KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/கடமை! கருணை!Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

கடமை! கருணை!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கட்டுப்பாடு!

பிரான்ஸில் குழந்தைகளின் படிப்பு செலவைக்கூட அரசாங்கமே செய்கிறது. அங்கே சோம்பேறியாய் வாழும் குல்ஜித்திடம் அவர் மனைவி சொன்னார், “எனக்கு அவமானமாக இருக்கிறது”.

உடனே “எனக்கும்தான்” என்றார். “நான் எதைப் பற்றி சொல்கிறேனென்பதே தெரியாமல், எனக்கும்தான் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?” என மனைவி கேட்டதும், பதில் சொல்ல முடியாமல் திருதிருவென விழித்த குல்ஜித், “சரி சரி... சொல்ல வந்ததை முதலில் சொல்” என்றார் அழுத்தமான குரலில்.

“குழந்தைகளை அரசாங்கம் வளர்க்கிறது. வேலைக்குப் போகாத உங்களுக்குக் கருணை பென்ஷனை உங்களின் கம்பெனி தருகிறது. வீட்டு செலவை என் தந்தை பார்த்துக்கொள்கிறார். உடைகளை உங்களின் அண்ணன் வருடா வருடம் வாங்கித் தருகிறார். கார் செலவை என் அண்ணன் பார்த்துக்கொள்கிறான்... உங்களுக்கு இதில் ஏதும் அவமானமாகத் தோன்றவில்லையா?” என மனைவி கேட்டதற்கு,

குல்ஜித், “ஆமாம்! எனக்குக்கூட அவமானமாகத்தான் இருக்கிறது. இவ்வளவு பேர் இவ்வளவு செய்தும் உன் தம்பி மட்டும் நமக்கு ஒத்த காசுகூடச்செலவு செய்வதேயில்லை. இது பெருத்த அவமானம்தான்!” என்றாராம்.

★ மற்றவர்கள் எனக்குச் செய்வது அவர்களின் கடமை!

அதை ஏற்றுக்கொள்வது என்னுடைய கருணை!

எனும் நோக்கில்தான் ஒவ்வொருவரின் ஆழ்மனமும் இயங்குகிறது. கடமை, கருணை வலைகளில் சிக்கிக்கொள்வது போன்ற மடமை வேறெதுவுமில்லை. கடமை செய்ய, மடமை தாண்டப்பட வேண்டும்.

Nithyananda

எது கடமை? எது மடமை?

மற்றவர் சந்தோஷத்தை மாய்ந்துக் கொள்வதா...

இல்லை தன் சந்தோஷத்தின்
மிகுதியால் மற்றவரையும்
சந்தோஷமாக்குவதா... பதில்
காணுங்கள்

★ 'கடமை! கடமை!
என ஓடியதில்
பலரின் வாழ்வே
கடமைக்கென்று மாறிவிட்டது.
கடமைக்காக வாழ ஆரம்பித்து
விட்டார்கள். இது கொடுமை'

★ கருணை ஒரு உற்சாகசக்தி.
கருணையின் வெளிப்படாக கடமை
அமைந்தால்தான் வாழ்க்கை
உற்சாகமாக இருக்கும்.
உற்சாகமாக வாழ முடியும்.

★ கருணையால் உற்சாகப்பட்டு
நம் உறவுகளுக்குச் சேவை
செய்யாமல், கட்டாயத்தின்
பேரில் உந்தப்பட்டு நம்
உறவுகளுக்குச் சேவை செய்ய
இறங்கினால் சேவை பூர்த்தியாகும்.
ஆனால் உங்களின் தனித் தேவை
பூர்த்தியாகாது. ஆனந்தமே
உங்களின் உண்மையான
தனித்தேவை.

★ கருணையால் சேவை செய்தால்தான் அது
கடமை. கட்டாயத்தால் சேவை செய்தால்
அது கடமை அல்ல. அது மடமை!
உங்களின் சேவை கடமையா.
மடமையா?

வங்காளத்தில் மதபோதகர் ஒருவருக்கு முப்பது வருடங்களாக சேவையை தன் கடமையென கருதி செய்த அப்பெண்மணிக்கு, “இவர் உண்மையான ஆன்மீகவாதிதானா?” என்ற சந்தேகம் திடீரெனத் தோன்றியது.

உடனே அவரைச் சோதிக்க ஒரு விலைமாதுவிடம் ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தப்படி அன்றிரவு அந்த மதப்போதகரை விலைமாது தொந்தரவு செய்ய வேண்டும். மனம் தடுமாறச் செய்ய வேண்டும்.

முடிவுசெய்ததுபோல் இரவு அந்த இளம்பெண் வந்து சேர்ந்தாள். “யாரைச் சோதிக்கிறாய். மூடப்பெண்ணே... போ வெளியே. நான் நெருப்பு! உடனே இந்த இடத்தை காலிசெய்” எனக் கொதித்தெழுந்து, உடல் நடுங்க அப்பெண்ணை திட்டி இரவென்றும் பாராமல் வெளியே அனுப்பிவிட்டார்.

விலைமாதுவிடமிருந்து நடந்ததை அறிந்த பெண்மணி மிகக் கோபத்தோடு “ஐம்பது வயதானவர் பக்குவமடைந்திருக்க வேண்டாமா? இவ்வளவு நாள் கருணையைப் பற்றி அவர் செய்த போதனைகளை அவர் கொஞ்சமாவது கடைப்பிடித்திருக்க வேண்டாமா?

உன் தவறை தடுப்பதாக நினைத்து, அவர் சுயக்கட்டுப்பாடில்லாமல் கோபப்படும் சராசரி மனிதரைப் போல் நடந்துகொண்டது எவ்வளவு பெரிய தவறு.

கருணை என்ற அடிப்படையில் ஆன்மீகக் குணம்கூட இல்லாதவருக்காகவா இவ்வளவு நாள் கடமை செய்தேன். இப்படிப்பட்டவர் இருந்தாலென்ன, இறந்தாலென்ன” என சொல்லி சலித்துக்கொண்டு அன்றிரவோடு அந்த இடத்தை காலிசெய்து சென்று விட்டார் அப்பெண்மணி.

* வெறும் கடமை போலி, கருணையில்லாத கடமை ஏதாவதொரு ஆழ்மனக் குறிக்கோளை மையமாக வைத்தே செயல்படும். அது இன்றோ நாளையோ சலிப்பைத் தரும்.

மூர்க்கமுகுந்தன்

ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். பார்த்தவரிடமெல்லாம் ஏதாவது முகுந்தன் பேசிக்கொண்டே வந்தார். முகுந்தனைப் பார்த்த எதிர்வீட்டு ராஜன்...

உபழுத்த கனிதான் முதலில் பறிக்கப்படும். நேராய்
பவளர்ந்த மரமே முதலில் வெட்டப்படும்
யோமலர்ந்த மலர்களே முதலில் கொய்யப்படும்!
க
ம்

“அப்புறம்... நல்லாயிருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

முகுந்தன், “ஆஹா... ஆண்டவன் புண்ணியத்துல ரொம்ப நல்லாயிருக்கிறேன்” என்று இழுக்க,

ராஜன், “ஐயய்யோ, என்ன முகுந்தா சும்மா ஒரு கடமைக்காகத்தான் நல்லாயிருக்கிறீர்களாவென கேட்டேன். எதிர்வீட்டுல இருக்கிற எனக்கு உங்கள் திண்டாட்டம் தெரியாதா என்ன! ரொம்ப கஷ்டப்பட்டு பெரிய பெரிய பொய்யெல்லாம் பேசாதீர்கள்”என்றுக் கண்சிமிட்டி கிண்டலடித்தார்.

“ஹீ... ஹீ...” என்று சங்கடத்தோடு முகுந்தன் சிரித்தார். பொது விஷயங்கள் சில பேசிவிட்டு விடைபெறும் போது, ராஜன் சொன்னார்: “உங்க வீட்ல எல்லோரையும் கேட்டதாக சொல்லுங்க!” முகுந்தன், “கண்டிப்பா சொல்கிறேன். ஆனா...” என்று இழுக்க, ராஜன், “என்ன முகுந்தா!” என்று ஆவலோடு கேட்டார்.

முகுந்தன், “என் வீட்டில் நீங்கள் கேட்டதா சொன்ன பிறகு, என் வீட்டிலிருப்பவர்கள், ‘என்ன முகுந்தா! இத்தனை பேரையும் கேட்டிருக்கிறார். பாவம்! அவருக்குக் கூச்ச சுபாவம், அதனால்தான் சொல்லாமல் விட்டிருப்பார். அவருக்கு என்ன வேண்டுமென்று, நீயாவது கேட்டுத் தெரிஞ்சிட்டு வந்திருக்கலாம்... அவர் எல்லோரிடமும் கேட்டதை நாம் கொடுத்திருக்கலாமே’ என்றால் நான் என்ன செய்வது?” என்று மடக்க.

ராஜன், “ஹீ... ஹீ... சும்மா கடமைக்காகத்தான்...” முகுந்தனின் பதிலடியால், பதில் பேச முடியாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார் ராஜன்.

இப்படித்தான் கடமை, சம்பிரதாயம் என்ற பெயரில் பல காரியங்கள் எந்தவித அர்த்தமும் இன்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடமைகள் ‘கடமையே!’ எனச் செய்யப்படக்கூடாது. கடமை வாழ்வின் ஒரு கட்டாயமாக மாறி மனிதரைக் கட்டுப்படுத்தவும் கூடாது.

கடமை துள்ளலோடும், ஆனந்தத்தோடும் செய்யப்பட வேண்டும்.

மகடமை உங்களைக் கட்டுப்படுத்துகிறதா?
ட"ஆம்"... என்றால்...
ம்தெரிந்துகொள்ளுங்கள்
அதுகடமையல்ல மடமை!

நம் வாழ்வில் நாம் சுதந்திரமாக முடிவெடுத்து செய்யும் உற்சாகமான காரியமாக கடமை இருக்க வேண்டும்.

கடமையும் கருணையும் ஒன்றோடொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை!

கருணையின் வெளிப்பாடாக கடமை இருந்தால் அது கடமையாற்றுபவரை இன்பத்தில் ஆழ்த்தும்.

கட்டாயத்தின் வெளிப்பாடாக கடமை
அமைந்துவிட்டால், அது கடமையாற்றுபவனை
துன்பத்தில் வீழ்த்தி விடும்.

கடமைகள் மனிதருக்கு பிரச்சனைகளை
உண்டு பண்ணுவது கடமையின் காரண
சக்தியைப் பொருத்தது.

காரணசக்தி "கட்டாயம்" என்னும்
உறிஞ்சும் சக்தியா? அல்லது "கருணை"
என்னும் உற்சாக சக்தியா? என்பதைப்
பொருத்து கடமை துன்பமா அல்லது இன்பமா
என்பது முடிவு செய்யப்படும்.

கருணை மிகுதியில் கிருஷ்ண பகவான்
"கடமையைச் செய். பலனை
எதிர்பார்க்காதே..." என்றது கிருஷ்ணரின்
ஆனந்தத் தத்துவம். அது கர்மானந்தம்.

கிருஷ்ணபகவான் கூறியதை
கட்டாயத்தின் பிடியிலிருக்கும் நம்மூர்
கிருஷ்ணசாமியோ, கோவிந்தசாமியோ
கேட்டுத் தவறாகப் புரிந்து கொள்ளவே
வாய்ப்புகள் அதிகம்.

கிருஷ்ணரிடம் இருந்த ஆனந்தம் சராசரி மனிதரிடம் இருக்காது.

ஆனந்தமில்லாமல் கருணை மலரவே முடியாது.

Nithyananda

கடமையை

முழுமையாய்

செய்ய..

கருணையெனும்

உற்சாக சக்தி

தேவை!

நம்மூர் கிருஷ்ணசாமியும், கோவிந்தசாமியும் ஆனந்தம் என்னும் காரண சக்தியைப் பெற்றிராமல், கடமையில் கட்டாயம் காரணமாக இறங்கும் போது, கடமை இன்பத்திற்குப் பதில் துன்பத்தைத் தருவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். கருணை நம் ஒவ்வொருவருக்குள்ளும் மலர வேண்டியது மிக அவசியம்.

இந்தக் கருணையின் உச்சம் ஞானிகள். கருணையை விளக்கும் ஜென் ஞானியின் கடைசிக் கால வாழ்க்கைக் கதை...

“ஒரே ஒரு வாயளவு மதுபானமே
என்னைக் கிறங்கச் செய்கிறது!”
எனச் சொன்ன முகுந்தனிடம்
“நிஜமாகவே சொல்கிறாயா!” என
ஆச்சரியமாய் கேட்டார் நிட்டி.
முகுந்தன், “ஆம். அந்தக் கிறக்கம்
எப்போதும் ஏழாவது கிளாஸின்
முதல் வாயாக இருக்கிறது!”
என்றார்.

முகுந்தனைப் போலவே மனித
மனமும் மரத்துவிட்டது. ஒரு
வாயளவு சந்தோஷத்தை மனம்
பருக, அதற்கு நிறைய
சந்தோஷங்கள் தேவைப்படுகின்து.
பெருமளவு கடமையாற்றியும்
அவனுக்குச் சிறிதளவே திருப்தி
கிடைக்கக் காரணம் கூட மனம்
மரத்துப்போனதே!
அந்தச் சிறு திருப்தியை பெரிது
என நம்பி... நிறைய இழக்கிறான்...
அதைப் பெருக்குவதற்காக!
மனம்... உணர்வுள்ளதாக
வேண்டும்!

ஞானிகளால் அவர்களின் இறப்பை
முன்கூட்டியே சொல்ல முடியும். அதுவும்
ஜென் ஞானிகளின் இறப்பு, ஒரு விழா போல்
அனுஷ்டிக்கப்படும்.

ஒரு ஜென் ஞானி, சீடர்களிடம்,
“என்னுடைய கடமைகளை நான்
முடித்துவிட்டேன். இன்று சாயங்காலம் 6
மணிக்கு உடலை விட்டுப்
பிரியப்போகிறேன்” என்றார்.

102 வயதான தங்கள் குருவின் கடைசி
வார்த்தைகளைக் கேட்க எல்லோரும்
ஆவலாக மதியத்திலிருந்து காத்துக்
கொண்டிருந்தார்கள்.

நேரம் நகர்ந்துகொண்டேயிருந்தது.
மணி 5.30... 5.40... அதுவரைக்கும் குரு
மௌனமாகவே அமர்ந்திருந்தார்.

சீடர்கள் ஒவ்வொருவராக ஆசிர்வதித்தார்.

ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மணி 5.50 ஆனவுடன், ஞானி எழுந்து
சென்று தன் காலில் ஷீக்களை அணிந்து
கொண்டு, ஊன்றுகோலோடு எங்கோ
புறப்படத் தயாரானார்!

சீடர்கள், “இன்னும் 10 நிமிடத்தில் உடலைவிட்டுப் பிரியப் போகும் நீங்கள் எங்கே கிளம்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

ஞானி,
“என் கல்லறைக்கு!”
என்றார்.

சீடர்கள் அதிர்ச்சியில், “என்ன! என்ன சொல்கிறீர்கள்? இப்போது ஏன் நீங்கள் கல்லறைக்குச் செல்ல வேண்டும்?” என்று கேட்க,

“நான் யாருக்கும் கஷ்டம் கொடுக்க விரும்பவில்லையப்பா.

நான் உடலைவிட்டுப் பிரிந்த பிறகு இந்த உடலை உங்களுடைய தோளில் சுமந்து செல்ல வேண்டும்.

பின் ஊர்வலத்திற்கு வேறு தனியாக எல்லோரும் தயாராக வேண்டும்.

ஏன் இந்த வீண் சிரமம். அதனால்தான்...” என்று பேசிக்கொண்டே தன் கல்லறையை அடைந்து விட்டார் ஞானி.

மணி 5.59... ஜென் ஞானி தன் கல்லறைக்குள் தானே சென்று படுத்துக் கொண்டார்.

மணி 6.00. சிறிய சிரிப்பிற்குப் பின் கண்களை மூடிக்கொண்டு உடலை விட்டுப் பிரிந்தார்.

தங்கள் குரு, கடைசிச் செய்தியை வார்த்தைகளில் சொல்லாமல், செயலில் சொல்லிவிட்டு சென்றிருப்பதை நினைத்து, அன்று இரவு முழுவதும் குருவின் மரணத்தைக் கொண்டாடினார்கள் ஜென் சீடர்கள்.

ஒருவருக்கும் தொந்தரவு தராமல், கடைசி நிமிடத்தில்கூட தன்னாலான உதவிகளைச் சீடர்களுக்கு அந்த குரு செய்ய காரணமாயிருந்த காரணசக்தி கருணைதான்.

ககருணையால் சேவை செய்தால்தான் அது கடமை.
டகட்டாயத்தால் சேவை செய்தால் அது
மைகடமை அல்ல. அது மடமை. உங்களின் சேவை கடமையா? மடமையா?

★ சமுக நெறிமுறைகள் கடமையைச் செய்யத் தூண்டும். ★ கடமையைச் செய்ததால் மனம் பலனை எதிர்பார்க்கும். ★ நீதிநெறிகளோ பலனை எதிர்பார்ப்பதைக் கண்டனம் செய்யும்.

சமுகம், மனம், நீதிநெறி இவற்றில் சிக்கிய மனிதர்களின் நிம்மதி மும்முனைகளிலிருந்தும் தாக்கப்படும். அவர்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும்.

“ஆனந்தத்தோடு கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே!” என்ற ஒரு சந்தோஷமான விஷயமானது...

சமுகம் சொல்லும் ‘கடமையைச் செய்!’ மனம் சொல்லும் ‘சந்தோஷமாக இரு!’ நீதிநெறிகள் சொல்லும் ‘பலனை எதிர்பார்க்கக்கூடாது!’

எனும் முரண்பாடுகளால், கடமையானது கட்டாயம் என்று மாறும் போதுதான் கடமை கஷ்டமாகிறது.

கடமை கட்டாயமாகிறது. கட்டுப்படுத்துகிறது. கடமையையும் செய்து, நிம்மதியோடும் சந்தோஷத்தோடும் இருக்க மிக எளிய வழி கருணையை மலர்த்துவது தான்.

கருணையை மலரச் செய்யுங்கள்!

அர்த்தமுள்ள சம்பவம்...

“யார் ஏமாளி?” என்ற தலைப்பில் தியான சொற்பொழிவாற்றிய டய்கு மீண்டும் சொன்னார்... “நீங்கள் பிறந்தது உங்களுக்காக. நீங்கள் வளர்ந்தது உங்களுக்காக. ஆனால், வாழ்ந்தது மட்டும் யாருக்காகவோ, எதற்காகவோ என்றால் என்ன அர்த்தம்! யார் ஏமாளி? நீதி வேண்டாமா...?!"

முடியாதென்பதே முடியாது போகட்டும்!

‘முடியாது” என்ற வார்த்தையைச் சட்டென சொல்லாதீர். முழு சக்தியையும் பிரயோகித்துப் பார்க்க நீங்கள் பயப்படும் காலங்களில் மனதிலிருந்து எட்டிப்பார்க்கும் வார்த்தைதான் 'முடியாது’ என்பது.

இந்த வார்த்தைக்கு முக்கியத்துவமளித்தால், வாழ்வின் அரிய வாய்ப்புகள் கை நழுவிசச் சென்று கொண்டே இருக்கும். மனக்குறைகள் அப்படியே இருக்கும்.

வாய்ப்புகளுக்குதான் முக்கியத்துவமளிக்க வேண்டும். முடியாது எனும் முடமாக்கும் தன்மை கொண்ட வார்த்தைகளுக்கல்ல!

வெளியுலக சாதகமாகட்டும், உள்ளுலக சாதகமாகட்டும், கடமையாகட்டும், கருணையாகட்டும்...

எடுத்த காரியம் வெற்றி பெற,

தொட்ட காரியம் ஜெயமடைய,

முடியாது என்ற வார்த்தையை உதாசீனப்படுத்தி, தொடர்ந்து முயன்று கொண்டேயிருங்கள்... முடித்துவிடுவீர்கள்.

முடியாதென்ற வார்த்தையையே சொல்ல முடியாத நிலை உருவாகும்.

முடியாததெல்லாம்கூட உங்களால் முடியும்!.

‘முடியும்’
என
உனக்குச்
சொல்
உறுதியாய்!

அதை
முடித்திட
தேவையான
எல்லாம்

உன்னைச்
சுற்றித்
திரளும்
அதிசயம்
நிகழும்.

காண்பாய் நிச்சயம்!