தீர்ப்புக் கூறாதே!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தாய் மகனிடம், "பிளம் கேக்கைத் திருடிச் சாப்பிட்டாயா?" என வெகு கோபத்தோடு கேட்டார்.
மகன் "ஆமாம், சாப்பிட்டேன்" என்றான் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல்.
"நீ அந்த கேக்கை திருடும்போதுகூட, கடவுள் அங்கேதான் இருந்தார் என்ற விஷயம் உனக்குத் தெரியுமா?" எனக் கேட்டு, தன் மகன் குற்றம் செய்திருப்பதைச் சுட்டிக்காட்ட முயற்சித்தார்.
"ம்ம்... தெரியும்" என்றான் மகன் வெகு இயல்பாக. தாய்க்கு மகனின் பதில்கள் மேலும் எரிச்சலைத் தந்தது...
"நீ என்ன செய்தாலும் உன்னைக் கடவுள் கவனிக்கிறார் என்பது தெரியுமா?"
"ம்... ம்... தெரியம்மா!"
"நீ திருடும்போது உன் செயலைப் பார்த்து அவர் என்ன சொல்லிக் கொண்டிருந்தார் என்று உனக்குத் தெரியுமா?" எனக் கேட்டதற்கு,
மகன் "கிசுகிசுவென மெல்ல கடவுள் சொன்னார்... சமையலறையில் நம் இருவர் மட்டும்தான் இருக்கிறோம். அதனால், பயப்படாதே. எனக்கும் சேர்த்து இரண்டு பிளம் கேக்காக எடுத்துக்கொள் என்றார்!" எனச் சொன்னான்.
பொய் சொன்னதால் வாய் அடைத்து நின்றார். எது மெய்? எது பொய்? என இங்கு தீர்ப்பிட முடியுமா...
★ யாரையும் எதையும் எப்போதும்
- தீர்ப்பிட முடியாது என்பது உண்மை.
- தீர்ப்பிடக்கூடாது என்பது அறிவுரை.
- தீர்ப்பிடாமல் இரு என்பது தியானம்.
★ கையில்லாதவர் கழுத்தில்லாதவருக்கு மாலை அணிவிக்க முயன்றால்... எப்படியிருக்கும்? ஒருவர் இன்னொருவரைப் பற்றிச் சொல்லும் கருத்துக்களும் தீர்ப்புகளும் அப்படிப்பட்டதே!
★ நம்மை நாமே புரிந்துகொள்வது கடினம். பல வேளைகளில் நம்மைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வருவது நமக்கே கடினமாக இருக்கும். இதைக் கவனித்திருக்கிறீர்களா?
★ நம்மைப் பற்றியே நமக்குத் தெளிவாகப் புரியாத பட்சத்தில் - உலகத்தையும் உறவுகளையும் மதிப்பிட ஆரம்பித்தால் அந்தத் தீர்ப்பு எப்படி இருக்கும்...
அது மஞ்சள்நிறக் கண்ணாடி போட்டுக்கொண்டு ஊதா நிறத்தை ஆராய்ச்சி செய்து, நான் கண்டுபிடித்தது 'பச்சை' என தீர்வு எழுதுவதைப் போன்று இருக்கும்.
இந்த ஒரு உதாரணத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால் மொத்தத் தொல்லைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
★ நம் மனக்கண்ணைக் குருடாக வைத்துக்கொண்டு மற்றவர்களின் குணத்தைப் பற்றியும்
நடத்தையைப் பற்றியும் விமர்சிக்க ஆரம்பிக்கும்போதுதான் வினையே ஆரம்பிக்கிறது.
பார்வையில்லாதவர் ஒருவர் தன் நண்பர் முல்லா நஸ்ருதீன் வீட்டிற்கு விருந்திற்காக வந்திருந்தார். விருந்து முடிந்து அவர் வீடு திரும்பும் போது, முல்லா நஸ்ருதீன் அவரிடம் ஒரு விளக்கைக் கொடுத்தார்.
பார்வையில்லாதவர், "என்ன இது?" என்றார்.
முல்லா நஸ்ருதீன், "இது விளக்கு. போகும்
வழியில் நீ கஷ்டப்படாமல் செல்வதற்காக"
என்றார்.
பார்வையில்லாதவர், "என்ன முல்லா?
கிண்டலா! எனக்கு எதற்கு விளக்கு?" என்றார்
சற்றே கோபமாக.
முல்லா நஸ்ருதீன், "இல்லையப்பா. இது
உனக்காக அல்ல உனக்கு எதிரே
வருபவர்களுக்காக.
விளக்கு இருந்தால், அவர்களுக்காவது தெளிவாகத் தெரியும், யார் எதிரே வருகிறார்கள் என்று.
நீ கஷ்டப்படாமல் வீடு சேரலாமில்லையா? அதற்காகத்தான்" என்று விளக்கினார்.
விளக்கம் கேட்ட பார்வையில்லாதவர், தன்
நண்பரின் அறிவையும் அன்பையும் நினைத்துப்
பெருமிதப்பட்டவராய் வீடு நோக்கி நடந்தார்.
வீடு நோக்கி நடந்துகொண்டிருந்த குருடரின் மீது யாரோ சடார் என்று மோதவே,

நிறக்குருடு
நிறங்களை மறைக்கும்
அவ்வளவு.
மனக்குருடோ
நிறைகளையும்
வாழ்க்கையையும் சேர்த்து
மறைத்து விடும்.
குருடர், "யாரப்பா நீ, கண்ணு தெரியல! அதான் விளக்கை கையில் பிடிச்சிட்டு வரேனில்ல!" என்றார் கோபமும் சலிப்புமாக.
இடித்தவர், "ஐயா, தயவுசெய்து மன்னிக்க வேண்டும். நான் வேணுமென்றே இடிக்கவில்லை. நான் ஒரு குருடர்" என்றார்.
"............." பதில் ஏதும் பேச முடியாமல் திரும்ப விளக்கோடும் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார் குருடர்.
மீண்டும் குருடரின் மீது யாரோ 'சடார்' என்று மோதவே, "என்னய்யா இது? அதுதான் விளக்கைப் பிடிச்சிட்டே வரேனில்ல. பார்த்து வரக்கூடாதா?" என்றார் கோபச் சலிப்பில்.
இடித்தவர், "ஐயா, நீங்க விளக்கை கையில் வைத்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் விளக்கு அணைந்து போயல்லவா இருக்கிறது!" என்றார்.
நம்மைப் பற்றிய தெளிவு நமக்கு முழுமையாகத் தெரியாதபட்சத்தில் ஒவ்வொருவரும் ஒருவகையில் குருடர்கள்தான். அதாவது மனக்குருடர்கள்.
மனக்கண்ணை, "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற குருட்டு இருள் கவ்விக் கொண்டிருக்க...
கடையில் கிடைக்கும் சில புத்தகங்கள், சில மனிதர்கள் கூறும் (வியாபாரம் கலந்த) கருத்துக்களை விளக்கு போன்று வைத்துக்கொண்டு, வாழ்க்கை என்னும் சாலையில் ஒய்யாரமாக நடக்க முயற்சி செய்தால் அந்தக் குருடர்போல் இடிபட்டு, இடிபட்டு நோக வேண்டியதுதான்.
மனக்குருடராயிருப்பவரின் எதிரே முழுப்பார்வை நிறைந்தவரே (ஞானியே) வந்தாலும் கூட மனிதனால் பிரித்துப் பார்க்க முடியாது.
நமக்குத் தெரிந்த சிலவற்றைக் கொண்டு அவர் அப்படி, இவர் இப்படி என்று தீர்ப்பு கூறுவது போன்ற ஒரு கீழ்த்தரமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது.
| ம | மனிதரை மனிதனாய் மதிப்பவர் | |
|---|---|---|
| தி | ||
| ப் | அபிப்ராயங்களைக் கடந்தவர்! | |
| பு |
யாரையும், எதையும் தோராயமாகத்தான் கூறுகிறோம் என்ற உண்மை தெரியாததாலும் உண்மையைத்தான் நாம் கூறுகிறோம் என்று ஊர்ஜிதமாக நடக்கும் இரு பெரிய தவறுகள்.
ஒன்று, உங்களைப் பற்றி நீங்களே நல்லவர் அல்லது கெட்டவர், மனிதன் அல்லது மிருகம் என்ற முடிவுக்கு வருவீர்கள்.
இரண்டாவது, மற்றவர்களைப் பற்றி அவர் நல்லவர் அல்லது கெட்டவர், மனிதன் அல்லது மிருகம் என்ற முடிவுக்கு வருவீர்கள். ஆனால் நிஜத்தில், இரண்டுமே கற்பனை. இரண்டுமே பொய்.
முழு யோக்கியனும் அரிது. முழு அயோக்கியனும் அரிது.
நல்லவர் என்ற சான்றிதழை நாம் ஒருவருக்களிப்பது, அவரின் அயோக்கியத்தனங்கள் நமக்குத் தெரியாத வரைதான். அதேபோல் கெட்டவர் என்று நாம் ஒருவரை சொல்வது, அவரின் ஆத்மார்த்தமான குணங்கள் நமக்குத் தெரியாத வரைதான்.
நம்முடைய அபிப்பராயங்களைக் கோலாகவும் தீர்ப்பைக் காலாகவும் மனத்தெளிவை வெளிச்சமாகவும் வைத்து நடக்கும் இந்த ‘பந்தபாசம்’ என்னும் வாழ்க்கை நாடகத்தை இனிதே நடத்த, தீர்ப்பு என்னும் கால்களை உதறுங்கள்! அபிப்ராயங்கள் என்னும் கோலைத் தூக்கி எறியுங்கள்!
மனக்கண் ஒளி பெற ஆரம்பிக்கும். நிஜம் நிஜமாகத் தெரியும்!
> தீர்ப்பிடாதீர்கள்!!!
> தீர்ப்புக்கள்
> தீர்க்கமான
> உறவைக்கூட
> அறுத்துவிடும்.
அர்த்தமுள்ள சம்பவம்...
உலகின் எல்லா தீர்ப்புக்களுக்கும் புத்தரின்
வைரம் பாய்ந்த விளக்கம்:
• “மனிதனின் எல்லா வரையறைகளும் விளக்கங்களும்
கொள்கைகளும் நிஜத்தைப் பற்றிய
பொய்யான விரிவுரைகள்”.