குழந்தைகள்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
* குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் வளர்கிறார்கள்.
* வளர்க்கிறேன் என்ற பெயரில் வளர்ச்சியின் போக்கைத் தடுக்காமல், திசை திருப்பாமல் இருப்பதுதான் குழந்தைகளுக்குப் பெற்றோர் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.
* ‘என் பிள்ளை’ என்று உரிமை கொண்டாடி, குழந்தையை ஓர் உடைமையாக்குவதைவிட - என்னைத் தாயாக்கிய / தந்தையாக்கிய ஓர் உயிர் என்று மதித்துப் பாருங்கள் - குழந்தை தெய்வமாகத் தெரியும்.
* வெறும் உணவு, உடை, பாதுகாப்புக் கொடுத்து சில நேரங்களில் திட்டுவதற்கும், சில நேரங்களில் கொஞ்சுவதற்கும் பெயர் வளர்ப்பு அல்ல என்று புரிய வரும். குழந்தையை வளர்க்க, நீங்கள் வளர்ந்திருக்க வேண்டும் என்பதும் புரிய வரும்.
* குழந்தையைத் தண்டிப்பது 100% தவறும் அல்ல. குழந்தைக்குச் செல்லம் கொடுப்பது 100% சரியும் அல்ல.
* குழந்தையை வளர்க்கிறேன் என்ற பெயரில் கெடுப்பது - இல்லை கெடுக்கக் கூடாது என்ற பெயரில், வளர்க்கத் தவறுவது, இரண்டுமே 100% தவறு.
★ முதலில், உங்கள் குணக் கோளாறுகளை முதலில் கண்டுபிடித்து அவற்றை எவ்வளவு சீக்கிரம், சரி செய்ய முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சரிசெய்வதற்கான வேலைகளை ஆரம்பியுங்கள். இரண்டாவது, ஒரு குழந்தையை வளர்க்கிறேன் என்ற பெயரில் செய்யும் கெடுதல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். குழந்தையை வளர்க்க, நீங்கள் வளருங்கள். இரண்டுமே 100% சரி.

குழந்தையைக் கண்டிக்க
குழந்தையின்
மனோநிலை பற்றிய
ஞானமும்
வாழ்க்கையின்
போக்கு பற்றிய
ஞானமும் வேண்டும்.
குழந்தைக்குச்
செல்லம் கொடுக்கவும்
மேற்கூறிய
இரண்டும் தேவை.
குழந்தைகள் - தெய்வங்கள்! ஏனெனில்.
தெய்வத்தன்மையின் ஒரு பண்பான
கள்ளங்கபடமற்ற சிரிப்பும் கண்களில்
தெளிவும், எப்போதும் குழந்தைகளிடம்
இருந்துகொண்டே இருக்கும்.
குழந்தைகள் மூளையில் இருந்து செயல்படுவதில்லை.
குழந்தைகள் இதயத்தில் இருந்து செயல்படுகிறார்கள்.
குழந்தைகள் இதயபூர்வமாக (7 வயது வரை) வாழ்வதால், அவர்களின் கிரகிக்கும் தன்மை முழுமையாக இருக்கும். அவர்கள் பார்த்த, உணர்ந்த விஷயங்கள் தவறாக இருந்தாலும், சரியாக இருந்தாலும் அப்படியே பதிந்துவிடும். அந்தப் பதிவுகளாகவே மாறிவிடுவார்கள்.
சிறுபிராயத்தில் ஏற்படும் அனுபவங்கள்தான்,
ஒருவரின் அடிப்படைக் குணத்தை
நிர்ணயிக்கின்றன.
"தவறான மனிதர்கள் உருவாவதற்கு, தவறான
வளர்ப்பு முறை காரணமா?" என்று சிலர்
என்னிடம் கேட்பார்கள்.
வளர்ப்பு முறையில்தான் எப்போதும் தவறு இருக்கிறது என்று கூற முடியாது. வளர்ப்பவரின் முதிர்ச்சியில்தான் எப்போதும் தவறு இருக்கிறது.
பெற்றோரின் முதிர்ச்சியில் வேறுபாடுகள் இருந்தாலும், தம் குழந்தை நன்றாக வளர வேண்டும் என்ற கரிசனம், அக்கறை, பாசம் எல்லோரிடமும் இருப்பதால் வளர்ப்பு முறையைக் குறைசொல்ல முடியாது.
நன்கு மனமுதிர்ச்சி கொண்ட ஒருவரால், குழந்தையைத் தவறான வழியில் வளர்க்க முடியாது.
அதேபோல், மனமுதிர்ச்சி தேவையான அளவு இல்லாமல் சராசரி வெறுப்பு, எரிச்சல், பொறாமை, துக்கம் என்று வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பதியினர், எவ்வளவு முயன்றாலும் எவ்வளவு குழந்தை வளர்ப்புமுறையைப் படித்தாலும் கேட்டாலும் குழந்தையை நன்றாக வளர்க்க முடியாது.
உங்களது வார்த்தைகளையும் எதிர்பார்ப்புகளையும் குழந்தைகள் அதிகம் கவனிப்பதில்லை. ஏனென்றால், அவை மூளை சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
உங்களது முகபாவங்களையும் உணர்ச்சிகளையும்தான் குழந்தைகள் முழுமையாகக் கிரகிக்கின்றன. ஏனென்றால் அவை இரண்டும் இதயம் சம்பந்தப்பட்டவை.
கிட்டத்தட்ட எல்லோருமே முகமூடி அணிந்த வாழ்க்கையைத்தான் நடத்துகிறார்கள். பல காரணங்களுக்காகத் தங்கள் உணர்வுகள், ஆசைகள், கோபங்களை மறைத்துச் சூழ்நிலைகேற்ப வேஷம் ஏற்க வேண்டியிருக்கிறது. இப்படியே இரட்டை வாழ்க்கை வாழ்ந்து பழகியவர்கள் இதயப் பூர்வமாக, உணர்ச்சிப் பூர்வமாக, வாழ்வது எப்படி என்பதை மறந்தே விடுகிறார்கள்.
இப்படி வாழப் பழகிய நீங்கள் தவிர்க்க முயன்றாலும் முடியாவிட்டாலும் உங்களுடைய முகமூடியால் அமுக்கப்பட்ட உணர்வுகள், வெறுப்புகள், துக்கங்கள் - இவையனைத்தும் உங்களின் முகபாவங்கள் மூலமும் உணர்ச்சிகளின் மூலமும் வெளிப்படும். அப்படியே அது குழந்தைக்குச் சென்றுவிடும்.
குழந்தை மனது பஞ்சு போல. நீங்கள் கொடுக்கும் நிறத்தை அப்படியே ஏற்கிறது.
- இது சூட்சுமமான உண்மை.
| வ | உங்களது முகபாவங்களையும் உணர்ச்சிகளையும்தான் | | ள | குழந்தைகள் முழுமையாகக் கிரகிக்கின்றன. ஏனென்றால் | | ர் | அவை இரண்டும் இதயம் சம்பந்தப்பட்டவை! | | ப் | | | பு | |
அடிக்கடிச் சண்டையிட்டுக் கொள்ளும் பெற்றோர்களைத் தினமும் பார்த்து வளரும் குழந்தையின் மனதில், சண்டை என்பது வாழ்க்கையின் ஓர் அம்சம், ஒரு தன்மை என்று பதிந்துவிடும். பிஞ்சு மனதில் கலவரம் என்ற விதை விதைக்கப்படுகிறது. இப்படிப்பட்டக் குழந்தைகள் கோபக்காரர்களாகவும் கலகக்காரர்களாகவும் எளிதில் மாறி விடுவார்கள்.
சண்டை சச்சரவு இல்லாமல் அன்போடும் பரிவோடும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் பெற்றோர்களைத் தினமும் பார்த்து வளரும் குழந்தையின் மனதில் அன்பும், விட்டுக்கொடுத்தல், உதவிசெய்தல், என்பது வாழ்க்கையின் ஓர் அம்சம், ஒரு தன்மை என்று பதிந்துவிடும்.
அன்பும், பண்பும் விதைக்கப்பட்ட பிஞ்சு மனதிற்குக் கலவரம், கோபம், சண்டை, அடுத்தவர்களைத் துன்புறுத்துதல் என்பதெல்லாம் நஞ்சாகத் தெரியும்.
முதல்வகைப் பெற்றோரிடம் வளரும் குழந்தை நல்லவராக, அன்பானவராக, பண்பானவராக மாற நிறைய முயற்சி செய்ய வேண்டும்.
இரண்டாவது வகைப் பெற்றோரிடம் வளரும் குழந்தை நல்லவராக, அன்பானவராக, பண்பானவராக மாறக் கஷ்டப்பட வேண்டியதில்லை. அவை அந்தக் குழந்தையிடம் இயற்கையான ஒரு குணமாகவே அமைந்துவிடும்.
பாவம் குழந்தைகள்! குழந்தைகள் தெய்வம்தான். மறுக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு குழந்தைக்கும் முழுவிவரம் தெரியும் வரை, தாய், தந்தையாகிய நீங்கள்தாமே அந்தக் குழந்தைக்குக் குரு, தெய்வம், உலகம் எல்லாம்.
தெய்வத்தையும் உலகத்தையும் குழந்தை உங்கள் மூலம்தான் முதலில் பார்க்கிறது. நீங்கள் செய்யும் சிறு தவறுகள், உங்களின் முதிர்ச்சியின்மை எல்லாம் சேர்ந்து பிஞ்சு மனத்தை நஞ்சாக்கும். நஞ்சைத்தான் (தனது குணத்திற்கும் பணத்திற்கும் பாதகமான) கிரகிக்கிறோம் என்ற தெளிவுகூட இல்லாமல், கள்ளம் கபடம் இல்லாமல், உங்களை முழுமையாக நம்பும் குழந்தைகளுக்கு, அமிர்தத்தைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
உங்களின் மனமுதிர்ச்சியே அந்த அமிர்தம். பணம் சேர்த்து வைப்பதோடு, பண்பை அதிகம் சேகரியுங்கள், புகழ் சேர்த்து வைப்பதோடு, தெளிவை அதிகம் சேகரியுங்கள்.
குழந்தை வளர்ப்புமுறையைக் கற்றுக்கொள்வதைவிட, உங்களை வளர்க்கும் முறைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.