பகிர்தல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தியான சிகிச்சையின்போது, "நானொரு பாவி, முரடன், ஒரு காலத்தில் திருடன்! நானெல்லாம் புனிதமான தியானத்தைச் செய்யலாமா?" என ஒரு நபர் என்னிடம் கேட்டார்.
அவரிடம், “நீங்கள் கேட்பது... ஒரு மருத்துவரிடம் சென்ற நோயாளி, 'என் உடல் மோசமாயிருக்கிறது. உங்களின் புனிதமான மருந்துகளை நானெல்லாம் எடுத்துக்கொள்ளலாமா' எனக் கேட்பது போலுள்ளது” என்றேன். அந்த நபரின் கண்களில் சந்தோஷம் பொங்கியது!
★ எல்லா நல்லவைகளும் நல்லவர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை அல்ல.
★ எல்லோரும் பகிர்ந்துகொள்ளுவதற்காகவே அவை உருவாக்கப்படுகின்றன.
★ பகிர்தல் - ஒரு தியானமுறை.
★ அகங்காரத்தை வலி தெரியாமல் அறுத்துவிட உதவும் வாழ்வியல் வழிமுறை பகிர்தல்.
★ உள்ளத்தில் உள்ளதையெல்லாம் பகிர்ந்துவிடுங்கள். பகிர்வதால் உள்ளே உருவாகும் வெற்றிடத்தை, ஆனந்தம் நிரப்புவிடும்.
★ மேல் உள்ள கூற்றைச் சோதித்துப்பாருங்கள். உங்களினுள் ஆனந்தக் கதவு தானாகவே திறந்து கொள்ளும்.
★ கவலை பகிரப் பகிரக் குறையும். ஆனந்தம் பகிரப் பகிர அதிகமாகும்.

இளம் எழுத்தாளராக வளர்ந்து
கொண்டிருந்த சமயத்தில், தனக்கு நேர்ந்த
ஒரு சம்பவத்தை அந்த எழுத்தாளர்
பகிர்ந்து கொண்டார்.
“சாமி, அது நான் எழுதிய முதல் புத்தகம். அந்தப் புத்தகம் பற்றி மற்றவரின் விமர்சனங்களைக் கேட்பேன். என் பக்கத்து வீட்டுக்காரரிடம் ஏதோ பேச்சுவாக்கில் இப்படிச் சொன்னேன்... ‘கதை எழுதுவதற்குப் பெரிய புத்திசாலித்தனமெல்லாம் தேவை இல்லை’ எனப் பேசியதற்கு அவர் தந்த பதில்.
‘ஆமாம் சார்! உங்களுடைய
கதைப் புத்தகத்தை படித்தவுடன் நானும்
அதே முடிவுக்குத்தான் வந்தேன்’ என்றார்.
இந்தப் பதிலால் நான்
ஆடிப்போனாலும், அதைப் பாடமாக்கிக்
கொண்டேன்” என்றார்.
★ பகிர்தல் உங்களின் வாழ்க்கைப்
பாடத்தில் புதுப் பக்கங்களை
திருப்பிக் காட்டவும் வல்லது!
பகிர்தல் ஒருவித வளர்தல்.
நிட்டி அவர் வாழ்வில் நடந்த ஒரு சந்தோஷமான சம்பவத்தை ஒருமுறை பகிர்ந்து கொண்டார். நிட்டியின் வம்பாலும் குறும்புப்பேச்சாலும் டென்ஷனாகிப் போன நிட்டியின் மனைவி பூரிக்கட்டையை எடுத்துக்கொண்டு அடிக்கத் துரத்த... “ஆஹா... ஓடிப்பிடித்து விளையாடி எவ்வளவு நாளாகி விட்டது” என்று நினைத்துக் கொண்டே நிட்டி ஓட, மனைவி துரத்த... நெரிசல் மிகுந்த வீதிக்குள் நிட்டி புகுந்து, வளைந்து வளைந்து ஓடினார்.
நிட்டியைத் துரத்துவதில் ஆர்வமாக இருந்த நிட்டியின் மனைவி, எதிரே வரும் ஆட்டோக்காரர் போடும் கூச்சலைக் கண்டுகொள்ளாமல் ஆட்டோ மீது மோதவும் ஆட்டோ சடன்பிரேக்கில் நிற்கவும் சரியாக இருந்தது.
எரிச்சலடைந்த ஆட்டோக்காரர், “ஏம்மா! இப்படி வளைந்து வளைந்து ஓடினால் எப்படி? நீ எந்தப் பக்கம் போறேன்னு உன் கையால் சுட்டிக் காண்பித்துவிட்டு ஓடியிருந்தால், நானாவது ஒதுங்கியிருப்பேனே...” எனக் கோபமாய் சொல்ல,
நிட்டி மனைவி, “நிலைமை புரியாமல் பேசாதே! நான் தேடிப் போகிற வழியை என்னால் சுட்டிக் காட்ட முடியாது” என்று படபடத்துவிட்டு மீண்டும் ஓடிவிளையாடும் நிட்டியைத் துரத்த ஆரம்பித்துவிட்டார்.
நிட்டியின் மனைவியைப் போலவே ஏதாவது ஒரு காரணம் கற்பித்துக்கொண்டு கவலையைத் துரத்திக்கொண்டு ஓடுவது மனதின் இயல்பு.
துரத்திப் பிடித்த கவலையோடு வாழ்ந்தது போதும் என்று மனத்திற்கு தோன்றிய உடனே, அடுத்த கவலையை மனம் துரத்த ஆரம்பித்துவிடும்.
மனம்தான் கவலைகளைத் தேடித்தேடிக் கண்டுபிடிக்கிறது என்பது நடைமுறை உண்மை. மனதின் இச்செயல்களை இனங்காண சிறிதளவு கவனத்தை எடுத்து வந்தால் கூட நம்மால் எளிதாய் கண்டுபிடிக்க முடியும்.
கவலையைத் தேடிக் கண்டுபிடிப்பதிலேயே சுகம் காணும் மனதை ஸ்தம்பிக்க வைக்க ஒரு சின்ன டெக்னிக்.
மனதில் எந்த ஒரு கவலையும் ஒரு நாளைக்குமேல் இருக்கவிடாதீர்கள். எல்லாவற்றையும் தூக்கி எறியுங்கள். இது சாத்தியமில்லை என்று நினைப்பவர்கள் கவலைகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள்.
ப |
கி | ஏதோதோ பேசி, ஏதோதோ
ர் | புலம்புவதும், எதற்கோ சிரித்துப்
த |
லா | கும்மாளமடிப்பதும் பகிர்தலாகாது!
கா |
து |
உங்கள் உணர்வுகளை முழுமையாகப் பாதிக்கும் ஒரு நபரிடம் உங்களின் கவலைகளையெல்லாம் பகிர்ந்துவிடுங்கள்.
ஒருவேளை உங்களைப் புரிந்துகொண்டு உங்கள் உணர்வுகளை மதிக்கும் நபர் உங்களுக்கு இல்லாவிட்டால், அதற்காகக் கவலைப்பட வேண்டாம்.
ஆன்மீகக் கூட்டங்கள், சேவை மையங்கள் போன்ற இடங்களுக்குச் செல்லுங்கள்.
உங்களைப் போன்றே உணர்வுகளை மதிக்க, மற்றவர்களோடு பகிர, நிறையப் பேர் அங்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள். புது வழி பிறக்கும்.
கவலைகளைப் பகிர்வது கட்டியில் இருக்கும் சீழை வடியச் செய்வதற்குச் சமம். அது முழுத் தீர்வல்ல. அதைத் தாண்டி, ஆனந்தம் நோக்கிப் பயணம் செய்ய வேண்டும்.
ஒரு நாள் மூர்க் முகுந்தன் தூக்கமில்லாமல் வீட்டு முற்றத்தில் உலாத்திக் கொண்டிருந்தார்.
முகுந்தனின் மனைவி, “என்னாச்சுங்க? ஏன் இப்படிக் கவலையா இருக்கீங்க முகுந்த்” என்றாள்.
முகுந்தன், “எதிர்வீட்டு தன்ராஜுக்கு ரூ. 10,000 கொடுக்க வேண்டும். இரண்டு வாரமாக இழுத்தடித்து விட்டேன்.
நாளை கண்டிப்பாகத் தருகிறேனென்று சொல்லியிருக்கிறேன். ஆனால் கையில் ஒரு ரூபாய்கூட இல்லை. இந்த ஜென்மத்தில் அந்தக் கடனை அடைக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கையில்லை.
அதனால்தான் கவலைப்படுகிறேன்” என்றார்.
“உங்களின் கவலைக்கான காரணம் இவ்வளவுதானா!” என்று சொல்லிக் கொண்டே விருட்டென்று எழுந்தவள் ஜன்னலைத் திறந்து “தன்ராஜ்! தன்ராஜ்!” என்று அந்த இரவில் சத்தமிட,
முகுந்தன், “ஏய், ஏய்! என்ன செய்கிறாய்!” என்று பதற, தன்ராஜ் தன் வீட்டு ஜன்னல் கதவைத் திறந்தார்.
நு |
ழை |
வா |
யி |
ல் |
சோதனைகள்
சாதனைகளுக்கான
நுழைவாயில்கள்!
“தன்ராஜ், என் கணவரிடம் நீங்க கொடுத்த 10,000 ரூபாயை மறந்துடுங்க... அவரால் தர முடியாது” என்று சப்தமிட, தன்ராஜ், “என்ன சொல்றீங்க... ஏன்?” என்று கவலையோடு கேட்க,
முகுந்த் மனைவி, “அவரால் இந்த ஜென்மத்துல அந்தக் கடனை அடைக்க முடியாதாம். ஏன்னா, அவரிடம் பணமே இல்லையாம். இந்த உண்மை சொல்லத்தான் கூப்பிட்டேன்” என்று சொல்லி படாரென ஜன்னலை மூடிவிட்டாள்.
“இன்றிரவு நிம்மதியா தூங்குங்க முகுந்த். இனிமேல் உங்களுக்குப் பதிலா அவர் கவலைப்பட ஆரம்பித்துவிடுவார்” என்று கண்சிமிட்டிச் சொல்லிவிட்டுப் படுத்துக் கொண்டாள்.
முகுந்தனின் மனைவியைப் போல
நிமிட நேர குஷிக்காக மற்றவர்களைக்
கவலைக்குள்ளாக்குவது புண்பட்ட மனதின்
இயல்பு.
மற்றவர்களின் உணர்வை மதிக்கத்
தெரியாத இது போன்ற ஆட்களோடு
கவலையைப் பகிர்ந்து கொண்டால், துக்கம்
இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிடும்.
ஆன்மீக உணர்வு
கொண்டவர்களிடம் கவலைகளைப்
பகிர்ந்துகொண்டால், முதலில் கவலை
குறையும். பின் தீர்வு கிடைக்கும்.
இதையெல்லாம் தாண்டி ஆனந்த வாழ்வு பற்றிய வழிகளை ஆன்மீக உணர்வு கொண்டவர்களிடமிருந்து எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். அவர்களும் முழு விருப்பத்தோடு உங்களுக்கு உதவி செய்வார்கள்.
சர்வ சாக்கிய முனியிடம் ஒரு பண்டிதர், “நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறீர்களே... அது எப்படி? உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டார்.

ஒருக்கால், கண்ணாடியைத் தன்
வாழ்நாளில் கண்டிராத மனிதராய்
நீங்கள் இருந்தால்...
உங்கள் முக வர்ணனை உங்களுக்கே
தெரியாது. அழகாக வேண்டும் எனும்
ஆர்வம் அரும்பாது.
பந்தம், சொந்தம், சண்டை, கும்மாளம்
ஆகியன உங்கள் சுய உருவைக் காட்டும்
கண்ணாடிகள்.
ஒருக்கால் இந்தக் கண்ணாடிகளில்
உங்களைப் பார்க்கத் தெரியாத
மனிதராக நீங்கள் இருந்தால்...
உங்கள் அக வர்ணனை பற்றி
உங்களுக்கே புரியாது. அதனால்
உங்கள் குணக் குறைகள் விஷமாக
மாறுவதை உங்களால் தடுக்கக்கூட
முடியாது.
பகிர மறுப்பவர் பகீர் அதிர்ச்சிகளைப் பிற்காலத்தில் பகிர வேண்டியிருக்கும்.
சாக்கிய முனி, "அது வேறொன்றுமில்லை. நான் மற்றவரிடம் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். நீ துக்கத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கிறாய். இதுதான் வித்தியாசம்" என்றார்.
மற்றவர்களோடு பகிர்தல் எனும் செயல் நம்மை ஒரு அர்த்தமுள்ள மனிதராக மாற்றும். கவலைகளைப் பகிர்வது என்பது கவலைகளில் இருந்து நாம் விடுபட உதவும் ஓர் யுக்தி.
★ கவலையையும் அதன் பிறப்பிடத்தையும் கண்டுபிடிப்பது எப்படி? ★ கவலையைப் போன்ற மற்ற உணர்ச்சிகள் நம்மைத் தாக்குவது ஏன்? ★ உண்மையிலேயே கவலையில்லாமல் ஆனந்தமாக வாழ முடியும். இதுதான் வழி.
என்பன போன்ற வழிமுறைகளை உங்களுக்கு அறிவியல் பூர்வமாக, அதே நேரத்தில் எளிமையாய் கற்றுத் தருபவைதான் தியான முகாம்கள்.
இதுபோன்ற சேவைகளைச் செய்பவர்கள், அவர்களின் ஆனந்தத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால்தான் ஆனந்தத்தை சேவையாகச் செய்கிறார்கள். சேவையை ஆனந்தமாக செய்கிறார்கள்.
மீண்டும் சொல்கிறேன், கவலை பகிர பகிரக் குறையும். ஆனந்தம் பகிரப் பகிர அதிகமாகும். இது ஒரு ஆனந்த சூத்திரம்.
அர்த்தமுள்ள சம்பவம்...
90 வயது மூதாட்டியிடம் முதியோர் தினத்தன்று, டி.வி. நிகழ்ச்சியில் பின்வருமாறு கேட்கப்பட்டது
"இந்த வயதிலும் உங்களை சந்தோஷப்படுத்துவது எது?" என்ற கேள்விக்கு, "என் தொழில்!" எனச் சொன்னார்.
ஆச்சரியமடைந்த நிருபர், "என்ன தொழில் அது?" என்று கேட்க,
"என்னைவிட வயதில் மூத்த இரு மூதாட்டிகளைக் கவனித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உதவும்போது நான் பகிர்ந்து கொள்ளும் நிமிடங்கள் மகத்தானவை. மகிழ்ச்சியானவை" என்றார் மூதாட்டி.
● பகிர்தல் தியானம். பகிர்தல் பண்பு பகிர்தல் ஆனந்தம். பகிர்தல் அன்பு.
முகத்தை நேசிப்பதும் உடலின் மற்ற பகுதிகளைப் நேசியுங்கள்
ஒரு அசிங்கத்தை எடுத்து தூரப்போடுங்கள் எனச் சொன்னால்.. நீங்கள் முதலில் பயன்படுத்த யத்தனிப்பது கைவிரல்களா... கால் விரல்களா.... பெரும்பாலும் கால் விரல்கள் எனச் சொல்லும் மனிதர்களைக் கேட்கிறேன்... கால் அவ்வளவு இளக்காரமானதா?
பகிர்,
உன்னை
உனக்குப்
பகிர்
கைவிரல்களைப் பயன்படுத்தினால்... உடல் முழுக்க அருவருப்பு உணர்வை உணரும் நீங்கள், கால் விரல்களைப் பயன்படுத்தும் போது அப்படி உணர்வதில்லை. ஏன்? சிந்தியுங்கள்.
அப்படியென்றால், ஒன்று கால்விரல்கள் மரத்துப் போயிருக்க வேண்டும் அல்லது உங்களின் இதயத்தில் அதுவொரு மரியாதையற்ற பகுதியாக இருக்க வேண்டும்.
நம்மால் உதாசீனப்படுத்தப்படும் நம் உடல் பகுதிகள், அவற்றின் நுண்ணுணர்வை இழக்க ஆரம்பித்துவிடும்.
“ச்சீய்!”
எனச்
சொல்லி
எதையும்
ஒதுக்கக்
கூடாது!
எப்போதும்.
நம்மால் மதிக்கப்படாத பகுதிகள் நம் சக்தியை பகிர்ந்து கொள்வதிலிருந்து மெதுமெதுவாக விலக்கப்படும். விளைவு மூட்டி வலி, கால்வலி, இரத்தகுழாய் வீக்கம்... கட்டிகள், எல்லாம்.
பகிர்தல் முதலில் உங்களுக்குள் நிகழ வேண்டும். உடலின் வெவேறு பகுதிகள், வெவ்வேறு காரணங்களுக்காக, மனிதன் உதாசீனப்படுத்தவும், அவமதிக்கவும் கற்றுக் கொண்டான்.
முகத்தைப் போலவே உடலின் ஒவ்வொரு பகுதியும் நேசிக்கப்பட வேண்டும். பராமரிக்கப்பட வேண்டும்.
முக்கியத்துவம் தரப்படாத பகுதிகள் உங்களிடமிருந்து துண்டிக்கப்படுகின்றன. கடலின் நடுவே இருந்தும் கடலின் குளுமையை அனுபவிக்க முடியாத குட்டித் தீவாக இப்பகுதிகள் மாறிப் போகும். உடலின் சக்தியை அவை அனுபவிப்பதில்லை.
இது நிறுத்தத்திற்கு வரவேண்டிய ஒன்று.
உங்களின் சக்தியானது உடல் முழுவதும் பகிரப்பட வேண்டும், பாய்ச்சப்பட வேண்டும்!
உங்களின் முகத்தையோ அல்லது அதை விட முக்கியமாகக் கருதும் உடல் பகுதியையோ எப்படி மதிக்கிறீர்களோ, அதுபோல் உடலின் எல்லாப் பகுதிகளையும் மதிக்கிறீர்களா எனப் பாருங்கள்.
மதிப்பிழந்த பகுதிகளை மதியுங்கள்! சக்தி பாயும்!
> உன் உடலை
> நீயே
> மதிக்காவிட்டால்...
> பின்,
> யார் அதை
> மதிப்பார்களாம்!