூட அணுக முடியுமா!" என்று ஆச்சரிய விழிகளோடு நிட்டி போவதையே பார்த்துக் கொண்டிருந்தார் M.D.
ஜனவரி 3 - 2001.
காலை 11.00 மணி.
தொலைபேசியில், "நிட்டி! உங்களுக்கு பதவி உயர்வு, பதவிக்குறைப்பு என்று வந்தது கம்பயூட்டரோட தவறில்லை. உங்களுக்கு பதவி பறிப்பு என சொன்னது என்னோட தவறு" என்று M.D. சொன்னார்.
நிட்டி, "அப்படியா! என்ன சொல்றீங்க?" என்று கேட்டதற்கு, "வேலையை விட்டுத் தூக்கப்பட்டது ஓ. நிட்டி ராஜன். நீங்க இல்லை.
நீங்கள் எப்போதும் போல சூப்ரவைசர்தான். பதட்டத்துல இனிஷியலை தப்பா நான் படித்து, சாரி நிட்டி..." என்று M.D. கூறினார்.
நிட்டி, "எல்லாம் இறைவன் விளையாட்டு. மூன்று நாளா விளையாட்டு படு சூப்பர் இல்ல..." என்று சிரித்துக்கொண்டே தொலைபேசியை வைத்தார்.
நாம் இறைசக்தியை நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது இருப்பது உண்மை. அது எங்கும் எதிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பதும் உண்மை.
இந்த ரகசியத்தை ஆழமாகப் புரிந்துகொண்டால் நாமும் விளையாட்டை ரசிக்கலாம். ஏன், இறைவனோடு சேர்ந்து நாமும் விளையாடலாம்.
சிவராத்திரி தினத்தில்,
"இறைவனின் விளையாட்டில்,,,
| இ | சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது... |
|---|---|
| றை | |
| ச | இறைசக்தியின் வெவ்வேறு வடிவங்களான இவைகள் உங்களைக் கட்டுப்படுத்தும் சக்தி |
| க் | பெற்றவையே! தினம் தியானம் செய்து தியானசக்தியைப் பெற்றவர், அந்த |
| தி | இறைசக்தியையே தன் கைக்குள் கொண்டுவருவார்! ராகு கேதுகூட அந்தச் சாதுவை |
| எதுவும் செய்ய முடியாது! |
வெற்றியும் வெற்றிதான்.
தோல்வியும் வெற்றிதான்.
இந்த இறைச் சித்தாந்தம் அனுபவமாகி விட்டதால் சிரிப்புக்கும் ஆனந்தத்திற்கும் பஞ்சமே இருக்காது" என்று கேசவரிஷி சொற்பொழிவுவாற்றிக் கொண்டிருந்தார்.
பண்டிதர் ஒருவர் எழுந்து, "அது எப்படி சாமி, எப்போதும் நம்மைச் சுற்றி நகைச்சுவையும், சிரிப்பும் இருந்துக் கொண்டே இருக்க முடியும்? இதற்கும் இறைச் சித்தாந்தத்திற்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டார்.
கேசவ ரிஷி, "உன்னைப் பார்த்து, நீயே
சிரிக்க ஆரம்பித்தால் அதுவே பல காலம்
தொடரும்" என்றார்.
பண்டிதர், "அதெப்படி சாமி?" என்று கேட்டார்.
கேசவ ரிஷி, பக்கத்தில் இருந்த சீடரைக்
காட்டி, "இவரைப் பார். இவர் புத்தசாலி.
ஆனால், இவர் தன்னை முட்டாள் என்று
நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், நீங்கள் உங்களைப் பற்றிய உண்மை தெரியாததால் உங்களை ஒரு புத்தசாலி என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று சொல்லி முடிக்க சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள்.

இறைவனை
நீங்கள்
நம்புவதால் இறைவனுக்கு
எந்த பயனுமில்லை.
உங்கள் நம்பிக்கையே
உங்களை
உற்சாகப்படுத்தும்.
அந்த நம்பிக்கையே
உங்களை
மகாராஜா
போல்
வாழவைக்கும்
“சாமி, நீங்க சொல்றது எனக்குப் புரிய வில்லை”.
“இறைச்சித்தாந்தம் கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடியதல்ல. அனுபவித்துப் புரிந்துகொள்ள வேண்டியது” என்றார் கேசவ ரிஷி.
“எல்லாம் இறைவன் விளையாட்டு” என்பது சாதாரண கூற்றல்ல. மகா வாக்கியம்.
இந்த ஒரே ஒரு உண்மையை அனுபவப்பூர்வமாக புரிந்துகொண்டால், உடலில் உயிரோடு வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் உலகில் ரசிக்க முடியும். இது முயன்றால் சாத்தியமாகக்கூடிய ஒன்றே!
அர்த்தமுள்ள சம்பவம்...
சூஃபி ஞானியிடம் நாத்திகர், “கடவுள் எங்கேயிருக்கிறார், எப்படியிருக்கிறார்?” எனக் கேட்டதற்கு,
“கடவுள்.. மலைக்குள் தூங்குகிறார். மலர் மற்றும் தாவரங்களுக்குள் மயங்கிக் கனவு காணுகிறார். மிருகங்களுக்குள் அசைகிறார். மனிதனுக்குள் விழித்திருக்கிறார்” எனச் சொன்னார் ஞானி.
மேலுள்ள வாக்கியங்களை ஆழமாகத் தியானியுங்கள். அது நிஜமாகட்டும்!
நீங்கள் குட்டிக்கடவுளாகலாம் இப்போதே!
கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியவில்லை. கடவுள் இல்லை என்பதையும் நிரூபிக்க முடியவில்லை.
பிரபஞ்சம் தோன்றியது இப்படித்தான் எனச் சொல்லும் (Big bang theory) -யால்கூட தோற்றுவாய் வரைதான் விடிவிரிக்க முடிந்தது.
தோன்றுவித்தது எது எனச் சொல்ல
முடியவில்லை. கடவுள் என்பவர் கடவுளாக
ஏற்றுக்கொள்ளப்படக் காரணம் அவர்தான்
எல்லாவற்றையும் படைத்தார் என்பதால்!
படைப்பாற்றல் கடவுளின் ரகசியம். படம், எல்லாம்.
> கடவுளாகும் முன்,
> மனிதா!
> கலைஞனாகு!
கடவுள் கருமி அல்ல, சுயநலவாதி அல்ல. என நிரூபிப்பதற்காக உங்களுக்குள் படைப்பாற்றல் வைக்கப்படவில்லை. அது கடவுள் தந்த சொந்தப் பரிசு! பந்தப் பரிசு!
படைப்பாற்றல் கடவுளின் இரத்த ஓட்டம், அந்த இரத்த உறவு மனிதருக்குள் தொடர்கிறது.
படைப்பாற்றல் மிகுந்தவர்கள்
கடவுளின் நேரடி மைந்தர்கள்.
அவரின் பாகங்கள் அவர்கள்.
செய்யும் செயலில் கவனம்,
அது செய்யும் விதத்தில் நயம்,
அது செய்யப்படுவதில் புதுமை சேர்ந்தால்
நீங்கள் செய்வது எதுவானாலும் அது படைப்பாற்றலே. வெளிவருவது புதுப் படைப்பே.
செயலில் முழுக் கவனம், நயம், புதுமை தொடர்ந்து கலந்திட உங்களின் தனித்துவம் வெளிப்படும். ஆனந்தம் அரும்பும். தியானம் நிகழும்.
கடவுள் கலைத்துவம் மிக்க படைப்பாளி. நீங்கள் ஒரு படைப்பாளியாக மாறினால்... கடவுளை நெருங்குகிறீர்கள். தொடர்ந்து புதுமையாய் செய்யுங்கள். அப்படியே வாழுங்கள். நீங்கள் படைப்பாளியாகும் ஒவ்வொரு நிமிடமும் கடவுளின் உதிரம் உங்களுக்குள் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடவுள்தன்மை வெளிப்படுகிறது.
படைப்பாற்றல் வெளிப்படும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஒரு குட்டிக் கடவுளாகுகிறீர்கள். தியானம் நிகழ்கிறது!