கவலைகளின் ரிஷிமூலம்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
★ கவலையை எதிர்கொள்ளும் துணிவில்லாதவர்கள் - எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டால் அவர்கள் கதி! அதோகதிதான்! (காரணம் நிறைவேறாத ஆசை, கவலையாக மாறும்).
★ எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவது மனித இயல்புதான். மனமும் அதைத்தான் தூண்டும். ஆனால், ஆசைப்படும் முன் யோசியுங்கள். முடியாவிட்டால் பின்னாவது யோசியுங்கள்.
- இது சாத்தியமா? இல்லையா?
ஆசைப்படுவது எளிது. ஆனால், அது சாத்தியம் இல்லை என்று தெரிந்து உதறித்தள்ளுவது கடினம். எனவே ஆசைப்படும் முன் யோசிப்பது புத்திசாலித்தனம்; எளிதும் கூட.
★ எனக்கு ஆசைப்படவும் தெரியும்! சாத்தியமில்லை, தேவையில்லை என்று தெரிந்தால் அதை உதறவும் தெரியும்! கவலையைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
இந்த அளவுக்கு வாழ்க்கையை அணுகும் பக்குவம் பெற்றிருந்தால், நீங்கள் எதன் மீதும் ஆசைப்படலாம். தவறில்லை. எல்லாவற்றிற்காகவும் ஆசைப்படுங்கள். அது சரியே!

எனக்கு மட்டும்
ஏன் இவ்வளவு
என்று
தெரிந்துகொள்ள
விரும்புபவர்கள் தெரிந்து
கொள்ளுங்கள்.
உங்கள்
கவலைகளுக்குக்
காரணம்
உங்கள் ஆசைகளே!
★ "எப்படி இருக்கீங்க?"
★ "ரொம்ப நல்லா இருக்கேன்."
★ "வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா?"
★ "ஆண்டவன் கிருபையால் எல்லோரும் ரொம்ப நல்லா இருக்காங்க."
★ "வியாபாரம் எப்படிப்போயிட்டிருக்கு?"
★ "அமோகமாகப் போயிட்டிருக்கு. ஒரு
கவலையுமில்லை, எல்லாம் மேல
இருக்கிறவர் பார்த்துக்கறார்."
இப்படித்தான் நமது உரையாடல்
தொடர்கிறது. மேம்போக்காக எல்லோரும்
தாங்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவே
வெளியில் காட்டிக்கொள்கிறார்கள்.
உண்மையில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு
துன்பங்கள், கவலைகள் இருக்கின்றன என்பது
அவரவருக்கு மட்டுமே தெரியும்.
கவலையில்லாமல் வாழ எல்லோருக்கும்
ஆசைதான். ஆனால் ஆசைதான் எல்லாக்
கவலைகளுக்கும் காரணம் என்ற உண்மை
தெரியாமல் போனதுதான், எல்லா மனத்
துன்பத்திற்கும் காரணம்.
நமது ஆசைகள்தான் எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு வித்திடுகிறது. ஒரு ஆசை திருப்தி அடைந்து முடிவதற்குள், அடுத்த ஆசை வந்து விடுகிறது. இப்படித் தொடர்ந்து எழும்
ஆசைகளால், தொடர்ந்து ஏதாவது ஒரு காரியத்தைச் செய்து கொண்டோ அல்லது சிந்தித்துக்கொண்டோ இருக்கிறோம்.
கவலையில்லாமல் ஆனந்தமாக இருப்பதற்குப் போதுமானவை இருந்தாலும் எதையாவது நினைத்து நம்மில் பலர் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.
ஏன் இவ்வளவு கவலைகள்? - ஒரு சிறிய கதை மூலம் விளக்குகிறேன்.
ஒரு முறை நிட்டிராஜன் ஓட்டல் ஒன்றிற்குச் சென்றார். அங்கு, “ஒரு செட் தோசை... ஒரு நெய் ரோஸ்ட்..... ஒரு வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்... மசாலா சமோசா... கட்லெட்... சப்போட்டா பழ ஜூஸ்... பாதாம் பால்... வெண்ணிலா ஐஸ்கிரீம்...” என்று ஏகப்பட்ட ஐட்டங்களை ஆர்டர் செய்து சாப்பிட்டார்.
கடைசியாக, “சர்வர், ஒரு ஸ்வீட் பீடா கொண்டாப்பா” என்று கூறிவிட்டுக் கைகழுவச் சென்றார் நிட்டி.
சர்வர் பீடாவை, பல் பலேட்டில் வைத்து நிட்டியின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார். கைகழுவி விட்டு வந்த நிட்டிராஜன், “என்னப்பா, நான் பீடா மாத்திரம்தான் கேட்டேன், இது என்ன! கூடவே ஒரு பேப்பர்?” என்றார். சர்வர் “சார், இதுவரை நீங்கள் சாப்பிட்ட உணவோட பில்தான் இது. நீங்கள் இதுவரை சாப்பிட்டதற்கு 545 ரூபாய் கொடுக்க வேண்டும்” என்றார்.
நிட்டி, ”என்னப்பா! வெறும் சாப்பாடு மாத்திரம்தானே கேட்டேன்! இந்த பில்லை யார் கேட்டது!” என்றார் பதற்றத்தோடு.
கதை வேடிக்கையாக இருந்தாலும் கதையின் கருத்து மிக ஆழமானது, நிட்டி பல உணவுகளை ஆசைப்பட்டு ஆர்டர் செய்ததன் விளைவே, 545 ரூபாய் பில். இப்படித்தான் நாம் ஆசைப்பட்டுப் பல காரியங்களில் இறங்கி விடுகிறோம். ஆனால், நமது செயல்களைத் தொடர்ந்து வரும் கவலைகளை மட்டும் ஏற்க மறுக்கிறோம்.
நாம் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்திலும் காரியத்திலும் இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கின்றன. படித்தால் முழுக்கவனத்தோடு படிப்பது, சுவையான
| ஆ சை | என் கவலைக்கு நான்தான் பொறுப்பு என்று உணர்ந்தால், ஆசை சரி. ஆசைப்படுங்கள் தவறில்லை! |
உணவைச் சாப்பிட்டால் முழுமையாக ரசித்துச் சுவைத்துச் சாப்பிடுவது, வேலை செய்தால் பொறுப்புணர்ந்து முழுமையாகச் செய்வது என்று செய்யும் காரியங்களிலெல்லாம் முழுமையாக ஈடுபட்டால்...முதலில் முழுத் திருப்தி ஏற்படும்.
இரண்டாவது, அடுத்த ஆசை உருவாவதற்கு வாய்ப்பே கிடைக்காது. ஆசை... கவலை... ஆசை... இந்தச் சக்கரம் நின்று போகும்.
எந்த ஒரு செயலிலும் முழுமையாக ஈடுபட முடியாமல் போவது... கட்டுப்பாடற்ற, கட்டுக்கடங்காத ஆசைகளால்தான்.
ஆசை என்ற பந்தை எவ்வளவு வேகமாக வீசுகிறீர்களோ, அதைப் பொறுத்துத்தான் கவலை என்ற பந்தாக, வரம்புகள் பல உடைய வாழ்க்கைச் சுவரில் பட்டுத் திரும்பும்.
உங்கள் கவலையின் அளவு உங்கள் ஆசையின் அளவே.
ஆசைகள் குறைந்தால், கவலைகளும் குறைந்துவிடும்.
உங்கள் கவலைகளை, உங்கள் ஆசைகள் மூலம் நீங்கள்தான் தேர்வு செய்கிறீர்கள்.
இந்த உண்மையை முழுமையாகப் புரிந்துகொண்டாலே போதும், நிம்மதியான வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்துவிடலாம்.
ஆசைகள்தான் கவலைகளுக்குக் காரணம் என்று புரிந்துகொண்ட பின் தயக்கம் ஏன்?... தெளிவாக யோசியுங்கள்...
தேவையில்லாத - சாத்தியப்படாத - ஆசைகளை மனதிலிருந்து விட்டுவிடுங்கள். (இது நிச்சயம் சாத்தியமாகக்கூடிய ஒன்றே). உங்கள் கவலைச் சுமையின் பெரும் பகுதியை இறக்கி வைத்தது போல் உணர்வீர்கள்!
