KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/சொர்க்கமா? நரகமா?Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

சொர்க்கமா? நரகமா?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்கள் சாய்ஸ்

* கோபம், வெறுப்பு, கவலை, துக்கம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும் நீங்கள் உண்மையில் வாழ்வது நரகத்தில்தான். அந்த நிமிடங்களில் நரக உணர்வான துன்பத்தைத்தான் ருசிப்பீர்கள்.

* சாந்தம், சந்தோஷம், நிம்மதி, அன்பு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும் நீங்கள் நிச்சயமாக வாழ்வது சொர்க்கத்தில்தான். அந்த நிமிடங்களில் சொர்க்க உணர்வான இன்பத்தைத்தான் ருசித்துக் கொண்டிருப்பீர்கள்.

* துன்பத்தையும் இன்பத்தையும் தாண்டிய ஒரு நிலைதான் ஆனந்தம்.

நரகத்தையும் சொர்க்கத்தையும் தாண்டிய ஒரு வெளிப்பாடுதான் ஞானம்.

சிலர் விடாப்பிடியாக மற்றவர்களுக்கு நன்மைகள் மட்டுமே செய்து கொண்டிருப்பார்கள். தானம், தர்மம் மாதிரியான விஷயங்களில் தாராளமாக இருப்பார்கள்.

இவர்களின் நோக்கம், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதல்ல. இறந்த பிறகு சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்பதுதான்.

மற்றவர்களுக்குக் கெடுதல் செய்பவர்களைப் பார்த்து, இவன் நரகத்துக்குத்தான் போவான்’ என்று சபிப்பதையும் கேட்டிருக்கிறோம். மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நரகத்தில்தான் சரியான தண்டனை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்தான் இப்படியெல்லாம் சாபம் விடுகிறார்கள்.

கொதிக்கும் எண்ணெயில் குளிப்பாட்டுவது, தீயில் வாட்டுவது, கசையடி கொடுப்பது போன்ற தண்டனைகள் நரகத்தில் தரப்படுவதாக நமக்குப் படங்களோடு விளக்கிக் காட்டப்படுவதால், சாதாரண மனிதர்களுக்கும் சிறு குழந்தை முதலே பயம் தொத்திக் கொள்கிறது.

உண்மையில் சொர்க்கம், நரகம் என்று ஒன்று உண்டா? இந்தக் கேள்விக்குப் பதில் காண்பதற்கு முன்பு, ஒரு சிறிய ஜென் கதையைச் சொல்கிறேன். கேளுங்கள்.

போர்வீரர் ஒருவர் ஒருநாள் ஜென் ஞானியைச் சந்தித்து, "சொர்க்கம், நரகம் என்று உண்மையிலேயே உள்ளதா?” என்று கேட்டார்.

ஞானியோ, "நீ யார் என்பதை முதலில் சொல்?” என்றார்.

"நான் ஒரு போர்வீரன்” என்று கர்வத்தோடு சொன்னான் அந்த வீரன்.

"நீயா? போர்வீரனா?” என்று லேசான கிண்டலோடு கேள்வியைத் தொடுத்தார் ஞானி. "உன்னை எந்த அரசன் காவலுக்கு வைத்துக் கொள்வான்? உன் முகத்தைப் பார்த்தால் ஒரு பிச்சைக்காரனைப் போல் இருக்கிறதே! ஒரு போர் வீரனுக்கு உரிய இலட்சணமே இல்லையே!” என்று கூறி விட்டார்.

போர்வீரன் ஆவேசத்துடன் கொந்தளித்து தன்னுடைய உடைவாளை உருவினான். ஞானியைத் தாக்குவதற்காக வாளோடு சீறி வந்தான்.

உடனே அவனைத் தடுத்து நிறுத்திய அந்த ஞானி, "இதுதான் நரகம்” என்றார். நொடிப்பொழுதில் தன் தவறை உணர்ந்த போர்வீரன், வாளை உறையில் செருகி, தன் மடத்தனத்தை நினைத்துச் சிரித்தவாறே ஞானியை வணங்கினார். "இதுதான் சொர்க்கம்!” என்று ஞானி மீண்டும் சொன்ன போது, மிகப் பெரிய தத்துவத்தை எளிதாகப் புரிந்துகொண்டு விட்ட திருப்தி போர்வீரருக்கு.

சொர்க்கமோ, நரகமோ புவியியல்ரீதியாக எந்த இடத்திலும் இல்லை. மனவியல்ரீதியாகவே உள்ளது. இந்த உண்மை புரியாதவர்கள்தான் மூடநம்பிக்கையில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறார்கள். நாம் புரிந்துகொள்ள வேண்டிய மிகப் பெரிய உண்மை: சொர்க்கமும் நரகமும் வெளியில் இல்லை. நமக்குள்ளேதான் இருக்கிறது. நாம் அதிகமாகக் கோபப்படுகிற நேரம் நரகம். நம் மனதில் கருணை பொங்கி வழியும் நேரம் சொர்க்கம்.

Nithyananda seated in meditation

மனக்கண்ணைத்

திற

நீ

வெளிச்சத்தில் தான்

இருக்கிறாய்

என்ற சத்தியம்

சாத்தியமாகும்!

என்னைச் சந்திக்கும் அன்பர்கள்,
"கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?"
என்கிற கேள்வியைக் கேட்பார்கள். என்னைப்
பொறுத்தவரை மிக மிக எளிதான கேள்வி இது.
கோபத்தைப் பற்றிச் சில உண்மைகளை,
உங்களுக்கு இப்போது சொல்கிறேன்.

"நீ ஒரு ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்து விட்டாய்" என்று உங்களைப் பார்த்து யாராவது சொன்னால் உங்களுக்குச் சிரிப்பு வருமேயொழியக் கோபம் வராது. ஏனென்றால், அது முழுக்கப்பொய் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் "நீ ஒரு அயோக்கியன்" என்று
யாராவது உங்களைப் பார்த்துச் சொன்னால்,
உங்களுக்கு மூக்குக்கு மேல் கோபம்
வந்துவிடும். காரணம் என்ன?

இந்தக் குற்றச்சாட்டில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது என்று அர்த்தம். நமக்குள் எங்கோ மறைந்திருக்கும் நாம் மறைத்து வைத்திருக்கும் மனப்புண்ணின் மேல் மற்றவர்கள் வீசும் வார்த்தைக் கத்தி பட்டு, வேதனை பொங்கும் போதுதான் நாம் வெகுண்டு எழுகிறோம்.

நீங்கள் கோபப்படும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். கோபப்படுவதை அடக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு, கோபத்துக்கான காரணத்தை ஆராயுங்கள். தவறு நம் மீது இருக்கும் போது, நாம் ஏன் அடுத்தவர் மீது கோபப்பட வேண்டும் என்கிற ரீதியில் யோசித்துப் பாருங்கள். நீங்கள் கள்ளம் கபடமில்லாதவர், தவறே செய்யாதவர் என்றால், யாராவது உங்களைப் பார்த்துச் சுண்டுவிரல் நீட்டிப் பேசமுடியுமா?

நாம் கோபப்படுகிற போது ஒன்றைக் கவனிக்க வேண்டும். வலிமை குறைந்தவர்களிடத்தில் நாம் காட்டுகிற கோபம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.

உங்களுக்குக் கீழே இருக்கும் வேலைக்காரர் ஒருவர், ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவதற்கு மட்டுமே தகுதியானவர் என்றால், அவருக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே நாம் கொடுக்கிறோம். மூவாயிரமோ, ஐயாயிரமோ அள்ளிக் கொடுத்துவிடுவதில்லை. ஒரு மடங்கு வேலைக்குப் பல மடங்குக்க் கூலி நாம் தருவதில்லை.

ஆனால், அதே ஊழியர் ஒரு சிறு தவறு செய்துவிட்டால், ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக ஐந்தாயிரம் ரூபாய் அளவுக்குக் கோபமாகக் கொட்டுகிறோம். யாருக்கு இழப்பு அதிகம்? யோசியுங்கள்.

அளவுக்கு அதிகமாக நாம் கோபத்தை வெளிக்காட்டும்போது, நம் 'கிரியாசக்தி' அநியாயமாக வீணாகிறது. எந்தக் காரியத்தையும் சிறப்பாகச் செய்வதற்கு அடிப்படையாக இருப்பது இந்தக் கிரியாசக்திதான். அளவுக்கதிகமாகக் கோபப்படுகிறவர்கள் எளிதில் உற்சாகமிழந்து, சக்தி இழந்துவிடுவதற்குக் காரணம், இந்தக் கோபம்தான்.

எனவே, எவ்வளவு தேவையோ அதைவிடக் குறைந்த அளவே கோபப்படுங்கள்.

கோபப்படுங்கள் என்று நான் உங்களிடம் சொல்வது கண்டு ஆச்சரியப்படாதீர்கள். கோபம் ஒரு மன உணர்வு. உலக வாழ்க்கையில் அதற்கு அர்த்தமும் தேவையும் இருக்கின்றன. ஆனால், அளவுக்கு மீறினால் அதுதான் உங்கள் எமனாகவும் இருக்கும்.

அஎவ்வளவு தேவையோ அதைவிடக்
ளகுறைந்த அளவே கோபப்படுங்கள்!
வு

கோபத்தை அடக்கி வைக்கிற போது, அது நம் மனசுக்குள் கிடந்து குமுறுகிறது. வெளிவர முடியாத கோபம், நம் உடலுக்குள் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அடிக்கடிக் கோபப்பட்டு, அதை வெளிக்காட்ட முடியாமல் மனசுக்குள் போட்டு அமுக்கி விடுகிறவர்களுக்கு, இரத்த அழுத்தம் வருகிறது. மாரடைப்பு வருகிறது. நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகள் எல்லாம் ஏற்படுகின்றன.

ஆனால், அளவுக்கு மீறிக் கோபப்படும்போதுதான் பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன. எனவே, கோபம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள குதிரையாக இருந்தால், நீங்கள் தாராளமாக ஊர் போய்ச் சேரலாம். இல்லாவிட்டால் கட்டுக்கடங்காத குதிரை உங்களைக் கீழே தள்ளிவிடும்.

அளவுக்கு மீறிய கோபம்தான், சாபமாக மாறும். சாபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள அதிகக் கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள். கோபத்தை நீங்கள் தேவைப்படும் போது பயன்படுத்துங்கள். சக்தியைச் சேமியுங்கள். முக்தி நோக்கி நகர ஆரம்பிப்பீர்கள்.

கோபத்தைப் போன்றே, மனிதருக்குத் துன்பத்தையும் வேதனையையும் உணர வைக்கும் எல்லா நிமிடங்களிலும் நிகழ்வுகளிலும் மனிதர் நரகத்தில் வாழ்கிறார்.

சந்தோஷத்தைப் போன்றே மனிதனுக்கு இன்பத்தையும் உற்சாகத்தையும் உணர வைக்கும் எல்லா நிமிடங்களிலும், நிகழ்வுகளிலும் மனிதர் சொர்க்கத்தில் வாழ்கிறார்.

நாம் முயன்றால் சொர்க்கத்தை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். சொர்க்கமும் நரகமும் ஒரு தனிமனிதரின் கையில் இருக்கின்றன. உங்கள் சொர்க்கத்தை உருவாக்குங்கள்!

Nithyananda

கதவைத் திற ...

காற்று வரட்டும் !

உலக வாழ்க்கையை அருமையாக வாழ்வது எப்படி? என்பதைப் பற்றிய கதவைத்திற... காற்று வரட்டும்! உற்சாகத் தொடர் சொல்லும் சத்தியங்களை வெறுமனே நம்பாதீர்கள்.

நவ நாகரீக மனிதனுக்கு அது மிக கடினம். யோசித்துப் பாருங்கள்... சோதித்துப் பாருங்கள்... "இந்த புத்தகம் சொல்லும் சத்தியங்கள், என் வாழ்வை வளமாக்கும் சத்தியமாக ஏன் இருக்கக்கூடாது? ஒரு வேளை இருந்துவிட்டால்?!!!" என்ற மன நிலையோடு, கட்டுரைகளை படித்து, சோதித்து வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துங்கள்.

அப்போதுதான் அது ஆன்மீகம், ஆனந்தம்.

  • எல்லையில்லா இறைசக்தி, மனமென்னும் மாய எல்லைக்குள் சிக்கிக் கொண்டதால் உருவான உயிரே மனிதன்!
  • உடலுமல்ல, மனமுமல்ல, உயிருமல்ல நீங்கள் இம்மூன்றையும் சாட்சியாய் கவனிக்கும் விழிப்பு நிலை.
  • 'நான் கடவுள்' என்பதை நிரூபிப்பதற்காக வரவில்லை. 'நீங்கள் கடவுள்' என்பதை நிரூபிப்பதற்காக வந்திருக்கிறேன்.
  • "சொர்க்கமும் நரகமும் புவியியல் ரீதியல்ல மனோரீதியானது. சொர்க்கம் உனக்குள்ளே..."
  • "மனிதர்கள் இரண்டே வகை. கடவுளாக வாழும் மனிதன் மனிதனாக வாழும் கடவுள்"
  • "வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் - வேதம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும் - குரு வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் - தியானம்"

பரமஹம்ஸ நித்யானந்தர் பற்றி...

21-ஆம் நூற்றாண்டில் மெய்ஞானத்தோடு விஞ்ஞானத்தை சமைத்து வழங்கும் ஞான சத்குருநாதர்.

உலக அமைதியை உடனடியாக ஏற்படுத்தும் நேரடித்தீர்வான ஜீவன் முக்தர்களை உருவாக்குவதே என் பிறப்பின் நோக்கம் எனும் அவதாரபுருஷர்.

யோகம், தியானம், தீக்ஷைகள், தியான சிகிச்சைகள் மூலமாக தனிமனிதர்களின் வாழ்வை உயர்த்துவதற்காக, தன்னுடைய ஒரு நாளில் 20 மணி நேரத்தை பொதுமக்களுக்காகவே பயன்படுத்தும் தியாக புருஷர்.

மக்கள் சேவைக்காக 12,000 மேல் தியான சிகிச்சையாளர்களை உருவாக்கி, 300 சன்யாசிகளை உருவாக்கி, சேவைக்காகவே உருவாக்கப்பட்ட 120 தியானபீடங்களின் மூலமாக, 33 நாடுகளில் சேவைகளை செய்துவரும் ஞான புருஷர்.

நித்யானந்த தியானபீடம்

நித்யானந்த தியான பீடம்,
நித்யானந்தபுரி, மைசூர் ரோடு,
பிடதி, பெங்களூரு - 562109
கர்நாடகா.

ISBN 1-60607-090-8
Ebook ISBN:
979-8-88572-160-8
978-1-60607-090-1

விலை ரூ. 200/-