KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/எல்லாவற்றையும் துல்லியமாகக் கிரகியுங்கள் - இது ஒரு தியானம்Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

எல்லாவற்றையும் துல்லியமாகக் கிரகியுங்கள் - இது ஒரு தியானம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கடப்பாரையை இறுகப்பற்றித் தூக்கும் விரல்கள், ஒரு டியூப்லைட்டைத் தூக்கும்போது தன்னை மாற்றிக்கொள்கிறது. பதமாகப் பற்றுகிறது. கடப்பாரையை இறுக்குமளவுக்கு டியூப்லைட்டைப் பற்றினால்.. டியூப்லைட்டின் கதி என்னவாகும்!

இந்தப் பொருளுக்கு இவ்வளவு பவுண்ட் பிரஷர் கொடுத்துத் தூக்க வேண்டுமென விரல்களுக்கோ, மூளைக்கோ தனிப்பட்ட பாடம் எதுவும் எடுக்கப்படவில்லை. இருந்தும் ஒரு பொருளைக் கையாள அதற்குத் தேவையான அளவு தாண்டி அழுத்தம் நாம் தருவதில்லை. காரணம் மூளை வளர்ச்சி!

இதேபோல், விதவிதமான மனிதர்களின் குணம் கண்டு கையாளத் தெரிந்து விட்டால்... அதுதான் குணமுதிர்ச்சி, பக்குவம். ஞானம்.

மூளைரீதியாகப் பகுத்து ஆராய்வதால் மனிதர்களின் குணத்தைப் படித்து விட முடியாது. இதற்கு இதயரீதியான, உணர்வுரீதியான அணுகுமுறை தேவை. இந்தக் குணமுதிர்ச்சியைப் பெற சில டிப்ஸ்...

| கிரகீ... குணம் முதிரும்! | | :--- |

★ முதலில் உங்களின் வார்த்தைகள், குரல், முகபாவம் போன்றவற்றை ஒவ்வொரு பேச்சின் போதும் முடிந்தளவுக்கு கிரகியுங்கள்.

★ அடுத்து, உங்களின் பேச்சு மற்றும் அசைவுகளால், மற்றவர்களின் முகபாவம், கண்கள், குரல், வார்த்தைகள் எந்த அளவுக்கு மாறி வெளிப்படுகின்றன என்பதை கிரகியுங்கள்.

★ கடைசியாக, அதே வார்த்தைகள், முகபாவனைகளை மற்றவர்கள் உங்களை நோக்கி அனுப்பியிருந்தால், உங்களுக்குள் என்ன நிகழ்ந்திருக்கும் என ஆழமாய் உணர்ந்து பாருங்கள்.

இதை எல்லா நல்ல, கெட்ட நிகழ்வுகளுக்கும் செய்து பாருங்கள். மற்றவர்களால் உங்களுக்குள்ளும் உங்களால் மற்றவர்களுக்குள்ளும் ஏற்படும் மாற்றங்களைத் துல்லியமாய் கிரகியுங்கள். இது ஒரு தியானம்.

இந்தச் செயல்களைச் செய்ய செய்ய, நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடங்களே, உங்களை முதிரச் செய்யும், குணமுதிர்ச்சி பெறுவீர்கள்.