காரணமேயில்லாமல் வரும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஆனந்தமே ஆனந்தம்!
சுற்றும் பூமி நிற்பதில்லை. பூமி சுற்ற ஆளுமில்லை. ஆனாலும் அது நிற்பதில்லை. நிற்பதே இல்லை. எப்படி? ஏன்? அதுதான் இயற்கை. உங்களின் இயற்கை என்ன...
காரணமேயில்லாமல் துக்கப்படுவது மனித இயற்கை. காரணம் இருந்தால் மட்டுமே சந்தோஷப்படுவதும் மனித இயற்கையே.
ஒன்றைக் கேட்கிறேன்... சிந்தியுங்கள்!
காரணமேயில்லாமல் உங்களால் துக்கப்பட முடியும்போது, காரணம் இருந்தால் மட்டுமே சந்தோஷப்படுவதும் மனித இயற்கையே.
திடீர்
என
துக்கம் வர
முடிந்தால்...
ஆனந்தம்
வர
முடியாதா?
எது
பெரியது?
ஒன்றைக் கேட்கிறேன்... சிந்தியுங்கள்!
காரணமேயில்லாமல் உங்களால் துக்கப்பட முடியும்போது, காரணமேயில்லாமல் உங்களால் ஆனந்தப்பட முடியாதா?
இரண்டுமே இயற்கையானது.
அதனால் சும்மாயிருக்கும்போதே ஆனந்தப்படுவது சாத்தியமானதுதான்.
உங்களின் எல்லா சந்தோஷங்களையும் ஆராய்ந்தால் அதற்கொரு மூல காரணம் இருக்கும். உங்களின் விருப்பமாகவே அது இருக்கும்.
சந்தோஷத்தின் சாவி
விருப்பத்தின் கையில்
சிக்கிக்கொண்டுள்ளது.
விளைவு - உங்கள் விருப்பம் சம்பந்தப்பட்ட சந்தோஷ நிகழ்வுகளை மட்டுமே, ‘சந்தோஷ நிகழ்வுகள்’ என ஏற்றுக்கொள்வீர்கள்.
உண்மையிலேயே சந்தோஷமான நிகழ்வுகள் உங்களைச் சுற்றி நிகழ்ந்தாலும் அது உங்களின் விருப்பத்தோடு ஒத்துப்போகாததால், "இதுக்காகவா இவ்வளவு பெரிய சிரிப்பு... ரொம்ப சிறுபிள்ளைத்தனமா இருக்கிறார்கள்..." என ஏதாவதொரு முத்திரை குத்தி, நிகழ்வுகளை மனதில் ஏளனப்படுத்தி விடுவோம். சந்தோஷத்தை அழிப்போம்.
காரணகாரியங்கள் எனும் ஆட்டுவிப்பான் இருக்கும் வரை சந்தோஷம் என்பது எப்போதாவது பூக்கும் பூவாக மட்டுமே இருக்கும்.
சிட்டுக்கிளி
உனை
வெட்டுக்
கிளி போல்
ஆக்கியது.
விருப்பம்
எனும்
மாயக்
கூண்டு!
விருப்பம் எனும் வரையறையைத் தாண்டுங்கள்.
காரணமேயில்லாமல் துக்கப்படுவது, காரணமேயில்லாமல் பொங்கும் ஆனந்தமாக மாறும்... விருப்பங்கள் எனும் வட்டத்தைவிட்டு வெளியே வரும் நிமிடத்தில்!
