KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/தியானம் செய்யாதேSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

தியானம் செய்யாதே

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • வெறும் உடலால் மாத்திரம் தியானம் செய்வது... ஒரு நல்ல உடற்பயிற்சி! அவ்வளவே.

உடலோடு சேர்த்து மனதையும் தியானத்தில் ஈடுபடுத்துவது ஒரு நல்ல சடங்கு. அதற்குமேல் ஆகாது.

உடல், மனம், உயிர் ஆகிய மூன்றையும் முழுமையாக தியானமுறையில் ஈடுபடுத்தினால்தான் அது தியானம்!

  • ஒரு தியானிக்கு - சிரத்தை (Sincerity) ஒரு மகா பொக்கிஷம். அது ஒரு அடிப்படைத் தகுதியும்கூட.
  • சிரத்தையில்லாதவரால் தியானத்தின் சிறந்த பலன்களைப் பெறவே முடியாது.
  • ஆழ்ந்த சிரத்தையை, செய்யும் செயலிலெல்லாம் கொண்டுவரக் கற்றுக் கொண்டுவிட்டால், செய்யும் செயலெல்லாம் தியானமாகும்.

ஒரு ஜென் சீடரும் ஒரு சூஃபி சீடரும்...

ஜென்: உன் வாழ்வின் சுவாரஸ்யமான பகுதி எது? சூஃபி: ‘நான் ஒரு முட்டாள்’ என்ற உண்மையைப் புரிந்துகொண்ட அந்த நாள்! ஜென்: உன் வாழ்வின் சங்கடமான பகுதி எது?

சூஃபி: ‘நான் ஒரு புத்திசாலி’ என்று நம்பிக்கொண்டிருந்த அந்த எல்லா நாட்களும்!

ஜென்: நீ எதை வேடிக்கை எனக் குறிப்பிடுவாய்?

சூஃபி: அரைகுறையாய் நாமிருக்கும்வரை, நம் நிறைகுறையில் நிறைமட்டும் நம் கண்ணுக்கு நிறையத் தெரியாதது வேடிக்கை.

ஜென்: வாழ்க்கைச் சக்கரம் - இதை எப்படிச் சுருக்கமாய் விளக்குவது?

Nithyananda

தெரியுமா உங்களுக்கு?

தியானத்தில் தொடர்ந்து
விழிப்புணர்வோடு இருக்க
வேண்டுமென்பது
தியானவிதி.

இந்த ஒன்றை சிரத்தையோடு
கடைப்பிடித்தாலே
ஞானமடைந்து
விடலாம்.

சூஃபி: தியானம் செய்ய வேண்டிய
அவசியமில்லை - முட்டாளுக்கும்,
ஞானிக்கும் வாழ்க்கைச் சக்கரத்தில்
இவர்களுக்கு இடைப்பட்ட
நிலையிலிருக்கும் எல்லோரும் தியானம்
செய்தே ஆக வேண்டும். தெரிந்து
செய்தால் அதன் பெயர் தியானம்.
இல்லாவிட்டால் மனிதர் செய்வது உலக
சாதனை.

உன் மூலமாக உன் மனதுக்குத்
தரப்படும் சோதனைக்குப் பெயர்
தியானம். உலகம் மூலமாக உன்
மனத்துக்கு தரப்படும் சோதனைக்குப்
பெயர் சாதனை.

தியானம் ஒரு சாதனை! சாதனை ஒரு
தியானம்! பித்தனுக்கும் புத்தனுக்கும்
இடைப்பட்ட வாழ்க்கைச்சக்கரத்தின்
அச்சாணியான தியானத்திலிருந்து ஒரு
மனிதர்கூட தப்பிக்க முடியாது” என்றான்.

⋆ தியானம் உங்களின் வாழ்க்கை.

உங்கள் வாழ்வே ஒரு தியானம்தான்.

சிரத்தையோடு முழுமையாகச் செய்யும் சடங்கு கூட தியானம்தான்.

சிரத்தையில்லாமல், முழு ஈடுபாடில்லாமல்

செய்தது தியானமாக இருந்தாலும், இது வெறும் சடங்குதான்.

என்ன ஷாக் அடித்த மாதிரி இருக்கிறதா?

சடங்குகளும், சம்பிரதாயங்களும் பலர் நினைப்பது போல் சாதாரண விஷயங்கள் அல்ல.

நிகழ்காலத்தில் நிம்மதியாக நிலையான ஆனந்தத்தில் மனிதர்கள் வாழ்வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட முறைகளில், சடங்களும் ஒன்று. சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவையும் தியான முறைகளே.

ஆனால் இன்றைய நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மதம், குலம், கோத்திரப்படி சில சடங்குகள் மற்றும் காரியங்கள், கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயச் சடங்காக அவை மாறிவிட்டன.

சடங்குகள் அதற்கே உரிய சிரத்தையோடு, முழு ஈடுபாட்டோடும் செய்வது சமூக வழக்கிலிருந்து மறைந்துவிட்டதால், சடங்கு என்றால் அது சாதாரண விஷயம் என்றாகி விட்டது.

மாறாக தியானம் என்றால் இன்றும் கூட மக்கள் மனதில் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.

தியானத்தில் தாங்கள் ஈடுபடாவிட்டாலும்

தியானம் செய்ய வேண்டும்.

தியானம் செய்தால் நல்லது.

தியானம் செய்தால் ஆனந்தம் கிடைக்கும்

  • என்பது போன்ற ரெடிமேடான வாசகங்கள் மக்களிடம் நிறைய இருக்கிறது.

சில நேரங்களில் சிலர் தியானம் என்கிற பெயரில் எதையாவது செய்து கொண்டு, தாங்கள் ஆன்மீகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று நம்புவதுண்டு.

வி லை

சிரத்தை என்பது ஆனந்தம் பெற நீங்கள் தரும் விலை!

மேற்கண்ட எல்லாவற்றிற்கும் தீர்வு தரும் ஒரு நாடோடிக் கதை.....

லி-மஜோலிக்கு, பல வருடமாக சாசென் தியானம் செய்தும் தனக்கு இன்னும் முக்தி கிடைக்கவில்லையே என்ற வருத்தம்.

‘யாராவது ஒரு வாழும் ஞானியைப் பார்த்து, இதற்குத் தீர்வு கண்டுபிடித்தாக வேண்டும்’ என்ற லி-மஜோலியின் பல நாள் ஏக்கம் அன்று பூர்த்தியானது.

ஞானி, இசாக்கிய மிந்தாவைச் சந்திக்கும் வாய்ப்பு லி-மஜோலிக்கும் கிடைத்தது.

லி-மஜோலி, இசாக்கிய மிந்தாவை வணங்கிவிட்டு, "15 வருடங்களாக சாசென் தியானம் செய்கிறேன். இன்னும் முக்தி கிடைக்கவில்லை. நீங்கள் எனக்குத் தீர்வு கொடுக்க வேண்டும்” என்றார்.

ஏமாற்றுவதை

ஏமாற்றுவதே சிறந்த

இசாக்கிய மிந்தா, வெகுகோபமான குரலில் தன் சீடர்களைப் பார்த்து, "இது போன்ற முட்டாளை யார் உள்ளே விட்டது? உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தியே இருக்காதா!" என்று சீறினார்

லி-மஜோலிக்குக் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போல இருந்தது. அவமானத்தால் கோபம் உள்ளுக்குள் பொங்கியது. இருந்தும் தனக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமே! எனவே மீண்டும், "நான் 15 வருடமாக...” என்று ஆரம்பிக்க,

இசாக்கிய மிந்தா, "உன்னோடு பேச விருப்பமில்லை. போய் வா” என்று உறுதியாகச் சொன்னார்.

தீர்வு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் லி-மஜோலியை வாட்டி எடுத்தாலும் இசாக்கிய மிந்தாவின், "....விரும்பவில்லை.... போய் வா...” என்ற முரண்பட்ட வார்த்தைகள் லி-மஜோலியின் மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது.

அடுத்தநாள் இசாக்கிய மிந்தாவை வழியில் சந்திக்கும் வாய்ப்ப லி-மஜோலிக்குக் கிடைத்தது.

லி-மஜோலி வணங்கிவிட்டு, "15 வருடமாக தியானம் செய்தும் எந்தப் பலனும் இல்லை. நான் என்ன செய்வது?" என்று கேட்டார்.

ச

ட

ங்கு

சடங்கு தியானமாகலாம்.

தியானம் சடங்காகக் கூடாது!

இசாக்கிய மிந்தா, "தியானம் செய்யதே" என்று இரண்டு வார்த்தையைச் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார்.

லி-மஜோலிக்கு மனதே இரண்டாய் பிளந்து போல இருந்தது.

லி-மஜோலிக்கு வாழ்க்கை மீது
வெறுப்பு வந்து விட்டது. நம்பிக்கையை
இழந்த லி-மஜோலி பக்கத்தில் இருக்கும்
ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து
கொள்வது என்று முடிவு எடுத்தார். சரி,
கடைசியாக ஒரே ஒருமுறை தியானம் செய்து
பார்க்கலாம் என்று தியானம் செய்ய
ஆரம்பித்தார்.

திடீரென்று உச்சநிலையில் ஏதோ குறுகுறுப்பு, தலைநிமிர்ந்தார் லி-மஜோலி.

லி-மஜோலியின் தலையை வருடியபடி,
அங்கே அருகே இசாக்கிய மிந்தா நின்று
கொண்டிருந்தார். "என்ன நடக்கிறது இங்கே?"
என்று புரிந்துகொள்ள லி-மஜோலி தடுமாறிக்
கொண்டிருக்க...

அதே ஆற்றங்கரையில் புத்தர் சிலை ஒன்றை வைத்துக்கொண்டு,

"புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி" என்று பக்தியோடும் புத்த பக்தர் ஒருவர் பூஜித்துக் கொண்டிருந்தார்.

Swami

ஜெயிக்க வழி

வாழ்க்கையில்
தியானத்தைக்
சேர்க்காதீர்கள்.
தியானத்தில்
வாழ்க்கையைச் சேருங்கள்.
வாழ்வு தியான வாழ்வானால்
ஜெயம் நிகழ, நிகழ்த்த
தேவையான எல்லா
புத்திசாலித்தனங்களோடு
உதயமாகும்!

இசாக்கிய மிந்தா, லி-மஜோலியிடம் அந்த மனிதனைக் காட்டி, "மனிதன் பூஜிப்பதில் காட்டும் ஈடுபாட்டையும் சிரத்தையையும் நீ தியானத்தின் போது கடைப்பிடித்தாயா?" என்று கேட்டுவிட்டு நடக்க ஆரம்பித்து விட்டார்.

யோசிக்க யோசிக்க லி-மஜோலிக்கு ஒவ்வொன்றாகப் புரிய ஆரம்பித்தது.

15 வருடமாக செய்த தியானத்தில், ஒருமுறைகூட முழுஈடுபாட்டோடும், சிரத்தையோடும் தான் செய்யாததுதான் பிரச்சனைக்குக் காரணம் என்பது புரிய ஆரம்பித்தது.

"சடங்கைக்கூட தியான முறையில் முழு ஈடுபாட்டோடும் செய்ய முடியும் போது

  • நான் ஏன் தியான முறையை முழுமையாகச் செய்யக்கூடாது?" என்ற கேள்வி எழ - 15 வருட முட்டாள்தனம் கீழே விழுந்தது!

முழு ஈடுபாடும்
ஞானக்கருத்துக்களை
தன் வாழ்வில்
நடைமுறைப்படுத்தி
பார்க்கும்
தைரியமும்
சேர்ந்ததே சிரத்தை.

நீங்கள் செய்யும் தியானம் எந்த நிலையில் இருக்கிறது. அது உண்மையான தியானம் முறையா? இல்லை சிலர் கட்டாயத்தின் பேரில் மேம்போக்கான ஒரு உந்துதல் காரணமாக செய்யும் கட்டாயச் சடங்கு போன்றதா?

சிந்தியுங்கள்... தியான முறையில் முழுமையாக ஈடுபடுங்கள். மீண்டும் சொல்கிறேன்.

முழுச்சிரத்தையோடு செய்தால் சடங்குகூட தியானம்தான். சிரத்தையில்லாமல் வாழும் ஞானி கற்றுக் கொடுத்த தியான முறையைச் செய்தாலும் அது சாதாரண சடங்குதான்.

தியானமுறையின் பலன் - உங்களின் சிரத்தையைப் பொறுத்தது.

அர்த்தமுள்ள சம்பவம்...

Dr. முரளி கிருஷ்ணா ஒருமுறை கேட்டார், "சுவாமிஜி, தியானம் எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் எனப் பட்டியலிடலாமா?" என்று என்னிடம் கேட்டபோது...

"சிரத்தையோடு செய்யும் தியானம், உங்களால் பெயரிட முடிந்த மற்றும் உங்களால் பெயரிட முடியாத எல்லா நோய்களையும் குணப்படுத்தும்" எனச் சொன்னேன்.

  • எல்லா நோய்க்கும் ஒரேயொரு மூலகாரணம்தான். அது சக்திகுறைவு! தியானத்திற்கும் ஒரேயொரு செயல் மட்டுமே செய்யத் தெரியும். அது சக்தி குறைவை நிறைவாக்குவது. சக்தி சரியாக, நோய் சரியாகும்!

எண்ணங்களைத் தூக்கியெறிவது எப்படி?

எளிய விளக்கம்

லோகோ

10 நாட்கள் விடுமுறை வேண்டுமென அலுவலகத்திற்கு எழுதிக் கொடுத்துவிட்டு இந்தப் பக்கத்தை தொடருங்கள். பத்தே பத்து நாட்கள் மட்டும் இனி சொல்வதைக் கடைப்பிடித்து விட்டால் உங்கள் வாழ்வே மாறிப்போகும். புதிய உலகம் காணும் மனிதராகி விடுவீர்கள்.

மீன்தொட்டியின் மூலையிலிருந்து, உபகரணத்திலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் காற்றுக் குமிழிகள் போல...

உங்களுக்குள் எங்கோ ஒரு மூலையிலிருந்து எண்ணங்கள் தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கின்றன.

இந்த எண்ணங்களை எட்டிப்பிடிப்பதே இந்த தியானத்தின் இலக்கு.

> பல வண்ண
> எண்ண
> தொகுப்பே
> மனம்!

இந்த தியானத்தின் ஒவ்வொரு படிகளையும் நிதானமாக ஒரு முறை செய்து அனுபவமாக மாறிவிட்டு, அப்புறம் அடுத்ததிற்குள் செல்லுங்கள்.

* முதலில் உடல் எனும் தொட்டிக்குள் நுழையுங்கள்.

* உங்களுக்குள் ஓர் மீன் போல் உணர்வு வழியாய் நீந்திச் செல்லுங்கள்.

* அடுத்து, தூர இருந்து பாருங்கள். நிற்காமல், உங்களின் பங்கு எதுவுமில்லை, தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றன- எண்ணங்கள் என்பதை பார்த்து, உணர்ந்து, உறுதி செய்யுங்கள்.

* அடுத்து, இந்த எண்ணங்கள் பிறக்கும்போதே, அவற்றை உங்களின் கவனத்திற்குக் கொண்டுவந்து விடுங்கள்.

முதலில் வந்த எண்ணத்தைக் கவனிப்பீர்கள்.

விழிப்புணர்வு விரிவடைய விரிவடைய...

அடுத்தபடியாக, வருகின்ற எண்ணங்களைக் கவனிப்பீர்கள்.

இன்னும் கொஞ்சம் பயிற்சியைச் சிரத்தையோடு செய்யச் செய்ய...

இனி வரப்போகின்ற எண்ணங்களைக் கவனிப்பீர்கள்.

★ கையாலேயே குருவி பிடிக்க கற்றுக்கொண்டவர்போல், உணர்வாலே எண்ணங்களைப் படிக்கும் கலையைக் கற்றுக்கொண்டபின் செய்ய வேண்டிய அடுத்த கட்ட தியான பயிற்சி..

எண்ணங்கள் எங்கிருந்து பிறக்கிறது எனத் தேடிச் செல்லுங்கள். எண்ணங்களின் பிறப்பிடம் செல்லுங்கள்.

நீங்கள் இதுவரை வந்துவிட்டால்... உள்ளேயிருக்கும் பாதாள அறையைத் தொட்டுவிட்டீர்கள் என்றர்த்தம்.

காரணம், எண்ணங்கள் பிறப்பிடமே அகங்காரத்தின் இருப்பிடம்! இந்து மதம் சொல்லும் கர்மங்கள், கிறிஸ்தவ மதம் சொல்லும் பாவங்கள் மற்றும் ஏனைய மதங்கள் மார்க்கங்கள் குறிப்பிடும் வேதனைக்கான மூலகாரணங்கள் ஒளிந்திருக்கும் இடம் இதுதான்.

இதை நரகத்தின் நுழைவாயில் என தாவோ மதம் குறிப்பிடுகிறது.

இந்தப் பாதாள அறைக்குள் செல்லும்போது பயம் வரலாம்.

பயப்பட வேண்டாம் - இந்தப் பயத்தை மட்டும் தாண்டிவிட்டால், உணர்வுரீதியான சொர்க்கத்திற்குள் இழுத்துச் செல்லப்படுவீர்கள். சிரத்தையோடு செய்யும் எந்தவொரு மனிதருக்கும் இது சாத்தியமானதே.

உடல்
உள்ளே
நீந்திப் பார்!
வெளி
உலகில்
மிதந்து
செல்வோம்

கோபப்படும் எல்லா நேரங்களிலும் நாம் திட்டி விடுவதில்லை. சூழ்நிலை கருதி நாம் பல சமயம் பலரைத் திட்டுவதில்லை. அப்படித் திட்ட முடியாதபோது என்ன செய்கிறீர்கள்? உள்ளேயிருந்து புறப்பட்ட கோபவார்த்தைகளை, உணர்ச்சிகளை அப்போதெல்லாம் தூக்கியெறிந்து விடுகிறீர்கள்தானே?

எண்ணங்களின் பிறப்பிடம் வரை சென்றுவிட்ட நீங்கள் அங்கிருந்து வரும் எல்லா எண்ணங்களையும் தூக்கியெறிய ஆரம்பியுங்கள். சூழ்நிலை கருதி கோபத்தில் செய்வதை, இனி வரும் எல்லா எண்ணங்களுக்கும் செய்யுங்கள்.

காமம், கவலை, சந்தோஷம் என எது வந்தாலும் சரி, அதைத் தூக்கியெறியுங்கள்.

எல்லாமே உள்ளேயிருக்கும் குப்பைகள்.

குப்பைகள் தீரும் வரை இச்செயலை நிறுத்த வேண்டாம்.

ஆனந்தம் வரும்வரை இது தொடரட்டும்.

> எண்ணங்களின்
> பிறப்பிடம்.
> அகங்காரத்தின்
> இருப்பிடம்!

தொடர்ந்து பத்து நாட்கள் இந்த ஒரு தியானத்திற்காக மட்டுமே செலவு செய்யுங்கள்.

வேதனைப் பதிவுகள் தீர்ந்ததும் ஆனந்தம் ஊற்றுபோல் பொங்க ஆரம்பிப்பதைக் காண்பீர்கள்.