KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/கவலைப்படாதே சகோதரா!Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

கவலைப்படாதே சகோதரா!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

★ சந்தோஷம் என்ற ஒளி இல்லாத வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கவலை என்ற இருள் வந்து பற்றிக்கொள்ளும்.

★ சந்தோஷம், கவலை என்ற இரண்டையும் தாண்டிய நிலைதான் ஆனந்தம்.

★ சந்தோஷம் நிரந்தரமாக எவருக்குமே இருப்பதில்லை. கவலையைக் கூட இந்த நேரத்தில் வரும், இவ்வளவு நேரம் இருக்கும் என்று பலரால் கூற முடியும். ஆனால், சந்தோஷம் எப்போது வரும், எவ்வளவு காலம் இருக்கும் என்று சிலரால்கூடக் கூற முடியாது. அதனால்தான் சந்தோஷம் ஒரு தோஷம்.

★ சந்தோஷத்திற்கு நச்சு - கவலை. கவலைக்கு மருந்து சந்தோஷம்.

போன நூற்றாண்டில் கோவைக்காரர் ஒருவர் தன் மகள் வயதிற்கு வந்த நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக ஒரு வீணை வித்துவானைச் சந்தித்து, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யத் தஞ்சாவூர் சென்றார். தேதி முடிவானதும் புறப்படுகிறபோது ஒரு குறிப்பிட்ட மனிதரின் பெயரைச் சொல்லி, அவரது கடத்தை எங்கள் பகுதியில் எல்லோரும் விரும்புவார்கள் என்று சொன்னார்.

இதிலே காயப்பட்டுப் போன வீணை வித்வான், பொறாமையால், “அவர் கடம் வாசிப்பதில் கைதேர்ந்தவர்தான். ஆனால் உற்சாக மிகுதியால் கடத்தைத் தூக்கிப்

Swami

கவலை

வலை!

சந்தோஷம் ஒரு

தோஷம்.

ஆனந்தம்

ஒன்றே நிரந்தரம்!

போட்டுப் பிடிப்பார். அவ்வாறு பிடிக்கும்போது கடம் கீழே விழுந்து உடைந்து விட்டால், ஒரு நல்ல நாளில் அது உங்களுக்கு அபசகுனமாகப் போகும்” என்றார்.

கோவைக்காரர், கடம்காரர் வீட்டுப் பக்கமே போகாமல் சத்தமில்லாமல் திரும்பிவிட்டார்.

கச்சேரிக்கான நாள் நெருங்கிக்
கொண்டிருந்தது. கடம் வாசிப்பவர், கடம்
வாசிக்கத் தன்னை அழைக்கவில்லை என்பதை
உணர்ந்து, தன்னை அழைக்காமல் ஒரு கச்சேரியா
என்று கேட்பதற்காகக் கோவைக்காரரின்
வீட்டுக்கு வந்தார்.

கோவைக்காரர் சொன்னதையெல்லாம்
அமைதியாகக் கேட்டுக்கொண்டார் கடம்
கலைஞர், பிறகு பேச ஆரம்பித்தார்.

“வீணை வாசிப்பதில் தஞ்சாவூர்க்காரர் சரஸ்வதிக்கு ஒப்பானவர்தான். ஆனால், அவருடைய நீண்ட வீணையை வெள்ளைத் துணியைப் போட்டு மூடி வேனிலிருந்து கீழே இறக்கி உங்கள் வீட்டுக்குள் இரு கைகளாலும் கொண்டுவருகிறபோது பிணத்தைக் கொண்டு வருகிற மாதிரி இருக்கும். ஒரு நல்ல நாளில் இந்த அபசகுனம் நடக்க வேண்டுமா? நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்” என்று கடம் கலைஞர் சொன்ன போது கோவைக்காரருக்குப் பகீரென்று இருந்தது.

கடம் கலைஞர் போன பிறகு கோவைக்காரர், தம் மகளின் விசேஷத்திற்குச் கச்சேரியே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்!

ஏன் இந்தக் கதையைச் சொன்னேன்? ஒருவரின் பொறாமை மூன்று பேரின் ஈகோவைப் பாதித்துவிட்டது என்பதைச் சொல்வதற்குத்தான், ஈகோ பிரச்சனை எழுந்து விட்டால் முதலில் பாதிக்கப்படுவது சந்தோஷம்தான். எனவே பொறாமைப் பேயை எழுந்து உட்காராதபடி பார்த்துக்கொள்வது நம் வேலை.

சந்தோஷத்தைத் தக்கவைத்துக் கொள்ள இன்னோர் எளிய வழி, கவலைப்படாமல் இருப்பது. கிருஷ்ணபரமாத்மா எங்குமே கவலைப்பட்டதாகவோ, அரற்றியதாகவோ காணப்படவில்லை. அதனால்தான் அவர் ஆனந்த மயத்தில் எப்போதும் குடிகொண்டிருக்க முடிந்தது.

ஆகாய விமானத்தில் பறந்து கொண்டிருக்கிற போது பாதுகாப்புப் பெரும்பாலும் விமான ஓட்டியின் கரங்களிலேயே உள்ளது. விமான ஓட்டி நமது உயிருக்கும் உடைமைக்கும் பொறுப்பாக இருக்கிறார் என்று எண்ணாமல், நாம் கவலைப்பட ஆரம்பித்தால் பயணம் இனிதாக இருக்காது.

இந்த உலக வாழ்விலும் நாம் ஆனந்தமயமாக இருக்க வேண்டும் என்றால், இறைசக்தி மீது பாரத்தைப் போட்டுவிட்டு நமது கடமைகளைச் செய்வது ஒன்றே, சிறந்த வழி.

நம்மால்தான் எல்லாம் என்கிற நினைப்பை அகற்றுதலே ஆனந்தத்தின் ஆரம்பப் படிக்கட்டுதான்.

"அதிகாலையில் கண்ணாடித்தொட்டிகளை உற்றுப் பாருங்கள். அதில் தங்க மீன்கள் வண்ணக் கனவுகளோடு துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்" என்று ஒரு கவிஞர் கூறியபடி, மீன்கள் தாங்கள் குதிக்கின்ற நீரே குழம்பாக மாறுவதைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல் துள்ளிக்கொண்டே இருக்கின்றன. காலையிலேயே மலர்ந்து மணம் பரப்பும் வாசமுள்ள பூக்களை எண்ணிப் பாருங்கள். சலசலத்து ஓடுகிற சங்கீத நதிகளில் முகம் பார்க்கும் சின்ன சிட்டுகளைப் பாருங்கள். இயற்கையே ஆனந்தமயமாக இருக்கிறபோது மனிதருக்கு மாத்திரம் கவலை ஏன்?

| பா | உலக வாழ்விலும் நாம் ஆனந்தமயமாக இருக்க வேண்டும் | | ர | என்றால், இறைசக்தி மீது பாரத்தைப் போட்டுவிட்டு நமது | | ம் | கடமைகளைச் செய்வது ஒன்றே, சிறந்த வழி. |

காரணம் - ஒரு இடத்தில் வெளிச்சம் மறைந்த அடுத்த நொடியே யாருமே அழைக்காமல் அந்த இடத்தில் இருள் வந்து சேர்ந்துவிடும். ஒருவர் மனதில் சந்தோஷம் குறைந்த அடுத்த நொடியே சந்தடியே இல்லாமல் மனதில் கவலை தோன்றிவிடும்.

பொறாமை, நம்பிக்கையின்மை, கர்வம் என்ற மூன்று குணங்கள்தான் மனிதனின் சந்தோஷத்தைக் குறைக்கும் பெரிய காரணிகள்.

நமது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் நமது குணங்கள் வெளிப்படும். கொஞ்சம் நிதானத்தோடு கவனித்துப் பார்த்தால் உங்கள் சந்தோஷத்தைக் குறைக்கும் காரணிகளை உங்கள் சொல், செயலிலிருந்து மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். முயன்று பாருங்கள்!

என்ன, கவலையின் காரணங்களைக் கண்டுபிடித்து விட்டீர்களா? அப்புறம் என்ன யோசனை. சந்தோஷத்தை உங்களிடம் இருந்து குறைக்கும் காரணிகளை வேரறுக்க ஆரம்பியுங்கள்.

வெளிச்சத்தைக் குறைப்பவற்றை அகற்றினாலே போதும் வெளிச்சம் அதிகரிக்கும். இருள் மறையும்.

சந்தோஷத்தைக் குறைப்பவற்றை மனதிலிருந்து அகற்ற ஆரம்பியுங்கள். சந்தோஷம் அதிகரிக்க ஆரம்பிக்கும். கவலை கலைய ஆரம்பிக்கும்.

சகோதரர்களே, சகோதரிகளே!

கவலைப்படாதீர்கள். மகிழ்ந்து சந்தோஷம் அடையுங்கள். பின் அதையும் தாண்டி ஆனந்தமாக இருங்கள்!