நேசம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
திருவண்ணாமலையில் பொதுஇடமொன்றில் எதிர்பாராத விபத்தொன்று ஏற்பட்டது. விபத்துக்குள்ளானவர் மயங்கிக் கிடந்தார்.
இதைப் பார்த்து ஓடிவந்த அந்தப் பெண்மணி அடிபட்டவரை நெருங்கி, ஏதோ உதவிகள் செய்து கொண்டிருந்தார். கூட்டம் அந்த இடத்தைச் சுற்றிக்கொண்டது.
அப்போது திடகாத்திரமான ஒரு மனிதர் கூட்டத்தைக் கலைத்து உள்ளே நுழைந்தார். உதவி செய்து கொண்டிருந்த பெண்ணை விலகுமாறு சைகை செய்துவிட்டு, "நான் விபத்துக்கு முதலுதவி செய்வது பற்றி டிப்ளமோ முடித்தவன். நான் இனி பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.
திடீரென சத்தமிட்டார், "உடனே ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள்! இதற்குமேல் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லையே..."
மெல்ல அப்பெண்மணி சொன்னார்: "சத்தமிடாதீர்கள். நான் இங்குதான் இருக்கிறேன் என்று. அவர் ஒரு டாக்டர் எனத் தெரிந்ததும் அந்த மனிதர் தலைகவிழ்ந்தார்.
* எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயல்படும் மனிதர்கள் எப்போதும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். உலகில் இப்படி நடந்துகொண்டால், அவமானத்தோடு நின்றுவிடும். அதேபோல் உறவுகளிடம் நடந்துகொண்டால்...?
★ நேசம் புதிரானது.
★ நேசம் என்பது பலர் எதிர்பார்த்தும் கிடைக்காத ஒன்று! பலர் மற்றவருக்குக் கொடுக்க முயற்சித்தும் கொடுக்க முடியாத ஒன்று! என்ன, குழப்பமாக இருக்கிறதா?

அன்பை தியானமாக்கு. தியானத்தை அன்பாக்கு.
உங்களை நீங்களே
நேசிக்காமல்,
மற்றவர்களை
நேசிக்க முயல்வது
உங்களை நீங்களே
வெறுப்பதற்குச் சமம்.
*நேசத்தைப் பற்றிப் பலர் பேசியிருந்தாலும் அதில் முக்கியமான சிலரின் கூற்றைத் தெரிந்து கொண்டால் உங்கள் குழப்பம் தீர்ந்துவிடும்.
புத்தர் - 'உன்னை நேசி'.
இயேசு - 'உன்னை நேசிப்பது போல்
பிறரையும் நேசி'.
ரிஷி கூற்று - 'உன்னை நேசிக்காமல்
பிறரை நேசிக்கவே முடியாது'.
இந்த மூன்று பேரின் கூற்றையும் தெரிந்து
கொண்ட பிறகு, கீழ்க்கண்ட உண்மைகளைப்
புரிந்துகொள்வது சுலபம்.
"பிறரை நேசிக்கும் அளவுக்குதான் நீங்கள் உங்களை நேசிக்க முடியும்.
உங்களை நேசிக்கும் அளவுதான் பிறரை நீங்கள் நேசிக்கும் அளவு.
வேஷம் அல்லது உள்வெறுப்பு கலந்த
நேசமாக உங்கள் நேசம் இருந்தால்...
அது பிறரைத் தீண்டுவதைவிட
முதலில் உங்களைத்தான் அதிகம் தீண்டும்''.
சர்வ சாக்கிய முனியின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் மூலமாக நேசத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு பக்தை சர்வ சாக்கிய முனியிடம் தன் குடும்பப் பிரச்சனைக்குத் தீர்வு தேடி வந்தார்.
சர்வ சாக்கிய முனி கருணை கலந்த குரலில், "என்னம்மா! என்ன பிரச்சனை? ஏன் இவ்வளவு சோகம்?" என்றார்.
பக்தை, "சாமி! என் கணவரை நான் முழுமையாக நேசிக்கிறேன். ஆனால், அதை அவர் புரிந்துகொள்ளவே இல்லை. இதுதான் பிரச்சனை. இதை எப்படித் தீர்ப்பது?"
அதுவரை அமைதியாக இருந்த சர்வ சாக்கிய முனி, கோபம் கலந்த குரலில், "பொய் சொல்கிறாய்" என்றார்.
பக்தை, "என்ன பொய் சொல்கிறேன்?" குழப்பமாகக் கேட்டார்.
சாக்கிய முனி, "உன் கணவரை நேசிப்பதாக நீ சொல்வது முழுப் பொய்".
பக்தை, "என்ன சாமி சொல்றீங்க?" என்றார்.
சாக்கிய முனி, "முதலில் நீ உன்னை நேசி. அப்புறம் உன் கணவரை நேசிப்பது பற்றி யோசிக்கலாம்" என்று கூறி முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டார்.
பக்தை, "இல்ல சாமி... நான் கூறுவது உண்மை. என் கணவரை நான் முழுமையாகத்தான் நேசிக்கிறேன்' என்று கூறினார்.
| க ண் டு பி டி ப் பு | உண்மையாய் அன்பு செய்யும் ஒரு மனிதரைத் தேடுகிறேன். ஆனால் கண்டுபிடித்தபாடில்லை... -சாக்ரடீஸ் Today's love is nothing but a bussiness. Everybody wants to give less and gain more -Behavioural scientists. |
சாக்கிய முனி, “வெறும் வேஷம்...” என்றார்.
பக்தை, “அப்படியென்றால்... என் கணவர் நல்லவர்தான். நான்தான் வேஷம் போட்டு பிரச்சனை உண்டு ண்ணுகிறேன் என்று சொல்ல வருகிறீர்களா?” என்று கேட்டார்.
சாக்கிய முனி, “ஏம்மா, நீகூட ரொம்ப நல்ல பெண்தானே!” என்று தெளிவாகக் கூறினார்.
சாக்கிய முனியின் இந்த வரிகள் பக்தையை யோசிக்க வைத்தது. “தொடக்கத்திலிருந்தே நான் கேட்கும் எல்லா கேள்விக்கும் முரண்படுவது போல இவர் பேசினாலும் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை எனக்குப் புரியவைக்க முயற்சிக்கிறார் போலத் தெரிகிறதே...
நான்தான் அது புரியாமல் வீண் விவாதம் செய்து நேரத்தை வீணடிக்கிறேனோ!” என்ற சிந்தனை உதித்த அடுத்த வினாடியே, வாக்குவாதத்தை பக்தை தன் மனதிலிருந்தே தூக்கி எறிந்துவிட்டார்.
பணிவோடு, சாக்கிய முனி சொல்ல நினைப்பதை முழுமையாகக் கேட்பது என்ற முடிவோடு, “சாமி, இதுநாள் வரை நான் நேசித்தது... மற்றவர்கள் என்னை நேசித்தது... இதெல்லாம் என்ன?” என்று பணிவோடு கேட்டார்.
சாக்கிய முனி, “எல்லாம் பாச நாடகம்” என்றார்.
பக்தை, “சரி! பாச நாடகத்தைச் சரியாக நடத்த என்ன செய்வது?” என்று திரும்பவும் கேட்டார்.
சாக்கிய முனி, “முதலில் உன்னை நேசி. உன்னை நேசிக்காமல் பிறரை நேசிக்க முயற்சிப்பது, ஆற்றில் தவிக்கும் நீச்சல் தெரியாத ஒருவரை,
தி
ற
வு
கோ
ல்
ஒருவர் தன்னையே
நேசிக்க ஆரம்பிப்பது
ஆனந்த மாளிகையின் திறவுகோல். நீச்சல் தெரியாத இன்னொருவர் காப்பாற்ற நினைத்து ஆற்றில் குதிப்பதற்குச் சமம்.
உன்னை நேசிப்பது எப்படி என்பதையே தெரிந்துகொள்ளாமல் மற்றவரை நேசிக்கிறேன் என்ற பெயரில் நீ செய்வது எல்லாமே வெறும் வேஷம்தான். பாச நாடகம்தான்!
‘நேசத்தை’ காட்டி உன் கணவரை உன் கைக்குள், உன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, இவ்வளவு நாட்களாக, ‘உண்மையாக நேசிக்கிறேன்’ என்ற பெயரில் முயற்சித்து இருக்கிறாய்.
நீ எதிர்பார்த்தபடி ஏதும் நடக்கவில்லை.
எனவே கணவர் மீது பழியைத் தூக்கிப் போட்டு
விட்டாய்.
இப்போது பிரச்சனையின் ஆணிவேர் எங்கே இருக்கிறது என்று புரிகிறதா?
நேசம் என்ற பெயரில், பாச வேடமிட்டு
நீயும் மற்றவரும் நாசமடைவதற்கு இன்றே ஒரு
முற்றுப்புள்ளி வை.
முதலில் உன்னை நேசிக்க ஆரம்பி.
மற்றவை எல்லாம் தானாகப் புலப்பட ஆரம்பிக்கும்” எனச் சொல்லி முடித்தார்.
குருவின் மீதிருந்த பக்தியால், குரு
போதித்ததை நடைமுறைப்படுத்த சிரத்தையோடு
முயன்ற பக்தை, நேசத்தைப் புரிந்துகொண்டு
வாழ்க்கையை வென்றார்.

நேசிக்க ஆரம்பி... முதலில் உன்னை!
நேசம் உங்களை நிரப்பிய
பின் மற்றவர்களுக்கு
வழிந்து செல்லட்டும்!
உங்களின்
கஜானாவிலிருக்கும்
அமைதியும் ஆனந்தமும்
உங்களின் அன்புத் தரத்தை
நிர்ணயிக்கின்றன.
நேசத்தை முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் மற்றவரை நேசிப்பதைப் பற்றி நாம் யோசிக்கவே முடியும்.
நேசம் என்ற உண்மையான அன்பு நம்முள் மலராத வரை...
★ நேசம் என்ற பாசவலையால் ஒருவரை ஒருவர் மனதளவில் கட்டிப் போட்டு, மற்றவரை நம் கைக்குள் வைத்திருக்க உதவும் ஒரு தந்திரவலையாகத்தான் நேசத்தை நாம் பயன்படுத்த முடியும்.
★ பாசம் என்ற உரிமையைப் பயன்படுத்தி நம் நெருங்கிய உறவுகளுக்குச் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறோமா? அல்லது நம் கட்டுக்குள் அவர்களை வைத்திருக்க முயற்சித்திருக்கிறோமா? ஆராயுங்கள். உண்மை புரியும்.
★ உங்கள் உறவுகளுக்கு முழுச் சுதந்திரம் நீங்கள் கொடுக்கவில்லை என்றால், தெரிந்துகொள்ளுங்கள்... இவ்வளவு காலமாக நேசம் என்ற வேஷமிட்டு ‘பாச நாடகங்கள்'தான் நிகழ்ந்திருக்கிறது. உண்மையான நேசம் நிகழவில்லை.
நேசம் என்பது உண்மையான அன்பு மலர்.
ஒருவர் தன்னையே நேசிக்க ஆரம்பிப்பது ஆனந்த மாளிகையின் திறவுகோல்.
இது ஒரு சிறந்த தியான முறை.
நம்மை நாமே நேசிப்பதைப்பற்றி யோசியுங்கள்.
நேசிக்க ஆரம்பியுங்கள். அன்பு என்னும் மலர் உள்ளுக்குள் மொட்டாகக் காத்துக்கொண்டிருக்கிறது.
அன்பு மலர - நீங்கள் வளர - நேசியுங்கள்! வேறு வழியேயில்லை நீங்கள்தான் உங்களுக்கு உதவ வேண்டும்.
அர்த்தமுள்ள சம்பவம்
லைலாவிடம் மஜ்னு கேட்டதற்கு,
“அன்பே! ‘எல்லோருக்கும் தெரிந்த,
யாருக்கும் புரியாத அது எது?’ என நேற்று
நீ கேட்ட விடுகதையின் பதில் என்ன?”
புன்னகைத்த லைலா, “அது அன்பு” என்றாள்.
நேசம் உங்களின் வசமாக
புரிந்துகொள்ளுதல் விசாலமாகட்டும்!
| தியான |

உளிகள் | சில வருடங்கள் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்ததால், ஒரு நண்பரைப் பற்றி இன்னொரு நண்பரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியுமா? |
பல வருடங்கள் ஒன்றாய் வாழ்ந்த தம்பதியினரே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளத் திக்கித் திணறும் போது, சில வருடங்களில் இன்னொருவரைப் புரிந்து கொள்வது எப்படிச் சாத்தியம்?
| கொஞ்ச காலம் பழகியபின், ஒருவரை நமக்குப் பிடித்துவிட்டால், அவர்களை முழுமையாகப் புரிந்துகொண்டதாகவே நம்புகிறோம். நாம் அவரைப் பற்றிப் புரிந்து வைத்திருப்பதற்கு நேர்மாறாக அவர் நடந்துகொள்ளும்போது, அந்த உறவு புதிராகத் தெரிகிறது. பின் பூசலாக அது வெடிக்கிறது. | 'யோசனைகள்' ஆழமில்லா மேலோட்டமான எண்ணங்கள். 'சிந்தனைகள்' ஆழமான விழிப்புணர்வு மிகு பல்நோக்கு எண்ணங்கள். |
விளைவு, நம் நேசம் நாசமாகிறது.
அவரின் நேசம் "மோசம்" என்ற முடிவு உருவெடுக்கிறது.
இந்தக் குளறுபடிகளுக்குக் காரணம் அவர்களின் நடத்தையா, இல்லை அவர்களின் சில பகுதிகளைத் தவறாகச் சுட்டிக்காட்டும் நம் புரிந்துகொள்ளுதலா?
தீவிரமாக யோசித்து தீர்வு காணப்பட வேண்டியது.
மனிதர்களை எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத்தான் உங்களைப் பற்றி நீங்கள் புரிந்து வைத்திருப்பீர்கள். காரணம், அவர்களை நேசிக்கும் அளவுதான் உங்களை நீங்கள் நேசிப்பதின் அளவு!.
நேசத்தின் தரம் உயரவேண்டுமானால், புரிந்துகொள்ளுதலின் தரம் உயர வேண்டும்.
மனத்தை...
யோசனைகள்
இழுத்தடிக்கும்.
சிந்தனைகள்
செதுக்கும்!
புரிந்துகொள்ளுதல் ஆழமாக ஆழமாக நேசத்தின் ஆழம் அதிகமாகும்
ஒரு சிறிய பயிற்சி : உங்களின் சிந்தனைத்திறனை முழுமையாகப் பயன்படுத்துங்கள். உங்களின் பாசத்திற்குரியவர்களைப் பற்றிய அபிப்பிராயங்களை மனதுக்கு எடுத்து வாருங்கள்.
“எவ்வளவு தூரம் உங்களையும் உலகையும் புரிந்து வைத்திருக்கிறீர்கள்” என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். புரிந்துகொள்ளுங்கள். எல்லாம் புரிபடும்.
உள்ளது உள்ளபடி தெரிய ஆரம்பிக்கும் போது... நேசம் உங்களின் வசமாகும். வாழ்வு வசந்தமாகும்.
புரிந்துகொள்ளுதல் விசாலமானால், உலகமே விசாலமாவதைக் காண்பீர்கள்.
