KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/குணமுதிர்ச்சிSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

குணமுதிர்ச்சி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ITI-யில் இன்ஜினியரிங் முடித்து மாதம் லட்சக்கணக்கில் அமெரிக்காவில் சம்பாதிக்கும் அந்த நபர், என்னோடு பேசிக் கொண்டிருக்கும்போது, "என்னை சாதனையின் உச்சியைத் தொட வைத்த என் தந்தை ஒரு ஏமாளி. நானும் ஒரு ஏமாளி" என்றார்.

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" என விசாரித்ததற்கு, "நான் பெரிய ஆளாக வேண்டுமென என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.

இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்த பிறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது...

வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் சேர்த்துவிட்ட நாங்கள், உலகில் வாழக் கற்றுக்கொள்ளவேயில்லை. 'வாழ்க்கை என்றால் என்ன?' என்ற கேள்விக்கு 'நாங்கள் ஏமாளி!' என்ற பதில்தான் கிடைக்கிறது. இதற்கு வழிசொல்லுங்கள்" என்று கேட்டார்.

ஒரு உண்மையை உறுதிசெய்து கொள்ளுங்கள்.... உங்களின் எல்லா உழைப்புகளும் உங்களின் உடலைப் பிழைக்க வைக்க மட்டுமே உதவும். அவற்றால் மனதைக்கூடப் பிழைக்க வைக்க முடியாது!

  • உடலைத் தாண்டிய மனதையும் உணர்வையும் பிழைக்க வைக்க, தழைக்க, குணமுதிர்ச்சிப் பெற வேண்டும். அதற்காகத் தனியாய் உழைக்க வேண்டும்.

★ குணமுதிர்ச்சியைப் பெறுவது, சாதாரண மனிதர் ஞானமடைவதற்கான மிக முக்கியமான படிகளில் ஒன்று.

ஒருவர் வணங்கும் காட்சி

குணமுதிர்ச்சியைப் பெறாதவன்

வயோதிகனாயிருந்தாலும்

சிறுபிள்ளைதான்.

குணமுதிர்ச்சியைப்

பெற்றவன்

சிறுபிள்ளையாயிருந்தாலும்

அவன்

முதிர்ந்த வயோதிகனுக்கு

இணையே!

* கோபம்
பாசம்
பயம்

  • என்றழைக்கப்படும் உணர்ச்சிகளைச் சுயக்கட்டுப்பாட்டில் வைத்திருந்து, தானும் மற்றவரும் பாதிக்கப்படாதவாறு உணர்ச்சிகளைக் கையாளும் திறன்தான் குணமுதிர்ச்சி.

* உணர்ச்சிகளைத் தாண்டி, தானும்
மற்றவர்களும் பரவசமடையுமாறு வாழச்
செய்யும் குணமுதிர்ச்சியே ‘ஞானம்’.

★ குணக்கோளாறுகளைத் தாண்டிய
குணமுதிர்ச்சியைப் பெற ஒருவர் செய்ய
வேண்டிய முதல் செயல்,

தானும் மற்றவர்களும் குணக்கோளாறால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைப் பட்டியலிடுவதுதான்.

‘பட்டியலிடுவதே’ குணக்கோளாறுகளை
மறையச் செய்து குணமுதிர்ச்சியை
வளர்க்கும்.

உணர்வோடு பட்டியலிட்டுப் பாருங்கள், புரியும்.

இருவருக்கிடையேயான விறுவிறுப்பான தொலைபேசி

சம்பாஷனைகளின் தொகுப்பு ஒன்று...

ஞாயிறு: மாலை - மணி 6.30 (தொலைபேசியில்) “என்ன தலைவா! கண்டுக்கவே மாட்டேங்கறீங்க! உங்களுக்கு ஏதாவது வேலையிருந்தா வீட்டுப் பக்கம் வர்ரீங்க, இல்லைனா கண்டுக்கவே மாட்டேங்கறீங்களே!...

இன்னும் கொஞ்ச நேரம் பேசுங்க தலைவா! உங்க குரலை கேட்டுக்கிட்டேக் இருக்கலாம் போல இருக்கு.”

திங்கள்: காலை - மணி 7.30 (தொலைபேசியில்)

“சனியனே, அந்த டி.வி. வால்யுமைக் குறைச்சி வை... போன்ல பேசறது காதுல விழல...

யார் பேசறது?

ஓ, நீங்களா?...

சரி சரி ‘எதுவா இருந்தாலும் சாயங்காலம் 6 மணிக்கு நான் வீட்டுக்கு வந்த பிறகு பேசிக்கலாம். இப்ப போனை வச்சிடறேன்’.

திங்கள்: மாலை - மணி 6.00 (வீட்டில்)

“வாங்கோ! வாங்கோ!

உங்கள மாதிரி நல்லவங்க வீட்டுக்கு வர்றதுக்கு நாங்களெல்லாம் ரொம்ப குடுத்துவைச்சுருக்கனும்...”

வதலையில் இருக்கும் ஒவ்வொரு முடியும்
ளதினம் தினம் 0.01714 inch
ர்வளர்ந்துகொண்டே இருக்கிறது.
ச்☞ தலைக்குள் இருக்கும் நீங்கள்?
சி

புதன்:

மதியம் - மணி 3.00 (வழியில்)

"சார், வளவளன்னு அறுக்காதீங்க. என்ன சொல்லனுமோ அதைப் பட்டுன்னு சொல்லுங்க...

தலைக்குமேல் வேலையிருக்கு....."

வெள்ளி: காலை - மணி 8.00 (தொலைபேசியில்)

"ஹலோ, Healer ஆனந்த ஸ்ரீதர் இருக்காங்களா...

காலையிலிருந்து உங்க நினைப்பாவே இருக்கேன். உங்களைப் பார்க்கணும் போல இருக்கு..."

சனி:

சாயங்காலம் - மணி 7.00 (தியான சிகிச்சை முகாமில்)

"எனக்கு ஆறுதல் சொல்லுவீங்கனு நினைச்சு வந்தா.. என்ன இப்படிப் பேசறீங்க? நான்தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்னு சொல்றீங்க.

உங்க வேதாந்தத்தை உங்களோடேயே வெச்சுக்கோங்க... ஆளவிடுங்க!"

ஞாயிறு: மாலை - மணி 6.30 (தொலைபேசியில்)

"தலைவா!

| கு ண ம் | 'மனிதர்களின் குணம் மாறும் போது நிறம் மாறும். தரமும் மாறும்' என்ற உண்மையை ஒருவர் தன்னுடைய குணமுதிர்ச்சியினால் புரிந்து கொள்ளமுடியும். |

என்ன என்மேல கோபமா!

மன்னிச்சுக்கோங்க தலைவா!

நேத்து ஏதோ வேகத்துல அப்படிப் பேசிட்டேன்...

இன்னும் கொஞ்ச நேரம் பேசுங்க தலைவா! உங்க குரலை கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு!”

portrait

இத்தனை வெரைட்டியான முகங்களும்
பேச்சும் தாண்டவமூர்த்தி என்னும் ஒரே ஒரு
மனிதர், ஆனந்தஸ்ரீதர் என்னும் தியானபீட
ஹீலரிடம் (தியானசக்தியால் நோய்க்கு
சிகிச்சையளிப்பவர்) ஒரே ஒரு வாரத்தில்
காட்டியவை.

ஆச்சரியமாக இருக்கிறதா!

உங்களுக்கு ஆச்சரியமாகத் தோன்றினால்...

நேரத்திற்கு நேரம் மனிதர்களும் நாமும் முழுக்க முழுக்க வெவ்வேறு முகங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம் என்ற உண்மை உங்களுக்குத் தெரியவில்லை என்று பொருள்.

தாண்டவமூர்த்தி அவரின் குணம் போகிற போக்குக்கு, அது போடும் தாளத்திற்குத் தாண்டவமாடியதின் விளைவுதான், ஒருநேரத்தில், “தலைவா!”, அடுத்த நேரம் “வளவளன்னு அறுக்காதீங்க, ஆளவிடுங்க” மீண்டும் பழையபடி “தலைவா!” என்று சொல்வதெல்லாம்.

‘மனிதர்களின் குணம் மாறும் போது நிறம் மாறும்.

நிறம் மாறும் மனிதர்கள்,
மற்றவர்களின் நிறம்
மாறுவதைக்
கவனிக்குமளவுக்கு
தங்களின் நிறம்
மாறுவதைக்
கவனிப்பதேயில்லை.

☞ நீங்களாவது கவனிக்கலாமே... தரமும் மாறும்' என்ற உண்மையை ஒருவர் தன்னுடைய குண முதிர்ச்சியினால் புரிந்துகொள்ளமுடியும்.

மற்றவர்கள் உணர்ச்சிகொந்தளிப்பால் தடுமாறிக் கோபப்படும் போது, பதிலுக்கு நாமும் கோபத்தையோ, வெறுப்பையோ காட்டினால், அது நாம் இன்னும் குணமுதிர்ச்சியைப் பெறவில்லை என்பதற்கான அறிகுறி.

"இவையிவை எனக்குப் பிடித்த விஷயங்கள்" என்று நாம் முத்திரை குத்தும் போதுதான், உணர்ச்சிகொந்தளிப்புக்கான வெடிமருந்து தயாராகிறது.

பிடித்த விஷயங்கள் எந்த அளவுக்கு சந்தோஷத்தைத் தருகிறதோ அதே அளவு நமக்குப் பிடிக்காத விஷயங்கள் நம்மைத் துக்கத்தில் ஆழ்த்தும். இதை விளக்கும்...

ஒரு அருமையான ஹஸீட் கூற்று.

கிளர்ச்சியின் ஆழம்தான் துக்கத்தின் உயரம்!

மனமுதிர்ச்சி பெற்ற ஒருவரை ‘புகழ்ச்சி’ - கிளர்ச்சிக்குள்ளாக்காது. ‘இகழ்ச்சி’

  • தளர்ச்சிக்குள்ளாக்காது.

தாண்டவமூர்த்தி கோபத் தாண்டவம், வெறுப்புத் தாண்டவம், சலிப்புத் தாண்டவம் ஆடிய போது ஸ்ரீதர் கொஞ்சம்கூடச் சளைக்கவில்லை.

எப்போதும் எதனாலும் அசைக்க முடியாத கருணை உணர்வோடு இருப்பதே, குணமுதிர்ச்சியின் பூரண வெளிப்பாடு.

இந்த நிலையைத்தான் நீங்கள் ஒவ்வொருவரும் அடைந்து, வாழ்வின் ஆனந்தத்தை ருசிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

முதிர்ச்சி பெறுவதற்கு ஜென் ஞானி மூரெ-சென்னின் அழகான கூற்று ஒன்று...

காற்றில் சருகாகிவிடு! ஆற்றில் தக்கையாகிவிடு!

  • என்ன ஒரு அற்புதமான பொன்மொழி!

சருகு காற்றோடு காற்றாகச் செல்லும். தக்கை நீரோடு நீராகச் செல்லும். ஆனால், சருகு சருகாக இருக்கும். தக்கை தக்கையாக இருக்கும். இரண்டுக்குமே கஷ்டம் இருக்காது.

இந்த நிலையைத்தான் முதிர்ச்சி என்று அழைக்கிறேன்.

வாழ்க்கை எனும் ஆற்றில் நாம் தக்கையாக மாறிவிடுவதுதான் குணமுதிர்ச்சி. மாறிவிட்டால்... 'மற்றவர்களும் நம்மைப் போன்றே உணர்ச்சிக்கொந்தளிப்பில் தவிப்பவர்கள்தான். அவர்களும் நம்மைப் போன்றே சுயக்கட்டுப்பாட்டைச் சில நேரங்களில் இழந்து, செய்வதறியாது மற்றவர்கள் மீது கோபத்தைக் கொட்டித் தீர்ப்பவர்கள்தான்' என்ற உண்மை புரிய வரும்.

கோபத்திற்குப் பதில்
கருணை பிறக்கும்.
வெறுப்பிற்குப் பதில்
அன்பு பிறக்கும்.
சலிப்பு களிப்பாக மாறும்.
எப்போது?
குணம் முதிர அனுமதித்தால்!

அர்த்தமுள்ள சம்பவம்...

பரத ரிஷியிடம் குடும்பஸ்தர் “நான் துறவியாக விரும்புகிறேன்” என்றார். ரிஷி “பொய். உலகைச் சந்திக்க விருப்பம் இல்லை என்பதை நாகுக்காகச் சொல்கிறாய்” என்றார். மேலும்,

“சம்சாரியாய் இருப்பதற்கான அதிகபட்ச தகுதிதான் சந்நியாஸியாய் இருப்பதற்கான குறைந்தபட்ச தகுதி. இப்போது சொல்... துறவியாகிறாயா?” என்றார்.

  • நீங்கள் யார் என்பது முக்கியம் அல்ல. குணமுதிர்ச்சியே முக்கியமானது.