KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/மன்னித்து... மறந்துவிடுங்கள்!Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

மன்னித்து... மறந்துவிடுங்கள்!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* உங்கள் கோபத்தால் பாதிக்கப்படுவது! உங்கள் மன்னிப்பால் பலன்பெறுவது!

  • இரண்டுமே எதிராளி அல்ல. நீங்கள்தான்!

* தொடர்ந்து உங்கள் உடலும் மனதும் கொதித்துக்கொண்டிருந்தால் மாத்திரமே கோபக்கனல் மூலம் மற்றவர்களைச் சிறு தவறுக்காகக் கோபித்துக் கொண்டு சக்தி விரயம் செய்ய முடியும். வெறுப்பு கொள்ளமுடியும்.

  • இதில் யாருக்குப்பாதிப்பு அதிகம்?

கோபப்படுபவருக்கா? இல்லை பொங்கும் கோபத்தின் வெளிப்பாடான உங்கள் சீற்றத்தை மேம்போக்காக எடுத்துக்கொள்ளும் எதிராளிக்கா?

* மன்னித்துவிட்டால், மன்னித்த அடுத்த நிமிடமே கோப எரிமலை குளிர்ந்து விடும். உடலும் மனமும் இலகுவாகி விடும். கோபத்தில் சக்தி விரயமாவது மிச்சமாகும். பழிதீர்க்க யோசனை செய்யும் நேரம் மிச்சமாகும்.

சக்தியும், நேரமும் மிஞ்சினால் பலன் பெறப் போவது...

  • மன்னிப்பவரா? இல்லை,
  • மன்னிக்கப்படுபவரா?

யோசியுங்கள் ! யோசனை கொடுக்கும் உற்சாகத்தோடு கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்....

சூஃபி ஞானியைத் தேடி வந்தார் சீடர் ஒருவர். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்ளத்தான் அந்தச் சீடர் வந்திருந்தார்.

ஆனால் சீடரின் முகத்திலோ கவலையின் ரேகைகள். அவர் மனம் அமைதியாக இல்லை என்பதைச் சொல்கிற மாதிரி இருந்தன அவரது நடவடிக்கைகள்.

ஞானியின் வீட்டுக்கதவை ‘டமால்’ என்று அதிரடியாய்த் தட்டித் திறந்தார். திறந்த வேகத்திலேயே மீண்டும் கதவை ‘டமால்’ என்று மூடினார்.

portrait

சுயக்கட்டுப்பாட்டுத்

திறனைப் பொறுத்து

கோபம் ஒரு சக்தி

அல்லது கத்தி!

மன்னித்தால்

ஒரு அருமருந்து!

அவர் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி ஒரு மூலையில் விட்டெறிந்தார். இதனால் கொஞ்சம் ஆசுவாசமடைந்துவிட்டு, நல்ல பிள்ளையாக, ஞானியின் முன்பு உட்கார்ந்தார். ஞானிக்கு மரியாதை செலுத்தினார்.

ஞானியோ, சீடரின் மரியாதையை ஏற்றுக் கொள்ளவில்லை. "நான் உன் மரியாதையை ஏற்றுக்கொள்ள மாட்டேன். முதலில் அந்தச் செருப்பிடமும் கதவிடமும் சென்று மன்னிப்புக் கேட்டுவிட்டு வா!" என்றார் ஞானி.

சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘ஞானி
என்னவோ உளறுகிறாரே!’ என்கிற மாதிரி
பார்த்தார்.

"செருப்பிடமும் கதவிடமும் போய் எப்படி மன்னிப்புக் கேட்க முடியும்? அவையென்ன உயிருள்ள பொருள்களா? நான் அவற்றிடம் மன்னிப்புக் கேட்காவிட்டாலும் அவற்றுக்கு என்ன தெரியப் போகிறது?" - தான் ஓர் அதிபுத்திசாலி என்கிற நினைப்பில் ஞானியிடம் கேள்விகளை அடுக்கி கொண்டே போனார் சீடர்.

சீடரின் பேச்சைக் கேட்டு, ஞானி கோபமடைந்து விடவில்லை, "நீ இங்கு வந்தபோது கோபத்தோடு வந்தாய். அந்தக் கோபத்தை யார் மீதாவது காட்டி அமைதியடைய, உன் கோபத்தை மனிதர்கள் மீது காட்டுகிற அளவுக்கு உனக்குத் தைரியமில்லை. எனவே செருப்பின் மீதும் கதவின் மீதும் காட்டினாய். உன்னிடம் உதைபடுவதற்கும், அடிபடுவதற்கும் செருப்பும் கதவும் என்ன தவறு செய்தன?

உன் கோபத்தைக் காட்டுகிறபோது மட்டும் அதற்கு உயிர் இருப்பதாக நினைத்தாய். ஆனால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லும்போது மட்டும் அவற்றை உயிரற்ற ஜடம் என்று கூறுகிறாய்.

இதனை நான் எப்படி ஏற்றுக்கொள்வது? உன்னை என்னால் சீடராக ஏற்றுக் கொள்ள முடியாது" என்றார் ஞானி.

ஞானி சொன்னதை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டினார் சீடர். ஆனால், அதற்காக ஞானியைவிட்டுச் செல்லவும் சீடருக்கு மனம் வரவில்லை. இதையெல்லாம் தாண்டி ஞானியின் வார்த்தைகளில் ஏதோ ஒரு செய்தி மறைந்திருப்பதாக உணர்ந்தார்.

"நான் தேடிவந்தவர் கொஞ்சம் வித்தியாசமானவர்தான். இவர் கூறுவதில் உண்மை இருப்பது போலத் தெரிகிறது. எனவே, அவர் சொல்கிறபடி நடந்து கொள்வோம்" என்று நினைத்து மன்னிப்புக் கேட்கத் தயாரானார்.

"நண்பர்களே! என் அவமதிப்பைப் பெரிய விஷயமாக நினைக்காதீர்கள். பெரிய மனதோடு மன்னித்துவிடுங்கள்!" என்று கெஞ்சலாகக் கேட்டார் சீடர்.

சீடர் உண்மையான எண்ணத்தோடு அந்தச் செயலைச் செய்யவில்லை. மன்னிப்புக் கேட்கும் போது கொஞ்சம் கேலியும், கிண்டலும் குரலில் கலந்திருந்தன. என்றாலும் மன்னிப்புக் கேட்டு முடிந்தவுடன், சீடரின் மனதில் ஏதோ ஒரு மாற்றம். இவ்வளவு நேரம் தன் மனதை வருத்திக் கொண்டிருந்த பாரம் ஒன்று, தானாகவே கழன்று கீழே விழுந்துவிட்ட மாதிரி உணர்ந்தார்.

"விளையாட்டுக்காக மன்னிப்புக் கேட்டேன். அதற்கே என் மனம் இவ்வளவு இலகுவாகிறதே? உண்மையாகவே நான் மன்னிப்புக்கேட்க ஆரம்பித்தால், இன்னும் எனக்கு எவ்வளவு அமைதி கிடைக்கும்!" என்று எண்ண ஆரம்பித்தார் சீடர். மீண்டும் ஒருமுறை உண்மையாகக் கேட்டார். உள்ளுக்குள் ஒருவிதமான சுக உணர்வு பெருகுவதை உணர்ந்தார்.

அன்றிலிருந்து அவர் முற்றிலும் மாறிப்போனார். நீங்களும் மன்னிக்க ஆரம்பியுங்கள். புது மனிதராய் மாறி விடுவீர்கள்.

| ம ன் னி ப் பு | மன்னிக்கக்கூடிய மனது மகத்தானது. அதைப் பெற நீங்கள் போராட வேண்டியது அவசியமில்லை. எதையும் கருணையோடு பார்க்கத் தெரிந்தாலே போதும். மன்னிக்கும் மனோபாவம் மலர்ந்துவிடும்! |

மன்னிக்கக்கூடிய மனது மகத்தானது. அதைப் பெற நீங்கள் போராட வேண்டிய அவசியமில்லை. எதையும் கருணையோடு பார்க்கத் தெரிந்தாலே போதும், மன்னிக்கும் மனோபாவம் மலர்ந்துவிடும்.

"மன்னிக்கும் மனோபாவம், அப்படியென்ன அதி அவசியமான ஒன்றா?" என்று நீங்கள் கேட்கலாம். ஒருவர் தவறு செய்கிறார். அவர் மீது உங்களுக்குக் கோபம் வருகிறது. நீங்கள் அவரை மன்னிக்காதவரை, உங்கள் கோபம் குறைவதில்லை. சொல்லப்போனால் கோபம் அதிகமாகிக்கொண்டே செல்லும்.

அளவுக்கதிகமான கோபம் உங்கள் உடலிலும் மனதிலும் பலவிதமான பிரச்சனைகளை உண்டுபண்ணும். வீட்டில் ஏதோ ஒரு மூலையில் உருவாகும் ஒரு சிறு தீப்பொறி, கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி வீட்டையே அழித்துச் சாம்பலாக்கிவிடுவதுபோல, கட்டுப்பாட்டில் இல்லாத கோபம் உங்களைச் சர்வநாசமாக்கிவிடும்.

இந்தச் கொடுந்தீயை அணைக்கும் வல்லமை மன்னிக்கும் மனதுக்குத்தான் உண்டு. எனவே, தாராளமாக மன்னியுங்கள்!

முக்கியமான விஷயம் - மன்னித்த பிறகு, அதை உடனடியாக மறந்து விடுங்கள்.

"நீ எவ்வளவு பெரிய தவறுகளெல்லாம் செய்தவன் தெரியுமா? ஆனால் உன்னை மன்னித்துவிட்டேன். எனவே, நான் உயர்ந்தவன். நீ ஓர் அற்பன்!" என்றெல்லாம் உங்களைப் பற்றி நீங்களே உயர்வாக நினைத்து, இன்னொரு தவறைச் செய்துவிடாதீர்கள்.அகங்காரத்திலேயே மிக மோசமானது, 'நான் நல்லவன்' என்கிற நினைப்பதனால் வரும் அகங்காரம்தான்.

ஆகவே, மன்னிக்கக் கற்றுக் கொள்வோம். அதை உடனடியாக மறக்கவும் கற்றுக் கொள்வோம்.

மறக்க முடியவில்லை என்றால், மன்னித்துவிட்டேன் என்ற பெயரில் வேஷம் போடுகிறீர்கள் என்று அர்த்தம் முழுமையாக மன்னித்துவிட்டால், மன்னித்தல் நிகழும்போது மறத்தலும் நிகழ்ந்துவிடும்!

சந்தோஷத்தை அளிப்பதும்

அழிப்பதும்...

* மக்களைக் கற்பனையிலேயே வாழச் செய்யும். சில பொழுதையே போக்கும் அம்சங்களால் மனிதமனம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது வருத்தத்திற்குரிய உண்மை.

* கற்பனை உலகில்தான் நாம் வாழ்கிறோம் என்பதை அறியாமல் கற்பனைகளை நிஜம் என்றும் நிஜத்தைக் கற்பனை என்றும், பாதிக்கப்பட்டதால் தெளிவற்றுப் போன மனதிலிருந்து முடிவுகள் எடுப்பதால்தான் வாழ்க்கையில் பல குழப்பங்கள்.

* கற்பனை நிஜமாக முடியாது.
நிஜத்தைக் கற்பனை செய்ய முடியாது.
இது நடைமுறை உண்மை.

* மனிதன் செய்யும் 100 கற்பனைகளில் ஒன்றிரண்டு நிஜமானால் அதுவே பெரிய விஷயம். இதற்குப் பெரிய விளக்கம் தேவையில்லை. உங்களின் மனஏட்டில் சொந்த அனுபவங்கள் எனும் பகுதியைப் புரட்டிப்பாருங்கள். புரியும்.

அந்த மனிதன் புலியிடமிருந்து தப்பிக்க மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தான். ஓடி ஓடி மலையின் விளிம்புக்கே வந்து விட்டவன்... பதட்டத்தில் தடுமாறி விழுந்தான்!

மலையிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தவன் கையில் சிவப்புப் பழங்கள் நிறைந்த பெரிய புதர் அகப்பட்டது. அதைப் பற்றிய அந்த மனிதன் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான்.

மேலே புலி, கீழே பள்ளத்தாக்கு!
இதையெல்லாம் தாண்டி, பிடித்திருக்கும்
புதரோ வலுவிழந்து கொண்டிருந்தது.

அந்த ஊசலாடும் கணத்தில், அந்த
மனிதனின் கண்களில் புதரில் பழுத்துத்
தொங்கிய சிவப்புப் பழங்கள் தென்பட்டது.
ஒரு கையால் சிவப்புப் பழத்தைப் பறித்து
வாயில் போட்டுக்கொண்டார். சுவைக்க
ஆரம்பித்தார். ‘என்ன ருசி! என்ன
இனிமை!’ அதுவரை அவரின் வாழ்வில்
ஒரு சிவப்புப்பழம் அவ்வளவு
இனிமையாக இருந்ததில்லை!

“ஐயோ, கீழே விழுந்தால்
என்னாவோம்”. என்ற கற்பனைகள் அந்த
மனிதனிடம் அந்த நிமிடத்தில் இல்லை.
அதனால்தான் பயத்திலேயே சாகவேண்டிய
சூழலில் கூட ஒரு பழத்தின் இனிமையை
இனிமையாக ருசிக்க முடிந்தது.

portrait of Nithyananda

பொதுச்சந்தையின்
ஜனசத்தத்திற்கு
இணையானது
மனஅட்டையின்
சத்தம்.
நீங்கள்
அமைதி ஆக ஆக
அச்சத்தம்
தெளிவாய் கேட்க
ஆரம்பிக்கும்!

உங்களின் பயம், எரிச்சல், துக்கம் எல்லாமே யாரோ அல்லது ஏதோ ஒன்றைச் சுற்றி உருவான கற்பனைகளால் உருவாகுபவைதான்.

நடந்த அல்லது நடக்கப் போகிற ஒரு காரியத்தை நாம் கற்பனை செய்யும் கோணத்தைப் பொறுத்து நிம்மதியும் நிம்மதியின்மையும் நிர்ணயமாகிறது.

மனித வாழ்க்கையில் நிகழும் 100 நிஜ அனுபவங்களில் 99 அனுபவங்கள் திடீரென்று இயல்பாகவோ, இயற்கையாகவோ நடைபெற்றதாக இருக்கும்.

நாம் தயாராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் விசித்திரமான அனுபவங்களை நாம் சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நாம் தயாராக இருந்தால் எதிர்பாராத வாழ்க்கை அனுபவங்கள் சந்தோஷத்தை அளிக்கும். இல்லையென்றால் அவைதான் நம் சந்தோஷத்தை அழிக்கும்.

தங்களின் சந்தோஷத்தை அழித்துக் கொண்டிருந்த தம்பதியினர், எல்லோருக்கும் சந்தோஷத்தை அளித்துக்கொண்டிருந்த சர்வ சாக்கிய முனியைச் சந்திக்கச் சென்றார்கள்.

சர்வ சாக்கிய முனியின் குடிசைக்குள் தம்பதியினர் நுழைய... சாக்கிய முனி, "வாங்கFocus! வாங்கோ! வாங்கோ!" என்று, ஒரு கூட்டத்தையே வரவேற்பது போல அவர்களை வரவேற்றதில் தம்பதியினரின் மனம் பூரித்தது.

சாக்கிய முனி "ஏன் இவ்வளவு கூட்டம்? முதலில் ஒரே ஒரு ஜோடி மாத்திரம் உள்ளே வாங்க. மற்றவர்களை அப்புறம் பார்க்கிறேன்" என்று அந்த தம்பதியினரைப் பார்த்துச் சொன்னார்.

| கோ ப ம் | கோபம் உனக்கு வர உடலுக்குள் அமிலமழை பெய்கிறது. கோப ஹார்மோன்களாய்! |

தம்பதியினரை பீதியும் குழப்பமும் பற்றிக்கொண்டது.

ஏனென்றால் அந்த அறையில் அவர்கள் மூன்று பேரைத் தவிர்த்து வேறு யாரும் இல்லை.

சரி ஆனது ஆகட்டும் என்று தம்பதியினர் சாக்கிய முனியின் முன் சென்று உட்கார்ந்தார்கள்.

சாக்கிய முனி மீண்டும் அறையைப் பார்த்து, “சொன்னா கேட்கமாட்டீர்களா! இப்படி நீங்கள் எல்லோருமே கூட்டமாக என்னைச் சுற்றி உட்கார்ந்து கொண்டால், நான் யாருக்கென்று பேசுவேன்? ஒருவரைக்கூட என்னால் திருப்திப் படுத்த முடியாதே!” என்று தலையில் கைவைத்துக் கொண்டார்.

யாரும்
வாழ்க்கைத் துணையோடு
வாழ்வதில்லை.

அவர்களைத் தவிர வேறு யாரும் அந்த அறையில் இல்லாததால் தம்பதியினரை பீதி முழுவதுமாக ஆட்கொண்டு விட்டது.

இருவருக்கும் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது!

சாக்கிய முனி, “சரியப்பா, முதலில் நீங்கள் இரண்டு பேரும் உங்களின் பிரச்சனையைச் சொல்லுங்கள். அப்புறமாக மற்றவர்களிடம் பேசுகிறேன்!” எனச் சொன்னார்.

முதலில் கணவன் கொஞ்சம் தைரியத்தை வளர்த்துக் கொண்டு, “எனக்கு மனைவியா வாய்ந்த இவள்தான் என்னுடைய எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணம். முதலில், என் கஷ்டம் நீங்க ஒரு வழி சொல்லுங்க சாமி” என்றான்.

வா
ழ்க்
கை

தெரியுமா... உங்களுக்குள்
ஒரு நரகமே வாழ்கிறதென்று!
யாரும் வாழ்க்கைத் துணையோடு
வாழ்வதில்லை.

சாக்ய முனி, "பொய் சொல்லாதே! எனக்குக் கெட்ட கோபம் வரும். உனக்கு இரண்டு மனைவிகள்" என்று சொல்ல -

கணவன் திடுக்கிட்டான். "நான் இன்னொரு பெண்ணோடு வாழ்கிறேன் என்ற விஷயம் என் மனைவிக்கே சில நாட்களுக்கு முன்தான் தெரியும். இவருக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?" என்று யோசித்துக் கொண்டே இருக்க -

மனைவி "எனக்கு வாய்த்த இந்தக்
கணவன் சரியில்லை சாமி. இந்த மனுஷனிடம்
பக்தியாக வாழ்ந்ததில் என் வயிறு பத்தி
எரிந்ததுதான் மிச்சம்" என்று கணவனைக்
குத்திப் பேசினாள்.

சாக்ய முனி, "கலிகாலம்! ஒரு
பெண்ணாயிருந்தும் கூசாம பொய்
பேசுகிறாயே. உண்மையில் உனக்கு இரண்டு
கணவன்கள்!" இதைக் கேட்ட மனைவிக்கு
தேள் கொட்டியது போல இருந்தது.

கணவனுக்கு உண்மையாக தூக்கிவாரிப்
போட்டது. "இவ்வளவு பெரிய
ஏமாற்றுக்காரிக்கு பயந்து பயந்தா நான்
வாழ்ந்தேன்?" என்று யோசிக்க யோசிக்க
கோபம் தலை உச்சிக்கு ஏறியது.

மனைவி, "சாமி, இவருக்கு இன்னொரு மனைவி இருப்பது உண்மை. ஆனால், நான் தர்மபத்தினி. கற்பூரத்தை என் கையில் ஏற்றுங்கள். அது சொல்லட்டும் நான் எப்படிப் பட்டவள் என்று" என்று கூற -

Nithyananda

மனமிருந்தாலும்
இருப்பதைத்தானே கொடுக்க
முடியும்
- தாவோ கீதம்
உங்களின் உணர்வில்
இருக்கும் ஆனந்தத்தின்
அளவைப் பொறுத்தே -
நீங்கள் மற்றவருக்கு
ஆனந்தத்தை அளிப்பதும்
அழிப்பதும் அமையும்.

☞ ஆனந்த உணர்வை
அதிகரிக்கச் செய்யுங்கள்.
எல்லாம் சரியாகும்.

சாக்கிய முனி, "ஏ! மடப்பெண்ணே! அப்போ நீ முழு உண்மை தெரியாமல் இருக்கிறாய் - உண்மையில் உன் கணவனுக்கு நான்கு மனைவிகள். உனக்கு இரண்டு கணவன்கள்" என்று கூறினார்.

கணவன் குழப்பத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டான்: அது யார் எனக்கே தெரியாத அந்த மற்ற இரண்டு மனைவிகள்.

மனைவி ஒரு புத்திசாலிப் பெண். ஏற்கெனவே ஞானிகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பவள். எனவே ஒரு ஞானி சொன்னால் அதில் ஒரு சத்தியம் இருக்கும் என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டாள்.

நீ
சிரிக்க
உன்
ஒவ்வொரு
செல்களும்
குதிக்கிறது
சிரிப்பு
உடலுக்குள்
அள்ளித் தெளித்த
ஆனந்த
ஹார்மோன்களாய்!

மனைவி, "சாமி என்னுடைய அந்த இன்னொரு கணவன் யார்?" என்று கேட்டாள்.

சாக்கிய முனி, "இங்கே முதல் கணவன். உன் கணவன் இப்படிப்பட்டவன் என்று நீ வைத்திருக்கும் உன்னுடைய அபிப்பிராயம்தான் அந்த இரண்டாவது கணவன்.

இங்கு இருக்கும் கணவன் வேறு. உன் மனதில் வாழும் உனது கருத்துச் சாயம் பூசப்பட்ட கணவன் வேறு.

நீ உடலளவில் மட்டுமே உன் கணவனோடு வாழ்கிறாய். மனதளவில் உண்மைக் கணவனோடு நீ வாழவில்லை. உன் கருத்துச் சாயம் பூசப்பட்ட இரண்டாவது கற்பனைக் கணவனோடுதான் வாழ்கிறாய்.

உன்னுடைய மனதில் இருக்கும் கணவன் வேறு. நிஜத்தில் இருக்கும் கணவன் வேறு" என்ற மிகப்பெரிய வாழ்க்கை உண்மையை மிக எளிமையாகப் புரிய வைத்தார்.

தன் கணவனுக்கு நான்கு மனைவிகள் எனச் சொன்னது ஏன் என்பது அப்பெண்ணுக்கு எளிதாகப் புரிந்தது. மனைவி, "சாமி, அப்படியென்றால் எங்ககூட கூட்டமாக பலர் உட்கார்ந்திருப்பதாக நீங்கள் சொன்னது?" என்று கேட்க,

சாக்கிய முனி, "உன் மனதில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உன் நல்ல, கெட்ட உறவுகளையும், உன் கணவன் மனதில் வாழும் உறவுகளையும், மொத்தமாகச் சேர்ந்தால் ஒரு கிராமமே உங்களுக்குள் வாழ்கிறது.

நீங்கள் பேசிக்கொள்ளும் போது இருவர் பேசிக்கொள்வதில்லை.

இரண்டு கிராமம் பேசிக் கொள்கிறது.

அது போல் சண்டையிட்டுக் கொள்ளும்போதும் இரண்டு கிராமமே சண்டையிட்டுக் கொள்கிறது.

"உங்கள் மனதில் இருக்கும் உங்களின் சொந்தக் கருத்துக்களால் உருவாக்கப்பட்ட மனிதர்களை (கற்பனைகளை) துரத்தாத வரை சந்தோஷம், ஆனந்தம் சாத்தியமில்லை" என்று சொல்லி முடித்தார்.

இருவர் ஒன்றுசேர்ந்து வாழும் குடும்ப வாழ்க்கை மேலும் மேலும் சந்தோஷத்தையும் அழிக்கிறது என்பதற்கான காரணம் என்ன என்பது தம்பதியினருக்குப் புரிந்தது. கற்பனைகளைத் தூக்கி எறிந்து நிஜக் கணவன், நிஜ மனைவியாக வாழ ஆரம்பித்தார்கள்.

இந்தக் கட்டுரையைப் படித்த யார் வேண்டுமானாலும் நிஜ வாழ்க்கையை இன்றிலிருந்து வாழத் துவங்கலாம்!

உறவுகளைப் பற்றிய கற்பனை வடிவங்களுக்கும் உங்களுக்கும் இடையில் நடக்கும் மனச்சச்சரவுக்கும், மன சஞ்சலத்திற்கும் வெளியில் இருக்கும் நிஜஉறவுகளைக் குற்றம் சாட்டி கஷ்டத்துக்குள்ளாக்குறீர்கள். இந்த மந்ததனத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்.

இன்றிலிருந்து நிஜத்தில் வாழ்ந்து மற்றவர்களுக்கு மேலும் மேலும் சந்தோஷத்தை அளிப்போம். சந்தோஷத்தை அழிக்கும் கற்பனைகளை அழிப்போம்!

அர்த்தமுள்ள சம்பவம்...

டி.வி. நிகழ்ச்சியொன்றில் முகுந்த் மனைவியிடம், "உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?" எனக் கேட்டதற்கு, "என் இரண்டு மகன்களும் நல்ல வேலையிலிருக்கிறார்கள்" எனச் சொன்னார். நிருபர்!" "மகன்களின் வயது என்ன?" "டாக்டருக்கு வயது ஆறும். இன்ஜினியருக்கு வயது மூன்றும் ஆகிறது" எனச் சொன்னார் கலையாத கற்பனைகளோடு.

கற்பனைவலைக்குள் சிக்கிக்கொண்ட மின்மினிப் பூச்சிதான் மனம். தப்புவிக்கப்பட வேண்டும்!