ஹலோ எப்படி இருக்கீங்க?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
★ உலகையே நேசிக்கிறவன் என்று பெருமை பேசுவது வெகுசுலபம், உண்மையில் ஒரே ஒருவரை முழுமையாக நேசிப்பது - 'இமாலாய சாதனைக்கு' சமம்.
★ மனிதர்களிடம் நீங்கள் பழகும் விதம், உங்களோடு நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் படம்பிடித்துக் காட்டும். தன் உடல், மனம், உயிரை முழுமையாக மதிப்பவரால்தான், பிறரை முழுமையாக மதிக்க முடியும்.
★ தன் உடல், மனம், உயிரை அரைகுறையாக மதிப்பவர், பிறரையும் அரை குறையாகத்தான் மதிப்பார். சாதாரணமாகப் பழகுவது என்பது, அசாதாரணமான ஒரு விஷயமாக மாறிவிட்டது, கொடுமையிலும் கொடுமை.
★ 'நான்! நான்! எனது! எனது!' என்று குறுகிய வட்டத்தில் வாழும் வரை, குதூகலம் என்பதைக் கற்பனை செய்வதுகூடக் கடினம்தான்!
★ தர்மம் - தனக்கும் மற்றவர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கக் கூடிய எல்லாச் செயல்களும் தர்மம்.
★ அதர்மம் - தனக்கும் மற்றவர்களுக்கும் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய எல்லாச் செயல்களும் அதர்மம்.

சுமுகமான மனித
உறவுகளை
வளர்த்துக் கொள்வது
சுக - வாழ்விற்கான
சுலபமான வழி!
★ தான் உண்டு, தன் வேலை உண்டு
என்று இருப்பதற்கு, மனிதராகப் பிறக்க
வேண்டிய அவசியம் இல்லை. மிருகங்கள்
ஏற்கெனவே அப்படித்தான் இருக்கின்றன.
மனித உறவுகள் அற்புதமானவை: ஆனந்தம் அளிப்பவை.
சுற்றி இருக்கிற மனிதர்களிடம் சகஜமாகப்
பழகுகிறவர்கள் வெற்றிவாகை சூடும்
மனிதர்களாக இருக்கிறார்கள்.
பக்கத்து வீட்டுக்காரருடன் பிரச்சனை பேருந்தில் சக பயணியோடு மோதல் அலுவலகத்தில் அடுத்த டிபார்ட் மெண்ட்காரரோடு சண்டை என்று எதற்கெடுத்தாலும் அடிதடியில் இறங்குகிறவர்களுக்குத் தோல்வியும், நிம்மதியின்மையும் மட்டுமே மிஞ்சுகின்றன.
அறிமுகத்துக்கு எப்போதுமே ஒரு மதிப்பு உண்டு. புதிதாக ஒரு ஃபிளாட் வாங்கிக் குடிபோகிறீர்கள். ஏற்கெனவே அந்தக் கட்டடத்தில் குடியிருப்பவர் உங்களை எதிரிபோலப் பார்க்கிறார். பதிலுக்கு நீங்களும் முறைத்தீர்கள் என்றால் நல்லுறவு வராது. சண்டை சச்சரவுதான் வரும்.
குடியேறிய சில நாட்களில், ஒரு விடுமுறை தினத்தில் குடும்பச் சகிதமாகச் சென்று, "என் பெயர் ராமசேஷன். இந்த ஃபிளாட்டில் புதிதாகக் குடிவந்திருக்கிறேன். இவள் என் மனைவி. இவள் என் குழந்தை. ஒரு நாளைக்கு நீங்கள் எல்லோரும் எங்கள் ஃபிளாட்டுக்கு வாருங்கள்" என்று அழைப்புக் கொடுத்துவிட்டு வாருங்கள். அதற்குப் பிறகு பாருங்கள் அந்த ஃப்பிளாட்வாசிகள். உங்களிடம் எப்படியெல்லாம் கொஞ்சிக் குலாவுகிறார்கள் என்று.
முன்பின் தெரியாத மனிதர்களிடம் சென்று, "எப்படி அறிமுகம் செய்து கொள்வது?" என்று தோன்றலாம். சில கேள்விகளுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து யோசிக்க ஆரம்பித்தால், எந்தக் காரியமும் உருப்படியாக நடக்காது. எனவே, இது யோசிக்காமல் செய்ய வேண்டிய ஒன்று.
மேலும், முன்பின் தெரியாதவர்களிடம்தான் அறிமுகம் செய்து கொள்ள முடியுமே தவிர, ஏற்கெனவே நன்கு தெரிந்தவர்களிடம் அறிமுகம் செய்து கொள்ளத் தேவை இல்லை.
பேரறிஞர் பெர்னாட்ஷா ஒருமுறை வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். புதிய வீடு ஒன்றில் அப்போதுதான் குடியேறியிருந்தார் ஒருவர். அவர், தன் வீட்டுத் தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.
"ஹலோ எப்படி இருக்கீங்க?" என்று அவரிடம் கேட்டார் பெர்னாட்ஷா.
தோட்டத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த புது வீட்டுக்காரருக்குக் கோபம் வந்துவிட்டது. "யார் நீங்கள்? உங்களை நான் முன் பின் பார்த்ததே இல்லையே?" என்று கோபமாகக் கூறிவிட்டுப் போய்விட்டார்.
மறுநாளும் காலையில் வாக்கிங் போகும் போது, அதே புது வீட்டுக்காரர் தோட்டத்தில் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். பெர்னாட்ஷா அவரை விடவில்லை.
"ஹலோ, எப்படி இருக்கீங்க? நேற்றே நாம் அறிமுகமாகிவிட்டோம். ஞாபகம் இருக்குல்லே?" என்று சொல்ல, புதிதாக வந்தவர், வேறு வழியே இல்லாமல் நட்புறவுக் கரம் நீட்டினார்.
| இ | இயல்பாக இருப்பது |
|---|---|
| ய | |
| ல் | தான் மனித இயல்பு! |
| பு |
சந்தோஷமாக பழகுவது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டால், சத்தம் போடும் மனிதர்களைக் கூட சாந்தப்படுத்தி விட முடியும்.
மனித உறவுகளை ஏனோதானோ என்று எடுத்து கொள்ளாதீர்கள். அந்த மனிதர் வீட்டுக்கு வந்தால் இருக்கிற இடம் தெரியாது என்கிற மாதிரியாக நீங்கள் நிச்சயம் இருக்க வேண்டாம்.
இது பெருமை இல்லை. உங்கள் அருமைகளை மறைக்கும் சிறுமை.
‘பக்கத்து வீட்டுக்காரரோடு பழகுவதால் என்ன நன்மை கிடைக்கும்? எதிர் வீட்டுக்காரரிடம் குசலம் விசாரித்தால் என்ன உதவிசெய்வார்?’ என்றெல்லாம் எதிர்பார்க்காமல் உண்மையாகப் பழகுங்கள்.
உங்களின் சந்தோஷம் கலந்த அணுகுமுறை மற்றவர்களுக்குச் சந்தோஷத்தையும் உங்களுக்குச் சாந்தத்தையும் வாரி வழங்கும்.
உங்கள் சந்தோஷ வெளிப்பாட்டால், மற்றவர்களுக்குச் சந்தோஷத்தை வாரி வழங்கி, உங்களுக்குள் சாந்தத்தை உணருங்கள்!