KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/பதிப்புரைSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

பதிப்புரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பரமஹம்ஸரின் பரவசச் செய்திகளை மக்களுக்குச் சேர்க்கும் மகேச சேவையில் ஆனந்தமடைகிறோம். நிம்மதி பெறுகிறோம்.

'கதவைத் திற... காற்று வரட்டும்!' பாகம் - 1 புத்தகத்தின் இரண்டாம் பதிப்பின் 50,000 பிரதிகளும் விற்றுத் தீர்ந்த நிலையில், வாசகர்களின் பேரரதரவோடு மூன்றாம் பதிப்பு துவங்கியிருக்கிறது.

'தியானம்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புத்தகம், புத்தக உலகில் மாபெரும் சாதனை புரிந்திருக்கிறது. புத்தகம் வெளியிடப்பட்ட அன்றே 1,00,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்து, இன்று 2,36,274 பிரதிகளைத் தாண்டி இப்புத்தகம் மக்களிடம் சேர்ந்திருக்கிறது என்ற குறிப்பை இங்கு குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

உங்களுள் பெரும் ஆவலைத் தூண்டிக் கொண்டிருக்கும் 'கதவைத் திற... காற்று வரட்டும்!' பாகம் - 2 புத்தகம் ஒரு புத்தகம் அல்ல. இது பரமஹம்ஸரால் வடிக்கப்பட்ட ஞானசிலை.

வாழ்வின் சிகரமான ஆனந்தத்திலிருந்து கீழிறங்கி சாதாரண மனிதனைக் கூட நித்ய ஆனந்தத்திடம் அழைத்துச் செல்ல வந்திருக்கும் தியான உருவம் இப்புத்தகம் என்பதை நாங்கள் உணர்ந்துவிட்டோம். படித்து முடித்தபின் எங்களை நோக்கி ஈசல் போல் பறந்து வரப்போகும் உங்களின் உணர்வு மடல்களுக்காகக் காத்திருக்கிறோம்.

உங்களின் ஆனந்தமே எங்களின் இலக்கு!

இப்படிக்கு
நித்யானந்தத்தில்
நித்யானந்த பதிப்பகம்